kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கள்ள சகோதரருக்கு எச்சரிக்கையாக இருங்கள்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:
RE: கள்ள சகோதரருக்கு எச்சரிக்கையாக இருங்கள்


soulsolution wrote:

மீண்டும் மழுப்புகிறீர்கள். ஆம் அல்லது இல்லை என்று ஒரேவரியில் பதில் சொல்லலாமே. தைரியம் இருந்தால்...




என் தகப்பன் சொன்ன எல்லா வார்த்தையையும் நான் கைகொண்டு நடக்கிறேனா இல்லையா என்பதை என் தகப்பன்தான் சொல்லமுடியும். அது அவருக்குதான் தெரியும். என்னை பொறுத்தவரை நான் அவர் வார்த்தைக்கு கீழ்படியவேண்டும் என்று முயற்ச்சிக்கிறேன். 
 
நமது தாய் தகப்பன்தான்  நம்மை  பெற்றார்களா? என்ற கேள்விக்கு நம்மால் ஆம் இல்லை என்று உறுதியான  பதில் சொல்ல முடியாது  பிறர் சொல்வதை சார்ந்துதான் பதில் சொல்ல முடியும்! அப்படியிருக்க  எனக்கு எது நிச்சயம் என்று உண்மையாக தெரியாத ஒன்றை நான் ஆம் இல்லை என்று பதில் சொல்லி ஏன் "உள்ளதை உள்ளதென்றும் இல்லத்தை இல்லதென்றும் சொல்லுங்கள்" என்ற இயேசுவின் கட்டளையை மீறவேண்டும்.?            
 
"ஆம்" ஆ அல்லது "இல்லை" யா எனக்கு தெரியாது!     
 
இதில் மழுப்ப ஒன்றும் இல்லை! எனக்கு முழுமையாக தெரிந்தால் ஆம் இல்லை என்று சொல்லுவேன் என்னை பற்றி முழுமையாக தெரிந்த தேவன்தான் இதற்க்கு பதில் சொல்லவேண்டும்.
 
உங்களுக்கு பல்வேறு கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல முடியாத காரணத்தால் இப்படி  ஒரு இடத்தில் நின்றுவிட்டீர்கள் என்று கருதுகிறேன்.  


 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் அவர்களே,

கலாத்தியர் ஆகமத்திலிருந்து இப்படி சட்டத்தின் மேல் நம்பிக்கை வைத்த யூதர்களிடம் பவுல் சொன்ன வார்த்தைகளை "ஜீவவிருட்சத்தின் கனி யாருக்கு?" பகுதியில் பதிவு செய்து இருக்கிறேன். அவற்றை நீங்களும் தியானுங்கள். பிறகு எழுதுங்கள். தயவு செய்து கிரியைகளுக்கும், கற்பனைகளுக்கும் ஒரே அர்த்தம் கொண்டு குழம்ப வேண்டாம். நீங்கள் சட்டத்தின் கீழ் இருந்தால் கிருபையில் இருந்து விழுந்தீர்கள் என்கிறார் பவுல். சட்டத்தின் கீழா அல்லது கிருபையின் கீழா என்று முடிவு செய்யுங்கள்.

விசுவாசம் என்பதே நமக்கு இலவசமாக நம் முயற்சி இல்லாமல் நமக்கு கொடுக்க பட்ட ஒரு ஈவு. ஆகவே தன் விசுவாசத்தை ஒரு gஇஃப்ட் என்கிறோம். இந்த விசுவாசம் சட்டத்தை பின் பற்றினவர்களிடம் இல்லை. ஏனென்றால் இது இயேசு கிறிஸ்து என்கிற கிருபை வந்த பிறகே வந்தது. மீண்டும் சொல்லுகிறேன், கிரியைகளையும், கற்பனைகளையும் போட்டு குழப்பி கொள்ளாதீர்கள்!!

தான் பாவிகளில் பிரதான பாவி என்று பவுலுக்கு தெரிந்தது, நமக்கு தெரியாதா என்ன, நாம் எப்படி பட்டவர்கள் என்று. இதை தான் சகோ ஆத்துமா ஒரு வேளை மழுப்பாதீர்கள் என்று எழுதுகிறாரோ என்னமோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

சகோ ராஜ் அவர்களே,

தயவு செய்து கிரியைகளுக்கும், கற்பனைகளுக்கும் ஒரே அர்த்தம் கொண்டு குழம்ப வேண்டாம். நீங்கள் சட்டத்தின் கீழ் இருந்தால் கிருபையில் இருந்து விழுந்தீர்கள் என்கிறார் பவுல். சட்டத்தின் கீழா அல்லது கிருபையின் கீழா என்று முடிவு செய்யுங்கள்.

 


கிருபையின் கீழ் இருக்கும் நீங்கள் "பாவம் செய்யகூடாது" என்று பவுல் எழுதியுள்ளதை கொஞ்சம் தியானியுங்கள்.  பாவம் என்னவென்பதை நியயபிரமாணமே போதிப்பதாலும், நியாயபிரமாணம் ஒழிந்து போகாது என்று இயேசு போதிப்பதாலும் இயேசுவின் கிருபையால் பெற்ற நீதியை பேணி, பாவம் செய்யாமல்  வாழவும் நியாயபிரமாணம் நிச்சயம் தேவைபடுகிறது என்பதை நீங்களும் உணர்ந்து கொள்ளுங்கள்.

 
நான் சட்டத்தின் கீழ் இல்லை இல்லை இல்லை! நான் கிருபையின் கீழ் இருக்கிறேன்  கிருபை இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வீர்களா?
 
கிருபைக்கு கீழ் இருக்கும் நீங்கள் கொலை செய்யலாமா? கூடாதல்லவா?

பிறகு என்ன?  கிருபை பெற்ற நீங்களும் கொலை செய்யகூடாது என்ற சட்டத்தின்கீழ்தானே  இருக்கிறீர்கள். 
இருந்தே ஆகவேண்டும்! இல்லையேல் இந்த உலகமே உங்களை தண்டிக்கும்.     
          


__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர் பெரேயன்ஸ் அவர்களே ஆண்டவராகிய  இயேசு எந்த புதிய பிரமாணத்தையும் போதித்ததாக எனக்கு தெரியவில்லை.அவர் பிரதான கற்பனை என்று போதித்த இரண்டு கற்பனைகளுமே  நியாயபிரமாணத்தில் உள்ளதுதான்.
 
லேவியராகமம் 19:18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர்.

