இறைக்கு "கள்ளப்போதகம்" என்று ஒட்டு மொத்த கிறிஸ்தவ மண்டலத்தால் "விலக்கி" வைக்கப்பட்டுள்ள பிரிவுதான் இந்த யேகோவா சாட்சிகள். மற்ற பிரிவினரைவிட குறிப்பாக பெந்தேகோஸ்தே பிரிவினரைவிட அனேகவிதங்களில் வேதத்தில் தெளிவாக இருக்கும் கூட்டம்தான் இவர்கள். தேவனுடைய ராஜ்ஜியம் பூமியில்தான் என்று போதிக்கும் இவர்கள் ஆனால் அந்த பூமிக்குரிய ராஜ்ஜியத்தில் எல்லோரும் பங்கடைய மாட்டார்கள் என்று வேதத்துக்கு மாறாக போதிக்கின்றனர்.
இவர்கள் செய்யும் மாபெரும் தவறு நம்முடைய கர்த்தரும், ஆண்டவரும், இரட்சகரும், மீட்பரும், பிதாவினால் சகல அதிகாரத்துக்கும் அதிகாரியானவரும், ராஜாவுமான இயேசுகிறிஸ்துவுக்கு செலுத்தவேண்டிய மகிமையை செலுத்தாததுதான்.
இன்னொரு ஏற்றுக்கொள்ள முடியாத உபதேசம் எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் இல்லை என்பது. ஒருமுறை மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது, பிரேதக்குழியிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும்,,, போன்ற வசனங்கள் இவர்களைப் பொறுத்தமட்டில் பொய். மேலும் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர்தான் நியாயத்தீர்ப்பு என்று இவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவர்கள் ஸ்தாபனம் ஆரம்பிக்கப்பட்டதே கி.பி.1930களில்தான். அதுவும் வேறொரு ஸ்தாபனத்திலிருந்து அநியாயமாய் அபகரிக்கப்பட்ட 'WATCH TOWER BIBLE AND TRACT SOCIETY' என்ற அச்சகத்தை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த 'யெகோவா சாட்சிகள்'.
-- Edited by soulsolution on Friday 11th of December 2009 08:27:37 AM
"யேகோவா சாட்சிகள்" cult என்று பெரும்பாளுமான கிறிஸ்தவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் எப்படி அந்த வரிசையில் வருகிறார்கள் என்றால் தெரியாது.
இதை குறித்து இன்னும் அதிகமாக எழுதினால் நலமாக இருக்கும். நன்றி.
//தேவனுடைய ராஜ்ஜியம் பூமியில்தான் என்று போதிக்கும் இவர்கள், ஆனால் அந்த பூமிக்குரிய ராஜ்ஜியத்தில் எல்லோரும் பங்கடைய மாட்டார்கள் என்று வேதத்துக்கு மாறாக போதிக்கின்றனர்.//
இவ்விஷயத்தில் நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் என்பதை சற்று தெளிவாகக் கூறுங்கள் சகோதரரே!
இவ்வுலகில் பிறந்த அத்தனைபேரும் பூமிக்குரிய ராஜ்ஜியத்தில் பங்கடைவார்கள் என்கிறீர்களா?
அவ்வாறெனில், வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் 2 வெள்ளாடுகள் (அநீதிமான்கள்) நித்திய அழிவுக்குச் செல்வார்கள் என ஏற்றுக்கொள்வதாக மற்றொரு பகுதியில் கூறியிருந்தீர்களே, அதன் அர்த்தம் என்ன?
அப்படியல்ல சகோதரரே, எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்பதில் இவர்களுக்கு உடன்பாடு கிடையாது, குறிப்பிட்ட வகையினர்தான் உயிர்த்தெழுவார்கள் என்பது இவர்கள் வாதம். உயிர்த்தெழுதலுக்குப் பின்னரே 'உலகத்துக்கு' நியாயத்தீர்ப்பு என்பதை இவர்கள் ஏற்பதில்லை.
//எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என்பதில் இவர்களுக்கு உடன்பாடு கிடையாது, குறிப்பிட்ட வகையினர்தான் உயிர்த்தெழுவார்கள் என்பது இவர்கள் வாதம்.//
அந்தக் குறிப்பிட்ட வகையினர் யாரென அவர்கள் சொல்கிறார்களென்பதைக் குறிப்பிட்டுக் கூறமுடியுமா? (எனக்கு யேகோவா சாட்சியினரின் கொள்கைகள் முழுமையாகத் தெரியாதென்பதால் இதைக் கேட்கிறேன்)
இவர்களுடைய இன்னொரு அபத்தம் இப்போதிருக்கும் யூதர்கள் யூதர்களே அல்ல என்பதுதான். சத்தியத்துக்கு செவியை விலக்க கட்டுக்கதைகளுக்கு செவிசாய்க்கும் இவர்கள் நம்பிக்கை இதுதான்.
அப்போஸ்தலர் முதற்கொண்டு 144,000 (சீனியர் யெகோவா சாட்சிகள் அடக்கம்) பேர் மட்டும் மணவாட்டி சபையாக பரலோகவாசிகள் ஆவார்கள். தற்போது (House Full)
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பூமியில் உயிர்த்தெழுவார்கள்.
ஆதாம் முதற்கொண்டு கிறிஸ்துவுக்கு முன் மரித்த மற்ற யாருமே உயிர்த்தெழமாட்டார்கள்.
எகோவா சாட்சிகள் கட்டாயம் உயிர்த்தெழுவார்கள்.
எகோவா சாட்சிகளால் அவர்கள் 'உபதேசம்' அறிவிக்கப்பட்டு அதை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை.
www.food4jws.com தளத்தில் விலாவாரியாக யெகோவா சாட்சிகளின் விவரங்கள் ஆதாரத்துடன் உள்ளது. J Franklin Rutherford என்பவர் எப்படி Fraud தனம் செய்து WATCHTOWER BIBLE AND TRACT SOCIETY யை அபகரித்தார் என்று தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அன்று தொடங்கப்பட்ட இன்னொரு பாபிலோன் வேசியின் குமாரி இன்று பெரிய அமைப்பாக உருவெடுத்து ஜனங்களை தங்களுடைய நூதனப் போதனைகள்மூலம் மோம்போக்கிக்கொண்டுள்ளது.
எப்படி மற்ற வேதாகமங்கள் அவர்களது சொந்த உபதேசங்களுக்கு இசைவாக மொழிபெயர்க்கப்பட்டனவோ அதே போல இவர்களும் தங்களுக்கென்று சொந்த வேதாகமம் வைத்துள்ளனர். புதிய ஏற்பாட்டிலும் மூல கிரேக்க மொழிபெயர்ப்பில் இல்லாத யெகோவா பெயரை 237 முறை சேர்த்துள்ளனர். சார்லஸ் டேஸ் ரஸ்ஸல்தான் இவர்கள் அமைப்பின் நிறுவனர் என்று நம்பவைகும் இவர்கள் அவர் போதித்த போதனைகளுக்கு நேர்மாறாக போதிக்கின்றனர். எவ்வாறு ரோமன் கத்தோலிக்க சபையில் எல்லாம் போப்புக்குக் கீழ்ப்படிகிறார்களோ அதேபோல்தான் இவர்கள் தலைமைக்குக் கீழ்ப்படிய வேண்டும்.
மேலும் ரஸ்ஸல் அவர்கள் எழுதிய Studies From the Scriptures என்ற வேதபாடங்களைப் படிக்க யெகோவா சாட்சிகளுக்குத் தடையே விதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவுக்கும் ஆராதனை செய்யலாம் என்று வசனங்கள் இருக்கும்போது அதை முற்றிலும் மறுப்பவர்கள் இவர்கள். இவர்கள் செய்யும் அபத்தங்கள் சொல்லி மாளாது. இரத்தம் கொடுக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ கூடாது என்றும் மீறுபவர்கள் உயிர்த்தெழும் வாய்ப்பை இழந்து விடுவார்கள் என்று கண்டிப்பான கட்டளை. (ஆனால் கொசுவுக்கு மட்டும் இரத்த தானம் செய்வார்கள்)
இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பேன் என்ற தீர்க்கதரிசனம் கண்கூடாக நிறைவேறிவருவதை முட்டாள்தனமாக மறுக்கும் இவர்கள் இப்போதுள்ள இஸ்ரேல் இஸ்ரேலே அல்ல, யூதர்கள் யூதர்கள் அல்ல என்று பயித்தியக்காரத்தனமாக நம்புகின்றனர். மேலும் அர்மகெதான் ஒரு நேரடியான யுத்தம் என்றும் அதில் தேவன் யெகோவா சாட்சிகள்தவிர மற்றவர்களை அழிப்பார் என்றும் தப்பும் யெகோவா சாட்சிகள் மரணமடையாமலேயே இருப்பார்கள் என்றும் முழு நீளக்காமெடி செய்வார்கள்.
இவர்கள் போதிக்கும் இன்னொரு மகா தேவதூஷணம் சாத்தானை தேவனை எதிர்க்கும் ஒரு பெரிய வல்லவனாகக் காண்பிப்பதுதான். உலகில் நடக்கும் எந்த கெட்ட காரியமும், அழிவும் சாத்தானே நடத்துகிறான் என்றும் தேவனை ஒரு கையாலாகாதவராக வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவராக சித்தரிக்கின்றனர்.
இவர்கள் போய் 'சுவிசேஷம்' சொல்லி ஒருவர் ஏற்றுக்கொண்டு இவர்கள் சபையில் இணைந்து கொண்டால் அவர்களுக்கு உயித்தெழுதல் உண்டு அப்படி இல்லாதபட்சம் அவர்களுக்கு உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்லும் இவர்கள். அப்படி இதுவரை சந்திக்கப்படாதவர்கள் கதி என்ன என்று கேட்டால் அவர்களுக்கு உயிர்த்தெழுதல் உண்டு என்கிறார்கள்.
ரோமன் கத்தோலிக்க அமைப்பு எப்படி ரோமிலிருந்து எல்லா நாட்டு சபைகளையும் ஆட்டுவிக்கிறதோ அதேபோல நியூயார்க் பெத்தேலிலிருந்து இவர்கள் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். இவர்களது குறியும் அதிகம் வேதம் தெரியாத மற்ற கிறிஸ்தவ அமைப்புகளிலுள்ளவர்களே.
-- Edited by soulsolution on Tuesday 9th of February 2010 10:05:33 PM