kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நம்ப முடிவதில்லை!!


Member

Status: Offline
Posts: 18
Date:
நம்ப முடிவதில்லை!!


"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமாக இருக்கிறார்" 1 தீமோ 2:6

இந்த வசனம் தேவனின் அழகான சித்தத்தை வெளிப்படுத்தும் ஒரு வசனமாக இருக்கிறது. ஆனால் இன்றைய கள்ள போதகர்களும், தாங்களாகவே தங்களை ஊழியக்காரர்கள் என்று நியமித்துக்கொண்டவர்களும், கள்ள அப்போஸ்தலர்களும், வஞ்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களும் இப்படி ஒரு வசனத்தை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல் இருக்கிறார்கள்.

இதற்கு அவர்கள் சொல்லும் பதில், "அவர் சித்தமாக தான் இருக்கிறார், ஆனால் அப்படி நடக்காது" என்பது தான். தங்களை ஊழியர்கள் என்றும் பரிசுத்தவான்கள் என்றும் பெருமை பாராட்டி, இப்படி தேவ தூஷனம் செய்வதில் சற்றும் தயங்குவது கிடையாது. தேவனின் சித்தம் நிறைவேறாமல் பின்னே என்ன, இவர்களின் சித்தமா நிறைவேறும்.

இவர்கள் சித்தம் என்னவென்றால், இவர்கள் எல்லோரும் பரிசுத்தவான்களாம் மற்றவர்கள் அனைவரும் பாவிகளாம், அப்படி என்றால் அந்த மற்றவர்கள் எப்படி பரலோகம் செல்ல முடியும், அவர்கள் நரகமே செல்வார்கள் என்று நியாயத்தீர்ப்பு வேறு இன்றைய கள்ள கிறிஸ்துக்கள் துனிந்து சொல்லுகிறார்கள். என்ன‌ துனிச்ச‌ல்?

எல்லாருடைய‌ பாவ‌ங்க‌ளையும் தேவ‌ அன்பு ம‌ன்னித்து மூடுவ‌தால், எல்லோரும் உயிர்த்தெழுவார்க‌ள் என்று சொன்னால், அது எப்ப‌டி சாத்திய‌ம் என்று சொல்லுகிறார்க‌ள் இந்த‌ அன்ப‌ற்ற‌ ஊழிய‌ர்க‌ள்? என்னே ஒரு தேவ‌ அன்பு இவ‌ர்க‌ளிட‌த்தில்?

இன்னோரு கூட்ட‌ம் நான் ப‌ர‌லோக‌ம் சென்று என‌க்காக‌ க‌ட்ட‌ப்ப‌டும் வீடு, மாளிகை, என‌க்காக‌ போட‌ப் ப‌டும் த‌ங்க‌ சாலைக‌ள், எல்லாம் பார்த்து வ‌ந்தேன் என்று ரீல் சுத்துவார்க‌ள் ஆனால் அதை கேட்க‌ ஒரு பெரிய‌ கூட்ட‌மே த‌ங்க‌ளுக்கு உள்ள‌தை எல்லாம் அவ‌ர்க‌ளுக்கு கொடுக்கும். பகலில் அவ‌ர்க‌ள் இருத‌ய‌ம் முழுவ‌தும், இதே சிந்த‌னையில் இருப்ப‌தால் தான் இர‌வு தூங்கும் போது அந்த‌ விகார‌ம் நிறைந்த‌ இருத‌யத்தின் இச்சைக‌ள் (இச்சைய‌ட‌க்க‌ம் இல்லாதவ‌ர்க‌ள்) இப்ப‌டி க‌ன‌வுக‌ள் மூல‌மாக‌ நிறைவேறும். அதை அப்ப‌டியே அடுத்த‌ நாள் வ‌ந்து ச‌பை ம‌க்க‌ளிட‌ம் அல்ல‌து தொலைக்காட்சியில் ஊழிய‌ம் செய்கிறேன், தேவ‌ன் என்னை செய்ய‌ சொன்னார் என்று சொல்லி புதுமையான‌ மாய‌ ஜால‌ க‌தைக‌ளை சொல்லி கூட்ட‌ம் சேர்த்துக்கொண்டிருக்கிறார்க‌ள். இதை ஆமோதிக்கும் ஒரு கூட்ட‌மே இருக்கும், ஏனென்றால் அவ‌ர்க‌ள் இருத‌ய‌த்திலும் இதே சிந்த‌னை தான்.

இதை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ள், தேவ‌ன் எல்லாரையும் இர‌ட்சிப்பார் என்று அவரின் அழகான திட்டத்தை சொன்னால் ந‌ம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள்!



__________________


Executive

Status: Offline
Posts: 425
Date:

இன்றை கிறிஸ்தவ உலகில், கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்பவர்களாகத் தங்களைக் கருதுவோர் மற்றும் வேதாகமத்தை ஆராய்ச்சி செய்து அதின் உண்மைகளைக் கண்டறிந்துவிட்டதாகக் கருதுவோர் ஆகியோரில் பின்வரும் 4 கூட்டத்தாரப்பற்றி இங்கு சொல்ல விரும்புகிறேன்.

முதல் கூட்டத்தார் தங்களையே பரிசுத்தவான்கள் என நினைத்துக் கொண்டும் மற்றவர்களையெல்லாம் பாவிகள் என நினைத்துக் கொண்டும் தாங்கள் மட்டுமே பரலோகம் செல்லப்போவதாக நினைத்துக் கொண்டும் மற்றவர்களெல்லாம் நரகம் செல்லப்போவதாக நினைத்துக் கொண்டும் இருக்கின்றனர்.

இரண்டாவது கூட்டத்தார் தாங்களும் தங்கள் சபையாரும் மட்டுமே பரிசுத்தவான்கள் என்றும் மற்றவர்களெல்லாம் பாவிகள் என்றும் நினைத்து, தாங்களும் தங்கள் சபையார் மட்டுமே பரலோகம் செல்லப்போவதாக நினைத்துக் கொண்டும் மற்றவர்களெல்லாம் நரகம் செல்லப்போவதாக நினைத்துக் கொண்டும் இருக்கின்றனர்.

மூன்றாவது கூட்டத்தார், தேவன் ஆதியிலேயே தெரிந்துகொண்ட சிலர் மட்டுமே பரிசுத்தவான்களாக நடந்து முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குகொள்வார்கள் என்றும், மற்றவர்களெல்லாம் பாவிகளாகத்தான் வாழ்வார்கள் என்றும், அவர்களுக்கு என்ன உபதேசித்தாலும் அது வீண்தான் என்றும், இவ்வுலகில் பெருங்கூட்டத்தார் பாவிகளாக இருக்கவேண்டுமென்பதுதான் தேவதிட்டம் என்றும் நம்பிக் கொண்டும், யாருக்கும் உபதேசம் பண்ண வேண்டியதில்லை எனக் கருதிக்கொண்டும் இருக்கின்றனர்.
மேலும், பாவிகளாகிய பெருங்கூட்டத்தார் அனைவரும் கிறிஸ்துவின் பாவநிவாரண பலியால் பாவம் நீங்கி உயிர்த்தெழுந்து கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாவார்கள் என்றும், பாவமில்லாத அவர்களை கிறிஸ்து புடமிட்டு நீதிமான்களாக்கி நித்தியஜீவனைக் கொடுப்பார் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.

இவர்களைப் பொறுத்தவரை, இவர்களிடம் பின்வரும் நம்பிக்கைகள் இருப்பதாகத் தோன்றுகிறது.

1. ஆதியில் தேவனால் தெரிந்துகொள்ளப்படாதவர்களில் ஒருவன், தான் பரிசுத்தமாக ஜீவிக்கவேண்டும் என என்னதான் முயன்றாலும் அவனால் அது முடியாது; தேவனின் ஆதி தீர்மானப்படி அல்லது திட்டப்படி அவன் பாவியாகவே ஜீவிப்பான்; ஆனால் 1000 வருட அரசாட்சியில் அவன் புடமிடப்பட்டு, நித்தியஜீவனைப் பெறுவதற்கு தகுதியடைந்து, நித்தியஜீவனைப் பெறுவான்.

2. ஆதியில் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருவன், பரிசுத்தமாக வாழ முயலாவிட்டாலும், தேவனின் ஆதி தீர்மானப்படி அல்லது திட்டப்படி அவன் பரிசுத்தமாகத்தான் ஜீவிப்பான். அதன் பலனாக முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குகொள்ளக்கூடிய பாக்கியவானாகவும் இருப்பான்.

3. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமாக இருக்கிறார் என வேதவசனம் கூறுவதால், தேவசித்தப்படி எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட்டு நித்தியஜீவனைப் பெறுவார்கள் என்பது இவர்களின் உறுதியான நம்பிக்கை. ஆனால் வேதாகமம் கூறுகிற நித்திய அழிவு, நித்திய ஆக்கினை, 2-ம் மரணம் ஆகியவற்றில் யார் பங்கடைவார்கள் எனும் கேள்விக்கு இவர்களிடம் தெளிவான பதில் இல்லை.

4. வேதாகமம் கூறுகிற நித்திய அழிவு, நித்திய ஆக்கினை, 2-ம் மரணம் ஆகியவற்றில் பங்கடைகிற சில/பல மனிதரும் இருப்பார்கள் என யாராவது கூறினால், அவர்களெல்லாம் தேவஅன்பு இல்லாதவர்கள் என்பது இவர்களின் எண்ணம். அதேவேளையில், வேதாகமம் கூறுகிற நித்திய அழிவு, நித்திய ஆக்கினை, 2-ம் மரணம் ஆகியவற்றில் யாருமே பங்கடைய மாட்டார்கள் என்று சொல்வதுதான் தேவஅன்பு என்பதும் இவர்களின் எண்ணம்.

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமாக இருக்கிறார் என வேதவசனம் கூறினாலும், அநீதிமான்கள் நித்திய அழிவுக்குப் போவார்கள் என ஒரு வசனமும், நித்திய ஆக்கினை அடைவார்கள் என ஒரு வசனமும், 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள் என ஒரு வசனமும் இப்படியாக பல வசனங்கள் கூறுகின்றனவே, இவற்றின் கருத்து என்ன என்பது பற்றி இந்த மூன்றாவது கூட்டத்தார் சிந்திப்பதில்லை.(வசனங்கள்: 2 தெசலோனிக்கேயர் 1:10; மத்தேயு 25:46; வெளிப்படுத்துதல் 21:8; மாற்கு 3:29; யோவான் 3:36; 12:25; அப்போஸ்தலர் 13:46; ரோமர் 2:9; கலாத்தியர் 6:8; 1 யோவான் 3:15; பிலிப்பியர் 3:19; 1 தெசலோனிக்கேயர் 5:3; 2 பேதுரு 2:3; தானியேல் 12:2)

நான்காவது கூட்டத்தார், கிறிஸ்துவை விசுவாசித்து அவரது கற்பனைகளின்படி நடப்போர் மட்டுமே நித்தியஜீவனைப் பெறுவார்கள் என்றும் மற்றவர்கள் நித்திய அழிவைப் பெறுவார்கள் என்றும் நம்புகின்றனர். கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் எவர்களெல்லாம் பிரஜைகளாயிருப்பார்கள் என்பதை வேதாகமம் நேரடியாகக் கூறாவிடினும், இவ்வுலகில் கிறிஸ்துவை விசுவாசிக்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் மற்றும் இவ்வுலகில் கிறிஸ்துவின் கற்பனைகளின்படி நடக்க மனதார முயற்சி செய்து தோல்வியுற்றவர்கள் ஆகியோர் 1000 வருட அரசாட்சியில் பிரஜைகளாகி, கிறிஸ்துவை அறியவும் அவரது கற்பனைகளின்படி நடக்கவும் வாய்ப்பளிக்கப்படுவார்கள் என்பது இந்த 4-ம் கூட்டத்தாரின் நம்பிக்கை. மேலும், தேவனின் நீதியான தீர்மானத்தின்படி, துன்மார்க்கராகிய பலர்/சிலர் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகாமலேயே நேரடியாக 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள் என்றும் இவர்கள் நம்புகின்றனர். இவர்களின் நம்பிக்கைக்கு ஏற்றபிரகாரமாகத்தான் பல வேதவசனங்கள் காணப்படுகின்றன.

தொடர்ச்சி அடுத்த பதிவில் ....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

முந்தின பதிவின் தொடர்ச்சி ...

அவ்வாறெனில், எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமாக இருக்கிறார் என்ற வேதவசனத்திற்கு விளக்கமென்ன என்பது இவர்கள் முன் 3-வது கூட்டத்தார் வைக்கிற கேள்வி. இக்கேள்விக்கு 4-வது கூட்டத்தார் கூறும் பதில்:

”எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமாக இருக்கிறார் என்பதை மறுக்க இயலாது. அவ்வாறே ஆதாம் தமக்குக் கீழ்ப்படிய வேண்டும், ஆதாம் தவறினாலும் அவன் சந்ததியினர் தமக்குக் கீழ்ப்படியவேண்டும், குறிப்பாக தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரவேலர்கள் தமக்குக் கீழ்ப்படிய வேண்டும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட ராஜாவான சவுல் தமக்குக் கீழ்ப்படியவேண்டும் என்பதெல்லாம் தேவசித்தம்தான். ஆனாலும் தமது சித்தத்தை நிறைவேற்ற மனிதனின் சுயாதீனத்தில் அவர் பெரும்பாலும் தலையிடுவதில்லை. எனவேதான் தேவசித்தத்திற்கு மாறாக ஆதாம் நடந்தான், அவன் சந்ததியினரில் பலர் நடந்தனர், சவுல் ராஜா மற்றும் பலர் நடந்தனர்.

ஆனாலும் தேவசித்தப்படி நடந்து அவரால் பாராட்டப்பட்டவர்களும் உண்டு. ஆபேல், நோவா, யோபு, ஆபிரகாம், மோசே, தாவீது, யெகூ, யோசபாத் (மத்தேயு 23:35; ஆதி. 6:9; யோபு 1:8; ஆதி. 22:18; எண்ணாகமம் 12:7; 1 ராஜா. 14:8; 2 ராஜா. 10:30; 2 நாளா. 17:3,4:) இன்னும் பலர் அதற்கு உதாரணமாயுள்ளனர். அவர்களிலும் சிலர் சில வேளைகளில் தேவசித்தத்தின்படி நடவாமல் தேவனால் கடிந்துகொள்ளப்பட்டதும் உண்டு.

ஆதி முதல் இன்று வரை தேவசித்தத்திற்கு எதிராக நடந்த பல மனிதர்கள் உண்டு. லேவியராகமம் 26:27,28-ல் தேவனுக்கு செவிகொடாமல் அவருக்கு எதிர்த்து நடப்போரை அவர் எவ்வாறு தண்டிப்பார் என்பதை தேவன் கூறுகிறார். தேவனுக்கு எதிர்த்து நடத்தல் என்றால் என்ன? தேவசித்தத்திற்கு எதிராக நடப்பதுதானே? அவ்வாறு எதிர்த்து நடந்து, தேவனால் தண்டிக்கப்பட்ட பலர் உள்ளனரே? (எண். 14:22; உபா. 1:43; 9:23; 2 ராஜா. 17:14; 18:12; ஏசாயா 42:24; எரேமியா 32:23). இவர்களெல்லாம் தேவசித்தத்திற்கு எதிராக நடந்தவர்கள்தானே? இவர்களிடம் ஏன் தேவசித்தம் நடக்கவில்லை?

உலகம் பொல்லாங்கனுக்குள் (சாத்தானுக்குள்) கிடப்பதாக 1 யோவான் 5:19 கூறுகிறது. தேவசித்தத்திற்கு மாறாக இப்படி உலகம் பொல்லாங்கனுக்குள் கிடக்கையில், தேவசித்தத்தின்படி நடக்க சிலராவது முன்வருவதற்காகத்தான், உலகத்தார் உலகத்தாரல்லாதார் என ஜனங்களை 2 பிரிவாகப் பிரித்து, உலகத்தாரல்லாதார் எப்படியெல்லாம் நடந்து தேவசித்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை இயேசு போதித்தார் (லூக்கா 12:30; யோவான் 15:30; 17:14).

பரலோகத்தில் பிதாவின் சித்தம் செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக என இயேசு ஜெபிக்கச் சொன்னதன் அர்த்தமென்ன? தற்போது பூமியில் பிதாவின் சித்தம் செய்யப்படவில்லை என்பதுதானே?

பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தப்படி நடப்பவனே பரலோகத்தில் பிரவேசிப்பான் என மத்தேயு 7:21-ல் இயேசு கூறுவதால், பிதாவின் சித்தப்படி நடவாதவர்களும் இருக்க வாய்ப்புள்ளது என்பது புரிகிறதல்லவா?

எனவே மனிதனைப் பொறுத்தவரை, தேவசித்தம் நிறைவேறுவதென்பது மனிதனின் சுயாதீனத்தையும் சார்ந்ததாக உள்ளது. எனவே எல்லாரும் இரட்சிக்கப்படவேண்டும் என்பது தேவசித்தமாக இருந்தாலும், அது மனிதனின் சுயாதீனத்தைச் சார்ந்ததாகவும் உள்ளது. அதாவது இரட்சிக்கப்படுவதற்கான நிபந்தனைகளின்படி ஒருவன் நடப்பதன் அடிப்படையில்தான், அவன் இரட்சிப்படைய வேண்டும் எனும் தேவசித்தம் அவனில் நிறைவேறும்.”

நான்காவது கூட்டத்தாரின் இவ்விளக்கத்தை சகோ.eras போன்றவர்கள் ஏற்பார்களா என்பது கேள்விக்குறியே.

நான்காவது கூட்டத்தாரின் நோக்கம்: முதலாவது தாங்கள் தேவசித்தம் நிறைவேற முயலவேண்டும், அடுத்ததாக மற்றவர்களும் தேவசித்தம் நிறைவேறத்தக்கதாக நடக்கும்படி அவர்களுக்குப் போதிக்கவேண்டும் என்பதுதான். அவ்வாறு போதிக்காவிடில், எசேக்கியேல் 3:20-ன்படி மற்றவர்களின் இரத்தப்பழியை தேவன் தங்களிடம் கேட்பார் என்பது அவர்களின் நம்பிக்கை.

மேற்கூறிய 4 கூட்டத்தாரைத் தவிர வேறுவிதமான சில கூட்டத்தாரும் இருக்கக்கூடும். அவற்றையெல்லாம் சொல்வதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.

மேற்கூறிய 4 கூட்டத்தாரில் 1,2 மற்றும் 4-வது கூட்டத்தாரால் மற்றவர்களுக்கு பெரும் இடறல் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் 3-வது கூட்டத்தாரின் கூற்றுக்கள் மற்றவர்களை இடறச் செய்வதற்கு பெரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர்கள் சொல்வதை நம்புகிற பலர், இவ்வுலகில் தேவகற்பனைகளின் நடவாதிருக்க தைரியம் கொண்டு, அதன் காரணமாக நித்தியஜீவனை இழந்துபோக வாய்ப்புள்ளது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கலே விசுவாசித்தார்கள்" அப். 13:48
"அவர்கள் திருவசனத்திற்கு கீழ்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள், அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்" 1 பேது 2:8.

இந்த வசனங்களில் இப்படி ஒருத்தருக்கு ஒரு மாதிரியும் இன்னொருவருக்கும் வேறு மாதிரியும் விசுவாசத்தை நியமிப்பது பவுலோ, பேதுருவோ அல்லது இப்போது எழுதும் பெரேயன்ஸோ கிடையாது, மாறாக சிலரை விசுவாசிக்கவும் பலரை அவிசுவாசமாக நடக்க செய்வது தேவனின் நியமனித்தின் படியே. அவரே இதை நியமிக்கிறார்.

சகோதரரே, அனுபவங்கள் அல்ல, வசனங்களே நம்மை நடத்தட்டும்.

அதாவாது தேவனின் சித்தம் நிறைவேறாமல் போக செய்வதற்கு மனிதனிடம் அதிகாரம் இருக்கிறது போல் அல்லவா இருக்கிறது தங்களின் பதிவு. தேவ சித்தத்தை தடை செய்ய மனிதனின் சுய சித்தம் போதுமானதாக இருக்கிறது. தேவன் தன் சித்தத்தை நிறைவேற்றவோ கை விடவோ மனிதனின் சித்தத்தை சார்ந்து இருக்க வேண்டியாத இருக்கிறது போல்.

அப்படி என்றால் இரட்சிப்பு என்பதை ஒரு முறைகூட மரிக்காமலே இருக்கும் ஒரு நிலை என்று புரிந்துக்கொண்டு தான் பல உதாரனங்களை எழுதியிருகீற்கள் போல இருக்கிறது.

அப்ப‌டி என்றால் இயேசு கிறிஸ்துவும் தேவ‌னின் கிருபையினால் மாத்திர‌ம் அல்லாம‌ல், ம‌னித‌னின் சித்த‌த்தையும் சார்ந்து தான் ம‌ர‌ண‌த்தை ருசி பார்த்திருக்கிறார் போல். "அவ‌ர் ந‌ம்முடைய‌ பாவ‌ங்களுக்காக‌ மாத்திர‌ம‌ல்ல‌, ச‌ர்வ‌லோக‌த்தின் பாவ‌த்தையும் நிவ‌ர்த்திசெய்கிற‌வ‌ர்" என்ப‌தெல்லாம் ஒரு சில‌ கூட்ட‌த்தாரால் ஏற்றுக்கொள்ள‌ முடியாம‌ல் இருக்கிற‌து போல் எழுதியிருக்கிறீர்க‌ளே.

இத‌ற்கு ஒரே கார‌ண‌ம், இர‌ட்சிப்பு என்றால் ப‌ர‌லோக‌ம் மாத்திர‌ம் தான் என்று த‌ப்பாக‌ புரிந்துக்கொண்ட‌த‌ன் விளைவு என்று ந‌ம்புகிறேன். ஐயா, இப்பொழுது இந்த‌ பூமியில் தேவ‌னின் சித்த‌ம் செய்து கிறிஸ்துவின் அடிசுவ‌டுக‌ளை ப‌ற்றிகொண்டு ந‌ட‌ப்ப‌வ‌ர்க‌ளும், த‌ங்க‌ளையே அனுதின‌மும் ஜீவ‌ப்ப‌லியாக‌ ஒப்பு கொடுதது வ‌ள‌ர்கிற‌வ‌ரும் இயேசு கிறிஸ்து அடைந்த‌ அந்த‌ உன்ன‌த‌மான‌ நிலையை அடைவ‌து முத‌லாம் உயிர்த்தெழுத‌ல் (இர‌ட்சிப்பு). ஆனால் பெரும்பாளுமானோர் இன்று அவ‌ரை அறிந்துக்கொள்ளாம‌ல் ம‌ரிப்ப‌வ‌ர்க‌ள் இன்னும் ப‌ல‌ர்,  இந்த‌ பூமியில் உயிர்த்தெழுவார்க‌ள் என்ப‌தும் ஒரு இர‌ட்சிப்பு தான் என்ப‌தை இந்த‌ கூட்ட‌த்தார் ந‌ம்புவ‌தில்லை போல்.

எபி 11 அதிகார‌த்தில் நீதிமான்க‌ளின் ப‌ட்டிய‌லை கொடுத்து, க‌டைசியில்,
"இவ‌ர்க‌ளெல்லாரும் விசுவாச‌த்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்த‌த‌ம்பண‌ப்ப‌ட்ட‌தை அடையாம‌ற்போனார்க‌ள்; அவ‌ர்க‌ள் ந‌ம்மைய‌ல்லாம‌ல் பூர‌ண‌ராகாத‌ப‌டிக்கு விசேஷித்த‌ ந‌ன்மையான‌தொன்றை தேவ‌ன் ந‌ம‌க்கென்று முன்ன‌தாக‌ நிய‌மித்திருக்கிறார்" எபி 11:39,40.

தேவ‌ன் அவ‌ர்க‌ளுக்கு வாக்கு ப‌ண்ணின‌தை அவ‌ர்க‌ள் அப்பொழுது பூமியில் வாழும் போதே பெற்று கொள்ள‌வில்லை, அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் அதை பெற்றுக்கொள்ள‌வே முடியாது என்று இல்லை, உங்க‌ளின் க‌ருத்தின் ப‌டி தேவ‌னின் சித்த‌ம் அவ‌ர்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போன‌து போல் இருந்தாலும், அடுத்த‌ வ‌ச‌ன‌ம் சொல்லுகிற‌து, ச‌பை என்று ஒன்றை தேவ‌ன் முன்ன‌தாக‌ நிய‌மித்து அந்த‌ ச‌பை பூர‌ண‌ப்ப‌ட்ட‌ பின்பு அவ‌ர்க‌ள் அந்த‌ வாக்குத்த‌த்தை அடைவார்க‌ள் என்ப‌து இந்த‌ வ‌ச‌ன‌ம் நிச்ச‌யிக்கிற‌து.

ஒரு கூட்ட‌த்தார், என்ன‌மோ நாம் உயிருட‌ன் இருக்கும் போது நிறைவேறுவ‌து தான் தேவ‌னின் சித்த‌ம், இல்ல‌விட்டால், அது என்றுமே நிறைவேறாம‌ல் போய்விடும் என்று நினைக்கிறார்க‌ள். ஆதாமுக்கு கிறிஸ்துவை ப‌ற்றி தேவ‌ன் த‌ன் சித்த‌த்தை வெளிப்ப‌டுத்தினார், ஆனால் அந்த‌ இயேசு கிறிஸ்துவை ஆதாம் காண‌வில்லை, அத‌ற்காக‌ அவ‌னுக்கு என்றுமே அப்ப‌டி தான் என்று இல்லை. அவ‌னுக்கு தெரியும் ஒரு நாள் வ‌ருகிற‌து. இது தான் எங்க‌ள் கூட்ட‌த்தாரின் ந‌ம்பிக்கை, இது வேத‌ம் த‌ரும் விசுவாச‌ம். இது சொந்த‌ அனுப‌வ‌ங்க‌ளால் வ‌ந்த‌து அல்ல‌, இது வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ளால் வ‌ந்த‌து.

ஒரு கூட்ட‌த்தார் சொல்லுவ‌து ச‌ற்று ச‌கிக்க‌முடியாம‌ல் இருக்கிற‌து, அதாவ‌து, தேவ‌ன் சித்த‌ம் கொண்டு இருக்கிறார், ஆனால் அது நிறைவேற‌ ம‌னித‌னின் சுய‌சித்த‌த்தை சார்ந்து இருக்கிறார் என்று. ஆனால் அத‌ற்கு மாறாக‌ வேத‌ம் சொல்லுகிற‌து, அவ‌ர் விசுவாசிக்க‌வும், விசுவ்சியாம‌ல் போக‌வும் நிய‌மிக்கிறார் என்று. இது போன்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ள் எல்லாம் இந்த‌ கூட்ட‌த்தாரின் க‌ண்க‌ளில் ப‌ட‌ வில்லையோ, அல்ல‌து இதை ப‌டித்தும், த‌ங்க‌ள் ச‌பை சொல்லுவ‌தும் தேவ‌ தூஷ‌ன‌மாக‌ தேவ‌ சித்த‌ம் நிறைவேற‌ முடியாது என்று தைரிய‌மாக‌ பிர‌ச‌ங்கிக்கும் கூட்ட‌த்தார் சொல்லுவ‌தை ந‌ம்புப‌வ‌ர்க‌ளாக‌ இருப்ப‌து வேத‌னையே.

"நான் தேவ‌ன் என்னால் ஆகாத‌ காரிய‌ம் ஒன்றும் இல்லை" என்று சொல்லுவ‌தும், "ந‌ம்முடைய‌ தேவ‌ன் ப‌ர‌லோக‌த்தில் இருக்கிறார்; த‌ம‌க்கு சித்த‌மான‌ யாவையும் செய்கிறார்." ச‌ங். 115:3 போன்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ள் நிறைவேற‌வும், ம‌னித‌னின் சுய‌சித்த‌ம் தேவை போல் ந‌ம்பும் ஒரு கூட்ட‌ம் இருக்க‌ தான் செய்கிறது. மேலும் ஏசா. 55:11ல் அவ‌ரின் வாயிலிருந்து புற‌ப்புடும் வார்த்தை அவ‌ரு விரும்புகிற‌ காரிய‌த்தை செய்தே முடிக்கும் என்ப‌தும் இந்த‌ கூட்ட‌த்தார் ஒத்துக்கொள்ளாம‌ல், அவ‌ர் சொல்லுவார் ச‌கோத‌ர‌ரே, ஆனால் அவ‌ர் விருப்ப‌ம் நிறைவேற‌ வேண்டுமென்றால், ம‌னித‌ன் ஒத்த‌ழைக்க‌ வேண்டும், இல்லாவிட்டால், அது நிறைவேறாது.

என்ன‌ ஒரு துனிச்ச‌லான‌ தேவ‌ தூஷ‌ன‌ம். தேவ‌ன் ம‌னித‌னை ப‌டைப்ப‌த‌ற்கு முன்ன‌மே அவ‌ர் சித்த‌ம் செய்யும் அதிகார‌ம் கொண்டவராக இருக்கிறார். ம‌னித‌னை ந‌ம்பி தான் அவ‌ர் சித்த‌ம் நிறைவேற வேண்டும் என்கிற‌ அள‌விற்கு அவ‌ர் வ‌ல்ல‌மை இழ‌ந்து போன‌ தேவ‌ன் இல்லை.