உபாகமம் 6:5
நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக.
 
இவ்வாறிருக்க இயேசு போதித்த  அன்பின் பிரமாணம் புதியது என்று நீங்கள் எப்படி கருதமுடியும்?   நியாயபிரமாணத்தில் எழுதப்பட்டு இஸ்ரவேலரால் கைகொள்ளப்படாதவற்றையே  திரும்ப அவர்களுக்கு எடுத்துரைத்தார். நியாயபிரமாணம் சொல்லும் அன்பின்  ஒரு மேலான நிலை, அதாவது பிறருக்காக ஜீவனையே கொடுக்க துணியும் ஒரு உன்னத நிலையை எடுத்துரைத்தார்.  அவர் சரியாகத்தான் போதித்தார் அனால் புரிபவர்கள்தான் சரியாக புரிந்துகொள்ளவில்லை. 
 
அன்பின் பிரமாணமும் நியாயபிரமாணமும்   வேறு வேறு என்று நீங்கள் கருதினால் அது உங்களின் புரியாமை  என்றே கூறவேண்டும். அன்பின் பிரமாணத்தை உள்ளடக்கியதுதான் நியாயபிரமாணம். "கண்னுக்கு கண் பல்லுக்கு பல் என்று சொல்லும் நியாயபிரமாணமே"  "பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கே உரியது" என்றும் "பழிக்குப்பழி வாங்காமலும்" என்றும் சொல்லி அடுத்தன்வனை நியாயம்தீர்த்து கொலை செய்ய அனுமதிக்கவில்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.      
 
புதியதாக அன்பின் பிரமாணம் அன்பின் பிரமாணம் என்று சொல்கிறீர்கள். நல்லது! 
 
அன்பின் பிரமாணத்தில் கொலை செய்யலாமா?  திருடலாமா?  தகப்பனையும் தாயையும் அடிக்கலாமா? என்று கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?
 
செய்யகூடாது என்று பதில் சொல்வீர்கள் அல்லவா?
 
எத்தன அடிப்படையில் இதெல்லாம்  செய்யகூடாது தவறு என்று சொல்கிறீர்கள்?  இவையெல்லாம் உலக நீதிக்கே ஒத்துவராத காரியங்கள் அதனால் அப்படி செய்யகூடாது என்று சொல்கிறோம். 

நமது பார்வைக்கு/உலகநீதிக்கு ஒத்துவராத காரியங்களாகிய கொலை கொள்ளை விபச்சாரத்தை செய்யக்கூடாது என்று நியாயபிரமாணம் எப்படி  போதிக்கிறதோ அதேபோல் இறைவன் பார்வைக்கு அவர் நீதிக்கு ஒத்துவராத நாமறியாத  சில காரியங்களையும் அது சேர்த்து போதிக்கிறது.
 
உதாரணமாக: 
 
கொலை செய்வது / திருடுவது :  இது உலக நீதிக்கு ஒவ்வாதது
ஓய்வுநாள் / தசமபாகம்  : இது தேவநீதிக்கு ஒத்துவராது 
 
முதல்  நீதியை  நாம் செய்யாவிட்டால் இந்த உலகமே நமக்கு தண்டனை வழங்கிவிடும் எனவே அவைகளை நீங்கள்  எதன்   அடிப்படையிலும் நிச்சயம்  செய்யகூடாது.  அனால்   இந்த இரண்டாவது நீதியில் தவறுவதால்  என்ன விளைவுகள் நேரிடும் என்பது தேவனுக்கு தெரியும். அது மறைவாக உள்ளது.  எனவே அவர் அதையும் தனது கற்பனைகளில் சேர்த்துள்ளார். ஆனால் இந்த நீதிகளை நீங்கள் செய்யாவிட்டலும் தேவன் உங்களை ஒன்றும் செய்யப்போவது இல்லை. 
 
கிறிஸ்த்துவுக்குள்ளான   நாம் மேல்சொன்ன எது ஒன்றையும் மீறிவிடுவதால் குற்றவாளி  ஆகிவிடப்போவது  இல்லை. ஏனெனில் இயேசு நியாயபிரமாணத்தின் சாபம் நம்மேல் விழாதபடி அதை அழித்துவிட்டார். எப்படியெனில் "ஓய்வு நாளில் வேலை செய்பவன் கொலைசெய்யப்பட கடவன்" என்று நியாயபிரமாணம் சொல்லியிருக்க,   கிருபையின் கீழ் இருக்கும் நீங்கள் நியாயபிரமாணத்தின்  கிரியயாகிய ஓய்வுநாளை ஆசாரிக்கவிட்டலும் உங்களை யாரும் கொலை செய்ய போவதுஇல்லை.  

அனால் நியாயபிரமாணத்தை   நிறைவேற்ற   வந்த   இயேசுவே   "நான் நியாயபிரமாணத்தை அழிக்க வரவில்லை " என்று சொல்வதன் மூலம் அதில் விசேஷித்த எதோ ஓன்று இருக்கிறது என்பதை புரியவேண்டும்.
 
இப்பொழுது நீங்கள் நான் நியயபிரமானத்தின்படி நடக்கமாட்டேன் எனக்கு அது தேவையில்லை என்று சொல்வீர்களானால்   யாரும் உங்களை தண்டிக்கபோவது இல்லை. ஏனெனில் பவுல் கூற்றுப்படி  இயேசு  உங்களை நியயபிரமானத்திளிருந்து மீட்டுவிட்டார்.   ஆனால் நியாயபிரமாணத்தில் இருந்து மீட்கபட்டு விட்டதால் பாவம் செய்யலாமா?  கூடாதே! என்றும் பவுல் சொல்கிறார். எனவே பாவம் என்பது எங்கு எப்பொழுது செய்தாலும் அது தண்டனைக்குரியது. அதை எந்தகாலத்திலும் நாம் செய்யகூடாது என்பதை  வேதம் பல வசனங்களில் நமக்கு போதிக்கிறது.

நியாய பிரமாணத்தின்படியல்ல  உலகபிரமாணத்தின் அடிப்படையிலேயே பாவங்களுக்கு தண்டனை நிச்சயம் உண்டு!        

எனவே உங்கள் வாதமே முற்றிலும் தவறானது. பாவம் எதுவென்று சொல்லும் நிய்யபிரமானத்தை  மீறுவதால் இந்த உலகத்திலேயே தண்டனை கிடைக்கும்பட்சத்தில் அதை கைகொள்ளவேண்டியது இல்லை என்று போதிப்பது சரியானதா?
 
அன்பின் பிரமானத்துக்குள் நியாயபிரமாணம் அடங்காது, ஆனால் நியயபிரமானத்துக்குள் அன்பின்பிரமாணம் அடங்கும்   எப்படியெனில்
 
ஒரு சிறிய   உதாரணத்தை தருகிறேன்: 
 
அடுத்தவன்  மனைவி ஒருத்தி  தனது கணவன் உயிரோடு இருக்கும்போதே இன்னொருவன்மேல் தீராத ஆசைகொண்டு அடுத்தவன் நினைவில்  தவித்து அவனின்டம் வந்து நீ என்னை ஏற்கவில்லை  என்றால் நான் நிச்சயம் மரித்துவிடுவேன்    என்று சொல்கிறாள் என்று வைத்துகொள்வோம்.
 
இந்நிலையில் அன்பால் நிறைந்த  அந்த இன்னொருவன், அவள்  எக்காரணத்தை கொண்டும் செத்துவிடகூடாது என்று அவள் மீது மிகுந்த அன்புகொண்டு   அவளை ஏற்றுகொள்வது  நியாயமா? அல்லது நீ பிறன் மனைவியாக இருக்க உன்னை எக்காரணத்தை கொண்டும் நான் தீண்டமாட்டேன் என்று விலகுவது நியாயமா? 
 
இங்கு எது சரி? 
அன்பின் பிரமாணமா?
அல்லது
பிறன் மனைவியை தொடாதே என்று சொல்லும் நியயபிரமாணமா? 
 
இதில்
அன்பின் பிரமாண அடிப்படையில்   அவளை அன்போடு ஏற்றுகொள்வதுதான் 
நல்லது என்று நீங்கள் கருதினால் நான் இனி இங்கு வாதிடப்போவது இல்லை. 
 
இல்லை, எக்காரணத்தை கொண்டும்  பிறன் மனைவியை தொடுவது தவறு, அவளைவிட்டு விலகவேண்டும்  என்று நீங்கள் கருதினால் நீங்கள் நியாயமான மனிதர்! அன்பைவிட  நியாயத்தின்மேல் அதிக அக்கறையுள்ளவர்  அதாவது நியாயபிரமாணத்தை  பின்பற்றும் மனிதர் என்றே பொருள்படும்.  நீங்களே நியாயபிரமாணத்தை கைகொண்டுகொண்டு அது தேவையில்லை என்று வாதிடுவது எவ்விதத்திலும் ஏற்றதல்ல! .     
 
நியாயம் எதுவென்று சொல்வதுதான் நியாயபிரமாணம்! 
நியாயம் எக்காலத்திலும்  அநியாயமாக மாறுவது இல்லை!        
எனவே
நியாயம் எதுவென்று போதிக்கும் நியாயபிரமாணமும்  எல்லாம் 
நிறைவேறும்வரை  (அதாவது தேவன் வருமளவும்)  ஒழிந்து போவதில்லை!



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் அவர்களே,

நியாயப்பிரமானத்தில் ஒரு சில பகுதிகளை பிடித்துக்கொண்டு அதையே திருப்பி திருப்பு சொல்லி வருகிறீர்கள். நியாயப்பிரமானம் புறஜாதிகளுக்கு கொடுக்கப்பட்டது என்று ஒரு வசனம் கான்பித்து தாருங்கள். "பல்லுக்கு பல், கண்ணுக்கு கண்" என்கிறதை பின் பற்ற முடியுமா. இதுவும் நியாயப்பிரமானத்தில் ஒரு கட்டளை தானே!! இதையும் பின் பற்ற வேண்டுமா. சும்மா மனசாட்சியின் படி உங்களுக்கு நியாயமாக தெரியும் சிலவற்றை பிடித்துக்கொண்டு நான் நியாய்ப்பிரமானத்தை பின் பற்றி வருகிறேன் என்று சொல்லுவது எந்த விதத்தில் "நியாயம்"?

அன்பின் பிரமானம் புதிதான ஒன்று என்று நான் சொல்லவில்லை. மாறாக நியாய்ப்பிரமானத்தை நிறைவு செய்ய கொடுக்கப்பட்டது ஒன்று.

சட்டத்தின் படி ஒருவன் பயப்படுவது பெரிது அல்ல. மாறாக அன்பினால் ஒரு காரிய‌ம் செய்யாம‌ல் இருப்ப‌து தான் பெரிது என்று இயேசு கிறிஸ்து போதிக்கிறார். யூத‌ர்க‌ள், இப்ப‌டி இந்த‌ நியாப்பிர‌மான‌ங்க‌ளை முழுவ‌துமா (மீண்டும்) முழுவ‌துமாக‌ பின் ப‌ற்றினால் தான் அவ‌ர்க‌ளுக்கு ஆசீர்வாத‌ங்க‌ள் என்கிற‌து வேத‌ம். ஆனால் அன்பின் பிர‌மான‌ம் இப்ப‌டி ச‌ட்ட‌த்திற்கு ப‌ய‌ந்து இல்லை மாறாக‌ தேவ‌னின் ஆவியை கொண்டு அன்பினால் இவ‌ற்றை செய்கிறான். "எழுத்தோ கொல்லும், ஆவியோ உயிர்ப்பிக்கும்".

கிருபையின் கீழ் இருந்தால் எதுவும் செய்ய‌ முடியும் என்று துர் உப‌தேச‌த்தை நான் ஒரு போதும் த‌ர‌ மாட்டேன், அப்ப‌டி த‌ந்திருந்தால் சுட்டி கான்பியுங்க‌ள்!! கிருபையின் கீழ் இருந்தால், நான் நியாய்ப்பிர‌மான‌த்தின் கிரியைக‌ளினால் (ப‌லிக‌ளினால்) ம‌ன்னிப்பு பெறாம‌ல், இயேசு கிறிஸ்துவின் ஆவியினால் பிதாவின்ட‌த்திலிருந்து ம‌ன்னிப்பு பெருகிறேன், ஏனென்றால், என‌க்காக ப‌ரிந்து பேச‌ இயேசு கிறிஸ்து என் ப‌ரிந்துரையாள‌ராக‌ இருக்கிறார் (1 யோவான் 2:1).

நியாய்ப்பிர‌மான‌த்தை பின் ப‌ற்றின‌வ‌ர்க‌ள் ப‌லிக‌ளினால் ம‌ன்னிப்பை பெற்றார்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு ப‌ரிந்து பேச‌ இயேசு கிறிஸ்துவும் அவ‌ரின் இர‌த்த‌மும் இல்லை. ஆக‌வே தான் ச‌ட்ட‌த்தை பின் ப‌ற்றுப‌வ‌ர்க‌ள் கிருபையிலிருந்து விழுந்தார்க‌ள் என்கிறார் ப‌வுல்.

த‌ய‌வு செய்து நியாய்ப்பிர‌மான‌த்தின் ந‌ற்கிரியைக‌ளை மாத்திர‌ம் எடுத்துக்கொண்டு அது தான் முழு நியாய்ப்பிர‌மான‌ம் என்கிற‌ த‌வ‌றான‌ போத‌னையை கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு த‌ராதீர்க‌ள். ஏனென்றால் இந்த‌ ந‌ற்கிரியைக‌ள், கிறிஸ்துவிற்குள் இருக்கும் ஒவ்வொரு ம‌னித‌னும் செய்ய‌ க‌ட‌மைப்ப‌ட்டிருக்கிறான். செய்ய‌வில்லை என்றால், கிறிஸ்துவின் ஆவி உடைய‌வ‌னாக‌ இல்லை என்றே அர்த்த‌ம்.

மீண்டும் இதையே சொல்லுகிறேன். ம‌ன‌திற்கு ந‌ல்லா இருக்கிற‌து என்று ஒரு சில‌ க‌ட்ட‌ளைக‌ளை வைத்து கொண்டு, முழு நியாய்ப்பிர‌மான‌த்தையும் பின் ப‌ற்றுகிறேன் என்று த‌வ‌றாக‌ போதிக்காதீர்க‌ள். ஒருவ‌ன் ஒரு க‌ட்ட‌ளையையும் (நியாய்ப்பிர‌மான‌த்தின்) முழு நியாய்ப்பிர‌மான‌த்தையும் மீறின‌வ‌னாக‌ இருக்கிறான்.

நீங்க‌ள் கொடுத்த‌ உதார‌ன‌த்திற்கு ஒரே ப‌தில்:

ச‌ட்ட‌த்தை பின் ப‌ற்றுப‌வ‌ர்க‌ளைவிட‌, இன்னும் மேலான‌தை தான் செய்வேன். ச‌ட்ட‌ம் ஏன் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து தெரியுமா? ம‌க்க‌ளிட‌ம் அன்பை வ‌ள‌ர்க்க‌, தேவ‌னிட‌த்தில் ப‌ய‌த்தையும் ப‌க்தியையும் உண்டுப்ப‌ன்ன‌. ஆனால் அன்பிற்கு ச‌ட்ட‌ம் தேவை இல்லை. ஏனென்றால் "நீ விப‌ச்சார‌ம் செய்யாதே" என்று அவ‌னிட‌த்தில் போதிக்க‌ தேவையில்லை, ஏனென்றால் ஒரு ஸ்திரியை இச்சையுட‌ம் பார்த்தாலே அவ‌ன் விப‌ச்சாரி என்று அவ‌ன் அறிந்திருக்கிறான்.

ச‌கோ ராஜ் அவ‌ர்க‌ளே, நீங்க‌ள் நியாய்ப்பிர‌மான‌த்தை ந‌ன்றாக‌, நிதான‌மாக‌ பின் ப‌ற்றி, நியாய‌ம் உள்ள‌ ம‌னுஷ‌ன் என்றே பெய‌ர் எடுங்க‌ள். நான் பாவி என்றே இருந்து விடுகிறேன்.

ஆலய‌த்தில் ஒரு யூத‌ன் "நான் நியாய்ப்பிர‌மான‌த்தை முழுவ‌துமாக‌ பின் ப‌ற்றுகிறேன், அப்ப்டியாக்கும் இப்ப‌டியாக்கும் என்றெல்லாம் ஜெபித்து (!!) சுய‌ நீதியுள்ள‌வ‌னாக‌ இருந்தானாம்" ஆனால் இன்னோரு புற‌ஜாதியானோ, "ஆண்ட‌வ‌ரே நான் பாவி" என்று சுருக்க‌மாக‌ சொன்னானாம். யாரின் ஜெப‌ம் கேட்க்க‌ப்ப‌டும் என்று இயேசு கிறிஸ்துவே அத‌ற்கு ப‌தில் த‌ந்து விட்டார். சுய‌நீதி உள்ள‌வ‌னாக‌ இருப்ப‌தை விட‌ பாவியாக‌ இருப்ப‌வ‌னே அதிக‌ பெய‌ர் பெற்ற‌வ‌ன் என‌ப்ப‌ட்டான். ஆனால் நீங்க‌ள் தாராளமாக‌ நியாய‌ப்பிர‌மான‌த்தை பின் ப‌ற்றுங்க‌ள். அதில் உள்ள‌ ஒன்ரையும் விட்டு விடாம‌ல். நியாய்ப்பிர‌மான‌ம் பின் ப‌ற்றின‌வ‌ர்க‌ளுக்கு இயேசு கிறிஸ்து யார் என்று தெரிய‌வில்லை, வேண்டுமென்றால் அதையும் சேர்த்துக் கொள்ளுங்க‌ள்.

க‌லா 3:19: "அப்ப‌டியானால் நியாய்ப்பிர‌மான‌த்தின் நோக்க‌ம் என்ன? வாக்குத்த‌த்த‌த்தைப்பெற்ற‌ ச‌ந்த‌தி வ‌ரும‌ள‌வும் அது அக்கிர‌ம‌ங்க‌ளினிமித்த‌மாக‌க் கூட்ட‌ப்ப‌ட்டு, தேவ‌தூத‌ரை கொண்டு ம‌த்திய‌ஸ்த‌ன் கையிலே காட்ட‌ளையிட‌ப்ப‌ட்ட‌து" என்கிறார் ப‌வுல்,

இது தான் ஐய்யா நியாய‌ப்பிர‌மான‌த்தின் நோக்க‌ம். யூத‌ர்க‌ள் செய்யும் அக்கிர‌ம‌த்தை தேவ‌ன் பொருத்துக்கொள்ளாம‌ல் தான் நியாய்ப்பிர‌மான‌த்தை கொடுத்தார். அவ‌ர்க‌ள் அப்ப‌டியாவ‌து ஒழுங்காக‌ இருக்க‌ட்டும் என்று தான், ஆனால் எது வ‌ரையில்?, "வாக்குத்த‌த்த‌தைப்பெற்ற‌ ச‌ந்த‌தி (இயேசு கிறிஸ்து) வ‌ரும் ம‌ட்டும் தான். அத‌ன் பின் ந‌ட‌ந்த‌து எல்லாம் உங்க‌ளுக்கு தெரியும் என்றே நான் நினைக்கிறேன். ஆனாலும் இன்னும் பிடிவாத‌மாக‌ நான் நியாய்ப்பிர‌மான‌த்தை தான் பின் ப‌ற்றுவேன், அதை தான் தேவ‌ன் செய்ய‌ சொல்லியிருக்கிறார் என்றால், தாராள‌மாக‌ செய்யுங்க‌ள், உங்க‌ளை யாரும் த‌டுக்க‌ போவ‌தில்லை. ச‌த்திய‌த்தை அறியும் கால‌ம் வ‌ரும் போது இதிலிருந்து விடுத‌லையாகிக்கொள்ள‌லாம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

எனக்கு எது நிச்சயம் என்று உண்மையாக தெரியாத ஒன்றை நான் ஆம் இல்லை என்று பதில் சொல்லி ஏன் "உள்ளதை உள்ளதென்றும் இல்லத்தை இல்லதென்றும் சொல்லுங்கள்" என்ற இயேசுவின் கட்டளையை மீறவேண்டும்.?      


ராஜ் அவர்களே, நியாயப்பிரமாணத்தை முழுமையாகக் கைக்கொள்ளுகிறீர்களா என்ற ஒரு சிம்பிளான கேள்விக்கு ஒரு உலகளாவிய பதில்தருகிறீர்கள். முழுமையாகக் கைக்கொண்டால் ஆம் இல்லையென்றால் இல்லை. இதற்காக ஏன் இத்தனை சுற்றுக்கள். ஆக உங்களூக்கே நிச்சயமில்லாத ஒரு விஷயத்தை மற்றவர்களை வேறு கடைபிடிக்கச் சொல்கிறீர்கள். சரி இதையாவது சொல்லுங்கள். நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொள்ள  வேண்டுமா அல்லது நமக்குப் பிடித்த கொலை செய்யாதே போன்ற மிக எளிதான ஒரு சிலவற்றை மட்டும் கைக்கொண்டால் போதுமா?      



-- Edited by soulsolution on Friday 27th of November 2009 11:27:21 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

 
இந்த விவாதத்துக்கு முடிவிருக்காது என்று நான் நினைக்கிறேன். 
 
பல உதாரணங்கள்  மூலம் விளக்கிவிட்டேன்  உங்களால் 
புரிந்துகொள்ள முடியவில்லை. இயேசு நியாயத்துக்காக மரித்துவிட்டார் இனி நியாயம் செய்ய தேவையில்லை என்ற  ல் உங்கள்  கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 
 
நியாயபிரமாண கிரியைகளில் எதையெல்லாம் இயேசு மரணத்தால் அழித்தார் என்றும், 
நியாயபிரமாணம் முடிந்தது என்று சொன்ன பவுல் ஏன் பாவம் செய்ய கூடாது என்று  சொன்னார் என்பதும் உங்களுக்கு புரியவில்லை. 
 
குளித்தால் மூழ்கி நன்றாகி குழி இல்லையென்றால் தண்ணியே  மேலே உற்றாதே  என்கிறீர்கள்!
 
நான் கேட்ட பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலில்லை! பாவசேற்றில் புரண்ட நம்மை தூக்கி எடுத்து கழுவினார் இயேசு. இனி அப்படி புரளாதே என்பதுதான் அவரது கட்டளை. ஆனால் எது பாவசேறு  எனபதை சொல்லும் நியாயபிரமாணம் வேண்டாம் பாவசேறு   எதுவென்று தெரியாமலே சேரில் புரளமாட்டேன்   என்று சொன்னால்  உங்கள் நடத்தைகள்  தேவனின் பார்வையில் சரியாக இருந்தால் சரி!
 
இனியும் விவாதிப்பதில் பலனில்லை இத்துடன்   விட்டுவிடுவோம்!
 



-- Edited by RAAJ on Saturday 28th of November 2009 09:47:27 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பாவம் என்பது என்னவென்று யூதர்களுக்கு மாத்திரமே நியாய்ப்பிரமானம் போதித்தது. ஆனால் புரஜதியாருக்கு மனசாட்சி அதையே போதித்தது என்பதை வேதம் சொல்லுகிறது. ஆனால் அந்த நியாய்ப்பிரமான என்பது யூதர்களை கிறிஸ்துவிடம் கூட்டி செல்லும் ஒரு கைதடியாக இருந்தது அன்றி அது அஸ்திபாரம் இல்லை. கிறிஸ்துவிடம் வந்து விட்ட பிறகு அந்த கைத்தடியும் தேவை இல்லை என்பதை தான் வேதம் கலா 3ல் சொல்லுகிறது.

ரொம்ப தெளிவாக கேட்கிறேன். நியாய்ப்பிரமானமும் அதில் உள்ள எந்த கட்டளைகளை இயெசு கிறிஸ்து நிறைவு செய்து விட்டார், எதை அவர் இன்னும் நாம் பின் பற்ற வேண்டும் என்று சொன்னார்.

வேதத்தை நிதானமாக ஆய்ந்து பாருங்கள். மனதிற்குள் இருக்கும் நியாய்ப்பிரமானத்தை சற்றே விளக்கி வைத்து வேதத்தை வாசியுங்கள். நியாய்ப்பிரமானம் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டதா, புறஜாதியாருக்கு கொடுக்கப்பட்டதா என்பதை முதலில் தெளிவு படுத்திக்கொல்ளுங்கள். ஏனென்றால் நீங்க‌ள் மீண்டும் மீண்டும் ந‌ற்கிரியைக‌ளையும், நியாய்ப்பிர‌மான‌த்தையும் போட்டு குழ‌ம்பியிருக்கிறீர்க‌ள் என்ப‌தே உங்க‌ள் நியாய்ப்பிர‌மான‌ கொள்கைக‌ள் கான்பிக்கிற‌து. வெறும‌னே விப‌ச்சார‌ம் செய்யாதே, கொலை செய்யாதே, பொய் பேசாதே, திருடாதே போன்ற‌வ‌ற்றில் மாத்திர‌மே நியாய்ப்பிர‌மான‌ம் முடிந்து போவ‌தில்லை. இந்த‌ காரிய‌ங்க‌ள் தேவ‌ன் இல்லை என்று சொல்லுப‌வ‌ர்க‌ள் கூட‌ தான் பின் ப‌ற்றுகிறார்க‌ளே!

ஒரே ப‌க்க‌த்தில் கொடுத்த‌ க‌லாத்தியர் புத்த‌க‌த்திலிருந்து கொடுக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு உங்க‌ளிட‌த்திலிருந்தும் எந்த‌ ப‌திலும் இல்லையே!

உங்க‌ள் கேள்விக‌ளுக்கு எல்லாம் ஒரே ப‌தில், நீங்க‌ள் ந‌ற்கிரியைக‌ளையும், நியாய்ப்பிர‌மான‌த்தை போட்டு குழ‌ப்பி கொண்டு, ந‌ற்கிரியைக‌ளை செய்வ‌து தான் நியாய்ப்பிர‌மான‌த்தை நிறைவேற்றுவ‌து என்று நினைக்கிறீர்க‌ள்.

நான் மீண்டும் கேட்க்கிறேன், புற‌ஜாதிக‌ள் நியாய்ப்பிர‌மான‌த்துக்கு கீழ் ஆன‌வ‌ர்க‌ளா என்ப‌தை வ‌ச‌ன‌ ஆதார‌த்துட‌ன் கான்பியுங்க‌ளே!! முடியாது, ஏனென்றால், நியாய்ப்பிர‌மான‌ம் புற‌ஜாதிக‌ளுக்கு இல்லாம‌ல் யூத‌ர்க‌ளுக்கு மாத்திர‌மே உண்டான‌ ஒரு விஷ‌ய‌ம் (ரோம் 3:1,2). ஆக‌வே தான் ப‌வுல் யூத‌ர்க‌ளிட‌ம் மாத்திர‌மே நியாய்ப்பிர‌மான‌த்தை குறித்து அதிலிருந்து விடுத‌லையாவுங்க‌ள் என்கிறார். ம‌ற்ற‌ப்ப‌டி உங்க‌ள் இஷ்ட்ட‌ம். ஆனால் பின் ப‌ற்ற‌ வேண்டும் என்றால் முழு நியாய்ப்பிர‌மான‌த்தையும் பின் ப‌ர்றுங்க‌ள். அப்பொழுது தான் பிர‌யோஜ‌ன‌ம் உண்டாகும். At least ந‌ல்ல‌ ஒரு யூத‌னாக‌ இருக்க‌லாமே!!

ராஜ் எழுதுகிறார்:
"நியாயபிரமாண கிரியைகளில் எதையெல்லாம் இயேசு மரணத்தால் அழித்தார் என்றும்,
நியாயபிரமாணம் முடிந்தது என்று சொன்ன பவுல் ஏன் பாவம் செய்ய கூடாது என்று  சொன்னார் என்பதும் உங்களுக்கு புரியவில்லை."

ச‌ரி உங்க‌ளுக்கு புரிந்த‌தை எழுதுங்க‌ளேன்! வெறும் பொய் பேசாதே, விப‌ச்சார‌ம் செய்யாதே, கொலை செய்யாதே, என்று ம‌ன‌சாட்சியின் ப‌டி வாழ்கிற‌ ம‌க்க‌ள் செய்யும் இவை அனைத்தையும் நியாப்பிர‌மான‌ம் மாத்திர‌ம் தான் போதிக்கிற‌து என்று ஏன் போதித்து வ‌ருகிறீர்க‌ள்? இவை த‌விர‌ நியாய்ப்பிர‌மான‌த்தில் வேறு ஒன்றுமே இல்லையா. எதை எல்லாம் இயேசு கிறிஸ்து தன் மரணத்தால் அழித்தார் என்றும் எழுதுங்களேன்!!

மீண்டும் ராஜ்:
"குளித்தால் மூழ்கி நன்றாகி குழி இல்லையென்றால் தண்ணியே  மேலே உற்றாதே  என்கிறீர்கள்!"

முழுசாக‌ குளித்த‌வ‌ன் கால் க‌ழுவினால் போதும் என்று இயேசு கிறிஸ்து சொன்னதை தான் சொல்லுகிறோம். ஆனால் மீண்டும் மீண்டும் குளிக்க‌ சொல்லி நீங்க‌ள் போதிப்ப‌து உங்க‌ளுக்கே புரிய‌வில்லை போல்.

ராஜ் எழுதுகிறார்:
"இனி அப்படி புரளாதே என்பதுதான் அவரது கட்டளை."

அப்ப‌டியே பாவ‌ம் செய்தாலும், ப‌ரிந்து பேசுவ‌த‌ற்கு இயேசு கிறிஸ்து இருக்கிறார் என்று தான் வேத‌ம்  என(நம‌)க்கு போதிக்கிர‌து (1 யோவான்2:1).ஏனென்றால் நாம் ம‌ண் என்று தேவ‌ன் அறிந்திருக்கிறார். நியாய்ப்பிர‌மான‌வாதியாக‌ இருந்த‌ ப‌வுல் அதை விட்ர்டு வ‌ந்த‌ பிற‌கு தான் சொல்லுகிறார், பாவிக‌ளில் நான் பிர‌தான‌ பாவி என்று. ஆனால் நியாய்ப்பிர‌மான‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் சுய‌ நீதியில் இருக்கிற‌வ‌ர்க‌ள் என்று தான் வேத‌ம் ப‌ரிசேய‌ர்க‌ள், ச‌துசேய‌ர்க‌ள் மூல‌மாக‌ ந‌ம‌க்கு போதிப்ப‌து உங்க‌ளுக்கு புரிய‌வில்லையா. நான் பாவி என்று ஒத்துக்கிற‌து தான் ந‌ல்ல‌து, ஏனென்றால் அது தான் ந‌ம் சுபாவ‌ம், அதிலிருந்து (என்றால், பாவ‌த்தின் விளைவான‌ ம‌ர‌ண‌த்திலிருந்து) மீட்டு எடுக்க‌வே, கிறிஸ்து ந‌ம‌க்காக‌ ம‌ரித்தார் என்கிற‌ ஒரு அடிப‌டை விசுவாச‌ம் கூட‌ இல்லாம‌ல் தான் யூத‌ர்க‌ளுக்கு கொடுத்த‌ நியாய்ப்பிர‌மான‌த்தை அதிலும் த‌ச‌மாபாக‌ம் போன்ற‌ த‌ன் வ‌யிற்றை நிற‌ப்பும் க‌ட்ட‌ளைக‌ளை மாத்திர‌மே இன்றைய‌ ச‌பைகள் (!!) போதிக்கின்ற‌ன‌.

மீண்டும் உங்க‌ளிட‌ம் கேட்கிறேன், நியாய்ப்பிர‌மான‌ம் யாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து என்று. இத‌ற்கு மாத்திர‌ம் தெளிவான‌ ப‌தில் தாருங்க‌ள். மிச்ச‌த்தை பிற‌கு பார்க்க‌லாம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

 

பாவம் என்பது என்னவென்று யூதர்களுக்கு மாத்திரமே நியாய்ப்பிரமானம் போதித்தது. 

மீண்டும் உங்க‌ளிட‌ம் கேட்கிறேன், நியாய்ப்பிர‌மான‌ம் யாருக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌து என்று. இத‌ற்கு மாத்திர‌ம் தெளிவான‌ ப‌தில் தாருங்க‌ள். மிச்ச‌த்தை பிற‌கு பார்க்க‌லாம்.



நியாயபிரமாணம் அதாவது நியாயம் என்னவென்று சொல்லும் பிரமாணம் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது அது நமக்கு இல்லை!

 
ஆதியாகமம் யாத்ராகமம்  எல்லாம் எங்கோ யாருக்கோ நடந்தது அதுவும் நமக்கு இல்லை! 
 
தீர்க்கதரிசனங்கள் "நியாயபிரமாணம் கைகொள்ளப்பட வேண்டும்" என்று போதிக்கின்றன எனவே அதுவும் நிச்சயம் நமக்கு இல்லை! 
 
இயேசு பிறந்தது போதித்தது எல்லாம் யூதர்களை பார்த்துதான்  மேலும் அவரே "காணாமல்  போன இஸ்ரவேல் வீட்டாருக்காக அனுப்பபட்டேனயற்றி மற்றபடி அல்ல" என்று அவரது வாயாலே சொல்லிவிட்டார் எனவே அவர் சொன்னதும்  நமக்கு
இல்லை! 
 
ஆக மொத்தம் பவுல் எழுதிய நிரூபங்கள் மட்டுமே, (அதுவும் அவரும்  இன்னின்ன சபைக்கு என்று குறிப்பிட்டு எழுதியிருக்கிறார் எனவே அதுவும் நமக்கு இல்லை இருந்தாலும்)  அது மட்டும்தான்   நமக்காக சொல்லப்பட்ட தேவனின் வார்த்தைகள் என்பதுதானே உங்கள் கருத்து? 
 
நல்லது!  நாளை தேவன்  உங்களை விசாரிக்கும் போதும் இதே பதிலை சொல்லுங்கள்!  யாருடய உபதேசத்தில் தவறிருக்கிறது என்பதை அவரே தீர்மானிக்கட்டும்!


-- Edited by RAAJ on Saturday 28th of November 2009 02:02:00 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ராஜ் எழுதுகிறார்:
"நியாயபிரமாணம் அதாவது நியாயம் என்னவென்று சொல்லும் பிரமாணம் யூதர்களுக்கு கொடுக்கப்பட்டது அது நமக்கு இல்லை!"

இது தான் நீங்கள் நியாயப்பிரமாணம் என்று புரிந்து இருக்கிறதா!!

மீண்டும் ராஜ்:
"இயேசு பிறந்தது போதித்தது எல்லாம் யூதர்களை பார்த்துதான்  மேலும் அவரே "காணாமல்  போன இஸ்ரவேல் வீட்டாருக்காக அனுப்பபட்டேனயற்றி மற்றபடி அல்ல" என்று அவரது வாயாலே சொல்லிவிட்டார் எனவே அவர் சொன்னதும்  நமக்கு
இல்லை!"

ஐயா ராஜ் அவர்களே, புறஜாதிகளிடத்தில் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் சென்றைடைய ஒரு குறிப்பிட்ட காலம் இருந்தது, அப்பொழுது அது நடைப்பெற்றது, அதற்காக தான் பவுலை அவர் தேர்ந்தெடுத்தார். இயேசு கிறிஸ்து வந்து யூதர்களின் மத்தியில் பிரசங்கம் செய்தார் என்ப‌து உண்மையே, அவ‌ர் வேறு எங்கும் செல்ல‌வில்லை என்ப‌தும் உண்மையே, ஆனால் அவ‌ர் செய்த‌ போத‌னைக‌ளை அனைவ‌ரிட‌மும் எடுத்து செல்ல‌ சொல்லி தான் அப்போஸ்த‌ல‌ர்க‌ளை அனுப்பினார்.(ம‌த். 28:19,20).

இப்ப‌டி எல்லாம் வ‌ச‌ன‌ம் இருந்தும் நீங்க‌ள் செய்வ‌து வாத‌ம் இல்லை என்று தான் தோன்றுகிற‌து. முத‌லில் நியாய்ப்பிர‌மான‌ம், மோசெயை ந‌டுவ‌ராக‌ (கிறிஸ்துவின் நிழ‌ல்) வைத்து தேவ‌தூத‌னால் கொடுக்க‌ப்ப‌ட்ட‌து, என்ப‌தை தெரிந்துக்கொள்ளுங்க‌ள். நீங்க‌ள் சில‌ ந‌ற்கிரியைக‌ளை எடுத்துக்கொண்டு இது தான் நியாய்ப்பிர‌மான‌ம் என்று முடிவில் இருக்கீங்க‌, என்ன‌ செய்வ‌து?

"நல்லது!  நாளை தேவன்  உங்களை விசாரிக்கும் போதும் இதே பதிலை சொல்லுங்கள்!  யாருடய உபதேசத்தில் தவறிருக்கிறது என்பதை அவரே தீர்மானிக்கட்டும்! "

இப்ப‌வும் நீங்க‌ள் மாத்திர‌ம் தான் நியாய‌மாக‌ ந‌ட‌ந்துக்கொள்ளுவ‌து போல் எழுதியிருக்கீங்க‌ளே!!

நான் கேட்ட‌ கேள்வி, "நியாய‌ப்பிர‌மாண‌ம் புற‌ஜாதிக‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌தா" என்ப‌து? அத‌ற்கு ப‌தில் த‌ராமால் என்னை நியாய‌ம் தீர்க்கிறீர்க‌ளே! என்ன‌ நியாய‌ம்?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

கிறிஸ்துவினால் உண்டான தேவ கிருபையை விருதாவாக்கும் வாதத்தில் சகோதரர்கள் ஈடுபடுவது வருந்தத்தக்கது. இவர்கள் வாதம், என்னதான் தேவன் மனிதர்களை மன்னித்து இரட்சிப்பளித்திருந்தாலும் மனிதர்கள் அதை தங்கள் 'நற்கிரியைகளால்' காத்துக்கொள்ளாவிட்டால் மீண்டும் நித்திய மரணத்தில் பங்கடைந்து அழிந்து போவார்களாம். தேவதூஷணத்தின் உச்சமே இதுதான்.

ஆக, இவர்கள் கணக்கின்படி இவர்களைப் போல இன்னமும் 'கற்பனைகளை' முழுமையாகக் கைக்கொள்ளாதவர்கள் அனைவருமே நித்திய அழிவாகிய இரண்டாம் மரணத்திற்கு இப்போதே தகுதியாகிவிட்டார்கள்! இதுதான் ஆதாம் முதலே 'பாவத்தின் சம்பளம் மரணம்' என்ற மரணப்பிரமாணம் இருந்ததே? பின் மீட்பு யாருக்கு, எதற்கு, எப்படி, ஏன்?

கிறிஸ்து எதற்காக வந்தார், ஏன் அவ்வளவு பெரிய தியாகம் செய்தார்?

'கட்டுக்கதைகளூக்கு செவிசாய்க்கும் காலம்' என்பதற்கு இத்தகைய பிசாசின் போதனைகளே சாட்சி. தேவன் தாமே இவர்களை தங்கள் சுயநீதியிலிருந்து விடுவிப்பாராக!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:

கிறிஸ்துவினால் உண்டான தேவ கிருபையை விருதாவாக்கும் வாதத்தில் சகோதரர்கள் ஈடுபடுவது வருந்தத்தக்கது. இவர்கள் வாதம், என்னதான் தேவன் மனிதர்களை மன்னித்து இரட்சிப்பளித்திருந்தாலும் மனிதர்கள் அதை தங்கள் 'நற்கிரியைகளால்' காத்துக்கொள்ளாவிட்டால் மீண்டும் நித்திய மரணத்தில் பங்கடைந்து அழிந்து போவார்களாம். தேவதூஷணத்தின் உச்சமே இதுதான்.

ஆக, இவர்கள் கணக்கின்படி இவர்களைப் போல இன்னமும் 'கற்பனைகளை' முழுமையாகக் கைக்கொள்ளாதவர்கள் அனைவருமே நித்திய அழிவாகிய இரண்டாம் மரணத்திற்கு இப்போதே தகுதியாகிவிட்டார்கள்! 
  


எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் நான் சொல்லாத வார்த்தைகளை சொல்லி என்மேல் அபாண்டமான  பழி போட வேண்டாம். அப்படி நான் எங்கும் எழுதவில்லை.
 
நாம் செய்யும் கிரியைக்கு தக்க பலன் நிச்சயம் கிடைக்கும் எனவே தேவனின் வார்த்தையை கைகொண்டு நடப்பதில் மேன்மை இருக்கிறது  என்றுதான் சொல்ல வருகிறேன்! 
 
மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

வெளி 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

என்ற வசனத்தின் அடிப்படையிலேயே நான் சொல்கிறேன்.
 
http://groups.google.com/group/iraivan

-- Edited by RAAJ on Friday 4th of December 2009 02:06:20 PM

-- Edited by RAAJ on Thursday 10th of December 2009 05:16:17 PM

-- Edited by RAAJ on Thursday 10th of December 2009 05:26:16 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ராஜ் எழுதியது
//மத்தேயு 16:27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

வெளி 22:12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.

என்ற வசனத்தின் அடிப்படையிலேயே நான் சொல்கிறேன்.//

ஐயா ராஜ் அவர்களே,

மறுபடியும் குழப்புகிறீர்! சரி என்ன கிரியைகளுக்குத் தக்கதாக என்ன பலன் என்று நீங்கள் புரிந்துகொண்டீர்கள் என்பதை  விளக்க முடியுமா? என்ன எழுதப்போகிறீர்கள், நற்கிரியைகள் செய்தவன் பரகலோகம் போவான் செய்யாதவன் அழிக்கப்படுவான் அல்லது நரகத்தில் நித்திய வாதைக்குப்போவான் என்றுதானே.

வெறும் 'நற்கிரியைகள்' மாத்திரம் அல்ல ஒரு மேன்மையான பரிசுத்தமான 'தனக்குண்டான எல்லாவற்றையும்' நஷ்டமும், குப்பையுமாக எண்ணி இவ்வுலகில் பாடனுபவிப்பதை மட்டுமே லாபமாக எண்ணி வாழும் பவுல் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒப்பான வாழ்க்கையைத்தான் புதிய ஏற்பாட்டின் சபைக்கு கிறிஸ்து கொடுத்துள்ளார்.

நியாயப்பிரமாணத்தை வைத்துக்கொண்டு ஒருவனும் மேன்மை பாராட்டாதபடிக்கு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். ஆகவேதான் 'நியாயப்பிரமாணம் முழுவதையும் என் சிறு வயது முதலே கைக்கொள்ளுகிறேன்' என்று சொன்ன அந்த பணக்கார இளைஞனிடம் உன்னிடம் ஒரு குறை உண்டு, உனக்குண்டான எல்லாவற்றையும் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின்பற்று என்றார். 'ஆஹா பேஷ் பேஷ் நியாயப்பிரமாணததைக் கைகொள்ளும் நண்பனே, நீ நிச்சயம் பரலோகம் போவாய்' என்று சொல்லியிருந்தால் நீங்கள் சொல்வதை கிறிஸ்துவும் ஆமோதிப்பதாக அர்த்தம், ஆனால் அப்படியில்லையே. இன்று அந்த இளைஞன் சொவதைத்தான் நாமும் சொல்வோம்.

புதிய உடன்படிக்கைக்குள் வந்து விட்டால் அங்கு கிருபைதான் கோலோச்சுகிறது. நியாயப்பிரமாணம் ஒருவனையும் நீதிமானாக்கவில்லை. ஏனென்றால் சட்டம் தண்டணைக்கு நம்மை ஏதுவாக்குகிறது. ஆனால் 'கருணை மனு' தண்டனையிலிருந்து தப்புவிக்கிறது.

இதைத்தான் இன்னும் நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் கள்ளசகோதரருக்கு எச்சரிக்கையாக இருக்கச் சொல்லு வேதம் போதிக்கிறது.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard