kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசு சிலுவையில் மரித்தாரா?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
இயேசு சிலுவையில் மரித்தாரா?


இன்று காலை கோவையில் முக்கியமான சாலை வழியாக போய் கொண்டிருக்கும் போது, கண்களில் பாட்ட ஒரு போஸ்டரில், "இயேசு சிலுவையில் மரித்தாரா?" என்று முஸ்லிம் நண்பர்களின் பத்திரிக்கை ஒன்றில் கேட்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அச்சேறிய ஒரு தலைப்பாக போட்டிருந்தார்கள்.

இப்படி எல்லாம் விவாதிக்க யார் காரணம்? நம் கிறிஸ்தவ வேத பண்டிதர்களே தான் காரணம் என்பது என் கருத்து. ஏனென்றால், மரிக்க முடியாத பிதாவாகிய தேவன் தான் இயேசு கிறிஸ்து என்கிற "அவதாரத்தில்" (!?) வந்தார் என்று சற்றும் பிதாவையும், இயேசு கிறிஸ்துவையும் புரியாதவர்களின் தப்பிதமான கோட்பாடுகளை கண் மூடி தனமாக போதிப்பதின் விழைவு தான் அப்படி பட்ட விவாதங்கள்.

பிதா தான் இயேசு கிறிஸ்துவா? அல்லது இயேசு கிறிஸ்து தான் பிதாவா? கருத்துக்களை பதியுங்கள்!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//பிதா தான் இயேசு கிறிஸ்துவா? அல்லது இயேசு கிறிஸ்து தான் பிதாவா? கருத்துக்களை பதியுங்கள்!//

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயொழிய என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என இயேசு தெளிவாகக் கூறியதையே புறக்கணித்துவிட்டு இயேசுவை ஆராதிப்போம் வாருங்கள் என அழைக்கிற பாஸ்டர்கள் மற்றும் இயேசுவை ஆராதிக்கிற விசுவாசிகள் காதில் நாம் ஊதுகிற சங்கின் சத்தம் கேட்குமா?

கேட்காமல் போனாலும்,
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு எனும் வேத வசனத்தின்படி (எசேக்கியேல் 2:7), நாம் சொல்லுவதை சொல்லித்தான் பார்ப்போமே!

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

என்னை கண்டவன் பிதாவை கண்டான் போன்ற வசனங்களும் உண்டே!!

அப்படி என்றால் இயேசு கிறிஸ்து வேறு பிதா வேறு என்பது தான் உங்கள் விசுவாசமா?

திருத்துவத்தை நம்புகிறீர்களா? அல்லது தேவன் ஒருவர், அவரின் குமாரன கிறிஸ்து இயேசு மற்றொருவர் என்பதை நம்புகிறீர்களா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

anbu57 wrote:

bereans wrote:
//பிதா தான் இயேசு கிறிஸ்துவா? அல்லது இயேசு கிறிஸ்து தான் பிதாவா? கருத்துக்களை பதியுங்கள்!//

பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தப்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயொழிய என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்கிறவன் அதில் பிரவேசிப்பதில்லை என இயேசு தெளிவாகக் கூறியதையே புறக்கணித்துவிட்டு இயேசுவை ஆராதிப்போம் வாருங்கள் என அழைக்கிற பாஸ்டர்கள் மற்றும் இயேசுவை ஆராதிக்கிற விசுவாசிகள் காதில் நாம் ஊதுகிற சங்கின் சத்தம் கேட்குமா?

கேட்காமல் போனாலும்,
கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு எனும் வேத வசனத்தின்படி (எசேக்கியேல் 2:7), நாம் சொல்லுவதை சொல்லித்தான் பார்ப்போமே!




"நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்". என்றுதான் வேதத்தின் கடைசிவசனம் சொல்கிறது. மேலும் வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. "...உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.(யோவான்17:2) "பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை மகிமைப்படுத்தும்". யோவான் 17:5 போன்ற வசனங்கள் இயேசுகிறிஸ்துவும் மகிமைப்படுத்தப்படுவதை விவரிக்கின்றன.



தனது 'ஒரே பேறான குமாரன்' மகிமைப்படுத்தப்படுவதை எந்த தகப்பனும் தவறாக நினைக்க மாட்டார். எனவே பிதாவுக்கு நிகராக கிறிஸ்துவை வைக்கமுடியாதபோதும் அவருக்கு உரிய கனத்தை அவருக்கு தந்தே ஆகவேண்டும். ஒருவரும் காணக்கூடாதவராயிருக்கும் பிதாவாகிய தேவனின் 'தற்சொரூபமான' இயேசுகிறிஸ்துவை ஆராதிப்பதில் தவறில்லை. அது வேதத்துக்கு புறம்பானதுமல்ல.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//"...உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.(யோவான்17:2) "பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை மகிமைப்படுத்தும்". யோவான் 17:5 போன்ற வசனங்கள் இயேசுகிறிஸ்துவும் மகிமைப்படுத்தப்படுவதை விவரிக்கின்றன.
தனது 'ஒரே பேறான குமாரன்' மகிமைப்படுத்தப்படுவதை எந்த தகப்பனும் தவறாக நினைக்க மாட்டார். எனவே பிதாவுக்கு நிகராக கிறிஸ்துவை வைக்கமுடியாதபோதும் அவருக்கு உரிய கனத்தை அவருக்கு தந்தே ஆகவேண்டும். ஒருவரும் காணக்கூடாதவராயிருக்கும் பிதாவாகிய தேவனின் 'தற்சொரூபமான' இயேசுகிறிஸ்துவை ஆராதிப்பதில் தவறில்லை. அது வேதத்துக்கு புறம்பானதுமல்ல.//

தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யும்படி உபாகமம் 6:13; 1 சாமுவேல் 7:3,4 வசனங்கள் கூறுகின்றன. அவ்வசனங்களில் எழுதியுள்ளதை மத்தேயு 4:10-ல் இயேசுவும் எடுத்துரைக்கிறார். அப்படியிருக்க இயேசுவை ஆராதிப்பதில் தவறில்லை என எப்படிச் சொல்கிறீர்கள்? தம்மை மகிமைப்படுத்தும்படி பிதாவிடம் இயேசு கேட்டுக்கொண்டதால், இயேசுவை ஆராதிப்பதில் தவறில்லை என எப்படிக் கூறமுடியும்? மனுஷரால் நான் மகிமையை ஏற்றுக் கொள்கிறதில்லை என யோவான் 5:41-ல் இயேசு கூறியுள்ளாரே! மனுஷரால் மகிமையை ஏற்காதவர் மனுஷரால் ஆராதனையை ஏற்பாரா? தம்மை ஆராதனை செய்யும்படி இயேசு கூறியுள்ளாரா? அவரை ஆராதனை செய்யும்படி வேதாகம ஊழியர்கள் கூறினார்களா? வேதாகம ஊழியர்களில் யாராவது இயேசுவை ஆராதித்தார்களா?

அல்லது பிதாவும் இயேசுவும் ஒருவரே என்கிறீர்களா?

இயேசுவை ஆராதிப்பது வேதத்துக்குப் புறம்பானதல்ல என்பதை வசன ஆதாரத்துடன் கூறவும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"நம்மிடத்தில் அன்பு கூர்ந்து, தமது ரத்தத்தினாலே பாவ‌ங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும் என்றன்றைக்கும் உண்டாயிருப்பதாக ஆமென்". வெளி1:6

"அவர்களும் மகாசத்தமிட்டு; அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டுயானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்"

"அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும், மகிமையும் வல்லமையும் சதாக்காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன்." வெளி5:12,13





"அன்றியும் பிதாவை கனம் பண்ணுகிறது போல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்பு செய்யாமல், நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்"



"குமாரனை கனம் பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான்" யோவான்5:22,23.




"...கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்த்ரிக்கப்பட்டவர்...யோவான்12:13




இந்த வசனங்களுக்கு என்ன விளக்கம் தருவீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. "குமாரனை ஆராதிக்காதவன் அவரை அனுப்பின பிதாவையும் ஆராதிக்காதவனாயிருக்கிறான்" என்று இல்லையே என்று கேட்காமலிருந்தால் சரி.






மிகவும் எளிய விளக்கம் நம் நாட்டு 'தூதருக்கு' அயல்நாட்டில் செய்யப்படும் மரியாதை நம்முடைய 'பிரதமருக்கு' செய்யும் மரியாதையாகும்.





பிதாவும் இயேசுவும் ஒருவரே என்று வேதத்தை வாசிக்கும் ஒருவரும் சொல்ல வேதத்தில் இடமில்லை. அப்படி கிறிஸ்துவும் சொல்லவில்லை, அப்போஸ்தலரும் சொல்லவில்லை. கிறிஸ்து மரித்தாரே, தேவனால் மரிக்க முடியாதே?


-- Edited by soulsolution on Sunday 11th of October 2009 06:01:46 PM

-- Edited by soulsolution on Sunday 11th of October 2009 06:02:57 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

எனது கேள்வி, குமாரனை ஆராதிக்கும்படி வேதாகமம் கூறியுள்ளதா, அல்லது வேதாகம விசுவாசிகள்/ஊழியர்கள் அதைச் செய்துள்ளார்களா என்பதுதான். அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.

குமாரனை மகிமைப்படுத்த வேண்டாம் என்றோ, கனம் பண்ண வேண்டாம் என்றோ நான் சொல்லவில்லை.
தகப்பனையும் தாயையும் கனம் பண்ணு என்றுகூட வேதாகமம் சொல்லுகிறது. இதனால் அவர்களை ஆராதனை செய்யவேண்டும் என பொருள் கொள்ளமுடியுமா?

பிதாவைக் கனம்பண்ணுவதுபோல் குமாரனைக் கனம்பண்ணும்படி ... என வசனம் கூறுவதால் பிதாவை ஆராதிப்பதைப்போல் குமாரனையும் ஆராதனை செய்யவேண்டும் என எப்படி பொருள் கொள்ள முடியும்? ஆராதிப்பதும் கனம்பண்ணுவதும் ஒன்றா?

தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே ஆராதனை செய்யும்படி வசனம் தெளிவாகக் கூறியிருக்க, பிதா குமாரன் எனும் இருவரை எப்படி ஆராதனை செய்யலாம்?

மேலும், இயேசுவை ஆராதிக்கும்படி அழைப்பவர்களும் ஆராதிப்பவர்களும் இயேசுவை மட்டுந்தான் ஆராதிக்கிறார்களேயொழிய, பிதாவை ஆராதிப்பதில்லையே?

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு விஷயம்.
தேவனுக்குத்தான் ஆராதனை என வேதாகமம் கூறுகிறது. எனவே இயேசுவை ஆராதிப்பதால், இயேசுவும் தேவன் என்றாகிவிடுகிறது. இயேசுவை ஆராதிக்கிற அநேகர் அவரை தேவனாகப் பாவித்துதான் ஆராதிக்கின்றனர்.

பிதாவுக்கு உருவத்தைக் கொடுக்காத நாம், இயேசுவுக்கு ஒரு உருவத்தைக் கொடுத்து சிலையாகவும் படமாகவும் வடித்து வைத்துள்ளோம். எனவே இயேசுவை ஆராதிக்கிற பலர் அவரது படம்/சிலையையும் ஆராதிக்கின்றனர்.

சில மாதங்களுக்குமுன் பத்திரிகைகளில், கிறிஸ்தவ வழிபாட்டுச் சிலைகள் உடைப்பு என செய்திகூட வந்தது. இப்படி ஒரு செய்தியை உங்களால் ஜீரணிக்க முடிகிறதா, ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இக்கேள்விக்கு ஆம் என நீங்கள் பதில் கூறினால் உங்களிடம் விவாதித்துப் பயன் இல்லை.

இயேசுவை ஆராதிக்கிற அல்லது ஆராதிப்பதை ஊக்குவிக்கிற உங்களைப் போன்றோரின் செயலால், இவ்வுலக மக்கள் பின்வருமாறு கருதுகின்றனர்.

”இயேசுதான் கிறிஸ்தவர்களின் கடவுள், அல்லது கடவுளின் அவதாரம்; அவரது உருவம் இப்படிப்பட்டது. அவரது சிலையும் படமும் கிறிஸ்தவர்களின் வழிபாட்டுக்குரியவை. அச்சிலைகள் ஆராதனைக்குரியவை.”

இவ்வாறு கருதும் அவர்கள், வியாபார ஸ்தலங்களில் அரசாங்க அலுவலகங்களில் பிற கடவுள்களின் படங்களோடு இயேசுவின் படத்தையும் வைத்து, அதற்கு மாலையும் போட்டிருப்பதை நீங்கள் காணலாம். ஆக, 10 கற்பனைகளில் முதல் கற்பனைக்கு விரோதமாக ஜனங்கள் நடப்பதற்கு இயேசுவின் உருவமும் பயன்படுத்தப்படுகிறது.

ஜனங்களின் தவறான செயல்களைத் திருத்தி, சரியான பாதையைக் காட்டவேண்டிய நாம், அவர்களின் தவறான செயல்களை மேலும் ஊக்குவிக்கும்படியாக நடக்கிறோம்; அதாவது அவர்களுக்கு இடறலாகிவிடுகிறோம்.

இயேசுவை ஆராதிக்காவிடில் பிதாவோ இயேசுவோ யாரும் கோபிக்கப்போவதுமில்லை, வருத்தப்படப்போவதுமில்லை. ஏனெனில் இயேசுவை ஆராதிக்கும்படி வேதாகமத்தில் கட்டளை எதுவும் கொடுக்கப்படவில்லை.

ஆனால், இயேசுவை ஆராதிப்பதன்மூலம் ஜனங்களுக்கு இடறலாகும் நம்மீது பிதாவைவிட இயேசுதான் அதிகம் கோபிக்கப்போகிறார் என்பதை அறியுங்கள்.

பிதாவும் குமாரனும் தந்த எத்தனையோ கற்பனைகளைக் கைக்கொள்வதிலும் போதிப்பதிலும் தீவிரப்படாமல், பிதாவை ஆராதிப்பதா, குமாரனை ஆராதிப்பதா அல்லது இருவரையும் ஆராதிப்பதா என்கிற கேள்விகளுக்கு பதில் காண்பதிலில் நாம் பொழுதைப் போக்குகிறோம். இதனால்தான் கிறிஸ்தவத்தை அடையாளம் காட்டுகிற தன்மைகள் கொஞ்சங்கொஞ்சமாக அழிந்து வருகின்றன.

ஆம், கிறிஸ்தவர்களிடம் எவ்வளவு ஆடம்பரங்கள், பொன்னாபரணங்கள், விலையுயர்ந்த வஸ்திரங்கள், கோடிக்கணக்கான ஆஸ்திகள் etc. etc.

இதைச் சொன்னால், இவர்களெல்லாம் 1000 வருட அரசாட்சியில் திருத்தப்பட்டு நித்தியஜீவனைப் பெற்றுவிடுவார்கள், மத்தேயு 25:46-ல் சில வெள்ளாடுகள் (அநீதிமான்கள்) நித்திய ஆக்கினைக்குப் போவார்கள் என இயேசு தீர்க்கதரிசனமாகக் கூறியுள்ளதால், எனது தீவிரமான ஜெபத்தினால் 2 வெள்ளாடுகள் மட்டும் நித்திய ஆக்கினையை அடைவார்கள் (அதனாலென்ன, 2 பேர்தானே, போனால் போகிறது) எனக் கூறுவீர்கள்.

ஏமாந்து போகவேண்டாம் சகோதரரே!

-- Edited by anbu57 on Sunday 11th of October 2009 11:15:07 PM

-- Edited by anbu57 on Sunday 11th of October 2009 11:16:24 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

உலகத்தைத் திருத்துவது நமது நோக்கமல்ல. இயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவன் இல்லை ஆனாலு அவரும் ஒரு 'தேவன்' என்பதை நினைவில் கொள்க. இயேசு கிறிஸ்துவும் பிதாபோன்று மகிமை பொருந்தினவராய் சாவாமைக்கு உயர்த்தப்பட்டுள்ளார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளவர். அவரை ஆராதித்தாலும் பிதா கோபித்துக் கொள்ளப் போவதில்லை.







நீங்கள் ஏன் இந்த so called 'சபை'களைப்பற்றி கவலை கொள்ள வேண்டும். அதுதான் 'anti christ' எனப்படும் ஒரு அமைப்பாயிற்றே? அது அப்படித்தான் இருக்கும். 'அதிலிருந்து வெளியேறு' என்பதுதான் கட்டளை. அதைத் திருத்து என்றல்ல. அவர்கள் இயேசுதான் பிதா என்றெண்ணி ஆராதிக்கிறார்கள். 'பரிசுத்த ஆவி' இல்லாதவர்களுக்கு நாம் எப்படி விளக்க முடியும்.






நீங்கள் கிறிஸ்துவை 'ஆராதிக்க' வேண்டாம். கனம் பண்ணுங்கள், "சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும், மகிமையும் வல்லமையும் சதாக்காலங்களிலும் உண்டாவதாக" என்று சொல்லுங்கள். பிதாவை அவ்வாறு சொன்னால் அதுவே ஆராதனை, குமாரனை அப்படி சொன்னால் 'கனம்' என்று வைத்துக்கொள்ளுங்களேன்? "அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனக்கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா சமாதான பிரபு" என்ற கூற்றே ஒரு ஆராதனைதான். இரட்சிப்படைவதற்கு வானத்திலும் பூமியிலும் அவருடைய நாமமே அன்றி வேறு நாமம் இல்லை என்ற statement கூட என்னைப் பொறுத்தவரை ஆராதனைதான்.







ஜீவபலியாக நம்மை ஒப்புக்கொடுப்பதே 'புத்தியுள்ள ஆராதனை'. இப்படி வியாக்கியானம் செய்வதைவிட்டு அதை நாமும் செய்யலாம் மற்றவர்களையும் செய்ய வைக்கலாமே?






'இப்பிரபஞ்ஜத்தின் தேவனானவன் இந்த மகிமையான சுவிஷேசத்தின் ஒளி பிரகாசிக்காதபடிக்கு அவர்கள் மனக்கண்களை குருடாக்கியுள்ளான்' (தேவனுடைய சித்தப்படி). இப்படி குருடாக்கப்பட்டவர்களுக்கு நீ ஏன் குருடானாய் என்று தண்டனை கொடுத்தால் அதன் பெயர் 'நீதி' இல்லை. நாம்தான் 'கடைசியில்' வந்தவனுக்கு எப்படி அதே கூலி என்ற மனப்பான்மையும், சுய நீதியும் இருப்பதால் வெள்ளாடுகளின் கணக்கை எண்ணிக்கொண்டிருக்கிறோம். இராஜ்ஜியத்தில் அவர்கள் 'நீதியைக் கற்றுக்கொள்வார்கள்' என்ற 'முழங்கால்கள் யாவும் முடங்கும்', 'அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்' என்ற அற்புத வசனங்களைவிட ' அக்கினிக் கடலிலே பங்கடைவார்கள்' என்ற கொடூர வசனங்கள் நம்மை ஈர்க்கிறதே. தற்போது 'சபைக்கு' மட்டுமே நியாயத்தீர்ப்பு உலகத்திற்கு உயிர்த்தெழுந்த பின்புதான் என்று வசனம் சொன்னாலும் நாம் இப்பொல்லாத பிரபஞ்சத்தைப் பற்றியே அதிகம் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறோம்.






ஒருவனுடைய எல்லா பாவங்களும் முழுமையாக மன்னிக்கப்பட்டால்தான் அவன் உயிர்த்தெழவே முடியும். மரணத்தில் இருக்கும் ஒருவனை உயிரோடு எழுப்பி 'நான் உன் பாவங்களை மன்னித்து உயிரோடு உன்னை எழுப்பியுள்ளேன், சொல் ஏன் அந்தப் பாவங்களை செய்தாய்? போ இரண்டாம் மரண‌த்துக்கு அங்கிருந்து உயிர்த்தெழுதல் கிடையவே கிடையாது என்று சொல்வதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் 'நியாயத்தீர்ப்பு' போலும்!


-- Edited by soulsolution on Monday 12th of October 2009 02:27:17 AM

-- Edited by soulsolution on Monday 12th of October 2009 02:33:07 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard