நீங்கள் சொல்கிற கருத்தை பின்வரும் வசனத்திலும் எடுத்தால் என்னாகும்?
வெளி. 2:11 ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.
உங்கள் கருத்தின்படி, “ஜெயங்கொள்ளுகிறவன்” எனும் வார்த்தை ஒருவனை மட்டுமே குறிக்குமென்றால் அந்த ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் 2-ம் மரணத்தினால் சேதப்படுவார்கள் என்றாகும். ஆனால் வெளி. 20:4-6-ல், முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ள பலர் மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விதமாக வசனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே!
அந்த வசனத்தை நாம் ஏன் அப்படி பொருள் கொள்ளவேண்டும் சகோதரர் அவர்களே!
அதாவது வசனம் குறிப்பிடும் பலருக்கு இரண்டாம் மரணத்தின்மேல் அதிகாரம் இல்லை, அந்த வரிசையில் இங்கு ஜெயம் கொள்பவனையும் இரண்டாம் மரணத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று பொருள் கொள்ளலாமே!
ஜெயம்கொள்பவனைதவிர மற்றவர்கள் இரண்டாம் மரணத்தில் பங்கடைவார்கள் என்று வேதம் குறிப்பிடவில்லையே?
வெளி 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம்மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
இவர்கள் நிலை வேறு! இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்த்துவுக்கும் இடையில் ஆசாரியர்களாக இருப்பவர்கள். இவர்களையும் இரண்டாம் மரணம் ஒன்றும் செய்ய முடியாது!
வெளி 3:21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.
இந்த ஜெயம்கொண்டவனின் நிலை வேறு! இவன் தேவனோடு சிங்காசனத்தில் அமரும் வாய்ப்பை பெற்றவன் இவனையும் இரண்டாம் மரணம் ஒன்றும் செய்ய முடியாது!
மேலும்
வெளி 3:12ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை;
வெளி 21:7ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.
மேற்க்கூரியுள்ள வசனங்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால் "ஜெயம்கொள்கிறவன்" என்ற வார்த்தையோடு "அவர்கள்" என்ற பன்மை சொல் வராமல் "அவன்" என்ற ஒருமை சொல் வந்துள்ளதை காணமுடியும். எனவ நிச்சயம் அது ஒருவனைத்தான் குறிக்கிறது.
மேலும் ஒரு ஓட்டபந்தயத்தில் முதலில் வருபவருக்கு கிரீடம் வழங்கப்பட்டாலும் இரண்டாம் மூன்றம் நிலையில் வருபவர்களுக்கும் வெகுமதிகள் அழிக்கப்படுவது இயல்பு. அதுபோல் இன்றைய உலகில் தேவவார்த்தையின்படி பலர் ஓடுகின்றனர்! ஆனால் ஜெயம்கொள்கிறவன் எல்லாவற்றயும் சுதந்தரிதுகோள்வான் மற்றவர்கள் இழந்துபோனவர்கள் அல்ல அவரவர் கிரியைக்கு தக்க பலனை அடைவார்கள்.
வெளி 20:௧௨ அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
வெளி 20:13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்
வெளி 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
ஆதாமின் செயலால் அழிவுக்கு நேராக இருந்த நாம் கிருபையால் மீட்கப்பட்டோம், ஆனால் நியாயதீர்ப்பு என்பது கிரியைகளின் அடிப்படையில் மட்டுமே!
-- Edited by RAAJ on Tuesday 24th of November 2009 01:53:43 PM
அன்பு57 எழுதுகிறார்: "அது சரி, பிறனிடம் அன்புகூராதவனுக்கு என்ன நேரிடும்?"
மரணம், பின்பு அந்த அன்பு என்ன வென்று புரிந்துக்கொள்ளும்படியான நியாயத்தீர்ப்பு. "உம்முடைய நியாயத்தீர்ப்பின் நாட்க்களில் பூச்சக்கரத்து குடிகள் நீதியை கற்றுக்கொள்ளுவார்கள்" என்கிறது வேதம்.
மீண்டும் அன்பு57: "ரோமர் 13:9 -ஐ ஒட்டி பவுல் கூறியுள்ள மற்ற காரியங்களின்படி நடப்பவனுக்கு (விபசாரம், கொலை போன்றவை செய்தல்) என்ன நேரிடும்?"
மரணம், பின்பு அந்த பாவங்களின் விளைவிலிருந்து விடுவைக்கப்பட்டவனாக அதை புரிந்துக்கொள்ளும்படியான நியாயத்தீர்ப்பு. "உம்முடைய நியாயத்தீர்ப்பின் நாட்க்களில் பூச்சக்கரத்து குடிகள் நீதியை கற்றுக்கொள்ளுவார்கள்" என்கிறது வேதம்.
அன்பு57 எழுதுகிறார்: "ரோமர் 13:9-14 வசனங்களில் பவுல் சொல்லுகிற பொல்லாத செயல்களைச் செய்பவர்களுக்கு என்ன நேரிடுங்கிறதை சொல்லுங்க."
நிச்சயமாக நீங்கள் என்னிக்கொண்டிருக்கும் இரண்டாம் மரணம் இல்லை என்று நான் தேவனின் அன்பை முன்னிட்டு சொல்லுகிறேன். அழிவு தான் கிடைக்கும் என்று நீங்கள் விசுவசித்தால், அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை. ஏற்ற வேளை வரும் போது எல்லாம் வெளிச்சமாகி விடும். நீதியின் சூரியன் உதிக்கும் போது, ஆரோக்கியம் உண்டாகும். ஆனால் இப்பொழுதோ காரிருள் பூமியையும் ஜனங்களையும் மூடியிருக்கிறது (ஏசா. 60:1) ஆனால் அவர் வரும் போது ஜனங்கள் எல்லாரும் அந்த வெளிச்சம் அண்டே ஓடி வருவார்கள் என்கிறது அடுத்த வசனம். ஆனால் அவர் வரும் வரை இப்படி இருளாக தான் இருக்கும், ஆகவே அந்த அன்பின் வெளிச்சம் புரியாது.
பாவ மன்னிப்பு கேட்கிறவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிந்தவர்களே, அவரை அறியாதவர்களுக்கு அது இலவசமாக கிடைக்கும் ஒரு ஈவு, ஆகவே தான் உயிர்த்தெழுதல்.
ஜீவவிருட்சத்தின் கனி இப்பொழுது கிறிஸ்துவை போல் இருந்து சபையாக மாறும் அந்த வெற்றி பெற்ற கூட்டத்திற்கு மாத்திரமே. கனியும் கிரீடமும் வெற்றி பெற்றவர்களுக்கே அன்றி, பூமியில் உயிர்த்தெழுபவர்களுக்கு கிடையாது.
ரோம் 13:9-14. கற்பனைகளையோ நியாயப்பிரமானத்தையோ பின் பற்றுகிறவர்கள், மீண்டும் மீண்டும் இதே பாவத்தில் விழுந்து கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அன்பு என்கிற ஒரு மாபெரும் பிரமானம் அவர்களிடத்தில் இல்லை. அன்பு இருந்தால் இந்த அந்தகார கிரியைகள் செய்ய முடியாது. அன்பிருந்தால், ஒருவன் இயேசு கிறிஸ்து சொன்னது போல், ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்க மாட்டான். அன்பு இருந்தால் ஒருவன் விபச்சாரத்தில் ஈடு படமாட்டான். இந்த அன்பை போதிப்பதை விட்டு விட்டு நியாயப்பிரமானத்தை போதிபதினால் என்னவாயிற்று, மீண்டும் மீண்டும் இங்கு குறிப்பிட்ட பாவங்களில் இஸ்ராயேலர்கள் விழுந்துக்கொண்டிருந்தார்கள். இயேசு கிறிஸ்து எனும் கிருபையும் அவர் தந்த அன்பின் பிரமானம் பிறக்கும் வரை. பவுலும் சவுலாக இருந்த போது, கல்லுக்கு கல், என்கிற நியாயப்பிரமானத்தை பின் பற்றி தான் கொலைகாரனாக இருந்தான், ஆனால் அன்பின் பிரமானம் அவனிடத்தில் வந்த போது அவன் பவுலாக மாறினான், அதையே அவன் போதிக்கவும் செய்தான்.
கற்பன்பைகளை கைக்கொண்டால் நித்தியஜீவனை பெறலாம் என்று இயேசு கிறிஸ்து சொன்ன போது, "அதை எல்லாம் என் சிறு வயது முதல் செய்து வருகிறேன்" என்றான் அந்த இளைஞன். அவனின் சுய நீதியை கண்ட இயேசு பிறகு சொன்னது, "அப்படி என்றால் உன்னிடத்தில் இருப்பதை எல்லாம் விற்று இல்லதவனுக்கு கொடு" என்று. இதை கேட்டவுடன், அவன் மூஞ்சியை தொங்க போட்டு சென்று விட்டான். இது தான் நியாயப்பிரமானம் என்கிற கிரியைகளினால் விளையும் சுய நீதியும், இயேசு கிறிஸ்துவின் அன்பின் பிரமானத்திற்கும் உள்ள வித்தியாசம். அந்த இளைஞ்ன் இயேசு கிறிஸ்துவிடம் கேட்ட கேள்வியே, அவன் நித்தியஜீவனில் பிரவேசிக்க (இன்றைய போதகர்கள் போதிக்கும் பரலோகம் அல்ல, மாறாக உம்முடைய இராஜியம் வருவதாக (பூமிக்கு) என்கிற ராஜியத்தில்) தான், ஆனால் இயேசு கிறிஸ்துவோ, அவன் பரலோகம் செல்லும் வழியான அன்பின் பிரமானத்தை எடுத்து சொன்னார், அது இன்றைய சுயநீதிக்காரர்களை போல் அந்த இளைஞனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அன்பு57 கேட்கிறார்: "சரி சகோதரரே! ஆனா, நியாயப்பிரமாணத்தின் என்னென்ன கற்பனைகள் இயேசுவின் கற்பனைகளில் இல்லை என்பதை உங்களால் சொல்லமுடியுமா? (அதாவது விருத்தசேதனம், பலி போன்ற சடங்காச்சாரங்கள் தவிர மற்றவைகளில்)"
அது என்ன விருத்தசேதனம், பலி போன்ற சடங்காச்சாரங்கள் (இவைகளெல்லாம் நியாயப்பிரமானத்தின் கட்டளைகள் இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா?) தவிர என்கிற ஒரு clause. அதுவும் நியாயப்பிரமானத்தின் கட்டளைகளே. இதை எல்லாம் விட்டு விடலாம் என்று யார் உங்களுக்கு போதித்தார்கள். சரி கேளுங்கள், விபச்சாரம் செய்யாதிருப்பீர்களாக என்பது கற்பனை, ஆனால் ஒரு ஸ்திரியை இச்சையோடு நோக்கினாலே அது பாவம் என்கிறார் அன்பின் பிரமானத்தின் கர்த்தர் இயேசு கிறிஸ்து. மொத்தத்தில் கிரியைகள் சார்ந்த எல்லா கற்பனைகளுமே யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட கற்பனைகள். சுய நீதியை வெளிப்படுத்தாத அன்பின் பிரமானம் இயேசு கிறிஸ்து கொடுத்த கற்பனைகள். ஆற்றில் ஒரு கால், சேர்றில் ஒரு கால், இரு எஜ்மானன்களுக்கு ஊழியம் போன்று தான் selective பழைய ஏற்பாடு கட்டளைகளை (பலதை விட்டு விட்டு) மற்றும் சில புதிய ஏற்பாட்டின் பிரமானங்களை பின் பற்றுவது. கிறிஸ்துவிற்கு உண்டான ஒரு மனுஷன் சகல்கத்திலும் புதிதாகிறான். புதிய ரசத்தை பழைய துருத்தியில் ஊற்ற முடியாது என்று தான் இயேசு கிறிஸ்து சொல்லி தந்தது. ஆனால் உங்களை போல் பலர் கிரியைகளையும் செய்துக்கொள்ளலாம், இயேசு கிறிஸ்துவின் பிரமானத்தை பின் பற்றிக்கொள்ளாம் என்றே போதிக்கிறார்கள். விந்தை!!
அன்பு57 எழுதுகிறார்: "ஏன்னா, நியாயப்பிரமாணக் கற்பனைகளான விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே போன்றவை இயேசுவின் கற்பனைகளிலும் இருக்கத்தான் செய்கின்றன"
விபச்சாரம் செய்யாதே (கற்பனை) மற்றும், இச்சையோடு பார்க்காதே (அன்பின் பிரமானம்) என்பதற்கு வித்தியாசம் உண்டு. கொலை செய்யாதே (கற்பனை) மற்றும், உன் சகோதரனை கோபித்துக்கொண்டாலே கொலைபாதகனாகிறாய் என்கிறது இயேசு கிறிஸ்துவின் பிரமானம். ஆனால் இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பது இன்னும் விந்தை!!
ராஜ் எழுதுகிறார்: "ஆம்! உண்மையுள்ளவர்களுக்கு ஒரு இடம், உண்மை இல்லாதவர்களுக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு!"
உண்மை இல்லாதவர்களுக்கு (ஒரு பொய் சொல்லியிருந்தாலும் சரி, ஹிட்லரை போன்று 60 இலட்ச்சம் பேரை கொண்றிருந்தாலும் சரி) என்றுமே எரிகிற ஒரு அக்கினி நியாயத்தீர்ப்பை உங்களை போல் பலர் வளங்குவது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ராஜ் எழுதுகிறார்: "எதோ ஒரு தகராறில் ஒருவன் அவனது தந்தையை அடித்துவிடுகிறார் இரக்கமுள்ள அந்த தந்தை மகனை திருப்பி அடிக்காமல் உன்னை நான் மன்னிக்கிறேன் இனி இப்படிஅடிக்காதே என்றுதான் சொல்வாறேதவிர உன்னை மன்னித்துவிட்டேன் நீ நினைத்தபோதெல்லாம் என்னை அடித்துகொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கமாட்டார்."
இப்படி ஒரு மன்னிக்கும் இருதயம் தேவனுக்கு இருப்பதால் தான் இத்துனை காலம் நாம் பிழைத்திருக்கிறோம். நாம் மன்னென்று அவர் அறிந்திருக்கிறார், அவர் எடுத்த செய்த அதே மன்னிற்கே திரும்பி போய் விடுவோம் என்றும் அவர் அரிந்திருக்கிறார். அவர் மன்னிப்பவர் என்று ஒரு வேளை நீங்கள் புரிந்துக்கொள்ளவில்லை போல்.
bereans wrote: //அன்பு57 எழுதுகிறார்: "ரோமர் 13:9-14 வசனங்களில் பவுல் சொல்லுகிற பொல்லாத செயல்களைச் செய்பவர்களுக்கு என்ன நேரிடுங்கிறதை சொல்லுங்க."
நிச்சயமாக நீங்கள் என்னிக்கொண்டிருக்கும் இரண்டாம் மரணம் இல்லை என்று நான் தேவனின் அன்பை முன்னிட்டு சொல்லுகிறேன். அழிவு தான் கிடைக்கும் என்று நீங்கள் விசுவசித்தால், அதற்கு என்னிடத்தில் பதில் இல்லை.//
ஏதோ நான் சுயமாக நியாயந்தீர்த்து கூறுவதைப் போல், “பொல்லாதவர்களுக்கு அழிவுதான் கிடைக்கும் என்று நீங்கள் விசுவாசித்தால், அதற்கு பதில் இல்லை” என்கிறீர்கள். வேதவசனம் சொல்வதை வைத்துதான் நான் சொல்கிறேன். எனக்கு நீங்கள் பதில் சொல்லவேண்டாம், பின்வரும் வசனங்களுக்கு பதில் சொல்லுங்கள். எத்தனையோ முறை இவற்றை மேற்கோள் காட்டி கேட்டுள்ள போதிலும் நீங்கள் பதில் சொல்வதேயில்லை. இப்பொழுதாவது பதில் சொல்லுங்கள்.
நீதிமொழிகள் 11:19 நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான்.
இந்த “மரணம்” எந்த மரணம்? எல்லோருக்கும் நேரிடுகிற மரணம் என்றால், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான் என ஒரு பிரிவினருக்கு மட்டும் குறிப்பிட்டு சொல்லவேண்டும்?
ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்.
நன்மையைத் தேடினால்தான் பிழைக்கமுடியும் என இந்த வசனம் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா?
மத்தேயு 13:40 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும்.
அக்கினியால் சுட்டெரிக்கப்படுதல் என்பது மீளமுடியாத அழிவைக் குறிக்கவில்லையா?
மத்தேயு 25:41-43 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போனவர்களை மறுபடி அழைத்துவந்து நியாயத்தீர்ப்பு கொடுத்து நீதியைக் கற்றுக் கொடுத்தி நித்தியஜீவனைக் கொடுப்பார் என்கிறீர்களா?
bereans wrote: //கற்பனைகளை கைக்கொண்டால் நித்தியஜீவனை பெறலாம் என்று இயேசு கிறிஸ்து சொன்ன போது, "அதை எல்லாம் என் சிறு வயது முதல் செய்து வருகிறேன்" என்றான் அந்த இளைஞன். அவனின் சுய நீதியை கண்ட இயேசு பிறகு சொன்னது, "அப்படி என்றால் உன்னிடத்தில் இருப்பதை எல்லாம் விற்று இல்லாதவனுக்கு கொடு" என்று.//
கற்பனைகளைக் கைக்கொண்டால் நித்தியஜீவனைப் பெறலாம் என இயேசு சொன்னது சொன்னதுதான். அந்த வாலிபன் மெய்யாகவே கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், தாம் சொன்ன பிரகாரம் அவனுக்கு நித்தியஜீவன் உண்டு என்றுதான் இயேசு கூறியிருக்க வேண்டும். அப்படியில்லாமல், மேலும் ஒரு நிபந்தனையை இயேசு கூறினால் என்ன அர்த்தம்?
1. இயேசு முதலாவது சொன்னது பொய்யாக இருக்கவேண்டும், அல்லது 2. அந்த வாலிபன் கற்பனைகளைக் கைக்கொள்வதில் குறைவுள்ளவனாக இருக்கவேண்டும்.
இந்த இரண்டில் எது சரி?
bereans wrote: ///அன்பு57 கேட்கிறார்: //"சரி சகோதரரே! ஆனா, நியாயப்பிரமாணத்தின் என்னென்ன கற்பனைகள் இயேசுவின் கற்பனைகளில் இல்லை என்பதை உங்களால் சொல்லமுடியுமா? (அதாவது விருத்தசேதனம், பலி போன்ற சடங்காச்சாரங்கள் தவிர மற்றவைகளில்)"//
அது என்ன விருத்தசேதனம், பலி போன்ற சடங்காச்சாரங்கள் (இவைகளெல்லாம் நியாயப்பிரமானத்தின் கட்டளைகள் இல்லை என்று முடிவு செய்து விட்டீர்களா?) தவிர என்கிற ஒரு clause. அதுவும் நியாயப்பிரமானத்தின் கட்டளைகளே. இதை எல்லாம் விட்டு விடலாம் என்று யார் உங்களுக்கு போதித்தார்கள்.///
நியாயப்பிரமாணத்தில் நீதி நியாயம் சம்பந்தமான கற்பனைகளைத்தான் “தேவனுடைய கற்பனைகள்” என புதியஏற்பாடு (குறிப்பாக வெளி. 22:14) கூறுகிறது. விருத்தசேதனம் பலி தவிர மற்றெல்லா நியாயப்பிரமாண கற்பனைகளும் கிறிஸ்துவின் கற்பனைகளில் அடங்கியுள்ளன.
bereans wrote: //விபச்சாரம் செய்யாதிருப்பீர்களாக என்பது கற்பனை, ஆனால் ஒரு ஸ்திரியை இச்சையோடு நோக்கினாலே அது பாவம் என்கிறார் அன்பின் பிரமாணத்தின் கர்த்தர் இயேசு கிறிஸ்து.//
இயேசுதான் அன்பின் பிரமாணம் தந்தவர் என்கிறீகள். அப்படியானால், மோசே மூலம் தேவன் தந்தது அன்பில்லாத பிரமாணமா? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.
அன்பின் பிரமாணத்தின் அடிப்படையில்தான் நியாயப்பிரமாணத்தின் நீதியின் கற்பனைகள் எல்லாவற்றையும் தேவன் தந்தார். ஆனால், மனக்கடினமுள்ள இஸ்ரவேலர் அதைப் புரிந்துகொள்ளவில்லை. விபசாரம் செய்யாதே எனக் கட்டளையிட்ட தேவன், பிறன் மனைவியை இச்சியாதே என்றும் கட்டளையிட்டிருந்தார். ஆனால் பிறன் மனைவியை இச்சிப்பதும் விபசாரமே என்பதை இஸ்ரவேலர் புரிந்துகொள்ளவில்லை.
bereans wrote: //மொத்தத்தில் கிரியைகள் சார்ந்த எல்லா கற்பனைகளுமே யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட கற்பனைகள். சுய நீதியை வெளிப்படுத்தாத அன்பின் பிரமானம் இயேசு கிறிஸ்து கொடுத்த கற்பனைகள்.//
அப்படியானால் இயேசுவின் பின்வரும் வசனத்திற்கு அர்த்தம்?
மத்தேயு 5:16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
நற்கிரியைகள் இல்லாமல், நான் கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்தின்படி நடக்கிறேன் என யாராவது சொல்லமுடியுமா? அதனால்தானே கிரியையில்லாத விசுவாசம் செத்தது என யாக்கோபு கூறினார்.
நான் கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்தின்படி நடக்கிறேன் என்று சொல்லிப் பயனில்லை. அதைச் செயலில் காட்டவேண்டும். இதைத்தான் கற்பனைகளின்படி நடக்கவேண்டும் என்று ஆரம்பம் முதல் கூறிவருகிறேன். வேதவசனமும் அதைத்தான் கூறுகிறது.
யாக்கோபு 2:14,15 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 1 யோவான் 3:17,18 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.
குறைச்சலுள்ள சகோதரர்கள் நம்மைச் சுற்றி இருக்கையில் நாம் ஆஸ்திகளை (பொன் போன்ற பொக்கிஷங்கள், தேவைக்கதிகமான வீடு, நிலம் போன்றவற்றை) வைத்திருந்தால் நாம் அன்புள்ளவர்கள் என எப்படி சொல்லமுடியும்? அதனால்தான் அப்படிப்பட்டவர்களை இயேசு நிச்சயமாக நியாயந்தீர்த்து ஆக்கினைக்குள்ளாக்குவார் என வேதாகமும் சொல்கிறது, நானும் சொல்கிறேன். நீங்களோ யார் எப்படியிருந்தாலும் அவர்களுக்கு நித்தியஜீவன் என்கிறீர்கள்.
இயேசுவின் அன்பின் பிரமாணத்தின்படி நடப்பாதாகக் கூறுகிற யாராயிருந்தாலும், அவர்களிடம் கிரியை இல்லாவிடில் பயனில்லை. இயேசுவின் அன்பின் பிரமாணத்தில் கிரியையும் அடங்கியுள்ளது. அவ்வாறே தேவனின் நியாயப்பிரமாணத்தில் அன்பு அடங்கியுள்ளது.
தேவனின் நியாயப்பிரமாணத்தில் “அன்பு” அடங்கியிருந்ததை அன்றைய வேதபாரகரும் பரிசேயரும் உணராதிருந்தனர். அவர்களைப் போலவே நவீன வேதபாரகரும் பரிசேயருமான நீங்கள், இயேசுவின் அன்பின் பிரமாணத்தில் “கிரியை” அடங்கியுள்ளதை உணராதிருக்கின்றீர்கள்.
bereans wrote: //உங்களை போல் பலர் கிரியைகளையும் செய்துக்கொள்ளலாம், இயேசு கிறிஸ்துவின் பிரமானத்தை பின் பற்றிக்கொள்ளாம் என்றே போதிக்கிறார்கள். விந்தை!!//
அப்படியல்ல, கிரியைகள் இல்லாமல் கிறிஸ்துவின் பிரமாணத்தை யாரும் நிறைவேற்ற முடியாது என்கிறேன். நீங்களோ கிறிஸ்துவின் பிரமாணத்தைப் பின்பற்றிக் கொள்வோம், ஆனால் கிரியைகள் வேண்டாம் என்கிறீர்கள். இது விந்தையல்ல, பரிதாபத்திற்குரியது.
bereans wrote: //கொலை செய்யாதே (கற்பனை) மற்றும், உன் சகோதரனை கோபித்துக்கொண்டாலே கொலைபாதகனாகிறாய் என்கிறது இயேசு கிறிஸ்துவின் பிரமானம். ஆனால் இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் நீங்கள் பார்ப்பது இன்னும் விந்தை!!//
இரண்டையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, முதல் பிரமாணத்தின் (நியாயப்பிரமாணத்தின்) அடிப்படை (கிறிஸ்துவின்) 2-வது பிரமாணம்; முதல் பிரமாணம் இல்லாத 2-வது பிரமாணம் போலியானது என்றுதான் சொல்கிறேன்.
நீங்கள் சொன்ன உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். கோபிக்காத, சாந்தமுள்ள ஒருவன் கொலை செய்வானா? நிச்சயம் மாட்டான். கோபமுள்ளவன்தான் கொலை செய்வான். அவ்வாறெனில் கொலை செய்யாதே எனக் கூறினால் அதன் அர்த்தம் என்ன? கோபத்தை அடக்கு என்றுதான் அர்த்தம். கொலை செய்யாதே என்ற கட்டளையினிமித்தம் கோபத்தை அடக்குபவன் நாளாவட்டத்தில் கோபமில்லாத சாந்த நிலைக்கு வரவேண்டும் என்பதே தேவனின் எதிர்பார்ப்பு. மேலே குறிப்பிட்டுள்ள ஒரு வசனத்தை மீண்டும் தருகிறேன், படியுங்கள்.
இஸ்ரவேலர் தங்களுக்குள் அன்புகூரவேண்டும், அதேபிரகாரமாக அந்நியன் மீதும் அன்புகூரவேண்டும் என்றுதான் இவ்வசனம் கூறுகிறது. கோபத்தை அடக்கி கொலை செய்யாதிருப்பவன், கோபத்தை மனதில் வைத்துக்கொண்டேயிருந்தால் என்ன அர்த்தம்? அவனிடம் அன்பு இல்லையென்றுதான் அர்த்தம். கோபம் வருவது இயல்பு, அல்லது ஜென்ம சுபாவம், அல்லது மாம்சப் பிரமாணம் எனச் சொல்லலாம். அந்த பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்து கொலை செய்துவிடக்கூடாது என்பதற்குத்தான் கொலை செய்யாதே எனும் கட்டளை. மாம்சப்பிரமாணத்தை அடக்கி, அதாவது கோபத்தை அடக்கி கொலை செய்யாமல் இருப்பவன், பின்னர் நிதானமாக சிந்தித்து, அன்புகூர் எனும் கற்பனையை உணர்ந்து அன்புகூர வேண்டும் என்பதே தேவனின் எதிர்பார்ப்பு.
இன்று கிறிஸ்துவின் பிரமாணம் என நாம் என்னதான் சொன்னாலும், யாராவது நம்மைக் கோபப்படுத்தும்படி நடக்கும்போது நாம் சடாரென்று கோபப்படக்கூடும்தான். இதற்குக் காரணம் ரோமர் 7:23-ல் பவுல் கூறுகிற மாம்சப்பிரமாணம். கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்தைப் போதித்த பவுலிடமும் அது இருக்கத்தான் செய்தது.
மாம்சப்பிரமாணத்திமித்தம் நமக்குக் கோபம் வருகையில், நியாயப்பிரமாணத்தை மனதில் வைத்து கொலை செய்தலை முதலாவது தவிர்க்கவேண்டும். அதன்பின்னர்தான் நாம் கோபங்கொண்டுவிட்டோமே என்பதை உணர்ந்து, அதற்காக துயரப்பட்டு அன்பை நம் மனதில் கொண்டுவரவேண்டும்.
எனவே நியாயப்பிரமாணத்தில் அன்பின் பிரமாணம் இல்லை எனக் கருதாதீர்கள்; நியாயப்பிரமாணத்திலுள்ள அன்பின் பிரமாணத்தை இஸ்ரவேலர் உணரவில்லை. அவர்கள் உணரத் தவறிய அந்த அன்பின் பிரமாணத்தை இயேசு வெளிப்படையாக எடுத்துரைத்தார், அவ்வளவே.
இப்பதிவில் நான் சொல்லியுள்ள அனைத்திற்கும் கண்டிப்பாக பதில்தாருங்கள்.
மரணம், பின்பு அந்த அன்பு என்ன வென்று புரிந்துக்கொள்ளும்படியான நியாயத்தீர்ப்பு. "உம்முடைய நியாயத்தீர்ப்பின் நாட்க்களில் பூச்சக்கரத்து குடிகள் நீதியை கற்றுக்கொள்ளுவார்கள்" என்கிறது வேதம்.
பேரேயன்ஸ் அவைகளே எல்லோரும் நீதியை கற்றுகொள்வார்கள் என்பதற்கு சான்றாக தாங்கள் முக்கியமாக கீழ்க்கண்ட வசனத்தை சுட்டுகிறீர்கள்.
சங்கீதம் 92:7துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும்
இங்கு வசனங்கள் துன்மார்க்கர்கள் பலர் என்று பண்மையில் குறிப்பிட்டுள்ளது. எனவே அழிவுக்கு நேராக இருப்பவர்கள் சாத்தனை தவிர வேறு பலரும் இருக்கிறார்கள் என்றே பொருள்கொள்ள முடியும்.
சரி இதை எல்லாம் விடுங்கள்!
இப்பொழுது அந்த துன்மார்க்கன் சாத்தான் ஒருவனதானென்றும் அவன் அழிவுக்கேன்றே மற்றவரை சோதிப்பதற்காக தேவனால் படைக்கப்பட்டவன், அதுதான் தேவனின் திட்டம் என்றும் வேதத்தில் இல்லாத நீங்கள் சொல்லும் கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்டால் கீழ்க்கண்ட வசனங்கள் சொல்வதை பாருங்கள்:.
எசேக்கியேல் 18:23துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
எசேக்கியேல் 33:11 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்
நீங்கள் சொல்கிறீர்கள் நீதியை கற்றுக்கொள்ளாத துன்மார்க்கனை சோதனை முடிந்தபின் அழித்துவிடுவதுதான் தேவனது திட்டம் என்று. அனால் தேவன் சொல்கிறார் துன்மார்க்கன் சாவது எனக்கு கொஞ்சமும் பிரியமில்லை என்று!
இதில் யார் சொல்வது உண்மை? நீங்கள் சொல்வதா அல்லது தேவன் தன் ஜீவனை கொண்டு சொல்வதா?
உங்கள் கருத்துக்கும் வசனங்களுக்கும் எவ்வளவு முரண்பாடுகள் பாருங்கள். இங்கு தேவன் தனது இஸ்டத்துக்கு பேசுகிறாரா அல்லது நீங்கள தவறான நம்பிக்கையில் இருக்கிறீர்களா என்பதை நீங்களே தீர்மானித்து கொள்ளுங்கள்.
////உண்மை இல்லாதவர்களுக்கு (ஒரு பொய் சொல்லியிருந்தாலும் சரி, ஹிட்லரை போன்று 60 இலட்ச்சம் பேரை கொண்றிருந்தாலும் சரி) என்றுமே எரிகிற ஒரு அக்கினி நியாயத்தீர்ப்பை உங்களை போல் பலர் வளங்குவது தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.///
ஒரு தீமைக்காக/தவறுக்காக மனிதனை தேவன் நித்தய நித்தியமாக அக்கினியில் போடுவார் என்பது எனது கருத்து அல்ல! மற்றவர்களின் கருத்தை என்மேல் திணிக்க வேண்டாம்!
தேவன் சொல்கிறார் துன்மார்க்கன் சாவது எனக்கு கொஞ்சமும் பிரியமில்லை என்று!
ஆனால் உங்களுக்கும் சகோ.அன்பு அவர்களுக்கும் அதுதான் ரொம்ப பிரியம்போலுள்ளது. நாமெல்லாருமே துன்மார்க்கர்கள்தான், நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என்பதற்கு என்ன அர்த்தம் எல்லாருமே பாவிகள் என்றுதானே.
கிரியைகளுக்கும், கற்பனைகளுக்கும் வித்தியாசம் உண்டு என்று நீங்கள் அறீவீர்கள் என்றே நான் நினைக்கிறேன்.
கற்பனைகள் யூதர்களுக்கு வாக்குத்தத்தம் வரும் வரை கொடுக்கப்பட்டது. கிருபை வந்த பின் சட்டத்திலிருந்து அவர்களும் விடுதலையாகும் படி தான் பவுல் போதிக்கிறார். ஆனால் சட்டத்தை பின் பற்றிகொண்டிருந்தவர்கள் கிறிஸ்தவர்களாக மாறினாலும், விருத்தசேதனம் செய்ய சொன்னார்கள், அதை பவுல் கண்டிக்கிறாரே!
நற்கிரியைகள் என்று பேசினால், கிறிஸ்தவர்களை விட நற்கிரியைகள் செய்வதில் புறஜாதிகள் இருக்கிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். அவர்களுக்கு உண்டான ஒரே குறை அவர்கள் கிறிஸ்துவை அறிவதில்லை, மற்றபடி அன்பின் பிரமானத்தை அவர்கள் தாராளமாக நிறைவேற்றுகிறார்கள், கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களை விட.
நீங்கள் நற்கிரியைகள் செய்ய வேண்டாம் என்று நாங்கள் ஒரு போதும் போதிக்கவில்லை. மாறாக பழைய ஏற்பாட்டின் கற்பனைகள் தான் இனி தேவை இல்லை என்று சொல்லுகிறோம்.
இதை தான் இயேசு கிறிஸ்து சொல்லுகிறார், "என் நுகம் லகுவாக இருக்கிறது" என்று. அப்பாவி யூதர்கள், சட்டத்தின் பிடியில் இருந்து அன்பின் பிடிக்கு கொண்டு வர தான் இயேசு கிறிஸ்து இப்படியாக் சொல்லுகிறார்.
நீங்கள் பின் பற்ற சொல்லும் சட்டத்தில் தான், கல்லுக்கு கல், பல்லுக்கு பல் என்றெல்லாம் இருக்கிறது, ஆனால் அன்பின் பிரமானத்தில் ஒரு கன்னத்திற்கு மறு கன்னம் என்று தான் இருக்கிறது. கல்லெடுத்து அடிக்கும் சட்டம் அன்பின் பிரமானத்தில் இல்லை, மாறாக 7, 70 முறை மன்னிக்கும் பிரமானம் தான் இருக்கிறது.
சட்டம் என்பது யூதர்களுக்கு கிறிஸ்துவினடத்தில் கூட்டி செல்லும் உபாதியாக இருந்தது, புறஜாதியாருக்கும் அந்த சட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை. ஏனென்றால் அவர்கள் மனசாட்சியின் கீழ் இருந்தார்கள், அங்கே இருந்து நேரடியாக கிருபையின் கீழ் வந்தார்கள். பவுல் புறஜாதிகளிடத்தில் சட்டத்தை பின் பற்ற ஒரு போதும் சொன்னதில்லை.
கொலோ 2:14ன் படி நமக்கு (சொல்லப்பட்ட இடம் யூதர்களுக்கு) விரோதமாக இருந்த எழுத்தை (சட்டம்) சிலுவையில் தம் பலியினால் குலைத்து போட்டு விட்டார் இயேசு கிறிஸ்து.
இனியும் நீங்கள் கற்பனைகளை (நற்கிரியைகள் அல்ல), பின் பற்ற வேண்டும் என்றல் தாராளமாக செய்யலாம். யூதர்களையே அதில் இருந்து விடுவிக்க வந்த இயேசு கிறிஸ்துவின் அன்பின் பிரமானம் நிச்சயமாக நியமிக்கப்பட்ட நேரத்தில் விளங்க செய்யும்.
கலாத்தியர் அதிகாரங்கள் முழுவதுமே சட்டத்தை பின்பற்றுகிறவர்கள் மீண்டும் வாசிக்க வேண்டுகிறேன்.
Galatians 2:16 know that a man is not justified by observing the law, but by faith in Jesus Christ. So we, too, have put our faith in Christ Jesus that we may be justified by faith in Christ and not by observing the law, because by observing the law no one will be justified.
Galatians 2:21 I do not set aside the grace of God, for if righteousness could be gained through the law, Christ died for nothing!"
Galatians 3:1 [ Faith or Observance of the Law ] You foolish Galatians! Who has bewitched you? Before your very eyes Jesus Christ was clearly portrayed as crucified.
Galatians 3:2 I would like to learn just one thing from you: Did you receive the Spirit by observing the law, or by believing what you heard?
Galatians 3:5 Does God give you his Spirit and work miracles among you because you observe the law, or because you believe what you heard?
Galatians 3:10 All who rely on observing the law are under a curse, for it is written: "Cursed is everyone who does not continue to do everything written in the Book of the Law."
Galatians 3:11 Clearly no one is justified before God by the law, because, "The righteous will live by faith."
Galatians 3:13 Christ redeemed us from the curse of the law by becoming a curse for us, for it is written: "Cursed is everyone who is hung on a tree."
Galatians 3:17 What I mean is this: The law, introduced 430 years later, does not set aside the covenant previously established by God and thus do away with the promise.
Galatians 3:18 For if the inheritance depends on the law, then it no longer depends on a promise; but God in his grace gave it to Abraham through a promise.
Galatians 3:19 What, then, was the purpose of the law? It was added because of transgressions until the Seed to whom the promise referred had come
Galatians 3:23 Before this faith came, we were held prisoners by the law, locked up until faith should be revealed.
Galatians 3:24 So the law was put in charge to lead us to Christ that we might be justified by faith.
Galatians 3:25 Now that faith has come, we are no longer under the supervision of the law.
Galatians 4:4,5 But when the time had fully come, God sent his Son, born of a woman, born under law, to redeem those under law, that we might receive the full rights of sons.
Galatians 5:4 You who are trying to be justified by law have been alienated from Christ; you have fallen away from grace.
Galatians 5:14 The entire law is summed up in a single command: "Love your neighbor as yourself."
Galatians 5:18 But if you are led by the Spirit, you are not under law
இவை எல்லாம் வெறும் ஒரு புத்தகத்தின் வசனங்கள் மாத்திரமே. என் சொந்த சரக்கு இதில் எதுவும் இல்லை. தமிழ் வேதாகமம் என் கம்ப்யுட்டரில் இல்லாததால் ஆங்கிலத்தில் வசனங்களை தந்திருக்கிறேன்.
கிரியைகளுக்கும், கற்பனைகளுக்கும் வித்தியாசம் உண்டு என்று நீங்கள் அறீவீர்கள் என்றே நான் நினைக்கிறேன்.
நற்கிரியைகள் செய்ய வேண்டாம் என்று நாங்கள் ஒரு போதும் போதிக்கவில்லை.
இவ்வளவு நாள் கிரியைகள் எதுவும் தேவையில்லை என்று வாதிட்டு வந்த நீங்கள் இப்பொழுது கொஞ்சம் இறங்கி வந்து நற்கிரியைகள் தேவை என்று எழுதியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.
நன்றி!
நியாயபிரமாணம் என்ன துர்க்கிரியைகளையா போதிக்கிறது?
நியாயம் என்னவென்று போதிப்பதே நியாயபிரமாணம்.
கொலை செய்யாதே, திருடாதே, பொய் சாட்சி சொல்லாதே, பிறன் மனைவி மற்றும் பொருளை இச்சியாதே,
ராஜ் எழுதுகிறார்: "இவ்வளவு நாள் கிரியைகள் எதுவும் தேவையில்லை என்று வாதிட்டு வந்த நீங்கள் இப்பொழுது கொஞ்சம் இறங்கி வந்து நற்கிரியைகள் தேவை என்று எழுதியிருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது."
இவ்வுளவு நாளாக கிரியைகள் தேவை இல்லை என்று சொல்லவில்லை, இவ்வுளவு தான் நீங்கள் புரிஞ்சிக்கிட்டது என்று நினைக்கிறேன். நியாயப்பிரமான கிரியைகள் தான் தேவை இல்லை என்று சொல்லி வருகிறேன். அதை தான் பவுலும் தேவை இல்லை என்கிறார். ஆங்கிலத்தில் கொடுத்த வசனங்களுக்கு பதிலே கானோம்.
மீண்டும் ராஜ் எழுதுகிறார்: "கொலை செய்யாதே, திருடாதே, பொய் சாட்சி சொல்லாதே, பிறன் மனைவி மற்றும் பொருளை இச்சியாதே,"
இவை நியாயப்பிரமானத்தின் கட்டளைகள். மனசாட்சி இருக்கும் ஒவ்வொருவனும் பின் பற்றுவது இதை தான் என்று மறந்து விடாதீர்கள். ஏதோ கிறிஸ்தவர்கள் தான் இதை எல்லாம் பின் பற்றி வருகிறார் என்கிற மமதையோ!! இல்லை சகோதரரே, இந்த காரியங்கள் எல்லாம் எல்லா மார்கங்களும், மனசாட்சி இருக்கும் ஒவ்வொருவரும் பின் பற்றுவது தான், கிறிஸ்தவர்கள் என்கிறா படியால் இவை எல்லாம் தானாகவே வரும் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் நியாயப்பிரமானத்தை பின் பற்றவேண்டும் என்றால் தாராளமாக பின் பற்றலாம், ஒரு யூதனாக, ஒரு கிறுஸ்தவனாக (புறஜாதியிலிருந்து வந்தவர்கள்) என்பவர்களுக்கு நியாயப்பிரமானத்தை பின் பற்றும் எந்த ஒரு கட்டளையும் இல்லை, இல்லவே இல்லை.