மேலும் 1 தீமோ2:4,5 வ‌ச‌ன‌ங்க‌ள் ஒரு க‌ண்டிஷ‌ன‌ல் வ‌ச‌ன‌ம் கிடையாது. அதாவ‌து தேவ‌ன் சித்த‌ம் கொண்டிருக்கிறார் ஆனால் அது ம‌னித‌ன் ந‌ம்பினால் மாத்திர‌மே ந‌டைபெறும் என்று அங்கு சொல்ல‌ப்ப‌ட‌வில்லை. மாறாக‌ தேவ‌னின் சித்த‌ம் மாத்திர‌மே அங்கு எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து. தேவன் நினைக்கிறார், ஆனால் மனிதன் அதற்கு உடன்ப்பட்டால் தான் அது நடக்கும் என்பது மனிதர்களின் துனிச்சலான தேவ தூஷன கற்பனை. இப்படி பட்ட கூட்டம் தேவனின்சித்தம் நிறைவேறாது என்பதில் மிகவும் அக்கறை கொண்டவர்களாக இருக்கிறார்கள் போல‌. கால‌கால‌மாக‌ தேவ‌னின் சித்த‌ம் நிறைவேற்ட‌ த‌டை செய்துக்கொண்டிருக்கும் ஒரு கூட்ட‌ம் இருக்கிற‌து. தேவ‌னின் வ‌ல்ல‌மையை குறைவாக‌ எடைப்போடும் ஒரு கூட்ட‌ம் இருக்கிற‌து. அவ‌ர்க‌ளை பார்த்து வான‌த்திலிருந்து தேவ‌ன் ந‌கைக்கிறார் என்கிற‌து வேத‌ம் (ச‌ங்.2)



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே! எனது பதிவில் நான் பதித்துள்ள விஷயங்களுக்கு மட்டும், நேரடியாகப் பதில் தாருங்கள். நான் பதித்துள்ள பல விஷயங்களுக்கு நீங்கள் பதில் தராமல், யார் யாரோ சொல்வதையெல்லாம் மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள்.

உதாரணமாக:

bereans wrote:
//இத‌ற்கு ஒரே கார‌ண‌ம், இர‌ட்சிப்பு என்றால் ப‌ர‌லோக‌ம் மாத்திர‌ம் தான் என்று த‌ப்பாக‌ புரிந்துக்கொண்ட‌த‌ன் விளைவு என்று ந‌ம்புகிறேன்.//

இவ்வாறு நான் புரிந்துகொண்டதற்கு ஏதுவான என் பதிவைக் குறிப்பிடவும்.

bereans wrote:
//தேவ‌ன் அவ‌ர்க‌ளுக்கு வாக்கு ப‌ண்ணின‌தை அவ‌ர்க‌ள் அப்பொழுது பூமியில் வாழும் போதே பெற்று கொள்ள‌வில்லை, அத‌ற்காக‌ அவ‌ர்க‌ள் அதை பெற்றுக்கொள்ள‌வே முடியாது என்று இல்லை//

அவ‌ர்க‌ள் அதை பெற்றுக்கொள்ள‌வே முடியாது என்ற கருத்துக்கு ஏதுவான எனது பதிவைக் குறிப்பிடவும்.

எனது பல பதிவுகளுக்கு இன்னும் நீங்கள் நேரடியான பதில் தரவில்லை.

anbu57 wrote:
//பரலோகத்தில் பிதாவின் சித்தம் செய்யப்படுவதுபோல, பூமியிலேயும் செய்யப்படுவதாக என இயேசு ஜெபிக்கச் சொன்னதன் அர்த்தமென்ன? தற்போது பூமியில் பிதாவின் சித்தம் செய்யப்படவில்லை என்பதுதானே?

பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தப்படி நடப்பவனே பரலோகத்தில் பிரவேசிப்பான் என மத்தேயு 7:21-ல் இயேசு கூறுவதால், பிதாவின் சித்தப்படி நடவாதவர்களும் இருக்க வாய்ப்புள்ளது என்பது புரிகிறதல்லவா?//

பிதாவின் சித்தம், அவரது கற்பனைகளின்படி மனிதன் நடக்கவேண்டுமென்பது; ஆனாவில் பிதாவின் சித்தப்படி மனிதன் நடப்பதென்பது, அவனின் சுயாதீனமாகத்தான் இருக்கிறது.

bereans wrote:
//ஒரு கூட்ட‌த்தார் சொல்லுவ‌து ச‌ற்று ச‌கிக்க‌முடியாம‌ல் இருக்கிற‌து, அதாவ‌து, தேவ‌ன் சித்த‌ம் கொண்டு இருக்கிறார், ஆனால் அது நிறைவேற‌ ம‌னித‌னின் சுய‌சித்த‌த்தை சார்ந்து இருக்கிறார் என்று.//

ஒரு கூட்டத்தார் அல்ல சகோதரரே! வேதாகமம்தான் கூறுகிறது.
எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்பது தேவசித்தம் எனக் கூறுகிற அதே வேதாகமம் தான், நித்திய அழிவு, நித்திய ஆக்கினை, 2-ம் மரணம் ஆகியவற்றில் பங்கடையப் போகிறவர்களைப் பற்றியும் கூறுகிறது. இதை எப்படி உங்களால் சகிக்க முடிகிறது சகோதரரே?
மத்தேயு 7:21-23, வெளி. 20:15, மத்தேயு 25:46, வெளி. 21:8 மற்றும் வெளி. 22:15 போன்ற பல வசனங்களுக்கு முதலாவது விளக்கம் கொடுங்கள் சகோதரரே! அதன்பின் மற்ற விஷயங்களை விவாதிப்போம்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"bereans wrote:
//அன்று "அழுகையும், ப‌ற்க‌டிப்பும்" யாருக்கு இருக்கும் தெரியுமா? இன்று சுவிசேஷ‌ம் என்றால் என்ன‌ என்று புரிந்துக்கொள்ளாத‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு தான்.//


எல்லோரும் நித்தியஜீவனை அடைவார்களெனில், இவர்களுக்கு மட்டும் ஏன் அழுகையும் பற்கடிப்பும்? எல்லோரும் நித்தியஜீவனை அடைவார்கள் என விசுவாசிப்பதுதான் தேவ அன்பு எனக் கூறுகிற நீங்கள், சிலருக்கு மட்டும் அழுகையும் பற்கடிப்பும் என எப்படிச்
சொல்கிறீர்கள்?"

அதிக‌ம் தெரிந்திருக்கும் ம‌ம‌தையில் இவ‌ர்க‌ள் இருப்ப‌தினால் இவ‌ர்க‌ள் தோல் க‌டின‌மாக‌ இருக்கும். தேவ‌னின் நீதியுள்ள‌ இராஜிய‌த்தில், த‌ன் அக்கிர‌ம‌ங்க‌ளை
(அக்கிரம செய்கைக்காரர்களே என்று இயேசு இவர்களுக்கு இடும் பெயர்) விட்டு வில‌க‌ இவ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ய‌ம் எடுக்கும். "ஆகா, நாம் முந்தி உயிருட‌ன் இருக்கும் போதே, ப‌ர‌லோக‌ம் சென்று வ‌ந்த‌தாக் "ரீல்" விட்ட‌தெல்ல‌ம், இப்பொழுது வெளிச்ச‌த்திற்கு வ‌ந்து விட்ட‌து என்று நினைக்கும் போது தான் "அழுகையும் ப‌ற்க‌டிப்பும்" இருக்கும்.

பெரும‌ப்பாராட்ட‌ ஒரு கால‌ம் இருந்த‌து, இப்ப‌டி ஒரு கால‌ம் வ‌ரும். நித்திய‌ ஜீவ‌னை பெற்றுக்கொள்ள‌ நீதியை க‌ற்று கொள்வார்க‌ள் ஆனால் நேர‌ம் எடுத்து.

முத‌லாவுது நீங்க‌ள் ப‌திவு செய்த‌ வார்த்தைக‌ளை மாத்திர‌ம் தான் நீங்க‌ள் எழுதிய‌து என்று எழுதுகிறேன். ம‌ற்ற‌ப்ப‌டி பொதுவாக‌ எழுதுவ‌தை நான் ஒரு போதும் நீங்க‌ள் எழுதிய‌தாக‌ நான் எழுத‌வில்லை. அப்ப‌டி ஒரு ப‌திவை தாங்க‌ள் கான்பிக்கும்ப‌டி கேட்டு கொள்கிறேன்.


1 தீமோ2:4,5ல் சொல்லப்பட்டது ஒரு unconditional சித்தம். மனிதர்களே சேர்ந்து அதற்கு ஒரு கன்டிஷன் போட்டுவிட்டு தேவதூஷனம் செய்கிறார்கள். வேதத்தில் ஒரு போதும் தேவனின் சித்தம் நிறைவேறுவது conditional தான் என்கிற வசனம் இல்லை. ஒரு மனிதன் இதை செய்தால் தான் என் சித்தம் நிறைவேறும் என்று தேவன் சொல்லும் ஒரு வசனத்தை கான்பியுங்களேன். இரண்டு வேறு வசனங்களை சம்பந்தமில்லாமல் ஜோடு படுத்தாதீர்கள். 

1. ம‌த் 7:21,23 வ‌ச‌ன‌ங்க‌ளில் நித்திய‌ அழிவோ, அக்கினியோ, இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்தை குறித்து ஒன்றும் சொல்ல‌ப்ப‌ட‌வில்லை. அதில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ விஷ‌ய‌ங்க‌ள் இன்று த‌ங்க‌ளை ஊழிய‌ர்க‌ள் என்று சொல்லுப‌வ‌ர்களை குறித்து உள்ள வசனம், அவர்கள் அடையப்போகும், நிலை இரண்டாம் மரணம் என்று இந்த வசனம் எந்த‌ ப‌குதியில் சொல்லியிருக்கிற‌து.

2. ம‌த். 25:46. நித்திய‌ம் என்று இங்கு த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌ கிரேக்க‌ வார்த்தை, ஒரு குறிப்பிட்ட‌ கால‌க‌ட்ட‌த்தை குறிக்கும் ஒரு சொல். மேலும் ஆக்கினை என்றால் த‌ண்ட‌னை, அக்கினி அல்ல‌. நீதியை க‌ற்றுக்கொள்ப‌வ‌ர்க‌ள் ஒரு குறிப்பிட்ட‌ கால‌த்திற்கு அவ‌ர்க‌ளுக்கு அது த‌ண்ட‌னையை போல் தான் இருக்கும். ஆயுள் த‌ண்ட‌னை (Life imprisonment) என்ப‌து எப்ப‌டி 14 வ‌ருட‌ங்க‌ள் மாத்திர‌மே ஆனால் ஆயுள் என்று சொல்ல‌ப்ப‌டுகிற‌தோ, அப்ப‌டியே நித்திய‌ம் என்ப‌து ஒரு குறிப்பிட்ட‌ கால‌த்தை குறிக்கும் கிரேக்க‌ சொல், ஆனால் கிறிஸ்த‌வ‌ ஊழிய‌ர்க‌ள் என்று வேதாக‌ம‌ க‌ல்லூரிக‌ள் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள்  இத‌ன் அர்த்த‌த்தை மாத்தி கொடுத்து அதே ப‌ழ‌க்க‌த்தில் வ‌ந்து விட்ட‌து. (அது எப்ப‌டி ஒரு பாவ‌ம் செய்தாலும் ச‌ரி, அநேக‌ த‌வ‌றுக‌ள் செய்தாலும், த‌ண்ட‌னை மாத்திர‌ம் ஒன்றாக‌ இருக்கிற‌து. ஆனாலும் ந‌ம் ஊழிய‌ர்க‌ள் பிறர் அக்கினியில் வேகுவ‌தை பார்ப்ப‌தில் இத்துனை ம‌கிழ்ச்சி கொள்கிறார்க‌ள்)

3.  வெளி. 21:8. இத‌ற்கு முன்பும் ஒரு முறை எழுதியிருக்கிறென், ச‌ற்றே மேலே வாசீத்தீர்க‌ள் என்றால், 21:4ல் இனி ம‌ர‌ண‌ம் இல்லை என்ப‌து உண்டு. ஆக‌ இனி ம‌ர‌ண‌ம் இல்லை என்று சொல்லி இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் உண்டு என்று சொல்லுவ‌தில் என்ன‌ ஞான‌ம். வெளிப்ப‌டுத்தின‌ விசேஷ‌ம் என்ப‌து இப்பொழுது மாத்திர‌ம் இல்லை, எப்பொழுதுமே சொல்லுவேன், அது அடையாள‌ங்க‌ள், குறிப்புக‌ளில் எழுதிய‌ ஒரு புத்த‌க‌ம். இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்தில் ப‌ங்கு பெறுப‌வ‌ர்க‌ள்:
சாத்தான், அவ‌னின் கிரியைக‌ளான எல்லா தீமைக‌ளும்.
முத‌லாம் ம‌ர‌ண‌த்தில் ச‌ரீர‌ம் மாத்திர‌ம் சாகிற‌து என்று நினைப்ப‌வ‌ர்கள் தான், இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்திலும் தீயில் இருந்தாலும் அதில் என்றென்றும் வெந்துக்கொண்டு இருப்பார்க‌ள் என்கிற‌ ஒரு குரூர‌மான‌ என்ன‌ம் வைத்திருக்கிறார்க‌ள். இது தாங்க‌ள் சொல்லிய‌தாக‌ நான் ப‌திய‌வில்லை, இது பொதுவான‌ கிறிஸ்த‌வ‌ கொள்கை. இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்தில், ப‌ங்கு கொள்ளும் யாரும் முத‌லாம் ம‌ர‌ண‌த்தில் ப‌ங்கு கொள்ள‌வில்லை.

வெளி. 22:15ல் நாய்க‌ளும் என்று கூட‌ தான் போட்டிருக்கிற‌து. அப்ப‌டி என்றால் நாய்க‌ளும் "என்றென்றைக்கும் அக்கினியில் இருக்குமா". எப்ப‌டி நாய் என்றால் நாய் அல்லாம‌ல், அதை ஒரு உவ‌மையாக‌ எடுத்துக்கொள்வீர்க‌ளோ, அப்ப‌டியே தான் விப‌ச்சார‌க்கார‌ன் என்ப‌து அந்த‌ கிரியை குறிக்க‌ ப‌ய‌ன்ப்ப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கும் சொல்.

ப‌ர‌லோக‌ம் போக‌ம் இந்த‌ பூமியில் உயிர்த்தெழுப‌வ‌ர்க‌ள், நிச்ச‌ய‌மாக‌ இயேசு கிறிஸ்து அடைந்த‌ அந்த‌ உன்ன‌த‌ நிலையை அடையாம‌ற் போவ‌து தான் ஒரு த‌ண்ட‌னையே த‌விர‌ வேறு ஒன்றும் இல்லை. உண்மையிலேயே ஒரு ம‌னித‌னை அக்கினியில் போட்டால், அதில் அவ‌ன் என்றென்றைக்கும் இருக்க‌ முடியாது. ச‌ற்றே நேர‌த்தில் சாம்ப‌லாக‌ போய் விடுவான்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//அன்று "அழுகையும், ப‌ற்க‌டிப்பும்" யாருக்கு இருக்கும் தெரியுமா? இன்று சுவிசேஷ‌ம் என்றால் என்ன‌ என்று புரிந்துக்கொள்ளாத‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு தான்.//

//அதிக‌ம் தெரிந்திருக்கும் ம‌ம‌தையில் இவ‌ர்க‌ள் இருப்ப‌தினால் இவ‌ர்க‌ள் தோல் க‌டின‌மாக‌ இருக்கும். தேவ‌னின் நீதியுள்ள‌ இராஜிய‌த்தில், த‌ன் அக்கிர‌ம‌ங்க‌ளை
(அக்கிரம செய்கைக்காரர்களே என்று இயேசு இவர்களுக்கு இடும் பெயர்) விட்டு வில‌க‌ இவ‌ர்க‌ளுக்கு ச‌ம‌ய‌ம் எடுக்கும். "ஆகா, நாம் முந்தி உயிருட‌ன் இருக்கும் போதே, ப‌ர‌லோக‌ம் சென்று வ‌ந்த‌தாக் "ரீல்" விட்ட‌தெல்ல‌ம், இப்பொழுது வெளிச்ச‌த்திற்கு வ‌ந்து விட்ட‌து என்று நினைக்கும் போது தான் "அழுகையும் ப‌ற்க‌டிப்பும்" இருக்கும்.//

விளக்கத்திற்கு நன்றி சகோதரரே!

