" வழியிலே அவர் நதியிலே குடிப்பார். ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்." ( சங்கீதம், 110:7)
நம்முடைய இரட்சகரும், தலையுமானவர் நம்மை மென்மேலும் ஆசீர்வதிக்கவும், புதிய சிந்தையும், ஆர்வமும் அளித்து விசுவாசத்துடன் நடத்தப்படவும் வேண்டுகிறோம்.
நம் ஜீவியத்தில் உண்டாகும் அனுபவமான ஓடையிலே அனுதினமும் குடித்து, அவருடைய சேவையிலே ஈடுபட ஞானத்தையும், தகுதியையும் வளரச்செய்யவும் மன்றாடுகிறோம்.
இதன் மூலம் அவருடைய துதிகளை நாம் அறிவித்துச் சகலப் பாடுகளையும் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களையும் பொறுமையாயச் சகித்து, அவர் நாமத்தை நம் சரீரத்தில் மகிமைப்படச் செய்கிறோம்.
இவ்விதம் அனுபவ ஓடையில் நாம் குடிக்கும் போது, சிறு குருவியை நினைப்போமாக. அது குடிக்கும் போது தன் தலையை உயர்த்தி தேவனைத் துதிப்பது போல காண்பது, நம் வாழ்க்கையின் ஓடையில் அனுதினமும் நாம் பல பாடுகளை அனுபவிக்கும்போது அவரைத் துதிக்கக் கடமைப்பட்டுள்ளோம் என்பதை குறித்து காண்பிக்கிறது.