"ஆவியில் விழுவது" (slain in spirit) என்று வேதத்திற்கு விரோதமான ஒரு செயல் இந்த நாட்களில் நாம் அதிக அளவில் பார்க்க முடிகிறது. அமேரிக்காவில் இருக்கும் பென்னி ஹின் தொடங்கி இந்தியாவின் பென்னி ஹினான ஆந்திரா ஊழியக்காரர் வரை இதை மேடைக்கு மேடை செய்து வருகிறார்கள். இப்படி நடப்பது சரியா?
என் சொந்த அனுபவத்தில் நான் பல முறை இது போன்ற ஊழியர்கள் முன் நின்றிருக்கிறேன், ஆனால் ஒரு முறை கூட கீழெ விழுந்ததில்லை. அவர்களும் என்னை விழவைக்க முடிந்த அளவு பிரயாசப்பட்டு பார்த்து கடைசியில் தோற்று போய் விட்டு விடுகிறார்கள். சரி போகட்டும், இது என் சொந்த அனுபவம். சொந்த சரக்கு இங்கு தேவை இல்லை.
பிறகு எப்படி & ஏன் விசுவாசிகள் (!?) கீழே விழுகிறார்கள்? வேதத்தின் படி ஆவி வரும் போது பெலன் கொண்டு (அப். 1:8) காலூன்றி நிற்க தான் முடியுமே தவிர, கீழே விழுந்ததாக ஒரு இடத்திலும் இல்லையே. பிறகு எப்படி? அதுவும் ஒரு சில இடங்களில் முகங்குப்புற விழுந்ததாக போட்டிருக்கிறது, ஆனால் முதுகு கீழேப்படும் படி யாரும் விழுந்ததாக வேதத்திலில்லையே? பிறகு எப்படி?
கீழே விழுவதற்கான காரணங்கள்:
1. உணர்ச்சிவசப்படுதல் (Falling down not controlling the emotions) நாம் வெகு நாளாக கிட்டே இருந்து பார்க்க, தொட்டு பார்க்க நினைத்த ஒரு ஊழியரை இவ்வுளவு அருகில் இருந்து பார்ப்பது ஒரு உணர்ச்சியை தூண்டுகிறது, அதை கட்டு படுத்த முடியாததால் கீழே விழுந்து விட வாய்ப்புகள் இருக்கிரது.
2. நான் கீழே வீழாவிட்டால் என்னை குறித்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்கிற க்வலையில் கீழே விழுவது.
3. சில ஊழியர்கள் பிடித்து தள்ளி விடுதல், நெற்றியில் ஒரு குறிப்பிட இடத்தில் கையை வைத்து அழுத்தினால் கிழே விழுந்து விடும் வாய்ப்பு இருக்கிறது.
4. எல்லாவற்றுக்கும் மேல் பரிசுத்த ஆவியில் அல்ல பயத்தின் ஆவியில் கீழே விழுவது.
இன்னும் அநேக காரணங்கள் இருக்கிறது. எது எப்படியோ, இது நடப்பது பரிசுத்த ஆவியினால் அல்ல என்பதை தெளிவு படுத்த மாத்திரம் இந்த பதிவு. இதை குறித்து நீங்களும் கருத்துக்களை தெரிவிக்கலாமே!!
இந்தக் கண்றாவிகளை எல்லாம் எந்தக் கேள்வியுமின்றி பயபக்தியுடன் ஏற்றுக்கொள்ளும் முட்டாள் கிறிஸ்தவத்தை என்ன சொல்லி என்ன பயன். "அந்நாட்களில் அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள்" என்ற தீர்க்கதரிசனம் நிறைவேறுகிறது. அவ்வளவே. இந்தக் காமெடியைத்தான் பாருங்களேன்!