kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நரகம் / Hell !!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நரகம் / Hell !!


நரகம்


இன்று கிறிஸ்தவர்களை மாத்திரம் அல்ல, பெரும்பாளுமான மார்கங்களும் நம்பும் ஒரு விசேஷமான இடம் (!!). பெரும்பாளுமானோர் இதில் இருந்து தப்பிக்கவே, நல்லவர்களாகவும், நீதிமான்களாகவும், பக்திமான்களாகவும் இருக்க காரணமான ஒரு வார்த்தை. பயம் மற்றும் அச்சம் தரும் வார்த்தை. இப்படி பட்ட ஒரு இடம் உண்டா? அதின் உண்மையான அர்த்தம் என்ன? இன்று அநேக அப் பவுலையும் மிஞ்சின பிரசங்கிமார்கள் அடிக்கடி சென்று வரும் தரிசித்து வரும், தங்களின் மூததையரை கண்டு வந்து அறிவுரை வழங்கும் ஒரு இடமாக இருக்கிறது. அப்படியா? இந்த நரகத்திற்கு எல்லொரும் தப்பித்தவர்களா? நரகம் என்றால் என்ன, அதின் உண்மையான அர்த்தம் தான் என்ன? விவாதிக்கலாமா? வேதத்திலிருந்து மாத்திரமே. சொந்த கணவு, காட்சிகள், அனுபவங்கள் செல்லுபடி ஆகாது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

என்ன சகோதரரே நரகம் கூடவா உங்களுக்குத் தெரியாது. என்னுடைய கி.பி.30000000000000 ல் ஆதாம் என்ற பதிப்பில் பாருங்கள் தெரியும்.





அது ப்ரதர், இயேசு கிறிஸ்துவை அறியாத பழைய ஏற்பாட்டுக்கால ஜனங்களும் (அவரது நாமமேயல்லாமல் ரட்சிப்பில்லை), கிறிஸ்து வந்த பின்பும் அவரை அறியாமலேயே மரித்த கோடாகோடி ஜனங்களும் நெருப்பில் சுமார் 2000டிகிரி செல்ஷியஸ்லும் சாகாமல் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒரு இடமாகும். அது பூமிக்கடியில் இருக்கிறதாம் (பாதாளம்). அவ்வப்போது இந்த நெருப்புதான் வெளிப்பட்டு எரிமலையாக வருகிறது. இன்னோரு விஷயம் என்னவென்றால் நியாத்தீர்ப்புக்காக ஜனங்கள் உயிரோடு எழும்பும்போது இவர்களுக்கு ஒரு சிறிய ஒரு நாள் Break, அதாவது தற்போது 'பாதாளத்தில்' சரீரமில்லாமல் ஆத்துமாக்களாக வேதனை அனுபவிக்கும் இவர்கள் இந்த ஒரு நாள் நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் சரீரத்தோடு நரகத்துக்கு (ப்ரொமோஷன்) அனுப்பப்பட்டு நித்திய நித்தியத்துக்கும் வேதனை அனுபவிப்பார்கள்.





ஏதோ கொஞ்சம் பரிசுத்தவான்கள் மட்டும் பரலோகத்தில் தங்கவீதிகளில் உலாவந்து ரத்தின மாளிகைகளில் (டாய்லெட் கூட தங்கம், வைரம்) வசிப்பார்கள். புதிய பூமி காலியாக இருக்கும்! அட நம்புங்க ப்ளீஸ்....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு57 கேட்டார்:

"மத்தேயு 5:22 ... தன் சகோதரனை மூடனே என்று சொல்கிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான்.
மத்தேயு 5:29 ... உன் சரீரம் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்.
மத்தேயு 13:42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள், அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்."

இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ளை புறிய‌ வேண்டும் என்றால், முத‌லாவ‌து த‌மிழில் மாத்திர‌ம் ந‌ர‌க‌ம் என்று வாசித்து விட்டு திருப்ப்தியாக‌ கூடாது. பழய ஏற்பாட்டில் எபிரேய‌ மொழியில் "ஷியோல்" என்கிற ஒரே வார்த்தைக்கு தமிழில் "ந‌ர‌க‌ம்" "குழி", "ப‌டுகுழி", "பாதாள‌ம்" போன்ற‌ வார்த்தைக‌ளால் மொழிப்பெய‌ர்க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. இது எப்ப‌டி சாத்திய‌ம்? கிங் ஜேம்ஸை மொழிப்பெய‌ர்த்த‌ அறிவாழிக‌ள் வேத‌த்தில் வ‌ருகிற‌ ந‌ல்ல‌ characters ஐ "பாதாள‌த்திற்கு" அனுப்பினார்க‌ள், கெட்ட‌வ‌ர்க‌ளை "ந‌ர‌க‌த்திற்கு" அனுப்பினார்க‌ள். ந‌ம் ப‌ரிசுத்த‌ வேதாக‌மும் அப்ப‌டியே தொடர்ந்தார்க‌ள். ஷியோல் என்கிற‌ எபிரேய‌ வார்த்தைக்கு அர்த்த‌ம் "ம‌ரித்த‌வ‌ரின் நிலை" அல்ல‌து "க‌ல்ல‌றை". அதாவ‌து, ம‌னித‌ன் செத்த‌ அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌டும் ஒரு இட‌ம் அல்ல‌து "state of dead" என்கிற‌ அழ‌கான‌ ஒரு அர்த்த‌த்தை, "ந‌ர‌க‌ம்" என்கிற‌ ஒரு கான்செப்ட்டில் தீ எரிகிற‌ இட‌ம் போன்ற‌வ‌ற்றை 2000 வ‌ருட‌ங்க‌ள் இருக்கும் ப‌ல்வேறு ச‌பைக‌ள் மாற்றி விட்ட‌து. அப்ப‌டியே புதிய‌ ஏற்பாட்டில், ந‌ர‌க‌ம் என்று த‌மிழில் உள்ள‌ வார்த்தைக்கு கிரேக்க‌ மொழியில், "ஹேட‌ஸ்", "கெஹென்னா" ம‌ற்றும் "டார்ட்ட‌ரூ". இப்ப‌டியாக‌ இத்துனை வார்த்தைக‌ள் இருந்தாலும் அத‌ற்கு ஒரே அர்த்த‌ம் கொடுத்து ஒரே மாதிரியான‌ ந‌ர‌க‌த்தை ந‌ம் க‌ண் முன் கொண்டுவ‌ந்துவிட்டார்க‌ள், ந‌ம் மொழிப்பெய‌ர்ப்பாள‌ர்க‌ள். இன்று இன்டெர்நெட், மொழி அக‌ராதிக‌ள் ந‌ம் கையில் இருப்ப‌தால் இப்ப‌டி அர்த்த‌ம் தெரிகிற‌து, ஒரு 200 வ‌ருட‌ங்க‌ள் முன்னே உள்ள‌ த‌மிழ் கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் நிலையை யோசித்து பாருங்க‌ளே. அவ‌ர்க‌ள் இந்த‌ ந‌ர‌க‌ம் எல்லாம் ஒன்றே தான் என்று நினைத்து தான் இருந்திருப்பார்க‌ல்.

நீங்க‌ள் கொடுத்திருக்கும் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் "கெஹென்னா" என்கிற‌ கிரேக்க‌ வார்த்தையிலிருந்து மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ "ந‌ர‌க‌ம்". ஆனால் அந்த‌ வார்த்தைக்கு என்ன‌ தெரியுமா அர்த்த‌ம்,

G1067  geena  gheh'-en-nah

of Hebrew origin (H1516 and H2011);

valley of (the son of) Hinnom; ge-henna (or Ge-Hinnom), a valley of Jerusalem

இப்ப‌டி இம்மோன் ப‌ள்ள‌த்தாக்கை "எரி ந‌ர‌க‌ம்" ஆக்கி வைத்திவிட்டார்க‌ள் ந‌ம் மொழிப்பெய‌ர்ப்பாள‌ர்க‌ள். மேலும் இயேசு கிறிஸ்து ப‌ய‌ன்ப்ப‌டுத்திய‌ இந்த‌ வார்த்தை அவ‌ர் பிர‌ச‌ங்கித்த‌ யூத‌ர்க‌ளிட‌ம் மாத்திர‌மே. ஏனென்றால் அவ‌ர்க‌ளுக்கு தான் இந்த‌ இம்மோன் ப‌ள்ள‌த்தாக்கு என்றால் என்ன‌வென்று தெரியும். புற‌ஜாதிக‌ளிட‌த்தில் இந்த‌ அப்போஸ்த‌ல‌னும் இந்த‌ வார்த்தையை கொண்டு பிர‌ச‌ங்கிக்க‌வில்லை.

இன்றைய‌ க‌ள்ள‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள்  சீன் போட்டு, தாங்க‌ள் சென்று வ‌ந்தோம், பார்த்து வ‌ந்தோம் என்று எல்லாம் ரீல் ம‌ன்ன‌ர்க‌ளாக‌ மாறி, "வேறு ஒர் கிறிஸ்துவை" பிர‌ச‌ங்கித்து கொண்டிருக்கிறார்க‌ள். இதுவும் ந‌ட‌ந்தே ஆக‌ வேண்டிய‌தாக‌ இருக்கிற‌து. இயேசு கிறிஸ்து ஏன் இப்ப‌டி சொன்னார் என்ப‌தை தியானிக்கிற‌தை விட்டு விட்டு, அப்ப‌டி ஒரு இட‌ம் எப்ப‌டி ப‌ட்ட‌து என்று யாருமே யோசித்து பார்ப்ப‌தில்லை என்ப‌து தான் இன்றைய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளின் நிலை.

இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ளை வார்த்தையின் ப‌டியே எடுத்துக்கொண்டால், இந்த‌ பூமியிலும் ச‌ரி ப‌ர‌லோக‌த்திலும் ச‌ரி, ஒற்றை க‌ண்ண‌ர்க‌ளாக‌வும், முட‌வ‌ர்க‌ளாக‌வும் தான் இருக்க‌ முடியும். வ‌ச‌ன‌த்தின் க‌ருத்தை அறிந்தால் தான் இதில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ "ந்ர‌க‌க‌ம்" என்ன‌வென்று புரியும்.

soulsolution  அவார்களிடம் தாங்கள் கேட்ட கேள்வி புதிய தலைப்பாக தொடரலாம். "இரட்சிப்பு" (Salvation).
இந்த பகுதியில் நரகத்தை குறித்தே இன்னும் ஆராயலம். நன்றி.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//நீங்க‌ள் கொடுத்திருக்கும் வ‌ச‌ன‌ங்க‌ள் அனைத்தும் "கெஹென்னா" என்கிற‌ கிரேக்க‌ வார்த்தையிலிருந்து மொழிபெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ "ந‌ர‌க‌ம்". ஆனால் அந்த‌ வார்த்தைக்கு என்ன‌ தெரியுமா அர்த்த‌ம்,

G1067 geena gheh'-en-nah

of Hebrew origin (H1516 and H2011);

valley of (the son of) Hinnom; ge-henna (or Ge-Hinnom), a valley of Jerusalem

இப்ப‌டி இம்மோன் ப‌ள்ள‌த்தாக்கை "எரி ந‌ர‌க‌ம்" ஆக்கி வைத்திவிட்டார்க‌ள் ந‌ம் மொழிப்பெய‌ர்ப்பாள‌ர்க‌ள்.//

’கெஹென்னா’ என்ற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் - ’இம்மோன் பள்ளத்தாக்கு’. சரி சகோதரரே!
ஆனால் மத்தேயு 5:22-ல் ’அக்கினி’ எனும் அர்த்தம் கொள்கிற ’பூர்’ எனும் வார்த்தையும் உள்ளது. அவ்வாறெனில் ’கெஹென்னா - பூர்’ எனும் வார்த்தைகளின் அர்த்தத்தை அக்கினிப் பள்ளத்தாக்கு என எடுத்துக்கொள்ளலாமா?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரரே,

 அந்த இன்னோம் பள்ளதாக்கில் என்ன தான் இருந்தது. அங்கே தீ தான் எரிந்துக்கொண்டிர்ந்தது. ஏன்? எருசலேம் குப்பைகளை, இறந்து போன மிருகங்கள், சிலுவை மரித்த அனாதை பினங்கள், திருடர்களின் உடல்கள், இவை எல்லாம் அந்த பள்ளத்தாக்கில் தான் போட்டு எரித்தார்கள், ஏன் எரித்தார்கள், என்றேல், அவை என்றென்றும் எரிந்துக்கொண்டிருக்க இல்லை, மாறாக, அவை எல்லாம் சாம்பளாக மாறவே.

இதில் ஏதாவது பினம் தப்பி தவறி பள்ளத்தாக்கில் விழாமல், மரக்கொம்புகளில் மாட்டி விட்டால், அந்த பினம் புழுக்களால் மொய்க்கப்பட்டு, அந்த புழுக்கல் அந்த பினம் இருக்கும் வரை சாகாமல் இருக்கும் (இது நடப்பது தீயிற்குள் இல்லை, ஏனென்றால் தீயில் விழுந்தால் மிருகமே சாம்பாளாகிவிடும் போது, ஒரு புழு எவ்வுளவு நேரம் தான் உயிர் வாழ முடியும்) அதற்காக தான், "அவர்கள் புழு சாகாது" என்கிற வசனம்.

இந்த பள்ளத்தாக்கை வைத்து ஏன் இயேசு கிறிஸ்து யூதர்களை எச்சரித்தார் என்றால், அவர்கள் எல்லாம் தங்கள் பாவங்களில் இருந்து வரமால் இருந்தால், இப்படி என்றென்றைக்கும் அழிந்து போவார்கள் என்பதர்க்காக தான் (இரண்டாம் மரணம்). ஆனால் இந்த உவமை ஒரு எச்சரிப்பே. இது இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு மாத்திரம் சொன்ன ஒரு வார்த்தை. இதை இந்த அப்போஸ்தரும், அல்லது  பவுல் எழுதிய கடிதங்களில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் நற்செய்தி சொல்லிதிரிந்தார்கள், ராஜியத்தின் சுவிசேஷம் சொல்லிதிரிந்தார்கள், இன்றைய கள்ள தீர்க்கதரிசிகள் போல், சுய லாபத்திற்காக மக்களை பயமுறுத்து பிழைப்பு நடத்தவில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//அந்த இன்னோம் பள்ளதாக்கில் என்ன தான் இருந்தது. அங்கே தீ தான் எரிந்துக்கொண்டிர்ந்தது. ஏன்? எருசலேம் குப்பைகளை, இறந்து போன மிருகங்கள், சிலுவை மரித்த அனாதை பினங்கள், திருடர்களின் உடல்கள், இவை எல்லாம் அந்த பள்ளத்தாக்கில் தான் போட்டு எரித்தார்கள், ஏன் எரித்தார்கள், என்றேல், அவை என்றென்றும் எரிந்துக்கொண்டிருக்க இல்லை, மாறாக, அவை எல்லாம் சாம்பளாக மாறவே.
இதில் ஏதாவது பினம் தப்பி தவறி பள்ளத்தாக்கில் விழாமல், மரக்கொம்புகளில் மாட்டி விட்டால், அந்த பினம் புழுக்களால் மொய்க்கப்பட்டு, அந்த புழுக்கல் அந்த பினம் இருக்கும் வரை சாகாமல் இருக்கும் (இது நடப்பது தீயிற்குள் இல்லை, ஏனென்றால் தீயில் விழுந்தால் மிருகமே சாம்பாளாகிவிடும் போது, ஒரு புழு எவ்வுளவு நேரம் தான் உயிர் வாழ முடியும்) அதற்காக தான், "அவர்கள் புழு சாகாது" என்கிற வசனம்.
இந்த பள்ளத்தாக்கை வைத்து ஏன் இயேசு கிறிஸ்து யூதர்களை எச்சரித்தார் என்றால், அவர்கள் எல்லாம் தங்கள் பாவங்களில் இருந்து வரமால் இருந்தால், இப்படி என்றென்றைக்கும் அழிந்து போவார்கள் என்பதர்க்காக தான் (இரண்டாம் மரணம்).//

மொத்தத்தில் நரகம் என்பது நித்திய நித்தியமாய் வாதிக்கும் ஓர் இடமல்ல, அது நித்திய அழிவைக் குறிக்கிறது என்கிறீர்கள். இதே கருத்துதான் எனக்கும்.

ஆனால் உங்களின் பல பதிவுகளைப் பார்க்கும்போது, இந்த நித்திய அழிவுக்கு யாருமே வரமாட்டார்கள், எல்லோரும் நித்திய ஜீவனைத்தான் பெறுவார்கள் என நீங்கள் கருதுவதுபோல் தோன்றுகிறது. இவ்விஷயத்தில் உங்கள் தெளிவான கருத்தைப் பதிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதாவது, நித்திய அழிவுக்கு (அல்லது 2-ம் மரணத்திற்கு) யாராவது தீர்க்கப்படுவார்களா, மாட்டார்களா? தீர்க்கப்படுவார்களெனில் யாரெல்லாம் தீர்க்கப்படுவார்கள் என்பதைக் கூறும்படி வேண்டுகிறேன்.

மற்றுமொரு சந்தேகம்:
வெளி. 14:10,11 வசனங்களில் கூறப்பட்டுள்ள வாதை நித்தியமானதா? அதற்கான விளக்கம் தரவும்.

bereans wrote:
//இந்த பள்ளத்தாக்கை வைத்து ஏன் இயேசு கிறிஸ்து யூதர்களை எச்சரித்தார் என்றால், அவர்கள் எல்லாம் தங்கள் பாவங்களில் இருந்து வரமால் இருந்தால், இப்படி என்றென்றைக்கும் அழிந்து போவார்கள் என்பதர்க்காக தான் (இரண்டாம் மரணம்). ஆனால் இந்த உவமை ஒரு எச்சரிப்பே. இது இயேசு கிறிஸ்து யூதர்களுக்கு மாத்திரம் சொன்ன ஒரு வார்த்தை. இதை இந்த அப்போஸ்தரும், அல்லது பவுல் எழுதிய கடிதங்களில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் எல்லோரும் நற்செய்தி சொல்லிதிரிந்தார்கள், ராஜியத்தின் சுவிசேஷம் சொல்லிதிரிந்தார்கள், இன்றைய கள்ள தீர்க்கதரிசிகள் போல், சுய லாபத்திற்காக மக்களை பயமுறுத்து பிழைப்பு நடத்தவில்லை.//

ரோமர் 2:7-12; கலா. 6:8; 2 தெச. 1:10; 1 யோவான் 3:15; யாக்கோபு 5:1-3 ஆகிய பல வசனங்களில் அப்போஸ்தலர்கள் நித்திய அழிவைக் குறித்து கூறியுள்ளனரே?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர்களே அப்படி ஒரு நித்திய வாதையான இடம் இல்லை என்றால் உண்மையில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் யாரும் அப்படி ஒரு வாதையை அனுபவிக்க கூடாது என்றுதான் நான் மிகுந்த பிரயாசப்படுகிறேன்.  ஆனால் வசனங்கள் சொல்வதை சற்று பாருங்கள். 

மத்தேயு 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

மத்தேயு 18:8 நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
 
தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்

இந்த வசனங்கள் சொல்வதில் நித்திய ஜீவன் என்பதை மட்டும் முடிவில்லா நித்ய வாழ்க்கை என்று எடுத்து கொண்டு நித்ய நிந்தை என்பதை முடிந்துபோகும் மரணம் என்று எடுத்துகொவது எவ்விதத்தில் நியாயம்?

எண்பது வருட வாழ்வுக்கு நித்திய நித்ய வாதையா?  என்ற கேள்விக்கான பதில் என்னிடம் உண்டு.  ஆனால் உங்களின் ஒருபுறம் சார்ந்த நம்பிக்கை சரியானதா?
 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
//மத்தேயு 25:46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

மத்தேயு 18:8 நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
தானியேல் 12:2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்

இந்த வசனங்கள் சொல்வதில் நித்திய ஜீவன் என்பதை மட்டும் முடிவில்லா நித்திய வாழ்க்கை என்று எடுத்துக்கொண்டு, நித்திய நிந்தை என்பதை முடிந்துபோகும் மரணம் என்று எடுத்துக்கொள்வது எவ்விதத்தில் நியாயம்?//

பாவத்தின் சம்பளம் மரணம் எனும் விதிப்படி, பாவத்தின் தண்டனையாக ஆதாம் மரணத்தைச் சந்தித்தார். ஆதாமின் மரணம், அவரது சந்ததியினரான நம்மையும் ஆண்டுகொண்டது (1 கொரி. 15:22). ஆனால் இந்த மரணம் நித்தியமானதல்ல (அதாவது நிரந்தரமானதல்ல, தற்காலிகமானதே). ஏனெனில் ஆதாமுக்குள் மரித்த/மரிக்கப்போகிற நாம் அனைவரும், கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப்படுவோம் (1 கொரி. 15:22).

உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், சிலர் நித்திய ஆக்கினையை (2-ம் மரணத்தை) அடைவார்கள், சிலர் நித்திய ஜீவனைப் பெறுவார்கள். முதல் மரணத்திற்குப் பின் நாமனைவரும் உயிர்த்தெழுவதற்கு வாய்ப்பு இருந்ததால், அந்த மரணம் நித்திய ஆக்கினை எனப்படவில்லை, ஆனால், 2-ம் மரணத்தைப் பெற்றவர்கள் மீண்டும் உயிர்த்தெழ முடியாதென்பதால், அந்த மரணம், நித்திய ஆக்கினை அல்லது நித்திய அழிவு எனப்படுகிறது. அதாவது அந்த மரணத்திற்குப்பின் மீண்டும் உயிர்த்தெழுதல் கிடையாதென்பதால், அது நித்திய அழிவு அல்லது நித்திய ஆக்கினை எனப்படுகிறது. அதை நிரந்தர அழிவு என்றும் சொல்லலாம்.

மத்தேயு 18:8-ல் நித்திய அக்கினி என்பதும் நித்திய அழிவைத்தான் குறிக்கிறது. அக்கினியில் போடப்படுகிறவன் அழிந்துதானே போவான்?
தானியேல் 12:2-லும் நித்திய நிந்தை, இகழ்ச்சி என்பது நித்திய அழிவைத்தான் குறிப்பிடுகிறது. இவ்வுலகில் அறிவற்ற விதமாக, தவறானதொரு செயலைச் செய்துவிட்டு தண்டனை பெறுபவன் அனைவராலும் நிந்திக்கப்பட்டு இகழப்படுவானல்லவா? அவ்வாறே, அறிவற்ற விதமாய் பாவஞ்செய்து, அதன் பலனாக நித்திய அழிவைப் பெறுபவர்கள், மற்றவர்களால் நிந்திக்கப்பட்டு இகழப்படுவார்கள். அவர்கள் அழிந்துபோனால்கூட, அவர்கள் மீதுள்ள நிந்தையும் இகழ்ச்சியும் என்றென்றும் நித்திய காலமாக இருக்குமென்பதால், அது நித்திய நிந்தை/இகழ்ச்சி எனப்படுகிறது.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு57 எழுதுகிறார்:
"மொத்தத்தில் நரகம் என்பது நித்திய நித்தியமாய் வாதிக்கும் ஓர் இடமல்ல, அது நித்திய அழிவைக் குறிக்கிறது என்கிறீர்கள். இதே கருத்துதான் எனக்கும்."

ந‌ர‌க‌ம் என்ப‌து நித்திய‌மாவோ, அநித்திய‌மாவோ, "வாதிக்கும் இட‌மோ", "அழிவிற்குறிய‌ இட‌மோ" இல்லை. ந‌ர‌க‌ம் என்ப‌து, "ம‌ரித்த‌ அல்ல‌து ம‌ரித்தோர் நிலை" "அட‌க்க‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ ஒரு இட‌ம்", க‌ல்ல‌றை.

ப‌ழ‌மையான‌ ஆங்கிள‌த்தில் HELL (ந‌ர‌க‌ம்) என்றால் "புதை" (Bury) என்று தான் அர்த்த‌ம்.

Helling of Potatoes என்றால் உறுலைக்கிழ‌ங்கை புதையுங்க‌ள் என்று அர்த்த‌ம். நாள‌டைவில் உல‌க‌ ஞானிக‌ளினால் தான் இந்த‌ ந‌ர‌க‌ம் என்றால் வ‌திக்கும் இட‌ம், அக்கினி எரியும் இட‌ம் போன்ற‌ க‌ற்ப‌னையான‌ அர்த்த‌ங்க‌ள் வ‌ந்த‌து. உப‌ய‌ம் ப‌ல‌ மார்க‌ங்க‌ள், பிற‌ ம‌த‌ங்க‌ளில் சொல்ல‌ப்ப‌டும் இட‌ம்.

உபரி தகவுல்: மேலும் ஆக்கினை என்ற‌வுட‌ன் அது ஏதோ அக்கினியில் போட்டு, Fireproof devils (அக்கினியில் வேகாத‌ பிசாசும் அவ‌ன் கூட்ட‌மும்) ஈட்டியை வைத்து வாதிக்க‌ப‌டுவோரை துர‌த்தும் ஒரு இட‌ம் என்று க‌த்தோலிக்க‌ ச‌பையை சேர்ந்த‌ டாண்டே என்கிற‌ ஒரு ஓவிய‌ரின் க‌ற்ப‌னை இட‌ம் தான் இன்று பிர‌ப‌ல‌மான் ஊழிய‌ர்க‌ள் த‌ங்க‌ள் ரீல்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டுத்தும் இட‌ம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard