"அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து; நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன் பேர்மாத்திர, எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்காள்" ஏசா. 4:1
தீர்க்கதரிசி ஏசாயா யாரை குறித்து எழு ஸ்திரீகள் என்றும், ஒரே புருஷர் என்றும் சொந்த ஆகாரம், சொந்த வச்த்திரம் என்றும் சொல்லுகிறார். விளக்குங்களேன்!
ஏழு ஸ்த்ரீகள் வெளிப்படுத்தலில் வரும் சபைகளின் ஏழு காலகட்டங்கள் என்று எண்ணுகிறேன். ஒரே புருஷன் 'கிறிஸ்து", சொந்த ஆகாரம் சத்திய வசனம், வஸ்திரம் பரிசுத்தம்.
ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன அந்த ஏழு ஸ்திரிகள் சபைகள் தான், ஆனால் மகா வேசியான பாபிலோன் சபைகள்.
சொந்த ஆகாரம் : சபைகளை உறுவாக்கினவர் கொடுத்த Doctrinஎச். சொந்த சரக்கு etc.
சொந்த வஸ்திரம்: ஒவ்வொரு சபையும் இது தான் நீதி என்று அந்த சபைகளின் பாஸ்டர்மார்களுக்கு கிடைத்த தரிசனத்தின் படி நடத்துதல். வெள்ளை வஸ்திரம் தான் பரிசுத்தம். சொந்த வஸ்திரம் (உங்கள் நீதி எனக்கு முன்பாக கந்தையாக இருக்கிறது).
ஒரே புருஷன் "கிறிஸ்து": ஏனென்றால் தங்கள் சபையையே மணவட்டி சபை என்று "நினைத்து" கொண்டிருப்பதால் மாத்திரம் கிறிச்துவை புருஷனாக நினைப்பது. மற்றபடி, கிறிஸ்துவிற்கு பிடித்த ஆகாரம், வஸ்திரம் உடுத்தாமல், சொந்த சகற்பனைகள் மூலமாக சபை வளர்ப்பது. எல்ல சபையிலும் கிறிஸ்துவை தான் போதிக்கிறோம் என்பார்கள், ஆனால் ஒரு சபையின் பாஸ்டர், அவர் சபையின் விசுவாசியை இன்னோரு சபைக்கு அனுமதிப்பாரா?
இது தான் இந்த வசனத்தின் அர்த்தம், தற்போது நிறைவேறிக்கொண்டிருக்கும் தீர்க்கதரிசனம்.