"ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக் கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்" மத். 24:5
இது இயேசு கிறிஸ்து தன் சீஷர்களிடத்தில் தன்னுடைய வருகை (பரோஷியா) மற்றும் கடைசி காலத்தில் நிகழுவுகளை குறித்து சொன்னவை. நானே இயேசு என்று உபயோகிக்காமல் "நானே கிறிஸ்து" என்று சொல்லி அநேகரை வஞ்சிப்பார்கள் என்கிறார். ஆம், பிரியமானவர்களே, இந்த நாட்களில் பெருகி வரும் ஊழியக்காரர்கள் என்று சொல்லுபவர்களின் கூட்டம் பெறுகி கொண்டு வருவதை நம்மால் காண முடிகிறது. இவர்கள் சொல்லுவது, இவர்கள் அபிஷேகம் பன்னப்பட்டவர்கள் என்று, கிறிஸ்து என்றால் அபிஷேகம் பன்னப்பட்டவர் என்று அர்த்தம். இப்படி ஒரு கூட்டம், என் கர்ச்சிப்பில் அபிஷேகம் உண்டு, நான் குடுக்கும் என்னையில் அபிஷேகம் உண்டு, என் புத்தகங்களில் அபிஷேகம் உண்டு போன்றவைகளும், அபீஷேகத்தை தருகிறோம், அபிஷேக கூட்டங்கள், அபிஷேக மைய்யங்கள் நடப்பது நமக்கு தெரிந்ததே.
இயேசு கிறிஸ்து இந்த வசனத்தின் மூலமாக நம்மை எச்சரிப்பதை விளங்குகிறதா! இப்படி நாங்கள் அபிஷேகம் பெற்ற ஊழியர்கள் என்று சொல்லி வஞ்சிக்கும் கூட்டத்தை தயவு செய்து நம்பாதீர்கள்.
//"ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தை தரித்துக் கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்" மத். 24:5
இயேசு கிறிஸ்து இந்த வசனத்தின் மூலமாக நம்மை எச்சரிப்பதை விளங்குகிறதா! இப்படி நாங்கள் அபிஷேகம் பெற்ற ஊழியர்கள் என்று சொல்லி வஞ்சிக்கும் கூட்டத்தை தயவு செய்து நம்பாதீர்கள்.//
வஞ்சிக்கிற கூட்டத்தை நாம் நம்பாவிட்டால், இயேசுவின் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறும்? இயேசு சொன்னபடி, அதாவது தேவசித்தப்படி எல்லாம் சரியாக நடந்து வருகிறது. நீங்கள் ஏன் இடையில் புகுந்து, இதை நம்பாதீர்கள், அதை நம்பாதீர்கள் என்கிறீர்கள்? நீங்கள் சொல்வதை எல்லோரும் கேட்டுவிட்டால், இயேசுவின் தீர்க்கதரிசனம் பொய்யாகிப் போகுமே! அது மட்டுமல்ல, பவுலின் இவ்வசனமும் பொய்த்துப் போகுமே!
2 தெச. 2:11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
தேவன் தான் கொடிய வஞ்சகத்தை அனுப்பியுள்ளார்; அதனால்தான் எல்லோரும் வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். ஆக, தேவசித்தம் செவ்வனே நடந்து வருகிறது. நீங்கள் மட்டும் எப்படி தேவசித்தத்திற்கு மாறாக வஞ்சிக்கப்படாமல் இருக்கிறீர்களோ என்பது தெரியவில்லை. அந்த இரகசியத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!
ஏதோ மேதாவித்தனமாக கேள்விகேட்பதாக நினைத்துக்கொண்டு தங்கள் அறிவுக்கூர்மையை பிரபலப்படுத்த வேண்டாம்.
வெளி18:1. இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; இவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று.
2. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.
3. அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான்.
4. பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.
இந்த சுயநீதி வேசித்தன உபதேசங்களிலிருந்து வெளியேறும் ஒரு திறத்தாரை இது குறிக்கிறது. அந்த "வேறொரு" சத்தத்தைக் கேட்டுத்தான் நாங்கள் நியாயப்பிரமாண, வேசித்தன, சுயநீதிப்போதகக் கூட்டத்திலிருந்து வெளியேறினோம். இந்த 'அழைப்பும்' எல்லாருக்கும் புரிய வாய்ப்பில்லை. வஞ்சக ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருந்தால் இதுபோல கிண்டலும் கேலியும்தான் செய்துகொண்டிருப்பார்கள். அது பற்றியும் எங்களுக்குக் கவலையில்லை. அதற்கென்றே தேவனால் நியமிக்கப்பட்டிருந்தால் ஆண்டாண்டு காலமாக வேதத்தைக் கையில் வைத்திருந்தாலும் சத்தியம் அவர்களை விடுதலையாக்காது. கடைசிவரை
ஒரு சில வசனங்களைமட்டும் பிடித்துக்கொண்டு பிறரை நியாயம் தீர்த்துக்கொண்டு இருக்க வேண்டியதுதான்...