கிட்டத்தட்ட எல்லா வசனங்களுக்கும் பதில் சொல்லியுள்ளீர்கள். அவைகளை நான் ஏற்பதா வேண்டாமா என முடிவெடுக்குமுன் மேலும் சில வசனங்களுக்கு உங்கள் பதிலை எதிர்பார்க்கிறேன்.

2 தெசலோனிக்கேயர் 1:10 (நித்திய அழிவு); மாற்கு 3:29 (என்றென்றைக்கும் மன்னிப்பில்லாத நித்திய ஆக்கினை); யோவான் 3:36 (குமாரனை விசுவாசியாதவன் ஜீவனைக் காண்பதில்லை); யோவான் 12:25 (ஜீவனை சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்); கலாத்தியர் 6:8 (மாம்சத்திற்கென்று விதைப்பவன் மாம்சத்தால் அழிவை அறுப்பான்); 1 யோவான் 3:15 (மனுஷ கொலைபாதகனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது); பிலிப்பியர் 3:19 (பூமிக்கடுத்தவைகளைச் சிந்திப்போரின் முடிவு அழிவு); 1 தெசலோனிக்கேயர் 5:3 (அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்); 2 பேதுரு 2:3 (அவர்களுடைய அழிவு உறங்காது); தானியேல் 12:2 (நித்திய நிந்தை மற்றும் நித்திய இகழ்ச்சிக்காக விழித்தெழுவார்கள்)

இன்னும் சங்கீதம் 37:9,20 பொல்லாதவர்கள் அறுப்புண்டு போவார்கள், துன்மார்க்கர் அழிந்து போவார்கள் என்கின்றன; இவற்றை இப்பூமிக்குரிய மரணம் எனக் கூறமாட்டீர்கள் என நம்புகிறேன்.

இனி மரணமில்லை என வெளி. 21:4 கூறுவதால், 8-ம் வசனத்தில் 2-ம் மரணம் உண்டு என கூறுவதில் என்ன ஞானம் எனக் கேட்கிறீர்கள். ஜெயங்கொள்கிறவனுக்கு மரணமில்லை என்று சொல்லிவிட்டு, ஜெயங்கொள்ளாதவர்களாகிய பயப்படுகிறவர்கள், அவிசுவாசிகள், அருவருப்பானவர்கள், கொலைபாதகர், விபசாரக்காரர், சூனியக்காரர், விக்கிரகாராதனைக்காரர், பொய்யர் ஆகியோர் 2-ம் மரணத்தில் பங்கடைவார்கள் எனக் கூறுவதில் என்ன ஞானக்குறைவு சகோதரரே?

எல்லாவற்றிற்கும் மேலாக பின்வரும் விஷயத்திற்கான உங்கள் விளக்கத்தையும் எதிர்பார்க்கிறேன்.

தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள் என ஏசாயா 26:9 கூறுகிறது. தேவன் அவ்வாறு தயை செய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ள மறுக்கிற துன்மார்க்கரும் உண்டு என 10-ம் வசனம் கூறுகிறது. அதாவது, கிறிஸ்துவின் நீதியுள்ள தேசத்திலும் தேவனின் மகத்துவத்தைக் கவனியாமற் போகிற துனமார்க்கரும் சிலர் அல்லது பலர் உண்டு என அவ்வசனம் கூறுகிறது. அப்படிப்பட்ட துன்மார்க்கரும் நித்தியஜீவனைப் பெறுவார்களா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஏசா 26:10ல் துன்மார்க்கர் என்று பன்மையில் இல்லாமல் ஒருமையில் துன்மார்க்கன் என்று கொடுத்திருப்பதை கவனியுங்கள் சகோதரரே! அந்த துன்மார்க்கன் வேறு யாரும் இல்லை, அந்த சாத்தான் ஒருவனே. அவனை கட்டி வைத்து தேவனின் நீதி உள்ள ராஜியம் எப்படி இருக்கு என்று கான்பித்தாலும், அவன் துன்மார்க்கத்தை விட்டு விலகுவதாக இல்லை என்பதை சொல்லும் வசனமே அவ்வசனம். ஏனென்றால், அந்த 1000 வருடங்கள் முடியும் போது, அவனை அவிழ்த்து விடும் போதும் அவன் மீண்டும் இந்த பூமியை கெடுக்கவே பிரயாசிக்கிறான், அப்பொழுது, அவனையும், அவன் மூலமாக ஏற்படும் எல்லா தீமைகளையும் அழிப்பதையே இரண்டாம் மரணம் என்று வெளி. 20ம் அதிகாரத்தில் இருக்கிறது.

மேலும், தங்கள் ஆதி மேன்மையை இழந்த தூதர்கள் கூட, நியாயம் தீர்க்கப்பட்டு நீதியை கற்றுக்கொள்ளும் தூதர்களாக தான் இருப்பார்கள். அழிவிக்கென்று உருவான ஒரே படைப்பு, சாத்தான் மாத்திரமே.

வெளிப்ப‌டுத்தின‌ விசேஷ‌த்தில் 21:8 அல்லது 22:15ல் கொடுக்கப்பட்டது அனைத்தும், கிரியைகளை குறிக்கிறதே தவிர, மனிதர்களை அல்ல என்று மீண்டும் சொல்லுகிறேன்.

அன்புள்ள‌ ச‌கோத‌ர‌ரே, த‌மிழில் நித்திய‌ம் (Gr. aionios) என்கிற‌ வார்த்தை என்றென்றைக்கும் என்று அர்த்த‌ம் கொள்ளாம‌ல் "ஒரு குறிப்பிட்ட‌ கால‌ம்" என்ப‌தையே குறிக்கிற‌து. அது "என்றென்றும்" என்கிற‌ அர்த்த‌ம் கொள்ளும் வார்த்தை அல்ல‌ என்ப‌தை தெளிவு ப‌டுத்த‌ விரும்புகிரேன். இந்த‌ நித்திய‌ம் என்ப‌து த‌மிழில் ஒரு குழப்பத்தை கொண்டு வ‌ந்த‌ ஒரு வார்த்தை. ஒரு குறிப்பிட்ட‌ கால‌த்திற்கு அவ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌டுவார்க‌ள் (நீதியை க‌ற்றுக்கொள்ளும் போது) என்ப‌தே அத‌ன் ச‌ரியான‌ ப‌த‌ம் ஆகும்.

1தெச‌ 5:3; 2 பேது 2:3ல் உள்ள‌ அழிவு முத‌லாம‌ ம‌ர‌ண‌த்தை குறிக்கும் சொல்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

ஏசாயா 26:10 பற்றி இப்படி ஒரு பதிலைக் கூறுவீர்கள் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எனக்குத் தெரிந்தவரையில் துன்மார்க்கர் என அர்த்தங்கொள்ளும் எபிரெய வார்த்தையான ரா-ஷா என்பது சில இடங்களில் ஒருமையிலும் சில இடங்களில் பன்மையிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஆகிலும், ஏசாயா 26:10-ஐப் பொறுத்தவரை அது ஒருமையைத்தான் குறிக்கின்றது என்பதற்கு தக்க ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள்.

வேதாகமத்தில் ஒருமையைக் குறிக்கும் எல்லா வார்த்தைகளும் ஒருமையைத்தான் குறிக்கும் எனக் கூறிவிடவும் முடியாது. வெளி. 20:6-ன் முதல் பகுதி ஒருமையில் கூறப்பட்டுள்ளது, ஆனால் அடுத்த பகுதி பன்மையில் கூறப்பட்டுள்ளது.
வெளி. 21:7-ல் ஜெயங்கொள்கிறவன் என ஒருமையில்தான் கூறப்பட்டுள்ளது. அவ்வாறெனில் ஒருவன் மட்டுந்தான் ஜெயங்கொள்வானா?

bereans wrote:
//வெளிப்ப‌டுத்தின‌ விசேஷ‌த்தில் 21:8 அல்லது 22:15ல் கொடுக்கப்பட்டது அனைத்தும், கிரியைகளை குறிக்கிறதே தவிர, மனிதர்களை அல்ல என்று மீண்டும் சொல்லுகிறேன்.//

வெளி. 20:6-ல் முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பரிசுத்தவானும் பாக்கியவானுமாயிருக்கிறான் எனக் கூறுவது சொல்லர்த்தமானதுதானே? அதில், இவர்கள் மேல் 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லையென்பதும் சொல்லர்த்தமானதுதானே? முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்கள்மேல் 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லையெனில், மற்றவர்கள்மேல 2-ம் மரணத்திற்கு அதிகாரம் உள்ளது என்றுதானே அர்த்தம்? இவ்வாறு 2-ம் மரணத்தின் அதிகாரத்தை சுமந்திருப்போரில் பலர், கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் நீதியைக் கற்று, 2-ம் மரணத்தின் அதிகாரத்திலிருந்து விடுதலை பெறுவார்கள் என வைத்துக்கொள்வோம். அந்த பலர் போக மீதியுள்ள சிலர் மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இருக்குமல்லவா? அந்த சிலர் சொல்லர்த்தமான மனிதர்கள்தானே? வெளி. 21:8-ம் 22:15-ம் அந்த சிலரைக் குறிப்பதாக ஏன் இருக்கக்கூடாது?

வெளி. 22:14 சொல்லர்த்தமுடையதாக இருக்கும்போது, 15-ம் வசனம் எப்படி கிரியையைக் குறிப்பதாக இருக்கமுடியும்? தங்கள் கொள்கைகளுக்கேற்ப வசனங்களின் கருத்தை வளைப்பதைப் போலுள்ளது. பொய்யை விரும்பிச் செய்கிற யாவரும் எனத் தெளிவாகக் கூறும் வசனம் எப்படி அடையாளமானதாக இருக்கமுடியும்?

உங்கள் கருத்துப்படி சாத்தானை தேவன்தான் பொல்லாதவனாக சிருஷ்டித்தார் என்கிறீர்கள். அவ்வாறெனில் சாத்தானுக்கு தண்டனை கொடுப்பது எப்படி நியாயமாக இருக்கமுடியும்?

bereans wrote:
//1தெச‌ 5:3; 2 பேது 2:3ல் உள்ள‌ அழிவு முத‌லாம‌ ம‌ர‌ண‌த்தை குறிக்கும் சொல்.//

முதலாம் மரணம்தான் எல்லோருக்கும் உண்டே? அப்படியிருக்க, 1 தெச. 5:3, 2 பேதுரு 2:3-ல் கூறப்பட்டுள்ள அழிவு எப்படி முதலாம் மரணமாக இருக்கமுடியும்? இவ்வசனங்கள் போக இன்னும் பல வசனங்களை நான் கூறியுள்ளேனே? அவற்றிற்கும் பதில் தரவும்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த பூமியில் இருக்கும் ஒவ்வோரு மனிதனும் மரிக்கிறான் என்றால், அது பாவத்தின் சம்பளம் தான். பாவம் இல்லாதவன் மரிக்க கூடாது. பவுல் ஆனாலும், பேதுருவானாலும் மரித்தார்கள், ஏனென்றால் அவர்களும் அந்த பாவத்தின் சம்பளத்தை வாங்கிக்கொண்டார்கள். பவுல் சொல்லுகிறார், பாவிகளில் பிரதான பாவி நான் என்று.

சரி, ஏன் எல்லோரும் மரிக்கனும். ஏனென்றால், ஆதாமுக்குள், அனைவருமே, பாவிகளாக தான் இருக்கிறோம். தாவீது சொல்லுவது போல், என் தாய் என்னை பாவத்தில் தான் கர்ப்பம் தரித்தல் என்று.
இயேசு கிறிஸ்து இந்த பாவத்தின் விளைவான சாபமும் அதன் முடிவான மரணத்தையும் மாற்றவே அல்லது முடிவே இல்லாத அந்த மரணத்திலிருந்து விடுவிக்கவே, பாவம் இல்லாதவர் நமக்காக பாவம் ஆனார், அல்லது பாவியாக்கப்பட்டார். அந்த பலி நம் பாவங்களுக்கு (நினைவு இருக்கட்டும், நான் செய்யும் தனிப்பட்ட பாவங்களுக்காக அல்ல, மாறாக நம் பாவ சரீரத்திற்காக) தான் செலுத்தப்பட்டது. மேலும் பாவம் இல்லாத மனிதன் ஒருவனும் இல்லை என்பதே வேத ச‌த்திய‌ம்.

ரெண்டு பிரிவாக‌ ம‌னித‌ர்க‌ளை பிரிக்க‌லாம்:

1.  இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட‌வ‌ர்க‌ள்.
2.  இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத‌வ‌ர்க‌ள்.

இந்த‌ இர‌ண்டு பிரிவிக‌ளுக்காக‌வும் தான் இயேசு கிறிஸ்து இர‌த்த‌ம் சிந்தினார் என்கிற‌து வேத‌ம். (எபி. 2:9, 1 தீமோ. 2:4,5; 1 யோவான் 2:2).

இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் ஒரு கூட்டத்தை தேவ‌ன் முன்குறித்திருக்கிறார் (ரோம் 8:29). இப்ப‌டி ஒரு கூட்ட‌த்தை தேவ‌னே முன்குறித்து விட்டு, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌த்திற்கு போகும்ப‌டி நிய‌மித்திருக்கிறார் என்றால், அதில் நியாய‌ம் இல்லை, சில கள்ள போதகர்கள் தான் இப்படி சொல்லுகிறார்களே தவிர, தேவன் அப்படி சொல்லவில்லை. மாறாக‌, இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் மாற‌ முன்குறிக்க‌ப்ப‌ட்ட‌, இந்த‌ கூட்ட‌ம், ச‌பையாக‌ இருந்து, இயேசு கிறிஸ்துவின் 1000 வ‌ருட‌ அர‌சாட்சியின் போது விடுப்ப‌ட்டு போன‌ அந்த‌ ம‌க்க‌ளை நீதியில் ந‌ட‌த்துவார்க‌ள் என்ப‌து தான் வேத‌ம் என‌க்கும் அல்ல‌து நீங்க‌ள் சொல்லும் அந்த‌ 4வ‌து கூட்ட‌த்திற்கு சொல்லி த‌ருகிற‌து. ஏனென்றால், தேவன் எப்படி ஒரு மனுஷனும் அழிந்து போவது அவர் சித்தம் இல்லை என்கிறாரோ, அப்படியே நாங்களும் அதை விசுவசிக்கிறோம். மனிதர்கள் அழிந்து போவதற்காக, இயேசு கிறிஸ்து தன்னை பலியாக கொடுக்கவில்லை, மாறாக ஜீவனை பெறும் படியாக தான். அவர் ஒவ்வொருத்தருக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார் என்றால், அதில் அந்த முன்குறித்த கூட்டமும், மற்றவர்களும் அடங்குவார்கள்.

நீங்க‌ள் த‌ந்த‌ இருக்கும் அந்த‌ ப‌ன்மை, ஒருமை வ‌ச‌ன‌ம் gramatical பிர‌ச்னை. "ப‌ள்ளிக்கு செல்கிற‌வ‌ன் ஒழுங்காக‌ ஆடை அனிந்து செல்ல‌ வேண்டும்" என்று சொன்னால், அந்த‌ ப‌ள்ளியில் ஒருத்த‌ன் மாத்திர‌ம் ப‌டிக்கிறான் என்று அர்த்த‌ம் இல்லை.

1 தெச‌ 5:3 மற்றும் 2 பேது 2:3 எந்த‌ வித‌த்தில் 2ம் ம‌ர‌ண‌த்தை குறிக்கும் வ‌ச‌ன‌ம் என்று தெளிவு ப‌டுத்தினால் ந‌ன்றாக‌ இருக்கும்.

மேலும் ஒரு ம‌னித‌னின் பாவ‌த்தினால் ம‌ர‌ண‌ம் எல்லோரையும் ஆட்க்கொண்ட‌து (அந்த‌ ம‌ர‌ண‌ம் ஆதாம் செய்த‌ பாவ‌த்தினால் தான் வ‌ருகிற‌து, என்று ந‌ம்பினாலும் ச‌ரி, ந‌ம்பாவிட்டாலும் ச‌ரி) அப்ப‌டியே, ஒரு ம‌னித‌னின் நீதியினால் ஏல்லா ம‌னித‌ர்க‌ளுக்கும் ஜீவ‌ன் பெறும்ப‌டியான‌ தீர்ப்பு ஆகியிருக்கிற‌து (இதை ஏற்றாலும் ச‌ரி, ஏற்காம‌ல் இருந்தாலும் ச‌ரி. மேலும் இந்த‌ தீர்ப்பை மாற்றி அமைக்க‌ எந்த‌ ஒரு ம‌னுஷ‌னுக்கும் அதிகார‌ம் இல்லை என்ப‌து என் க‌ருத்து) (ரோம் 8:18)

ச‌ரி, இனி ஒரு ம‌னித‌ன் உயிர்த்தெழுகிறான் என்றால், அவ‌னில் பாவ‌ம் இல்லை என்று தான் அர்த்த‌ம். ஏனென்றால், பாவ‌ம் இருந்தால் அவ‌ன் ம‌ரித்தே இருக்க‌ வேண்டும். அது தான் தேவ‌ன் இந்த‌ பூமியை முந்த‌ய‌ சீருக்கு கொண்டு வ‌ருவ‌தாகும். அதாவ‌து பாவ‌ம் இந்த‌ உல‌க‌த்தில் நுழையும் முன்பு, ஆதாம் எப்ப‌டி பாவ‌ம் இல்லாத‌ ச‌ரீர‌த்தில் இருந்தானோ, அந்த‌ ச‌ரீர‌த்திற்கு மாற்ற‌ப்ப‌டும். இது ந‌ட‌ப்ப‌து 1000 வ‌ருட‌ அர‌சாட்சியில்.

அன்று ஆதாமை சோதிக்கும் நோக்க‌த்தில் வந்த சாத்தான் இன்று வரை இந்த பூமியை சுதந்தரித்து வருகிறான். ஆனால் 1000 வ‌ருட‌ அர‌சாட்சியில் அவ‌ன் க‌ட்ட‌ ப‌ட்டிருப்பான், அந்த‌ கால‌க்க‌ட்ட‌த்தில் தான் இந்த‌ பூமியில் பாவ‌ம் இல்லாத‌ ச‌ரீர‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் நீதியை க‌ற்று கொள்வார்க‌ள் என்கிற‌து வேத‌ம். இன்று பிசாசு ஆளுகை செய்யும் இந்த‌ பூமியில் க‌ற்றுக்கொள்ள‌ முடியாத‌ நீதியை, பிசாசு இல்லாத‌ பூமியில் கற்றுக்கொள்வார்க‌ள். அந்த‌ நிலையில் அவ‌ர்க‌ள் தேவ‌ன் யார் என்றும், ச‌த்திய‌ம் என்ன‌வென்றும் அரிந்துக்கொள்வார்க‌ள். ஏனென்றால் தேவன் இப்படி நடக்க சித்தமாக இருக்கிறார். ஆனால் இதை தான் பெரும்பாளுமான கூட்டத்தார் "நடக்கும் ஆனால் நடக்காது" என்கிற பானியில் பிரசங்கித்து வருகிறார்கள். அதாவது தேவன் நினைக்கிறார் ஆனால் அது நடக்காது என்று. இதை தான் 4வது கூட்டத்தாராகிய நாங்கள் தெவ தூஷனம் என்கிறோம்.

ஏன் தான் இந்த‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் மாத்திர‌ம் இப்ப‌டி ம‌னித‌ர்க‌ள் அழிந்து போக‌ வேண்டும் என்று பிரிய‌ப்ப‌டுகிறார்க‌ளோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

வெளி 20:5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. 

இந்த கூட்டத்தார் யார்? இவர்கள் எப்போது நீதியை கற்றுக்கொள்வார்கள்? என்பதையும் சற்று விளக்குங்கள்.


மேலும் இன்னொரு கூட்டத்தாரும் இருக்கிறார்கள்

7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

இந்த பொல்லாத கூட்டத்தார் எங்கு சொல்வார்கள்? அல்லது இவர்கள் எப்போது நீதியை கற்றுக்கொள்வார்கள்? என்பதையும் சற்று விளக்குங்கள். 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ஏன் தான் இந்த‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் மாத்திர‌ம் இப்ப‌டி ம‌னித‌ர்க‌ள் அழிந்து போக‌ வேண்டும் என்று பிரிய‌ப்ப‌டுகிறார்க‌ளோ!!//

வேதாகமம் சொல்லுகிற அழிவை எடுத்துரைத்தால், மனிதர்கள் அழிந்து போக‌ வேண்டும் என அவர்கள் பிரிய‌ப்ப‌டுவதாக‌ அர்த்தம் என்று எந்த அகராதியில் சொல்லப்பட்டுள்ளது சகோதரரே!

ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தால் அழிவீர்கள் என பவுல் கூறினால்  (கலா. 5:15), பட்சிக்கிற மனிதர்கள் அழிந்து போக‌ வேண்டும் என பவுல் பிரிய‌ப்ப‌டுவதாக‌ அர்த்தமா?

நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என இயேசு கூறினால் (யோவான் 8:24), விசுவாசியாதவர்கள் அழிந்து போக‌ வேண்டும் என இயேசு பிரிய‌ப்ப‌டுவதாக‌ அர்த்தமா?

மனிதனின் அழிவு பற்றி நீங்களோ நானோ மற்றவர்களோ பிரியப்படுவதைக் குறித்து நாம் இங்கு விவாதிக்கவில்லை; மனிதனின் அழிவு பற்றி வேதாகமம் என்ன கூறுகிறது என்பதைப்பற்றித்தான் இங்கு விவாதிக்கிறோம். எனவே தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்க்கும்படி வேண்டுகிறேன்.

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள் சகோதரரே!

வேதாகமம் சொல்லாத அழிவை, அறியாமையின் காரணமாக நானும் வேறுசிலரும் சொன்னால் அது பெரிய தவறல்ல சகோதரரே! ஆனால் வேதாகமம் சொல்லுகிற அழிவை, அறியாமையின் காரணமாக நீங்களும் வேறு சிலரும் அது கிடையாது என சொல்லி, அதைச் சிலர் நம்பி, அவர்கள் துணிவுடன் பாவஞ்செய்து, பின்னால் அழிய நேரிட்டால், அவர்கள் இடறியதற்கு நீங்கள் காரணமாகிவிடுவீர்கள் சகோதரரே!

bereans wrote:
//இந்த பூமியில் இருக்கும் ஒவ்வோரு மனிதனும் மரிக்கிறான் என்றால், அது பாவத்தின் சம்பளம் தான். பாவம் இல்லாதவன் மரிக்க கூடாது. பவுல் ஆனாலும், பேதுருவானாலும் மரித்தார்கள், ஏனென்றால் அவர்களும் அந்த பாவத்தின் சம்பளத்தை வாங்கிக்கொண்டார்கள். பவுல் சொல்லுகிறார், பாவிகளில் பிரதான பாவி நான் என்று.

சரி, ஏன் எல்லோரும் மரிக்கனும். ஏனென்றால், ஆதாமுக்குள், அனைவருமே, பாவிகளாக தான் இருக்கிறோம். தாவீது சொல்லுவது போல், என் தாய் என்னை பாவத்தில் தான் கர்ப்பம் தரித்தல் என்று.
இயேசு கிறிஸ்து இந்த பாவத்தின் விளைவான சாபமும் அதன் முடிவான மரணத்தையும் மாற்றவே அல்லது முடிவே இல்லாத அந்த மரணத்திலிருந்து விடுவிக்கவே, பாவம் இல்லாதவர் நமக்காக பாவம் ஆனார், அல்லது பாவியாக்கப்பட்டார். அந்த பலி நம் பாவங்களுக்கு (நினைவு இருக்கட்டும், நான் செய்யும் தனிப்பட்ட பாவங்களுக்காக அல்ல, மாறாக நம் பாவ சரீரத்திற்காக) தான் செலுத்தப்பட்டது. மேலும் பாவம் இல்லாத மனிதன் ஒருவனும் இல்லை என்பதே வேத ச‌த்திய‌ம்.//

இதையெல்லாம் நான் ஒருபோதும் மறுக்கவில்லை சகோதரரே!

bereans wrote:
//இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் ஒரு கூட்டத்தை தேவ‌ன் முன்குறித்திருக்கிறார் (ரோம் 8:29). இப்ப‌டி ஒரு கூட்ட‌த்தை தேவ‌னே முன்குறித்து விட்டு, ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌த்திற்கு போகும்ப‌டி நிய‌மித்திருக்கிறார் என்றால், அதில் நியாய‌ம் இல்லை, சில கள்ள போதகர்கள் தான் இப்படி சொல்லுகிறார்களே தவிர, தேவன் அப்படி சொல்லவில்லை.//

நானும் அப்படி சொல்லவில்லை சகோதரரே!

bereans wrote:
//தேவன் எப்படி ஒரு மனுஷனும் அழிந்து போவது அவர் சித்தம் இல்லை என்கிறாரோ, அப்படியே நாங்களும் அதை விசுவசிக்கிறோம்.//

தேவன் சொல்வதை நானும் விசுவாசிக்கிறேன். ஆனால் தேவனின் சித்தம் நிறைவேறுவதற்கு, அதாவது மனிதன் அழிந்து போகாதிருப்பதற்கு தேவனும் இயேசுவும் கூறியுள்ள நிபந்தனைகளின்படி மனிதன் நடப்பது அவசியமாயுள்ளது என்பதையும் நான் விசுவாசிக்கிறேன். ஒரு மனிதனும் அழியக்கூடாது என்பது தேவனின் சித்தமாக இருந்தாலும் (அதாவது தேவனின் விருப்பமாக இருந்தாலும்) அழிவுக்குரிய செயல்களைச் செய்த ஒருவனை அழிப்பது தேவநீதியாகும். தேவசித்தம் நடப்பதைவிட தேவநீதி நடப்பதற்குத்தான் தேவன் முன்னுரிமை தருகிறார். தேவநீதி நடக்கவேண்டுமென்பதும் ஒரு தேவநீதிதான்.

அதனால்தான் தேவசித்தப்படி நடக்கத்தவறிய ஆதாமுக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்;
தேவசித்தப்படி நடக்கத்தவறிய தாவீதுக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்;
தேவசித்தப்படி நடக்கத்தவறிய இஸ்ரவேலருக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்;
தேவசித்தப்படி நடக்கத்தவறிய சவுல் ராஜாவுக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்;
அவ்வாறே தேவசித்தப்படி நடக்கத்தவறிய பலருக்கு, தேவநீதிப்படி தேவன் தண்டனை கொடுத்தார்;
அவ்வாறே தேவசித்தப்படி நடக்கத்தவறியவர்களுக்கு, தேவநீதிப்படியான அழிவை தேவன் கொடுக்கத்தான் போகிறார். தேவநீதிக்குக் குறுக்கே உங்கள்/எனது விருப்பம் மட்டுமல்ல, தேவசித்தமுங்கூட குறுக்கே வரமுடியாது.

bereans wrote:
//மனிதர்கள் அழிந்து போவதற்காக, இயேசு கிறிஸ்து தன்னை பலியாக கொடுக்கவில்லை, மாறாக ஜீவனை பெறும் படியாக தான்.//

ஆம், மிகமிகச் சரிதான் சகோதரரே! ஆனால் “நானே அவர் என்று விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றும் இயேசு கூறியுள்ளாரே (யோவான் 8:24)?

bereans wrote:
//1 தெச‌ 5:3 மற்றும் 2 பேது 2:3 எந்த‌ வித‌த்தில் 2ம் ம‌ர‌ண‌த்தை குறிக்கும் வ‌ச‌ன‌ம் என்று தெளிவு ப‌டுத்தினால் ந‌ன்றாக‌ இருக்கும்.//

இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள ‘சடிதியான அழிவு, மற்றும் அழிவு உறங்காது’ எனும் வார்த்தைகள் ‘முதலாம் மரணத்தைக்’ குறிப்பதாக வைத்துக் கொள்வோம். ‘முதலாம் மரணம்’ உங்களுக்கும் எனக்கும் அப்போஸ்தலருக்கும் எல்லோருக்கும் மட்டுமின்றி இயேசுவுக்கும் உண்டுதானே? அவ்வாறெனில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் அந்த மரணத்தை பவுல் ஏன் கூறவேண்டும்? ஒருவேளை அவர்களுக்கு ‘சடிதியான முதலாம் மரணம்’ என்றும் அவர்களின் ‘முதலாம் மரணம் உறங்காது’ என்றும் நீங்கள் சொல்லலாம். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று சொல்கிற அவர்களுக்கு மட்டுமின்றி இவ்வுலகில் அனேகருக்கு ‘சடிதியான முதலாம் மரணம்’ நடக்கத்தானே செய்கிறது? இவ்வுலகில் எல்லோருக்குமே முதலாம் மரணம் உறங்காமல்தானே இருக்கிறது? அதாவது எல்லோருக்குமே முதலாம் மரணம் நிகழத்தானே செய்கிறது?

எனவே அவ்வசனங்களில் பவுல் குறிப்பிடும் ‘அழிவு’ முதலாம் மரணம் அல்ல, 2-ம் மரணமே என நான் கூறுகிறேன்.

சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று கூறுகிற அவர்களுக்கு ‘சடிதியான அழிவு’ வரும் என பவுல் கூறக் காரணம் என்னவென்று பார்ப்போம்.
எல்லோருக்கும் வருகிற முதலாம் மரணம், அவர்களுக்கும் வரும் (சடிதியாகவோ, சாதாரணமாகவோ). ஆனால் இவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகி நிதானமாக நியாயத்தீர்ப்புக்குள்ளாகும் வாய்ப்பைப் பெறாமல், 1000 வருடத்திற்குப் பின் உயிர்பெற்று சடிதியாய் 2-ம் மரணத்திற்கு ஆளாவார்கள் என்பது எனது கருத்து. இதனால்தான் அவர்களின் அழிவை சடிதியான அழிவு எனப் பவுல் கூறுகிறார் எனக் கருதுகிறேன்.

அடுத்த பதிவில் தொடர்கிறது .....


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

முந்தின பதிவின் தொடர்ச்சி ....

bereans wrote:
//ஒரு ம‌னித‌னின் பாவ‌த்தினால் ம‌ர‌ண‌ம் எல்லோரையும் ஆட்க்கொண்ட‌து (அந்த‌ ம‌ர‌ண‌ம் ஆதாம் செய்த‌ பாவ‌த்தினால் தான் வ‌ருகிற‌து, என்று ந‌ம்பினாலும் ச‌ரி, ந‌ம்பாவிட்டாலும் ச‌ரி) அப்ப‌டியே, ஒரு ம‌னித‌னின் நீதியினால் ஏல்லா ம‌னித‌ர்க‌ளுக்கும் ஜீவ‌ன் பெறும்ப‌டியான‌ தீர்ப்பு ஆகியிருக்கிற‌து (இதை ஏற்றாலும் ச‌ரி, ஏற்காம‌ல் இருந்தாலும் ச‌ரி. மேலும் இந்த‌ தீர்ப்பை மாற்றி அமைக்க‌ எந்த‌ ஒரு ம‌னுஷ‌னுக்கும் அதிகார‌ம் இல்லை என்ப‌து என் க‌ருத்து)//

யாருக்கும் அதிகாரமில்லை என்பது மிகமிகச் சரியே!

ஆனால் எல்லோரையும் ஆட்கொண்ட அந்த மரணம் எதுவென்றும், எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய அந்த ஜீவன் எதுவென்றும் நீங்களும் நானும் புரிந்துகொள்வதில்தான் நமக்குள் வேறுபாடு உள்ளது. இவ்விஷயத்தில் நான் சொல்லப்போவதை சற்று நிதானமாகப் படிக்கும்படி வேண்டுகிறேன்.

ஆதாமின் மரணம், ஆதாமின் பாவத்துக்கொப்பான பாவம் செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டதாக ரோமர் 5:14-ல் பவுல் சொல்கிறார். அவ்வசனத்தில் “ஆதாம் முதல் மோசே வரைக்கும்” என ஒரு குறிப்பிட்ட பிரிவினரை அவர் கூறுகிறார். ஆதாமிடம், ‘கனியைச் சாப்பிட்டால் சாவாய்’ என தேவன் கூறியதைப் போல, மோசே வரைக்குமான பிரிவினரிடம் தேவன் கூறவில்லை. ஆனாலும் அவர்களையும் மரணம் ஆண்டுகொண்டது. இந்த மரணம்தான் ‘முதலாம் மரணம்’. இந்த ‘முதலாம் மரணத்திற்கு’ ஆதாமின் மீறுதல்தான் காரணமேயொழிய, மோசே வரைக்குமான யாரும் காரணமல்ல.

மோசே வரைக்குமான ஒரு பிரிவினரை பவுல் பிரிக்கக் காரணமென்ன? மோசே மூலமாகத்தான் நியாயப்பிரமாணம் கொடுக்கப்பட்டது. அதற்கு முன் நியாயப்பிரமாணம் இல்லை. அதாவது ‘இதைச் செய்தால் சாவாய்’ என நியாயப்பிரமாணத்தில் தேவன் கூறியதைப் போல் அதற்குமுன் யாரிடமும் தேவன் கூறவில்லை (ஆதாமைத் தவிர). பவுலின் வாதம் என்னவெனில், நியாயப்பிரமாணத்திற்குப் பின்னருள்ள ஜனங்களுக்கு மரணம் வந்தால், அவர்கள் ‘நியாயப்பிரமாணத்தை மீறினார்கள், எனவே மரணம் வந்தது’ எனக் கூறிக்கொள்ளலாம்; ஆனால் நியாயப்பிரமாணத்திற்கு முந்தின ஜனங்களுக்கும் மரணம் வந்துள்ளதே, அதற்குக் காரணமென்ன? ஆதாமின் மீறுதலால் வந்த சாபமே காரணம் என்பதுதான் பவுலின் வாதம்.

அதாவது ‘முதலாம் மரணத்திற்கு’ முழுக்க முழுக்க ஆதாமின் மீறுதல்தான் காரணம் என்பதை அந்த வாதத்தின் மூலம் பவுல் எடுத்துரைக்கிறார். ஆதாம் முதல் மோசே வரைக்குமான பிரிவினரை ‘முதலாம் மரணம்’ எவ்வாறு ஆண்டுகொண்டதோ, அதேவிதமாக மோசேக்குப் பின்னருள்ள பிரிவினரையும் ‘முதலாம் மரணம்’ ஆண்டு கொண்டது (நாமும் அந்தப் பிரிவில் அடக்கம்). ஏற்கனவே ‘முதலாம் மரணத்தின்’ பிடியிலுள்ள அப்பிரிவினரிடம், நியாயப்பிரமாணத்தின் மூலமாகவோ அல்லது இயேசுவின் மூலமாகவோ அல்லது அப்போஸ்தலர் மூலமாகவோ, ‘இதைச் செய்தால் சாவாய் அல்லது அழிவாய்’ எனக் கூறினால் அது முதலாம் மரணத்தைக் குறிப்பதாக எப்படி இருக்க முடியும்? அவர்கள்தான் ஏற்கனவே முதலாம் மரணத்தின் பிடியில் உள்ளனரே? எனவே அப்பிரிவினருக்குக் கூறப்பட்ட சாவு அல்லது அழிவு 2-ம் மரணத்தைத்தான் குறிக்கும். ஒருவேளை நியாயப்பிரமாணத்தை மீறிய சிலருக்கு உடனுக்குடன் ‘முதலாம் மரணம்’ நேர்ந்திருக்கலாம். ஆனால் அந்த ‘முதலாம் மரணம்’ எல்லோருக்கும் நேரிடக்கூடிய ஒன்றாக இருப்பதால், அதை அவர்களின் மீறுதலுக்கான தண்டனை எனக் கூறமுடியாது. இஸ்ரவேலர்களின் நடுவிலிருந்து தீமை உடனடியாக அகற்றப்படவேண்டும் என்பதற்காகத்தான் நியாயப்பிரமாணத்தை மீறிய சிலருக்கு உடனடியாக ‘முதலாம் மரணம்’ நேர்ந்தது.

ஆக, ‘முதலாம் மரணம்’ என்பது முழுக்க முழுக்க ஆதாமின் மீறுதலால் வந்த விளைவு. இந்த ‘முதலாம் மரணத்திற்கு’ வேறு யாரும் பொறுப்பல்ல. ஆயினும் சாத்தானின் தூண்டுதலாலோ அல்லது நம் சுய இச்சையாலோ நாம் பாவஞ்செய்தால் அப்பாவத்தின் சம்பளமும் மரணமே. ஆனால் இந்த மரணம் 2-ம் மரணத்தைக் குறிப்பிடுகிறது. ஏனெனில் ‘முதலாம் மரணம்’ ஏற்கனவே நம்மை ஆண்டுகொண்டுதான் இருக்கிறது. அப்படிப்பட்ட நம்மிடம் பாவத்தின் சம்பளம் ‘முதலாம் மரணம்’ எனக் கூறுவது அர்த்தமற்றதாக இருக்கும்.

இனி, ‘முதலாம் மரணம்’ மற்றும் ‘2-ம் மரணத்திலிருந்து’ நாம் எவ்வாறு விடுவிக்கப்படுகிறோம் என்பதைப் பார்ப்போம்.

இங்கு நாம் முதலாவது கவனிக்க வேண்டியது, ஆதாமால் கிடைத்த ‘முதலாம் மரணத்திலிருந்து’ நாம் விடுவிக்கப்பட்டால்தான் ‘2-ம் மரணத்திலிருந்து’ நாம் விடுவிக்கப்பட வாய்ப்பு கிடைக்கும். இந்த வாய்ப்பை நமக்குத் தருவதுதான் இயேசு பலியானதின் முதல் நோக்கம். இதன் அடிப்படையில்தான் ‘ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்’ என 1 கொரி. 15:22-ல் பவுல் கூறுகிறார்.

இவ்வசனத்தை நன்றாகக் கவனித்துப்பாருங்கள். நம் மீறுதலுக்காக இல்லாமல் ஆதாமின் மீறுதலுக்காக ஆதாமுக்குள் நாமெல்லோரும் மரிக்கிறோமோ அதேவிதமாக, நம் நீதியினால் அல்ல, கிறிஸ்துவின் நீதியினால், அந்த ‘முதலாம் மரணத்திலிருந்து’ நாம் விடுவிக்கப்பட்டு உயிர்ப்பிக்கப்படுகிறோம். இவ்வாறு உயிர்ப்பிக்கப்படுதலை அழிவில்லாத உயிர்த்தெழுதல் எனக் கூறமுடியாது. நாம் காரணமாக இல்லாத ‘முதலாம் மரணத்திலிருந்து’ நம் கிரியையின் அடிப்படையில்லாமலேயே (நற்கிரியை, துர்க்கிரியை) நாம் உயிர்பபிக்கப்படுகிறோம். இப்படி ஓர் உயிர்ப்பித்தலை நமக்குத்தரமுடியும் என்பதற்கு லாசரு, சாறிபாத் விதவையின் மகன், சூனேமியாளின் மகன் மற்றும் பலர் உதாரணமாயுள்ளனர்.

எனவே ஆதாமின் மீறுதலால் நாம் இழந்த ஜீவனை (நாம் பாவஞ்செய்தாலும்) பெறுவோம் என்பதே உண்மை. ஒருவேளை நாம் நம் பாவத்தை உணர்ந்து மன்னிப்பு வேண்டினால், கிறிஸ்துவின் பலி நம் பாவத்தை மன்னித்து நம்மை 2-ம் மரணத்திலிருந்தும் விடுவிக்கிறது. இந்த வாய்ப்பை நமக்குத் தருவதுதான் கிறிஸ்துவின் பலியின் 2-வது நோக்கம்.

நாம் பாவத்தை உணர்ந்து பாவமன்னிப்பைப் பெற்றபின்னர் பாவஞ்செய்யாதிருக்க வேண்டும். அப்போதுதான் 2-வது மரணத்திலிருந்து நமக்குக் கிடைத்த விடுதலையை நாம் காப்பாற்ற முடியும். பாவமன்னிப்பைப் பெற்ற நாம், மீண்டும் பாவஞ்செய்தால் மீண்டும் 2-ம் மரணம் நம்மை ஆட்கொள்ளும். எனவேதான் தன் பாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுகிறவன் இரக்கம் பெறுவான் (அதாவது 2-ம் மரணத்திலிருந்து தப்பிப்பான்) என வசனம் கூறுகிறது.

பாவத்தை அறிக்கை செய்து, பாவமன்னிப்பு பெற்று, 2-ம் மரணத்திலிருந்து விடுதலையானவர்கள், முடிவுபரியந்தம் (அதாவது முதலாம் மரணபரியந்தம்) நிலைத்திருந்தால், அவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் கிடையாது. இவர்கள்தான் வெளி. 20:5 கூறுகிற முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, கிறிஸ்துவோடு 1000 வருட அரசாட்சியில் அரசாளப்போகிற பரிசுத்தவானும் பாக்கியவான்களுமானவர்கள்.

முடிவுபரியந்தம் நிலைத்திராத மற்றவர்கள்மீது, 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இருக்கத்தான் செய்யும்.

முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையாத மற்றவர்களில், அதாவது 2-ம் மரணத்தின் அதிகாரத்தைச் சுமப்பவர்களில்: கிறிஸ்துவை அறியாதவர்கள், கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டவர்கள், ஏற்றுக்கொள்ளாதவர்கள், ஏற்றுக்கொண்டு அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள், சிறு வயதில் மரித்தவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போன்ற அனைவரும் அடங்குவார்கள். ஆனால் இவர்களில் ஒரு பிரிவினர் மட்டுமே 1000 வருட அரசாட்சியில் உயிர்ப்பிக்கப்பட்டு, அதின் பிரஜைகளாகி புடமிடப்படுவார்கள்.

இந்த ஒரு பிரிவினரில் யாரெல்லாம் அடங்குவார்கள், யாரெல்லாம் அடங்கமாட்டார்கள் என்பதற்கான தெளிவான பதிலை நான் இன்னும் அறியவில்லை. ஆனால் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாக இல்லாமல் நேரடியாக 2-ம் மரணத்தை எதிர்கொள்வோர் நிச்சயமாக உண்டு என நான் நம்புகிறேன். இதற்கான வேதஆதாரமாக நான் கூறுவது, கிறிஸ்துவின் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு பற்றிய மத்தேயு 25:31-46 வரையுள்ள வசனங்கள். இவ்வசனங்களில் பசி, தாகம், வியாதி போன்ற பல துன்பங்களில் இருந்தோரைப் பற்றி கூறப்பட்டுள்ளது. இத்தகைய துன்பங்கள் கிறிஸ்துவின் 1000 வருட அரசாட்சியில் இருக்காது (ஏசாயா 65:17-25). ஏசாயா 65:20-ல் 100 வயதில் மரிப்பவனைப் பற்றி கூறப்பட்டுள்ளதால், ஏசாயா 65:17-25 வசனங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள், 1000 வருடத்திற்கு பிறகுள்ள நிகழ்வுகளாக இருக்கமுடியாது.

கிறிஸ்துவின் அந்த 1000 வருட ஆட்சியில் பசி, தாகம், வியாதி போன்ற துன்பங்கள் இருக்கமுடியாதென்பதால் துன்பத்தில் இருப்போருக்கு உதவவேண்டிய யாரும் அப்போது தேவையில்லை. எனவே மத்தேயு 25:31-46 வசனங்களில், துன்பங்களில் இருந்தோருக்கு உதவிசெய்யாத வெள்ளாட்டுக் கூட்டத்தாரின் அச்செயல்கள், 1000 வருட அரசாட்சியில் நடப்பவையல்ல. அதாவது அச்செயல்கள் யாவும் இப்பூமியின் நாட்களில் நடப்பவைகளே. எனவே இப்பூமியில் துன்பத்தில் வாடுகிற எளியோருக்கு உதவாமல் சுயநலமாக வாழ்கிற இரக்கமற்ற அனைவரும், 1000 வருட ஆட்சிக்குள் பிரவேசியாமல், நேரடியாக வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு வந்து, 2-ம் மரணத்திற்கு தீர்க்கப்படுவார்கள் என்பது எனது கருத்து. இரக்கமற்றவர்களுக்கு இரக்கமற்ற நியாயத்தீர்ப்பு கிடைக்கும் எனும் வசனம், எனது இக்கருத்துக்குப் பொருத்தமாயுள்ளது.

கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சிக்குப் பின்வரும் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு, முழுக்க முழுக்க அவனவன் கிரியைகளின்படியானதே என வெளி. 20:12 கூறுவதைக் கவனியுங்கள். எனவே 2-ம் மரணத்திலிருந்து நாம் விடுதலை பெறவேண்டுமெனில், நம் கடந்தகால பாவங்களை உணர்ந்து மன்னிப்பு பெறவேண்டும் என்பதோடு, மன்னிப்பு பெற்ற நாம் நற்கிரியைகள் செய்வதும் அவசியமாயிருக்கிறது.

ஆதாமின் கிரியையால் (மீறுதலால்) வந்த முதலாம் மரணத்திலிருந்து விடுதலையாகி கிறிஸ்துவின் பலியால் நாம் ஜீவன் பெறுவதை நம் துர்க்கிரியைகள் உட்பட எதுவும் தடுப்பதில்லை. இதுதான் எல்லோருக்குமான நற்செய்தி. ஆனால் முதலாம் மரணத்திலிருந்து விடுதலையான நாம், 2-ம் மரணத்தைப் பெறாதிருக்கவேண்டுமெனில், 2-ம் மரணத்திற்குக் காரணமாக இருக்கக்கூடிய நம் சுயபாவங்களை அறிக்கைசெய்து விட்டுவிடுவதோடு, நற்கிரியைகளைச் செய்யவும் வேண்டும். அப்போதுதான் 2-ம் மரணத்திலிருந்து நாம் முழுமையாக விடுதலை பெறமுடியும்.

நற்கிரியைகளைச் செய்யாதவர்கள் நேரடியாக 2-ம் மரணத்திற்குச் செல்வதைப்போல, சமாதானமும் சவுக்கியமும் உண்டாகும் எனச் சொல்லி ஜனங்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களும் சடிதியான அழிவான 2-ம் மரணத்திற்கு நேரடியாகச் செல்வார்கள் எனக் கருதுகிறேன். இவர்களைத் தவிர வேறு எவர்களெல்லாம் 2-ம் மரணத்திற்கு நேரடியாகச் செல்வார்கள் என்பதை நானறியேன்.

-- Edited by anbu57 on Tuesday 27th of October 2009 05:00:37 AM

-- Edited by anbu57 on Tuesday 27th of October 2009 05:06:51 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

1 தீமோ. 2:4 கூறுவது:
//எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமாக இருக்கிறார்//

eras கூறுவது:
//தேவ‌ன் எல்லாரையும் இர‌ட்சிப்பார் என்று அவரின் அழகான திட்டத்தை சொன்னால் ந‌ம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள்!//

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார் என வசனம் கூறுகிறது. ஆனால் தேவ‌ன் எல்லாரையும் இர‌ட்சிப்பார் என்பது அவரது அழகான திட்டம் என சகோ.eras கூறுகிறார். இதைத்தான் வசனத்தைப் புரட்டுதல் என பேதுரு கூறுகிறாரோ? இப்படி வசனத்தைப் புரட்டிச் சொல்வதை நம்ப மறுக்கிறார்கள் என சகோ.eras வருத்தப்படவும் செய்கிறார்.

சகோ.eras அவர்களே!
வசனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே சொல்வதில் மிகக் கவனமாக இருங்கள். ஏற்கனவே மொழிபெயர்ப்புத் தவறுகளால் பல வசனங்கள் மூலக்கருத்தைவிட்டு விலகிக் கிடக்கின்றன. அத்தோடு நாமும் இப்படி வசனத்தைப் புரட்டினால், நிலைமை என்னாகும்?

தேவன் எல்லோரையும் இரட்சிக்கப்பட சித்தமுள்ளவராக இருக்கிறார் என்றே வசனம் கூறுகிறது. அதுவும் “சித்தம்” எனும் வார்த்தைக்கு இணையான கிரேக்க வார்த்தையான “தெல்-லோ” என்பதின் அர்த்தம் “desire" அதாவது “விருப்பம்” என அகராதி கூறுகிறது. மத்தேயு 5:42; 7:12; 9:13 போன்ற பல வசனங்களில் “தெல்-லோ” எனும் கிரேக்க வார்த்தை, “விருப்பம்” என்பதாகத்தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே, எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் விருப்பமுள்ளவராக இருக்கிறார் என்றும் 1 தீமோ. 2:4-ஐ மொழிபெயர்க்கலாம்.

தேவனின் விருப்பம், எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்பதுதான். அதற்காக, இரட்சிக்கப்படுவதற்கு மனிதன் என்ன செய்யவேண்டுமென வேதாகமம் சொல்கிறதோ அதைச் செய்யாதவர்கள் எவ்வாறு இரட்சிக்கப்பட முடியும்? வசனம் கூறுவதைச் சற்று படித்துப் பாருங்கள்.

மத்தேயு 10:22 .... முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
யோவான் 10:9 ... என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான்.
அப். 16:31 ... இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
1 கொரி. 15:2 நான் பிரசங்கித்த பிரகாரமாய் நீங்கள் கைக்கொண்டிருந்தால் அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள்.
யாக்கோபு 2:14,26 ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும் கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது.

இவ்வுலகில் கிரியைகளில்லாதவன், 1000 வருட அரசாட்சியில் கிரியைகள் செய்தால் இரட்சிக்கப்பட்டுவிடுவான் என்பீர்களோ?

யாக்கோபு 2:15,16 வசனங்களில் கூறப்பட்டுள்ளதைப் போன்ற கிரியைகளை செய்வதற்கான வாய்ப்பு இவ்வுலகில்தான் கிடைக்குமேயன்றி, 1000 வருட அரசாட்சியில் கிடைக்காது. அம்மாதிரி கிரியைகளைச் செய்யாதோரின் நிலையை மத்தேயு 25:31-46 வசனங்களில் படித்து அறிந்துகொள்ளுங்கள்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர் அன்பு அவர்களின் விளக்கம் அருமை. அத்தோடு நான் நம்பும் ஒரு கருத்தையும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.(ஏசாயா 26:௯)

என்ற வசனத்துக்கு நான் கொள்ளும் அருத்தம் வேறு.

அதாவது கீழ்க்கண்ட வசனங்கள் சொல்வதை பாருங்கள் 

யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல

யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது

எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே
 
இந்த பூமியில் வாழும் பலர் இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அல்ல என்பதையும் உலக தோற்றத்துக்கு முன்னமே உண்டானவர்கள் என்றும்  மேற்கண்ட வசனத்தின் மூலம் அறிய முடியும் (இவர்கள்தான் மாமிசமான தேவபுத்திரர்கள்) , அதே நேரத்தில் இந்த உலகத்தை சார்ந்த அநேகர் இங்கு இருக்கின்றனர் அவர்களே பூச்சக்கர்த்து குடிகள் அவார்கள்   அவர்களை பொறுத்தவரை தாவீது சொல்லும்போது நான்தான் குற்றம் செய்தேன் "இந்த ஆடுகள்" என்ன செய்தது என்றும், யோனா தீர்க்கதரிசி புத்தகத்தில் "வலதுக்கும் இடத்துக்கும் வித்யாசம் தெரியாதவர்கள்" என்று கர்த்தரும் குறிப்பிட்டுள்ளவர்கள்.  இந்த அப்பாவி ஜனங்கள்தான் பூச்சக்கர்த்து குடிகள் இவர்கள் மட்டும்தான் மேற்சொன்ன நாளில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்று நான் கருதுகிறேன்.

இயேசுவை மனதார அறிந்து மருதலித்தவர்களும், சத்தியத்தை அறிந்தும் அதன்படி நடவாதவர்களும்,  பலமுறை சொல்லியும் காதை  அடைக்கும் செவிட்டு விரியங்களும் ஆயிரம் வருஷ அரசாட்சியில் உயிர்தெளுவதில்லை. இவர்களைத்தான் வேதம் "மரணம் அடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷமளவும் உயிர்தெளவில்லை" என்று குறிப்பிடுகிறது இவர்கள் நேரடியான வெள்ளை சிங்காசன நியயதீர்ப்பின்போதுதான் உயிர்தேளுவார்கள் என்பது எனது கருத்து.

    



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

RAAJ wrote:

 

வெளி 20:5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. 

இந்த கூட்டத்தார் யார்? இவர்கள் எப்போது நீதியை கற்றுக்கொள்வார்கள்? என்பதையும் சற்று விளக்குங்கள்.


மேலும் இன்னொரு கூட்டத்தாரும் இருக்கிறார்கள்

7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.
9. அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

இந்த பொல்லாத கூட்டத்தார் எங்கு சொல்வார்கள்? அல்லது இவர்கள் எப்போது நீதியை கற்றுக்கொள்வார்கள்? என்பதையும் சற்று விளக்குங்கள்.

 



மரணமடைந்த மற்றவர்கள் என்றால் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாமல் மரித்த அத்துனைபேரும்.

இவர்களுக்கு நீதியும் கற்றுக்கொடுக்கப்பட மாட்டாது. இவர்கள் எல்லாரும் 'வெள்ளை சிங்காசன' நியாயத்தீர்ப்பின்போது 'பாதாள' வேதனையிலிருந்து உயிரோடு எழுப்பப்பட்டு, அக்கினிக்கடலில் தள்ளப்படுவார்கள். அங்கு 'சதாகாலமும்' வாதிக்கப்படுவார்கள்! அதாவது 'பாதாளத்தில்' சரீரமில்லாமல் வேதனை அனுபவித்த இவர்கள் இப்போது சரீரத்தோடு 'அக்கினிக்கடலில்'(ஆங்கிலத்தில் Lake of Fire) வாதிக்கப்படுவார்கள், ட்ரில்லியன் கணக்கான வருடங்களாக......


இன்னொரு கூட்டத்தார் குறித்த‌ இவ்வசனம் சாத்தனை ஏமாற்றுவதற்காக வந்த வசனம். ஏனென்றால் 1000வருட அரசாட்சியில்தான் உயர்வு தாழ்வு இருக்காதே அப்படி இருக்கும்பட்சம் 'கோகு', 'மாகோகு' என்ற 'ஜாதிகள்' மட்டும் எங்கிருந்து வரும். அந்த ஜாதியில் ஒருத்தர்கூட இல்லாமல் சாத்தான் ஏமாறுவான்.



மேலும் 'சமுத்திரமும்' இல்லாமல் போகுமாதலால் கடற்கரையும் இல்லை, ஆக மணலும் இருக்காது.

அப்படியென்றாலும் அங்கும் சாத்தானே அவர்களை மோசம் போக்குகிறான். அவர்களை நீங்கள் ஏன் 'பொல்லாதவர்கள்' என்கிறீர்கள்?



"அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது". என்று குழப்பமே இல்லாத ஒரு வசனத்தை பதித்துவிட்டு


இந்த பொல்லாத கூட்டத்தார் எங்கு சொல்வார்கள்? அல்லது இவர்கள் எப்போது நீதியை கற்றுக்கொள்வார்கள்? என்பதையும் சற்று விளக்குங்கள்.

என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை சகோதரரே! அக்கினி பட்சித்துப்போட்டால் சாம்பலாக வேண்டியதுதான்.




-- Edited by soulsolution on Wednesday 28th of October 2009 11:42:20 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

RAAJ wrote:

 

சகோதரர் அன்பு அவர்களின் விளக்கம் அருமை. அத்தோடு நான் நம்பும் ஒரு கருத்தையும் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.(ஏசாயா 26:௯)

என்ற வசனத்துக்கு நான் கொள்ளும் அருத்தம் வேறு.

அதாவது கீழ்க்கண்ட வசனங்கள் சொல்வதை பாருங்கள்

யோவான் 17:16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல

யோவான் 15:19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது

எபேசியர் 1:4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே

இந்த பூமியில் வாழும் பலர் இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அல்ல என்பதையும் உலக தோற்றத்துக்கு முன்னமே உண்டானவர்கள் என்றும்  மேற்கண்ட வசனத்தின் மூலம் அறிய முடியும் (இவர்கள்தான் மாமிசமான தேவபுத்திரர்கள்) , அதே நேரத்தில் இந்த உலகத்தை சார்ந்த அநேகர் இங்கு இருக்கின்றனர் அவர்களே பூச்சக்கர்த்து குடிகள் அவார்கள்   அவர்களை பொறுத்தவரை தாவீது சொல்லும்போது நான்தான் குற்றம் செய்தேன் "இந்த ஆடுகள்" என்ன செய்தது என்றும், யோனா தீர்க்கதரிசி புத்தகத்தில் "வலதுக்கும் இடத்துக்கும் வித்யாசம் தெரியாதவர்கள்" என்று கர்த்தரும் குறிப்பிட்டுள்ளவர்கள்.  இந்த அப்பாவி ஜனங்கள்தான் பூச்சக்கர்த்து குடிகள் இவர்கள் மட்டும்தான் மேற்சொன்ன நாளில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்று நான் கருதுகிறேன்.

இயேசுவை மனதார அறிந்து மருதலித்தவர்களும், சத்தியத்தை அறிந்தும் அதன்படி நடவாதவர்களும்,  பலமுறை சொல்லியும் காதை  அடைக்கும் செவிட்டு விரியங்களும் ஆயிரம் வருஷ அரசாட்சியில் உயிர்தெளுவதில்லை. இவர்களைத்தான் வேதம் "மரணம் அடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷமளவும் உயிர்தெளவில்லை" என்று குறிப்பிடுகிறது இவர்கள் நேரடியான வெள்ளை சிங்காசன நியயதீர்ப்பின்போதுதான் உயிர்தேளுவார்கள் என்பது எனது கருத்து.

 

 




ஆக வேதபுத்தகமே நீங்கள், நீங்கள் என்று 'உலகத்தாரல்லாதவர்களுக்கு' எழுதப்பட்டதாகும். அதை ஏன் நாம் படித்து குழப்பிக்கொள்ள வேண்டும்?




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

soulsolution wrote:"அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது". என்று குழப்பமே இல்லாத ஒரு வசனத்தை பதித்துவிட்டு


இந்த பொல்லாத கூட்டத்தார் எங்கு சொல்வார்கள்? அல்லது இவர்கள் எப்போது நீதியை கற்றுக்கொள்வார்கள்? என்பதையும் சற்று விளக்குங்கள்.

என்று கேட்டால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை சகோதரரே! அக்கினி பட்சித்துப்போட்டால் சாம்பலாக வேண்டியதுதான்.


நல்லது உங்கள் கருத்துப்படியே சாத்தானால் மோசம்போக்கப்பட்ட கடற்க்கரை மணலத்தனையான ஜனங்கள் தேவஅக்கினியால் சாம்பலாக்கப்பட்டால்,

"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் அவர் சித்தமாக இருக்கிறார்" 1 தீமோ 2:6

என்ற தேவனுடைய சித்தம் என்னாவது சகோதரரே?

அந்த வசனனத்தின் அடிப்படையில்தானே  எல்லோரும் இரட்சிக்கப்படுவர்/  நீதியை கற்றுக்கொள்வர் என்று விவாதமே நடைபெறுகிறது! நீங்கள் என்னவென்றால் ஒரு பெரிய கூட்ட மக்கள் சாம்பலாகிவிடுவார்கள் என்று சிம்பிளாக சொல்கிறீர்கள். 


 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Member

Status: Offline
Posts: 18
Date:

அன்பு57 எழுதுகிறார்:
"eras கூறுவது:
//தேவ‌ன் எல்லாரையும் இர‌ட்சிப்பார் என்று அவரின் அழகான திட்டத்தை சொன்னால் ந‌ம்ப‌ ம‌றுக்கிறார்க‌ள்!//

எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட தேவன் சித்தமாக இருக்கிறார் என வசனம் கூறுகிறது. ஆனால் தேவ‌ன் எல்லாரையும் இர‌ட்சிப்பார் என்பது அவரது அழகான திட்டம் என சகோ.eras கூறுகிறார். இதைத்தான் வசனத்தைப் புரட்டுதல் என பேதுரு கூறுகிறாரோ? இப்படி வசனத்தைப் புரட்டிச் சொல்வதை நம்ப மறுக்கிறார்கள் என சகோ.eras வருத்தப்படவும் செய்கிறார்."

இதை வேத புரட்டல் என்று சொல்லுவது இல்லை சகோதரரே, உயிர்த்தெழுதல் நடக்காதது போது, உயிர்த்தெழுதல் நடந்து விட்டது என்று பிரசங்கித்தார்களே, தேவன் எல்லோரும் இரட்சிக்கப்பட சித்தமாக இருக்கிறார் ஆனால் அது முடியாது என்று தேவதூஷனம் செய்வது தான் வேதபுரட்டல் என்று நான் நினைக்கிறேன்.

“தெல்-லோ” என்பதின் அர்த்தம் “desiரெ"  என்று எழுதியிருக்கிறேர்களே. இதோ,

_____Strongs_____

G2309  thelo    thel'-o
or    ethelo   eth-el'-o,    in certain tenses
      theleo   thel-eh'-o,
and   etheleo  eth-el-eh'-o, which are otherwise obsolete

apparently strengthened from the alternate form of G138;

to determine (as an active option from subjective impulse; whereas G1014 properly denotes rather a passive acquiescence in objective considerations), i.e. choose or prefer (literally or figuratively); by implication, to wish, i.e. be inclined to (sometimes adverbially, gladly); impersonally for the future tense, to be about to; by Hebraism, to delight in:--desire, be disposed (forward), intend, list, love, mean, please, have rather, (be) will (have, -ling, - ling(-ly)).

இத்துனை பெரிய‌ அர்த்த‌ம் கொண்டிருக்கும் இந்த‌ வார்த்தைக்கு, உங்க‌ள் விள‌க்க‌த்திற்கு சாத‌க‌மாக‌ வேத‌த்தில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌டாத‌ ஒரு வார்த்தையான‌ "desire"ஐ மாத்திர‌ம் சொல்லியிருக்கிறேர்க‌ளே.

1 Timothy 2:4-6 (King James Version)
"Who will have all men to be saved, and to come unto the knowledge of the truth. "


1 Timothy 2:4-6 (21st Century King James Version)
"who will have all men to be saved and to come unto the knowledge of the truth."

1 Timothy 2:4-6 (New King James Version)
"who desires all men to be saved and to come to the knowledge of the truth. "

1 Timothy 2:4-6 (New International Version)
"who wants all men to be saved and to come to a knowledge of the truth."

1 Timothy 2:4-6 (The Message)
"He wants not only us but everyone saved, you know, everyone to get to know the truth we've learned"

1 Timothy 2:4-6 (Amplified Bible)
"Who wishes all men to be saved and [increasingly] to perceive and recognize and discern and know precisely and correctly the [divine] Truth."

1 Timothy 2:4-6 (Contemporary English Version)
"God wants everyone to be saved and to know the whole truth"

1 Timothy 2:4-6 (New Century Version)
"who wants all people to be saved and to know the truth."

1 Timothy 2:4-6 (New Living Translation)
"who wants everyone to be saved and to understand the truth."

1 Timothy 2:4-6 (American Standard Version)
"who would have all men to be saved, and come to the knowledge of the truth."

1 Timothy 2:4-6 (Young's Literal Translation)
"who doth will all men to be saved, and to come to the full knowledge of the truth;"

1 Timothy 2:4-6 (New International Reader's Version)
"He wants everyone to be saved. He wants them to come to know the truth. "

1 Timothy 2:4-6 (Wycliffe New Testament)
"that will that all men be made safe, and that they come to the knowing of truth. [that will all men to be made safe, and to come to the knowing of truth.] "

1 Timothy 2:4-6 (Worldwide English (New Testament))
"He wants all people to be saved and to know what is true."

1 Timothy 2:4-6 (New International Version - UK)
"who wants all men to be saved and to come to a knowledge of the truth."

1 Timothy 2:4-6 (Today's New International Version)
"who wants all people to be saved and to come to a knowledge of the truth."

 என‌க்கு தெரிந்து இத்துனை மொழிப்பெய‌ர்ப்புக‌ளில் "wants" என்கிற‌ ஒரு மொழிப்பெய‌ர்ப்பை "desire" என்று புரிந்துக்கொண்டு என்னை வேத‌ புர‌ட்ட‌ன் என்று கூறுவ‌தில் நியாய‌ம் இல்லை என்றே க‌ருதுகிறேன்.

அப்ப‌டியே "desire" என்று எடுத்துக்கொண்டாலும் ஒன்றும் பெரிய‌ த‌ப்பு இல்லை, அத‌ன் அர்த்த‌மும் உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ இட‌த்தை புரிந்துக்கொண்டால்.
விருப்ப‌ம் என்று ம‌னித‌னுக்கு உள்ளை த‌ன்மை வ‌ந்துவிட‌க்கூடாது என்ப‌தால் தான் "சித்த‌ம்" என்று த‌மிழ் வேதாகம‌ம் மொழிப்பெய‌ர்த்திற்க்கிற‌து. இனி தேவ‌னின் சித்த‌ம் நிறைவேறாது என்று சொல்லுவ‌து வேத‌ புற‌ட்ட‌லா அல்ல‌து, அது நிறைவேறியே தீரும் என்ப‌து வேத‌ப்புற‌ட்ட‌லா? "விருப்பம்" அல்லது "desire என்பது மனிதர்கள் கொள்வது, "சித்தம்" அல்லது "He wants" என்பது தேவன் கொள்வது. தேவனை தயவு செய்து மனிதனாக மாற்றி விடாதீர்கள்.

இந்த‌ வ‌ச‌ன‌த்தை தொட‌ர்ந்து வாசித்தோமென்றால், இத‌ர்காக‌ உங்க‌ளையோ, என்னையோ எதையும் செய்ய‌ சொல்ல‌வில்லை, மாறாக‌ த‌ன‌து குமார‌னை தான் "எல்லாருக்காக‌வும் மீட்கும் பொருளாக‌" நிய‌மித்தார். அதாவ‌து "ransom for all". "எல்லாருக்காக‌வும்" அல்ல‌து "for all" என்றால், அது "எல்லாருக்காக‌வும்" அல்ல‌து "for all" என்று தான் எடுத்துக்கொள்ள‌ முடியுமே த‌விர‌, வேறு என்ன‌ அர்த்த‌ம் கொள்வீர்க‌ள் என்ப‌து தான் புரிய‌வில்லை.

அன்பு57 எழுதுகிறார்:
"மத்தேயு 10:22 .... முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
யோவான் 10:9 ... என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால் அவன் இரட்சிக்கப்படுவான்.
அப். 16:31 ... இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
1 கொரி. 15:2 நான் பிரசங்கித்த பிரகாரமாய் நீங்கள் கைக்கொண்டிருந்தால் அதினாலே இரட்சிக்கப்படுவீர்கள்.
யாக்கோபு 2:14,26 ஒருவன் தனக்கு விசுவாசம் உண்டென்று சொல்லியும் கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது."

இர‌ட்சிப்பு என்ப‌து ப‌ர‌லோக‌ ராஜ்ய‌ம் மாத்திர‌ம் என்று நினைப்ப‌வ‌ர்க‌ளுக்கு இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள் நிச்ச‌ய‌மாக‌ ஏமாற்ற‌த்தையே த‌ரும். இங்கு சொல்ல‌ப்ப‌ட்ட‌ இர‌ட்சிப்பு என்கிற‌ வார்த்தை, இயேசு கிறிஸ்துவின் சாய‌லில் மாறுவ‌த‌றுக்கான‌ ஒரு த‌குதியே த‌விர‌, வெறும் உயிர்த்தெழுத‌லை குறித்து சொல்ல‌வில்லை. இப்ப‌டி விசுவாசிக‌ளுக்கான‌ ஒரு இர‌ட்சிப்பும், எல்லா ம‌க்க‌ளின் இர‌ட்சிப்பும் உண்டு என்கிற‌து, 1 தீமோ 4:10.
"ஏனெனில் எல்லா ம‌னுஷ‌ருக்கும், விசேஷ‌மாக‌ விசுவாசிக‌ளுக்கும் இர‌ட்ச‌க‌ராகிய‌ ஜீவ‌னுள்ள‌ தேவ‌ன் மேல் ந‌ம்பிக்கை வைத்திருக்கிறோம்"

இந்த‌ வ‌ச‌ன‌த்திலும் "எல்லா ம‌னுஷ‌ருக்கும்" ம‌ர்றும் "விசுவாசிக‌ளுக்கு" உண்டான‌ இர‌ட்ச்ச‌க‌ரை குறித்து சொல்லியிருக்கிறார்.

ஐயா, இர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட‌தினால் தான் எல்லோரும் 1000 வ‌ருட‌ அர‌சாட்சிக்குள் வ‌ருகிறார்க‌ளே த‌விர‌, இர‌ட்சிக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு அல்ல‌. அந்த‌ ராஜிய‌த்தில் அன்பே பிர‌தான‌மாக‌ இருக்கும் என்று அப்போஸ்த‌ல‌ரும் தீர்க்க‌த‌ரிச்ன‌ம் எழுதியிருக்கிறார் (1 கொரி. 13:13). இன்று அந்த‌ அன்பை துளியும் கான‌முடிவ‌தில்லையே, அப்புற‌ம் எப்ப‌டி அந்த‌ அன்பின் கிரியைக‌ள் இப்பொழுது வெளிப்ப‌டும். இப்பொழுது முடிய‌வில்லை என்ப‌தால் தான், இப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு அன்பை க‌ற்றுக்கொள்ளும் இட‌மாக‌ 1000 வ‌ருட‌ அரசாட்சி.



-- Edited by eras on Wednesday 28th of October 2009 05:28:25 PM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ராஜ் எழுதுகிறார்"
"வெளி 20:5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.

இந்த கூட்டத்தார் யார்? இவர்கள் எப்போது நீதியை கற்றுக்கொள்வார்கள்? என்பதையும் சற்று விளக்குங்கள்."

இந்த‌ 20:5ஐ பாதி மாத்திர‌ம் ப‌டித்து விள‌க்க‌ம் கேட்டாள் ச‌ரியான‌ ப‌தில் கிடைக்காது. இந்த‌ வ‌ச‌ன‌த்தை முழுவ‌துமாக‌ வாசியுங்க‌ள். "உயிர‌டைய‌வில்லை" என்ப‌து எப்ப‌டி "முத‌லாம் உயிர்த்தெழுத‌ல்" ஆகும் என்று நீங்க‌ள் ப‌தில் சொல்லுங்க‌ளேன்! ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்தை மாத்திர‌ம் ப‌டித்தால் நிச்ச‌ய‌ம் இந்த‌ குழ‌ப்ப‌ம்.

Revelation 20:5 (Today's New International Version)
"(The rest of the dead did not come to life until the thousand years were ended.) This is the first resurrection. "

இதில் வ‌ந்திருக்கும் அடைப்புகுறிக‌ளை () நான் போட‌வில்லை.  ச‌ரி இந்த‌ வ‌ச‌ன‌த்தை இப்ப‌டி வாசித்து பாருங்க‌ள்:

"I saw thrones on which were seated those who had been given authority to judge. And I saw the souls of those who had been beheaded because of their testimony for Jesus and because of the word of God. They had not worshipped the beast or his image and had not received his mark on their foreheads or their hands. They came to life and reigned with Christ for a thousand years. 5 (The rest of the dead did not come to life until the thousand years were ended.) This is the first resurrection.

அடைப்புகுறிக‌ளை எடுத்து வாசித்து பாருங்க‌ள்:

I saw thrones on which were seated those who had been given authority to judge. And I saw the souls of those who had been beheaded because of their testimony for Jesus and because of the word of God. They had not worshipped the beast or his image and had not received his mark on their foreheads or their hands. They came to life and reigned with Christ for a thousand years.This is the first resurrection.

உயிர்த்தெழுத‌ல் என்றால் உயிரோடு வ‌ருவ‌து, செத்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால் அத‌ன் பெய‌ர் முத‌லாம், இர‌ண்டாம் இப்ப‌டி எத்துனை எண்க‌ளையும் போட்டாலும், அத‌ன் அர்த்த‌ம் ம‌ரித்திருப்ப‌து தான், உயிர்த்தெழுத‌ல் இல்லை. ஏதோ ஒரு கால‌த்தில் ஏதோ ஒரு கார‌ண‌த்திற்காக‌ சேர்த்துக்கொண்ட‌ வ‌ச‌ன‌ங்க‌ள் அர்த்த‌த்தை இல்லை, குத‌ர்த்த‌த்தை தான் கொண்டு வ‌ரும்.

"கோகையும் மாகோகையும்" என்றால் ம‌க்க‌ள் தான் என்றும் அதிலும் ஆண்க‌ளும், பெண்க‌ளும் உண்டா என்று விள‌க்குங்க‌ள், அத‌ன் பின் இத‌ற்கு ப‌தில் ப‌திவு செய்கிறேன்.

ராஜ் எழுதுகிறார்:
"இந்த பூமியில் வாழும் பலர் இந்த உலகத்தை சார்ந்தவர்கள் அல்ல என்பதையும் உலக தோற்றத்துக்கு முன்னமே உண்டானவர்கள் என்றும்  மேற்கண்ட வசனத்தின் மூலம் அறிய முடியும் (இவர்கள்தான் மாமிசமான தேவபுத்திரர்கள்)"

ப‌ர‌வாயில்லையே, ஒரு புது கோட்பாட்டை கொடுத்து ஒரு புதிய‌ ச‌பைக்கு அஸ்திபார‌த்தை போட்டிருக்கிறீர்க‌ள். அதாவ‌து, ப‌வுல், பேதுரு போன்ற‌வ‌ர்க‌ள் எல்லாம் மாமிச‌மான‌ தேவபுத்திர‌ர்க‌ள் என்ப‌து உங்க‌ள் விள‌க்க‌ம். முந்த‌ய‌ ஆதாம் (உண்மையான‌ ஆதாம்) ம‌ண்ணிலிருந்தும், அவ‌னில் இருந்து வ‌ந்த‌ ச‌ந்த‌திக‌ள் எல்லாம் இதே வ‌ரிசையில் இருக்க‌ பிந்திய‌ ஆதாம் (இயேசு கிறிஸ்து) ப‌ர‌லோக‌த்திலிருந்து வ‌ந்தார் என்கிற‌து வேத‌ம் (1 கொரி 15:47). (நான் வ‌ச‌ன‌த்தை எழுதாம‌ல் வ‌ச‌ன‌த்தில் க‌ருத்து அல்ல‌து அர்த்த‌த்தை மாத்திர‌மே எழுதியிருக்கிறேன், ச‌கோ அன்பு57 இதையும் வேத‌ புர‌ட்ட‌ல் என்று சொல்லிவிட‌ போகிறார்!)



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard