ஆம், தேவன்பேரிலும் தேவன் அருளிய வார்த்தையின்பேரிலும், அந்த வார்த்தைகள் புகட்டும் மக சத்தியத்தின் பேரிலும் உத்தம சுத்த அன்பானது அதை வாசிப்போரிடத்திலே விளங்கவேண்டும் என்கிற சிறந்த நோக்கத்தோடுதான் தேவனே அப்படிப்பட்ட ஒரு தேர்வை (பரீட்சையை) வேதத்திலே நியமித்துள்ளார்!
அப்படியென்றால்,
சத்தியத்தை தங்கள் ஜீவனை காட்டிலும் நேசிகும் தேவ பிஉல்ளைகள் வேதத்தைகுறித்த எல்லா குழப்பங்களிலிருந்தும் விடுபடும்படி கடைபிடிக்க வேண்டிய மிகச்சரியான வழிமுறைகள் தான் என்ன? இவ்வாறு நாம் கேட்போமேயாகில்,
வேதத்தைப்பற்றிய கேள்விகளுக்கு வேதத்திலேயே பதில் கண்டுபிடிக்க முடியும். "வேதத்துக்கு மிகச்சரியான அகராதி வேதமே"
அன்றியும், வேதத்தின் சில கடினமான ஆழமான பொருளுடைய பகுதிகளுக்கும் வசனங்களுக்கும் வார்த்தைகளுக்கும், மிகச்சரியான அர்த்தத்தைக் கண்டு பிடிக்கும் வரை அவற்றை ஊக்கமாக ஓயாமல் ஆராய்ந்து அறியும் ஆர்வமும், திறனும் கிறிஸ்தவர்களிடத்தின் இன்னும் அதிகமாய் வளர வேண்டும்.
நேரடியாக மட்டுமல்ல மறைமுகமாகவும் கூறப்பட்டுள்ள வேதத்தின் எல்லா விசேஷங்களையும் தெளிவாக அறியும்படி நேரத்தை ஒதுக்கி சிரத்தை எடுத்து வேத வசனங்களை துருவிதுருவி ஆரயும் மனப்பக்குவமும் கிறிஸ்தவர்களிடத்தில் இன்னும் அதிகமாய் வளர வேண்டும்.
"மேலும் அநேகர் பல காலங்களாய் அதாவது அவர்கள் வேதத்தை வாசிக்க தொடங்கிய நாள் முதல் ஏதோ ஒரு மொழுபெயர்ப்பை மட்டுமே பிடிவாதமாக பயன்படுத்திக்கொண்டு வருவதை மிகப் பெருமையாக நினைக்கிறார்கள், ஆனால் ஏதோ ஒரு மொழிபெயர்ப்பை மாத்திரம் பயன்படுத்தி மூல வேதத்தின் அர்த்தங்களை மிகச்சரியாய் புரிந்துகொள்வது மிகசும் அசாத்தியம்."