பலங்கொண்டு திடமனதாயிருக்க அடிக்கடி நினைப்பூட்டப் படுகிறோம்.
திட மனதாயிருப்பதில் பல விதம் உண்டு.
சிலர் அகம்பாவத்தினால், நான் என்னும் எண்ணத்தால்தைரியம்பெற்றிருப்பார்கள். சிலர்தங்கள் அசட்டுத் தனத்தில்துணிகரமுள்ளவர்களாயும் இருப்பர்.
ஆனால், யெகோவா தேவன் முற்காலங்களிலும், தற்கால ஆவிக்குரிய இஸ்ரவேலரிடத்திலும் இருக்க விரும்புவது வேறு.
இவர்கள் தங்கள் சோதனைகளிலும், சத்தியத்தினிமித்தம் வரும் பாடுகளிலும் பொறுமையுள்ளவர்களாக இருந்து சோர்வடையாமல் சாத்தானை எதிர்த்து நிற்கவும் ஊழியம் தடைபடாமல் பலங்கொண்டு திட மனதுடன் முன்னோக்கிச் செல்லவும் தேவையானது.
தேவன் பேரில் ஒருவர் கொண்டுள்ள விசுவாசத்தின் மூலமும், தெய்வீக வாக்குத்தத்தங்களின் பேரில் நம்பிக்கையையும் உண்டாக்கி அவருடைய வல்லமையினால் பலப்பட்டுத் திடன் கொள்ளச் செய்யும்.