kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தளம் எப்படி? / How do you like this forum?
தளம் எப்படி? / How do you like this forum? [9 vote(s)]

ஏதோ இருக்கிறது
22.2%
சுமார் தான்
0.0%
பிரயோஜனமாக இருக்கிறது
33.3%
வேதத்தை ஆறாய தொடங்கியிருக்கிறோம்
22.2%
இப்படி ஒரு தளத்தை தான் தேடினேன்
22.2%


Executive

Status: Offline
Posts: 425
Date:
RE: தளம் எப்படி? / How do you like this forum?


soulsolution wrote:
//இந்தத் தளத்தைப் பார்தது ஒருவர் துணிகரமாக பாவம் செய்ய எத்தனப்படுவார்கள் என்றால் அவர்களிடத்தில் உண்மையான மனந்திரும்புதல் இல்லை என்றுதான் அர்த்தம். தண்டனைக்குப் பயந்து கீழ்ப்படிவது உண்மையான மனந்திரும்புதலே அல்ல. உளப்பூர்வமாக தேவ அன்பினிமித்தம் கீழ்ப்படிவதே தேவனுக்குப் பிரியம். தங்கள் பதிவுகளுக்கு நன்றி!//


தேவ அன்பினிமித்தம் உளப்பூர்வமாக கீழ்ப்படிவதே தேவனுக்குப் பிரியம் என்பது மெய்தான். பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும் என்பதும் மெய்தான். ஆனால் இந்த அன்பு ஒரேநாளில் அனைவருக்கும் வந்துவிடுவதில்லையே. அதனால்தான் தமது ஜனங்களை பயப்படுத்தும்படியான பல எச்சரிப்புகளை தேவன் தந்துள்ளார். இயேசுவுங்கூட இவ்வாறு கூறுகிறாரே!

மத்தேயு 7:19  நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
மத்தேயு 13:41,42  மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

எனவே அன்பின் அடிப்படையில் கீழ்ப்படியத் தவறுபவர்களை பயமுறுத்திக் கீழ்ப்படியச் செய்வதும் நல்லதுதானே? ஆரம்பத்தில் பயத்தால் கீழ்ப்படிபவர்கள், நாளடைவில் அன்பின் கட்டுக்குள் வருவதற்கு வாய்ப்புள்ளதல்லவா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//ஆனால் இந்த அன்பு ஒரேநாளில் அனைவருக்கும் வந்துவிடுவதில்லையே. அதனால்தான் தமது ஜனங்களை பயப்படுத்தும்படியான பல எச்சரிப்புகளை தேவன் தந்துள்ளார். இயேசுவுங்கூட இவ்வாறு கூறுகிறாரே!//

ஆனால் இந்த அன்பு ஒரே நாளில்(நியாயத்தீர்ப்பு நாளில்) வந்துவிடும் சகோதரரே.

தேவன் தமது ஜனங்களை பயப்படுத்தும்படியாக கொடுத்த வசனங்கள் மற்ற ஜனங்களுக்கு எப்படிப் பொருந்தும்?




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:53:34 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

மரணம், ஆத்துமா என்றால் என்னவென்று தெளிவாக விளக்க முடியாதவர்களுக்கு எல்லாமே புதிதுமட்டுமல்ல, புதிராகவும் இருக்கும். அதனால்தான் முதலிலேயெ இவ்விரண்டைப் பற்றியும் ஒரு முடிவுக்கு வர அழைத்தேன். ஒரு ரியாக்ச‌னயும் காணோம். ஆவியானவர் வெளிப்படுத்திய காரியங்களை அங்கு வந்து ஏன் பதிய மாட்டேன் என்கிறார்களோ? மரணத்தைப் பற்றி நான் பதித்துள்ள வசனங்களுக்கு ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கவும். இல்லாவிட்டால் அதை ஆமோதிக்கிறீர்கள் என்று கொள்ளப்படும்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard