"இதோ, நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகும் பஞ்சமல்ல; ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல; கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" ஆமோஸ் 8:11
இப்படியாக சொன்ன பஞ்சத்தின் காலம் இனி தான் வரும் என்கிறார்கள் கிறிஸ்தவ மண்டல போதகர்கள். அதாவது ஒரு மொபைல் ஃபோனிலிருந்து இன்னோரு மொபைல் ஃபோனிற்கு முழு வேதத்தை அனுப்ப ஏறக்குறைய 6 விணாடிகளே சமயம் எடுக்கிறது. இனய தளம் என்று எடுத்துக்கொண்டால், ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு இனைய தளத்தில் கிறிஸ்தவம் குறித்தும், வார்த்தைகளை குறித்தும் வாசிக்க நேரிடுகிறது. டெக்னாலஜி இவ்வுளவு முன்னேறிய பிறகு தான் வசனத்தின் பஞ்சம் ஏற்படுமா. தீர்க்கதரிசி எந்த காலத்தை குறித்து சொல்லியிருக்கிறார், அந்த காலம் நிறைவேறி விட்டதா, இனிமேல் தானா?
அந்த 'வசனம் கிடைக்காத' பஞ்சம் இப்போதுதான் என எண்ணத்தோன்றுகிறது. 'வசனம்' கிடைக்கிறது ஆனால் சரியான அர்த்தம்தான் கிடைக்கவில்லை. இந்த அர்த்தம் கிடைக்காத பஞ்சத்தினால்தான் இன்றைய கிறிஸ்தவ உலகத்தில், சனிக்கிழமை ஆராதனையா அல்லது ஞாயிறா?, நகைகள் போடலாமா கூடாதா?, கர்த்தருடைய பந்தி எப்படி ஆசரிப்பது? முழுநேர ஊழியமா அல்லது அரைநேரமா?, ஞானஸ்நானம் தெளிப்பா முழுக்கா?, தசமபாகமா முழுவதுமா?, கிறிஸ்மஸ் கொண்டாடலாமா தேவையில்லையா? ..... என்ற குழப்பம் மிகுதியாகி ஆயிரக்கணக்கான சபைப்பிரிவுகள். 'தெளிவான வசனம்' கிடைக்காத பஞ்சத்தினால்தானே இந்த குழப்பம்?