kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Our Faith / எங்கள் விசுவாசம்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Our Faith / எங்கள் விசுவாசம்


தாம் ஒருவராய் சாகாமையுள்ளவரும், ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும், ஆதியந்தமில்லாத ஏக சக்கிரதிபதியுமான, எகோவா என்னும் நாமமுள்ள, ஒன்றான மெய்த்தேவனையே விசுவாசிக்கிறோம் (1 தீமோ. 6:15, 16; யாத். 6:3).


அவ‌ருடைய‌ ஒரே பேறான‌ குமார‌னும், ந‌ம்முடைய‌ க‌ர்த்த‌ரும் இர‌ட்ச‌க‌ருமான‌, இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறோம். (யோவா. 3:16).


இவ‌ர் அத‌ரிச‌மான‌ தேவ‌னுடைய‌ த‌ற்சொரூப‌மும், ச‌ர்வ‌சிருஷ்டிக்கும் முந்தின‌ பேறுமான‌வ‌ர், தேவ‌ன் இவ‌ரைக் கொண்டும், இவ‌ருக்கென்றும், உல‌க‌ங்க‌ளை எல்லாம் உண்டாக்கி, இவ‌ரையே ச‌ர்வ‌த்துக்கும் சுத‌ந்த‌ர‌வாளியாக‌வும் நிய‌மித்தார், எல்லாம் இவ‌ருக்குள் நிலை நிற்கிற‌தென்றும் விசுவாசிக்கிறோம். (கொலோ. 1:15; எபி. 1:2)


இவ‌ர் தேவ‌ குமார‌னாயிருந்தும், தேவ‌னுக்குச் ச‌ம‌மாயிருக்க‌ எண்ணாம‌ல், அக்கிர‌ம‌ங்க‌ளினால் ஜீவ‌னை இழ‌ந்த‌ ம‌னுஷ‌ர் பேரில் ம‌ன‌துருகி, த‌ம்மைத் தாமே வெறுமையாக்கி, ம‌னித‌னாகி எல்லாரையும் மீட்கும் பொருளாக‌த், த‌ம்முடைய‌ ஜீவ‌னையே கொடுத்து, தேவ‌னுக்கும் ம‌னுஷ‌ருக்கும், ச‌மாதான‌த்தை உண்டுப‌ண்ணினாரென்றும் விசுவாசிக்கிறோம். (யோவா. 10:36)


ஆத‌லால் தேவ‌ன் இவ‌ரை ம‌ரித்தோரிலிருந்து எழுப்பி, த‌ம்மைபோல் குமார‌னும் ஜீவ‌னுடைய‌வ‌ராயிருக்க‌ அருள் செய்து, எல்லாவ‌ற்றிற்கும் மேலாக‌ உய‌ர்த்தி, த‌ம்முடைய‌ வ‌ல்ல‌மையின் வ‌ல‌து பாரிச‌த்தில், வீற்றிருக்க‌ச் செய்தார் என்றும் விசுவாசிக்கிறோம். (அப். 3:15; யோவா. 5:26)


இவ‌ரே தேவ‌னுக்கும் ம‌னுஷ‌ருக்கும் ம‌த்திய‌ஸ்த‌ராக‌வும், ச‌பையாகிய‌ ச‌ரீர‌த்துக்கு த‌லையாக‌வும் இருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறோம் (1 தீமோ. 2:5; கொலோ. 1:18).


இவ‌ர் ப‌ர‌லோக‌த்துக்கேறி, தாம் வாக்குத்த‌த்த‌ம் ப‌ண்ணின‌, உன்ன‌த‌த்திலிருந்து வ‌ரும் பெலானாகிய‌ ப‌ரிசுத்தாவியை, விசுவாசிக‌ள‌ட‌ங்கிய‌ ச‌பைக்கு அருளி, தேவ‌ சித்த‌த்தை அவ‌ர்க‌ளுக்கு வெளிப்ப‌டுத்தி, ப‌லியின் ஜீவிய‌த்தில் அவ‌ர்க‌ளை ந‌ட‌த்தி வ‌ருகிறாரென்றும் விசுவாசிக்கிறோம் (அப். 1:5; 2:1)


பிதா குறித்த‌ கால‌த்தில், இவ‌ர் ப‌லியின் ம‌ர‌ண‌த்துக்குட்ப‌ட்டு, முத‌லாம் உயிர்த்தெழுத‌ல‌டையும், த‌ம்முடைய‌ ச‌பையாகிய‌ ச‌க‌ல‌ ப‌ரிசுத்த‌வான்க‌ளோடும், இப்பூமியை நீதியாய் நியாய‌ந்தீர்த்து, ச‌க‌ல‌ துரைத்த‌ன‌த்தையும் அதிகார‌த்தையும் வ‌ல்ல‌மையும் ப‌ரிக‌ரித்து என்றும் அழியாத‌ த‌ம்முடைய‌ நீதியுள்ள‌ அர‌சாட்சியை ஸ்தாபிப்பார் என்றும் விசுவாசிக்கிறோம்.


ம‌ர‌ண‌ம‌டைந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள், கிறிஸ்துவின் அர‌சாட்சி கால‌த்தில், அவ‌ன‌வ‌ன் த‌ன்த‌ன் வ‌ரிசையிலே உயிர்ப்பிக்க‌ப்ப‌ட்டு, அவ‌ர் த‌ம்முடைய‌ ம‌ர‌ண‌த்தினால் ச‌ம்பாதித்த‌ நித்திய‌ ஜீவ‌னைய‌டைய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு, பூர‌ண‌ப்ப‌டுவார்க‌ள்.


எல்லாச் ச‌த்துர‌க்க‌ளையும் த‌ம‌து பாத‌ப‌டியாக்கும் ம‌ட்டும், இவ‌ர் ஆளுகை செய்து, க‌டைசிச் ச‌த்துருவாகிய‌ ம‌ர‌ண‌த்தையும் ப‌ரிக‌ரித்து, எல்லாவ‌ற்றையும் முந்தின‌ சீருக்குக் கொண்டு வ‌ந்து, பிதாவே ச‌க‌ல‌த்திலும் ச‌க‌ல‌முமாய் இருப்ப‌த‌ற்கு, அவ‌ருக்கு இராஜ்ய‌த்தை ஒப்புக்கொடுத்து, அவ‌ருக்கு கீழ்ப்ப‌ட்டிருப்பார் என்றும் விசுவாசிக்கிறோம். (1 கொரி 15:25,26,28). ஆமென்!!



-- Edited by bereans on Thursday 22nd of October 2009 04:14:49 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ம‌ர‌ண‌ம‌டைந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள், கிறிஸ்துவின் அர‌சாட்சி கால‌த்தில், அவ‌ன‌வ‌ன் த‌ன்த‌ன் வ‌ரிசையிலே உயிர்ப்பிக்க‌ப்ப‌ட்டு, அவ‌ர் த‌ம்முடைய‌ ம‌ர‌ண‌த்தினால் ச‌ம்பாதித்த‌ நித்திய‌ ஜீவ‌னைய‌டைய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு, பூர‌ண‌ப்ப‌டுவார்க‌ள்.//

சகோ.பெரியன்ஸ் அவர்களே! பின்வரும் வசனத்திற்கு விளக்கம் தர வேண்டுகிறேன்.

வெளி. 20:5 ம‌ர‌ண‌ம‌டைந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிர்த்தெழவில்லை.

எல்லோரும் பூரணப்படுவார்கள் என விசுவாசிக்கும் சகோதரரே! பின்வரும் வசனங்களில் கூறப்பட்டுள்ளோர் யார் எனக் கூறுவீர்களா?

மத்தேயு 25:41 அந்தப்படி, இவர்கள் (இயேசுவின் சகோதரரான சிறியோர்களின் தேவைகளைச் சந்திக்காதவர்கள்) நித்திய ஆக்கினையை அடையப் போவார்கள் என்றார்.

வெளி. 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டான்.

எல்லோரும் பூரணப்படுவார்கள் என விசுவாசிக்கும் சகோதரரே! இவ்வுலகில் தேவகற்பனைகளின்படி நடக்க முயலாதவர்களும், கிறிஸ்துவின் ஆட்சி காலத்தில் பூரணப்பட்டு நித்திய ஜீவனை அடைவார்கள் என்கிறீர்களா? அவ்வாறெனில் தேவகற்பனைகளின்படி நடப்பதற்கு (இவ்வுலகில்) நாம் அதிக சிரத்தைகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்களா?

அதாவது, இவ்வுலகில் கொலை, களவு, பொய், விபசாரம் மற்றும் எல்லா அநீதிகளையும் தைரியமாகச் செய்யலாம் என்கிறீர்களா? யாருக்கும் நன்மை செய்ய வேண்டியதில்லை என்கிறீர்களா?


-- Edited by anbu57 on Friday 23rd of October 2009 12:39:16 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு57 எழுதுகிறார்:
"வெளி. 20:5 ம‌ர‌ண‌ம‌டைந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிர்த்தெழவில்லை."

என்ன சகோதரரே, அந்த வசனத்தை முழுவதுமாக படிக்கவில்லையா. பாதி வசனத்தை தந்து அர்த்தம் கேட்க்கிறீர்களே. நீங்கள் எழுதியது போக, மீதம், "இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்". அது எப்படி சகோதரரே, "உயிர்த்தெழவில்லை" என்பது "உயிர்த்தெழுதலாகும்".
"பரிசுத்த வேதாகமத்தை" மாத்திரம் படிப்பவர்கள் அனைவரும் இந்த கேள்வியை கேட்ப்பார்கள், ஆனால் வசனத்தின் மறு பாதியை படிக்கமாட்டார்கள்!
உபரி தகவல்: நீங்கள் எழுதியிருக்கும் வசனப்பகுதி, கத்தோலிக்க சபையில் வளர்ச்சியின் போது சேர்த்துக்கொள்ளப்பட்ட ஒரு வசனம். பெரும்பாளுமான பைபிள்களில் இந்த பகுதி அடைப்புகுறிக்குள் () போட்டு இருக்கும். சில மொழிப்பெயர்ப்புகளில் இந்த பகுதி நீக்கப்பட்டு இருக்கிறது.

இப்படி சாத்தன் தந்திர்மாக வேதத்திலேயே தன் கைவரிசையை கான்பித்திருக்கிறான்.

அன்பு57 எழுதுகிறார்:
"எல்லோரும் பூரணப்படுவார்கள் என விசுவாசிக்கும் சகோதரரே! இவ்வுலகில் தேவகற்பனைகளின்படி நடக்க முயலாதவர்களும், கிறிஸ்துவின் ஆட்சி காலத்தில் பூரணப்பட்டு நித்திய ஜீவனை அடைவார்கள் என்கிறீர்களா? அவ்வாறெனில் தேவகற்பனைகளின்படி நடப்பதற்கு (இவ்வுலகில்) நாம் அதிக சிரத்தைகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்களா?


அதாவது, இவ்வுலகில் கொலை, களவு, பொய், விபசாரம் மற்றும் எல்லா அநீதிகளையும் தைரியமாகச் செய்யலாம் என்கிறீர்களா? யாருக்கும் நன்மை செய்ய வேண்டியதில்லை என்கிறீர்களா?"

இயேசு கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌த்தின் ப‌ல‌னாக‌ எல்லோரும் பூர‌ண‌மாக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்ப‌து வேத‌ம் என‌க்கு த‌ரும் ந‌ம்பிக்கை.

தேவ‌க‌ற்பனைக‌ளின்ப‌டி (கிறிஸ்துவின் உப‌தேச‌த்தில்)ந‌ட‌க்கும் ஒருவ‌ன் இயேசு கிறிஸ்துவை போல் ம‌று ரூப‌மாவ‌து தான் விரும்புவான் என்று நான் ந‌ம்புகிறேன் (அப்ப‌டி ந‌ட‌க்காத‌வ‌ர்க‌ளே ப‌ர‌லோக‌த்தில் ப‌ல‌ ட்ரிப் அடித்து வ‌ந்திருக்கிறார்க‌ளே!). இப்ப‌டி ம‌றுரூப‌மாகும் கூட்ட‌த்தை த‌விற‌ இந்த‌ பூமியில் உயிர்த்தெழும் ஒரு கூட்ட‌ம் இருக்கிற‌து. ப‌ர‌லோக‌ம் போகாத‌வ‌ர்க‌ள் எல்லாரும் ந‌ர‌க‌ம் (!!) போவார்க‌ள் என்று ப‌ல‌ர் ந‌ற்செய்தி (!) சொல்லி வ‌ருகிறார்க‌ளே, அப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌ம் ஒரு கேள்வி, ப‌ர‌லோக‌மும் ந‌ர‌க‌மும் ம‌க்க‌ள் போய் விட்டால், இந்த‌ பூமியில் இயேசு கிறிஸ்து யாரை தான் ஆளுகை செய்வார்?

நான் வேத‌த்தில் இருந்து க‌ற்றுக்கொண்ட‌வை:

1. ஒரு கூட்ட‌ம் ப‌ர‌லோக‌ம் செல்லும்
2.  ப‌ழைய ஏற்பாடு நீதிமான்க‌ள் உட்ப‌ட‌, மீத‌மான‌ அனைவ‌ரும், இந்த‌ பூமியில் உயிர்த்தெழுவார்க‌ள் (கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌த்தினால்)
3.  பூமியில் உயிர்த்தெழும் ஒவ்வொரு ம‌னித‌னும், வாழும் அதிகார‌த்தை பெறுவான்.

ம‌ற்ற‌ப்ப‌டி, இன்று சுவிசேஷ‌ம் சொல்லுகிற‌வ‌ர்க‌ள், த‌ங்க‌ள் தெருவில் இருக்கும் ப‌க்க‌த்து வீட்டுக்கார‌ரிட‌ம் கூட‌ இயேசு கிறிஸ்துவை ப‌ற்றி சொல்லியிருக்க‌ மாட்டார்க‌ள். "சுவிசேஷ‌ம் சொல்லுவ‌து ப‌வுல் மேல் விழுந்த‌ க‌ட‌மையாக‌ இருந்த‌து" அவ‌ன் அத‌ற்காக‌ அழைக்க‌ப்ப‌ட்டிருந்தான். உங்க‌ளுக்கோ என‌க்கோ, சாட்சியாக‌ வாழ‌வே அழைப்பு. அதை ஒழுங்காக‌ செய்ய‌ முய‌ற்சிப்போம்.


எந்த‌ ஒரு தீமை செய்ய‌ சொல்ல‌வோ, அதை ஆத‌ரிப்ப‌தோ, நான் சொல்ல‌வில்லை. இது எல்லாம் ந‌ட‌ந்தே ஆக‌ வேண்டும். க‌ட‌ந்த‌ 2000 வ‌ருட‌ங்க‌ளாக‌ சுவிசேஷ‌ம் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து. பிதா ஒருவ‌னை இழுத்துக்கொண்டால் அவ‌ன் இயேசு கிறிஸ்துவினிட‌த்திற்கு வ‌ருகிறான், கேட்ப‌வ‌ர்க‌ள் எல்லோரும் இல்லை. அவ‌ர்க‌ளுக்கு பின் ப‌ற்ற‌ ஒரு கால‌ம் உண்டு. இந்த‌ தீமைக‌ள் எல்லாம் ஒழிந்து இந்த‌ பூமி முந்திய‌ சிருக்கு திரும்பும் நாட்க‌ள் வ‌ர‌விருக்கிற‌து. நிச்ச‌ய‌மாக‌ உங்க‌ள் கேள்விக‌ளுக்கு ஆதார‌த்துட‌ன் ப‌தில் கிடைக்கும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

எல்லோரும் பூரணப்படுவார்கள் என விசுவாசிக்கும் சகோதரரே! பின்வரும் வசனங்களில் கூறப்பட்டுள்ளோர் யார் எனக் கூறுவீர்களா?

மத்தேயு 25:41 அந்தப்படி, இவர்கள் (இயேசுவின் சகோதரரான சிறியோர்களின் தேவைகளைச் சந்திக்காதவர்கள்) நித்திய ஆக்கினையை அடையப் போவார்கள் என்றார்.

வெளி. 20:15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலில் தள்ளப்பட்டான்.

எல்லோரும் பூரணப்படுவார்கள் என விசுவாசிக்கும் சகோதரரே! இவ்வுலகில் தேவகற்பனைகளின்படி நடக்க முயலாதவர்களும், கிறிஸ்துவின் ஆட்சி காலத்தில் பூரணப்பட்டு நித்திய ஜீவனை அடைவார்கள் என்கிறீர்களா? அவ்வாறெனில் தேவகற்பனைகளின்படி நடப்பதற்கு (இவ்வுலகில்) நாம் அதிக சிரத்தைகொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்கிறீர்களா?

அதாவது, இவ்வுலகில் கொலை, களவு, பொய், விபசாரம் மற்றும் எல்லா அநீதிகளையும் தைரியமாகச் செய்யலாம் என்கிறீர்களா? யாருக்கும் நன்மை செய்ய வேண்டியதில்லை என்கிறீர்களா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//"சுவிசேஷ‌ம் சொல்லுவ‌து ப‌வுல் மேல் விழுந்த‌ க‌ட‌மையாக‌ இருந்த‌து" அவ‌ன் அத‌ற்காக‌ அழைக்க‌ப்ப‌ட்டிருந்தான். உங்க‌ளுக்கோ என‌க்கோ, சாட்சியாக‌ வாழ‌வே அழைப்பு. அதை ஒழுங்காக‌ செய்ய‌ முய‌ற்சிப்போம்.//

யாக்கோபு 5:19,20 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ம‌ர‌ண‌ம‌டைந்த‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள், கிறிஸ்துவின் அர‌சாட்சி கால‌த்தில், அவ‌ன‌வ‌ன் த‌ன்த‌ன் வ‌ரிசையிலே உயிர்ப்பிக்க‌ப்ப‌ட்டு, அவ‌ர் த‌ம்முடைய‌ ம‌ர‌ண‌த்தினால் ச‌ம்பாதித்த‌ நித்திய‌ ஜீவ‌னைய‌டைய‌ வ‌ழி ந‌ட‌த்த‌ப்ப‌ட்டு, பூர‌ண‌ப்ப‌டுவார்க‌ள்.//

1 யோவான் 3:14,15 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு57 எழுதுகிறார்:
"அதாவது, இவ்வுலகில் கொலை, களவு, பொய், விபசாரம் மற்றும் எல்லா அநீதிகளையும் தைரியமாகச் செய்யலாம் என்கிறீர்களா? யாருக்கும் நன்மை செய்ய வேண்டியதில்லை என்கிறீர்களா?"

இதை எல்லாம் தைரியமாகச் செய்ய‌லாம் என்று நான் ஒரு போதும் சொல்லவில்லை. நான் சொல்லாத ஒன்றை நான் சொன்னதாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே! என்ன நியாயம்?ஆனால் நான் சொல்லாமால் இருப்பதாலோ, நீங்கள் சொல்லிக்கொண்டிருப்பதாலோ, இவை எல்லாம் இல்லை என்று ஆகி விடாது சகோதரரே!

நன்மை செய்வதில் கிறிஸ்தவர்கள் என்று ஏன் பிரிக்க வேண்டும். கிறிஸ்துவை அறியாதவர்களும் கள்ள கிறிஸ்தவர்களை காட்டிலும் நல்லது செய்கிறார்களே. கிறிஸ்துவை அறிந்து தீமை செய்கிறவர்களும், கிறிஸ்துவை அறியாமல் நன்மை செய்கிறவர்களும் இருக்கிறார்களே! இதற்கு எல்லாம் என்ன காரணம்?

"எல்லோரும் பூரணப்படுவார்கள் என விசுவாசிக்கும் சகோதரரே!"

இது எனக்கு வேதம் தரும் விசுவாசம் தான் சகோதரரே! ஏன் அனைவரும் பூரணப்படவேண்டும் என்று நினைக்கிறீர்களோ?

"யாக்கோபு 5:19,20 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்."

இது யாக்கோபு சபைக்குள் இருப்பவர்களுக்காக சொன்னது. உலகத்தாருக்காக அல்ல‌.

"1 யோவான் 3:14,15 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்."

சகோதரரே, இன்று கிறிஸ்தவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒரு உயிர்த்தெழுதல், அதுவும் நேராக பரலோகம் போகும் உயிர்த்தெழுதல். மிச்சமான எல்லோரும் அவர்களின் பாஸ்டர்மார்கள் அல்லது பெரும் கூட்டத்தை கூட்ட கூடிய போதகர்கள் பிரசங்கிப்பது போல் நரகத்திற்கு போகும்படியான ஒரு உயிர்த்தெழுதல்.

ஆனால் வேதம் இரண்டு விதமான உயிர்த்தெழுதலை சொல்லுகிறது. ஒன்று கிறிஸ்துவை போல் சாவமையை தரித்துக்கொள்ள போகும் கூட்டம் (வானத்துக்குறிய மேனிகள் 1 கொரி 15:40; 1 யோவான் 3:2) ம‌ற்றோன்று பூமியில் உயிர்த்தெழுந்து நீதியை கற்று கொண்டு நித்திய‌ ஜீவ‌னை பெறும் கூட்ட‌ம் (பூமிக்குறிய‌ மேனிக‌ள் 1 கொரி. 15:40).

இன்று உல‌க‌த்திலேயே அன்பு இல்லாத‌வ‌ர்க‌ள் யார் என்றால் பிர‌ப‌ல‌ ஊழிய‌ர்க‌ளும் பெரும்பாளுமான‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்றே நினைக்கிறேன் ஏனென்றால், தேவ‌ன் எல்லோரும் இர‌ட்சிக்க‌ப்ப‌ட்டு ச‌த்திய‌த்தை அறிகிற‌ அறிவை அடைய‌ வேண்டும் என்று சித்த‌ம் கொண்டிருந்தாலும், இவ‌ர்க‌ள் என்ன‌மோ எல்லா வித‌த்திலும் த‌ங்க‌ளையே நீதிமான்க‌ள் என்று நினைத்து, தாங்க‌ள் பாவ‌மே இல்லாம‌ல் இருப்ப‌வ‌ர்க‌ள் போல் பாவித்து (ந‌டித்து), அது எப்ப‌டி முடியும், அவ‌ர்க‌ள் எல்லாம் ந‌ர‌க‌த்திற்கு தான் போவார்க‌ள் என்று தேவ‌தூஷ‌ன‌ம் செய்கிறார்க‌ள் (தேவ‌ சித்த‌ம் நிறைவேற‌ கூடா‌து என்று சொல்லுவ‌து தேவ‌ தூஷ‌ன‌ம் தானே)!

இன்றைக்கு கிறிஸ்த‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளையே நீதீமான்க‌ள் என்றும், ப‌ரிசுத்த‌வான்க‌ள் என்றும் நினைத்து பெருமை பாராட்டுகிறார்க‌ள்: "ந‌ம‌க்குப் பாவ‌மில்லையென்போமானால், ந‌ம்மை நாமே வ‌ஞ்சிக்கிற‌வ‌ர்க‌ளாயிருப்போம், ச‌த்திய‌ம் ந‌ம்மில் இராது" 1 யோவான்1:8 என்ப‌தேல்லாம் அவ‌ர்க‌ள் வாசித்த‌தே இல்லை போல். ஆக‌வே பிற‌ரை குற்ற‌வாளிக‌ள் என்றும் நாம் ஏதோ ப‌ரிசுத்த‌வான்க‌ள் என்கிற‌ நினைப்பே த‌வ‌றான‌து. ப‌வுலை போல், "பாவிக‌ளில் பிர‌தான‌ பாவி நான்" என்று சொல்லும் துனிச்ச‌ல் ஒரு ஊழிய‌க்கார‌னுக்கும் இன்று கிடையாது.

மன்னிக்க‌னும் ஊழிய‌க்கார‌ன் என்று ஒருமையில் எழுதியிருக்கிறேன், ஏனென்றால் இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் பொய்யையும், தீமையும் போதிப்ப‌வ‌ர்க‌ள் தானே. அன்பு அற்ற‌வ‌ர்க‌ள், தேவ‌னின் அன்பை எடுத்து சொல்ல‌ த‌குதிய‌ற்ற‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். வாயை திற‌ந்தாலே இவ‌ர்க‌ள் த‌ங்க‌ளை ப‌ரிசுத்த‌வான் என்றும், ம‌ற்ற‌வ‌ர்க‌ளை பாவிக‌ள் என்றும், த‌ங்க‌ளின் செய‌ல்க‌ளை ப‌ரிசுத்த‌ம் என்றும், பிற‌ர் செய‌ல்க‌ளில் பாவ‌த்தை கான்கிற‌ இவ‌ர்க‌ள் தங்க‌ளை ஊழிய‌ர்க‌ள் என்று சொல்லிக்கொள்வ‌தில் ச‌ற்றும் பொருத்த‌ம் இல்லை. பிற‌ர் ப‌ன‌த்தை வாங்கி ச‌ப்பிட்டு, அவ‌ர்க‌ளையே பாவிக‌ள் என்று கூறுப‌வ‌ர்க‌ள். அன்பு அற்ற‌வ‌ர்க‌ள், தேவ‌ன் நினைத்த‌தை த‌டுப்ப‌வ‌ர்க‌ள் இவ‌ர்க‌ள். (ரோம்2:1).

ம‌னித‌ ஞான‌மும் புத்தியும் சின்ன‌தே, ஆக‌வே ம‌னித‌ர்க‌ள் இப்ப‌டி தான் அனைவ‌ரும் இர‌ட்சிக்க‌ப்ப‌டுவ‌தில் ச‌ங்க‌ட‌ப்ப‌டுவார்க‌ள், ஆனால் தேவ‌னின் நினைவு ம‌னித‌ர்க‌ளின் நினைவு போல் கீழ்த‌ர‌மான‌து அல்ல‌. அது வான‌த்துக்கு ச‌ம‌மாக‌ உய‌ர்ந்த‌து.

இயேசு கிறிஸ்து ஒவ்வொரு மனுஷனுக்காகவும் மரணத்தை ருசி பார்த்தார் (எபி 2:9) என்றால், என்ன அர்த்தம்? நீங்கள் சொல்லும் சுவிசேஷத்தை பார்த்தால், அவர் ஒவ்வொரு மனுஷருக்காகவும் அல்லாமல், குறிப்பிட்ட சிலருக்கென்று மரணத்தை ருசி பார்த்தர் என்று வேதத்தை புறட்டுவது போல் இருக்கிறதே.

தேவ‌ன் சொல்லும் ந‌ல்ல‌ வார்த்தைக‌ளை விசுவ‌சிக்க‌ தோன்ற‌வில்லையா உங்க‌ளுக்கு, அதை ஏன் ந‌ட‌க்காது என்று நினைக்கிறீர்க‌ள். உங்க‌ள் நினைவுக‌ள் தேவனின் நினைவுக‌ளை காட்டிலும் உய‌ர்ந்த‌வைக‌ளா? அவ‌ர் எல்லோரும் இர‌ட்சிக்க‌ப்ப‌டுவ‌தில் ச‌ந்தோஷ‌ம் கொள்கிறார் (1தீமோ 2:4,5,6), ஆனால்  உங்கள் வாதத்திலிருந்து நீங்க‌ளோ வ‌ருத்த‌ம் கொள்வீர்க‌ள் போல் இருக்கிற‌தே.

நான் தேவ‌ன் சொன்ன‌தை அப்ப‌டியே ஏற்றுக்கொள்கிறேன். என்னை அவ‌ர் அவ‌ரை அறிய‌ செய்திருக்கிறார் என்றால், அவ‌ர் எல்லோரையும் அவ‌ரை அறிய‌ செய்வார் என்ப‌து வேத‌ ச‌த்திய‌ம் என்ப‌தில் என‌க்கு ஒரு துளி அள‌வு கூட‌ ச‌ந்தேக‌ம் கிடையாடது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Member

Status: Offline
Posts: 9
Date:

யோவான் 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

1. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாமல் மரிக்கும் ஒருவரின் மரணத்திற்கு பின் என்ன நிகழ்கிறது?


__________________


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

இது தங்களின் விசுவாச அறிக்கையா சகோதரா?

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"தங்களின்" என்று யாரை கேட்கிறீர்கள்!! இந்த திரியில் 4 நண்பர்கள் (உங்களையும் சேத்து) பதிவு தந்திருக்கிறார்களே!! உங்களின் கேள்வி என்னை நோக்கி என்றால் நான் என் விசுவாசத்தை குறித்தே எழுதியிருக்கிறேன்!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 80
Date:

நானும் இந்த விசுவாசத்தை சார்ந்தவன் தான், ஆனால் வேதாகம மாணவர், எஹோவாவின் சாட்சியோ அல்ல!!!!!!

__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...


Senior Member

Status: Offline
Posts: 125
Date:

 'kovaibereans'  தளநிர்வாகிகளுக்கும், வேதமானாக்கர் விசுவாச பிரிவை சேர்ந்தவர்களுக்கும் நம்முடைய ஒரே தேவனாகிய யெகோவா நாமத்தினாலும், அவரின் ஒரே மகனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்துக் கூடாக உங்களுக்கு அன்பையும், வாழ்த்துதல்களையும் சொல்லி  என்னை இந்த தளத்துக்கு அறிமுகம் செய்கிறேன்.
அத்துடன் நான் வேதமாணாக்கர் என்ற விசுவாச பிரிவை மட்டுமே சேர்ந்தவன். உண்மையாகவும், நிட்சயமாகவும் ''யெகோவாவின் சாட்சியே'' சேர்ந்தவன் அல்ல. அத்துடன்  இந்த தளத்தை எனக்கு அறிமுகப்படுத்திய தேநீர்பூக்கள் என்ற எம்  நலம் விரும்பிக்கும் நன்றிகள் ...........


-- Edited by Dino on Saturday 5th of March 2011 03:59:32 AM

__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது.
- நெப்போலியன் (
தமிழ் கிறிஸ்தவ சபை )
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard