அண்ணன்மார் யாவருக்கும் கிறிஸ்மஸ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்; இந்த தளத்தை நீண்ட நாளாக படித்து வருகிறேன்; ஆனால் பங்கேற்க ஆண்டவர் தூண்டியதால் உள்ளே வருகிறேன்;
அண்ணன்மாரின் முயற்சிகள் தீர்க்கமானது; இலக்கு கடினமாக இருந்தாலும் அடைந்தே தீருவோம் என்ற தீரமுள்ள உங்கள் முயற்சிகளை தொடருங்கள்; இரண்டில் ஒன்று பார்த்துவிடுவோம்..!
அன்புடன் உங்கள் சகோதரி Glady
-- Edited by glady on Saturday 26th of December 2009 01:23:50 AM
வாழ்த்துதல்கள்! நீண்ட நாட்களாக இத்தளத்தை புரிந்துகொள்வதற்கு நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சிக்கு வந்தனங்கள். ஏனென்றால் இது ஒரு சாதாரண தளம் அல்ல. சத்திய தளம். சத்திய வார்த்தைகளை விவாதிக்கும் ஒரு திறந்த தளமாகும்; எல்லா கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன. வேத சத்தியங்களை பட்சபாதமின்றி ஆராய்வது மட்டுமே இங்கு பிரதானம். அவ்வப்போது சில 'பாபிலோனிய' விஸிட்டர்ஸ் வந்து சல சலப்பு உண்டாக்கிவிட்டு சத்தியத்தின் வெப்பம் தாக்குப்பிடிக்காமல் ஓடிவிடுவர். நீங்கள் தாராளமாக உங்கள் பதிவுகளைத் தொடரலாம். பாரம்பரிய ஞானங்களைவிட வேத மகத்துவங்களில் ஆர்வமுடைய சகோதர, சகோதரிகளுக்கு இத்தளத்தை அறிமுகப்படுதுங்கள். தேவன் தாமே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களாலும் உங்களை திருப்திபடுத்துவாராக!
உன்னுடைய தராதரத்தை காட்டி உன்னைப்பற்றி நீயே சாட்சி சொல்லிக்கொண்டிருக்கிறாய். சகோ.ராஜ் போன்றவர்களுக்கு உன்னைப் பற்றி தெரிந்திருக்கும் இப்போது. ஒரு சாதாரண சபை நாகரீகம் கூட தெரியாத low class கூவங்கள்தான் இன்று சபை நடத்துகிறேன் என்று பிழைப்பு நடத்துகிறார்கள் என்பதற்கு நீ ஒரு classic example. இத்தளத்தை வலம் வரும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் இம்மாதிரி சுய மேன்மை ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்க உன் பதிவுகள் நிச்சயம் உதவும். நீ மீண்டும் பதில் எழுதத் துடிப்பாய் என்றும் தெரியும். அதனால்தான் முதலிலேயே சொன்னேன் இந்தத் தளத்தில் உனக்கு வேலை இல்லை என்று. கேட்கவில்லை. இனியும் உன் குப்பைகளுக்கு பதில் எழுத எனக்கு விருப்பமில்லை. வேறு தளம் பார். குட் பை!