kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Fascinating Soul!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Fascinating Soul!!


 ஆத்துமா (soul) என்றால் என்ன? விளக்கமாக எழுதுங்களே? சரீரத்திற்குல் ஆத்துமா என்று ஒன்று உள்ளதா அல்லது உயிருள்ள சரீரம் தான் ஆத்துமாவா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஆத்துமா என்றால் நமது சரீரத்துக்குள் இருக்கும் ஒரு உள்ளான மனிதன். நாம் பிறக்கும்போது இது உள்ளான குழந்தையாகும், பின் உள்ளான பையனாக வளர்ந்து, உள்ளான வாலிபனாகி பின் உள்ளான மனிதனாகிறான். உள்ளான தாத்தாவும்கூட‌ ஆகிறானென்று எண்ணுகிறேன்.




நாம் தூங்கும்போது இந்த ஆத்துமாவும் தூங்குகிறது, எழும்போது கூடவே எழுகிறது, ஆனால் சாகும்போதுமட்டும் அது பிரிந்து உயிரோடு போய்விடுகிறது.




நாம் மரிக்கும்போது இந்த ஆத்துமா உடலைவிட்டு பிரிந்து, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கும், ஆத்துமா பாதாளத்திற்கோ அல்லது ஆபிரகாமின் ஆத்துமாவின்மடிக்கோ கொண்டுபோகப்படுகிறது. இந்த ஆத்துமாவுக்கும் சரீரம் போலவே அவயவங்களும் உண்டென்று எண்ணுகிறேன். 'தன் கண்களை ஏறெடுத்து..., ஆபிரகாம் மடி, விரலின் நுனி, நாவு, வாய்(பேசுகிறார்களே)லூக்16:19~31. இந்த வசனங்களின்படி ஆத்துமா சாகாது.







"பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்" எசேக்18:4,20 என்ற வசனங்கள் ஒருவேளை தவறான இடைச்செருகலாக இருக்கலாம். எல்லா சபைகளிலும் சபைப்பாகுபாடின்றி கற்பிக்கப்படும் "ஆத்துமா சாகாது" கோட்பாடுதான் சரி. ஏதேது நீங்களும் வேதம் சொல்வதுபோல் ஒரு சரீரமாக இருந்தால்தான் ஆத்துமா, சரீரம் மரித்தால் ஆத்துமாவும் சாகும் என்பீர்கள் போலுள்ளதே?





(ஆனால் ஒரு ஆத்துமாவாகவே அவயவங்கள், உணர்வுகள் இருக்கும்போது மறுபடியும் ஒரு சரீரமாக உயிர்த்தெழவைப்பதில் என்ன லாஜிக்கோ தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லலாமே?)
-- Edited by soulsolution on Thursday 1st of October 2009 07:43:53 PM

-- Edited by soulsolution on Thursday 1st of October 2009 07:50:06 PM

-- Edited by soulsolution on Sunday 4th of October 2009 10:11:35 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"நமக்குள் ஆத்துமா இருக்கிறது" என்று பெரும்பாலுமான‌ மார்க‌ங்க‌ளும், ம‌த‌ங்க‌ளும் (கிறிஸ்த‌வ‌ம் உட்ப‌ட‌) சொல்லுவ‌துண்டு, ஆனால் அத‌ற்கு மாறாக‌, பைபிள் சொல்லுவ‌து, "தேவ‌னாகிய‌ க‌ர்த்த‌ர் ம‌னுஷ‌னைப் பூமியின் ம‌ண்ணினாலே உருவாக்கி, ஜீவ‌சுவாச‌த்தை அவ‌ன் நாசியிலே ஊதினார், ம‌னுஷ‌ன் ஜீவாத்துமாவானான்" ஆத். 2:7. தேவ‌ன் அந்த‌ ம‌ண்ணினாலே உருவான‌ ம‌னுஷ‌னிற்குள் ஆத்துமாவை வைக்க‌வில்லை. மாறாக‌, ம‌ண்ணினாலே உருவான‌ ம‌னுஷன் செய‌ல்ப‌டும்ப‌டி தேவ‌ன் அவ‌னின் நாசிக்குள் ஜீவ‌சுவாச‌த்தை (brreath) ஊதினார், இப்பொழுது, ம‌ண்ணினாலே உருவான‌ ம‌னுஷன் ம‌ற்றும் அவ‌னுக்குள் ஊற்ற‌ப்ப‌ட்ட‌ அந்த‌ ஜீவ‌சுவாச‌ம், இர‌ண்டும் சேர்ந்ததினாலே, "அவ‌ன் ஜீவாத்துமா" ஆனானே த‌விர‌, அவ‌னுக்குள் ஜீவ‌ ஆத்துமா செல்ல‌ வில்லை. ஜீவ‌ ஆத்துமா என்றால், ஜீவ‌னுட‌ன் (உயிருட‌ன்) இருப்ப‌வ‌ன் அல்ல‌து இருப்ப‌வ‌ள் அல்ல‌து இருப்ப‌து. இந்த‌ மூச்சு காற்று ம‌னித‌னிட‌த்திலிருந்து போய் விட்டால் அவ‌ன் மீண்டும் வெறும் ச‌ரீர‌மாக‌ இருப்பான்.

அதாவ‌து,
ம‌ண் ச‌ரீர‌ம் + ஜீவ‌சுவாச‌ம் = ஜீவ‌ ஆத்துமா
ம‌ண் ச‌ரீர‌ம் - ஜீவ‌சுவாச‌ம் = ம‌ர‌ண‌ம்.

ஆத்துமா ம‌ரிக்கும் என்ப‌தையே ப‌ல‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு ஆச்ச‌ரிய‌மான‌ ஒரு விஷ‌ய‌மாக‌ தென்ப‌டுகிற‌து, பல‌ர் அதை அந்தி கிறிஸ்துவின் உப‌தேச‌ம் என்று சொல்லும் அள‌விற்கும் துனிந்திருக்கிறார்க‌ள். ஆனால் வேத‌ம் சொல்லுவ‌தை பார்ப்போம், "பாவ‌ம் செய்யும் ஆத்துமா சாகும்" எசே. 18:4,20. (இந்த‌ வ‌ச‌ன‌மே த‌ப்பு என்று வாதாட‌க்கூடாது). ச‌ங். 146:4, "அவ‌னுடைய‌ ஆவி (ஜீவசுவாசம்) பிரியும், அவ‌ன் த‌ன் ம‌ண்ணுக்குத் திரும்புவான், அந்நாளிலே அவ‌ன் யோச‌னைக‌ள் அழிந்துபோம்". ஆக‌ ம‌னித‌ன் (ஜீவ ஆத்துமா) செத்தால் தான் உயிர்த்தெழுத‌ல் உண்டு, அது தான் கிறிஸ்துவ‌ விசுவாச‌மும். ஆத்துமா சாக‌வில்லை என்றால், எத‌ற்கு உயிர்த்தெழுத‌ல்.

ஆத்துமா என்ப‌த‌ன் எபிரேய‌ ப‌த‌ம் நெஃபேஷ். வேத‌த்தில் லேவிய‌ர் ஆக‌ம‌த்தில் (ஆங்கில‌ KJV ப‌திப்பில்) இந்த‌ நெஃபேஷ் அல்ல‌து ஆத்துமாவினால் பார்க்க‌ முடியும், கேட்க்க‌ முடியும், உண‌ர‌ முடியும், உத‌டுக‌ளால் பேச‌ முடியும் என்றும், ச‌ங்கீத‌த்தில் ஆத்துமாவை சிங்க‌ங்க‌ள் பீறீட‌ முடியும் என்றும் (ச‌ங்.:7:2) பட்டயத்தால் அழிக்க‌ முடியும் என்றும் (யோசு 11:11) வேத‌த்தில் தான் இருக்கிற‌து.

ஆத்துமா சாகாது என்று வேத‌ம் எங்குமே சொல்ல‌வில்லை. அழியாமை ம‌ற்றும் சாக‌மை வேத‌த்தில் ஐந்து இட‌ங்க‌ளில் இருக்கிற‌து (1 திமோ 1:17; ரோம‌ 2:7; 1 கொரி. 15:53,54; 1 திமோ 6:16; 2 திமோ 1:10). இதில் இந்த‌ வார்த்தைக‌ள் ஒரு முறை தேவ‌னையும், ஒரு முறை உயிர்த்தெழுந்த‌ கிறிஸ்துவையும் மூன்று முறை கிறிஸ்துவின் விசுவாசிக‌ளுக்கும் சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

    பைபிள் ம‌ர‌ண‌த்தை நித்திரைக்கு ஒப்பீட்டிருக்கிற‌து (தானி 12:2; யோவான் 11:11; 1 தெச‌ 4:13,14), ஏனென்றால் நித்திரையில் உண‌ர்வும் நினைவும் இல்லை (ச‌ங். 146:4; பிர‌. 9:10). இன்று ப்ரொட‌ஸ்ட‌ண்ட் ச‌பைக‌ள் ந‌ம்பும் அழியா ஆத்துமாவிற்கு நேர் மாறாக‌ தான் இந்த‌ ச‌பையை தொட‌ங்கிய‌ மார்டீன் லூத்த‌ரின் வார்த்தைக‌ள்,

"For just as a man who falls asleep and sleeps soundly until morning does not know what has happened to him when he wakes up, so we shall suddenly rise on the Last Day, and we shall know neither what death has been like or how we have come through it. We are to sleep until he comes and knocks on the grave and says, 'Dr. Martin, get up.' Then I will arise in a moment and will be eternally happy with him."



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard