"இதோ, நான் தேசத்தின் மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகும் பஞ்சமல்ல; ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல; கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" ஆமோஸ் 8:11
இப்படியாக சொன்ன பஞ்சத்தின் காலம் இனி தான் வரும் என்கிறார்கள் கிறிஸ்தவ மண்டல போதகர்கள். அதாவது ஒரு மொபைல் ஃபோனிலிருந்து இன்னோரு மொபைல் ஃபோனிற்கு முழு வேதத்தை அனுப்ப ஏறக்குறைய 6 விணாடிகளே சமயம் எடுக்கிறது. இனய தளம் என்று எடுத்துக்கொண்டால், ஏதாவது ஒரு வகையில் ஏதாவது ஒரு இனைய தளத்தில் கிறிஸ்தவம் குறித்தும், வார்த்தைகளை குறித்தும் வாசிக்க நேரிடுகிறது. டெக்னாலஜி இவ்வுளவு முன்னேறிய பிறகு தான் வசனத்தின் பஞ்சம் ஏற்படுமா. தீர்க்கதரிசி எந்த காலத்தை குறித்து சொல்லி யிருக்கிறார், அந்த காலம் நிறைவேறி விட்டதா, இனிமேல் தானா?
ஒரு ஜோக்தான் ஞாபகம் வருகிறது. ஒரு கிறிஸ்தவன் ஒரு யூதனைப் போட்டு அடித்துப் புரட்டிக்கொண்டிருந்தான். யூதனுக்கு ஒன்றும் புரியாமல் கேட்டான் "நிறுத்து, ஏன் என்னைப் போட்டு அடிக்கிறாய்?. கிறிஸ்தவன் சொன்னது "எங்கள் ஆண்டவராகிய இயேசுவை ஏன் கொன்றீர்கள், அதனால்தான் அடித்தேன் என்றான். " அடப்பாவி அது நடந்து 2000 வருஷமாயிருச்சே அதுகு இப்ப ஏன் அடித்தாய், லூஸா நீ" என்றான் யூதன். அதற்கு கிறிஸ்தவனின் பதில் என்ன தெரியுமா? "நான் நேற்றுதான் பைபிள் படித்தேன்".
நாம் இந்தக் காலக்கட்டத்தில் பிறந்ததால் வேதத்திலுள்ள தீர்க்க தரிசனங்கள் எல்லாம் இனிமேல்தான் நிறைவேறும் என்று தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் வசனம் கிடைக்காத பஞ்சம் இனிமேல்தான் வரும், அந்திகிறிஸ்து என்ற 'நபர்' இனிமேல்தான் வருவான், அர்மகெதான் யுத்தம் இனிமேல்தான் நடக்கும், என்றும், வெளிப்படுத்தல் புத்தகத்தில் உள்ளவைகளில் பெரும்பாலான பகுதி நிறைவேறிவிட்டதை அறியாமல் இன்னும் முதலாம் தூதன் வரவில்லை என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். வேடிக்கை!