1 பேது 4:14 வசனத்தின் பின் பகுதி பரிசுத்த வேதாகமம் மற்றும் KJVல் மட்டுமே இருக்கிறது, மற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பின் இது கிடையாது.
அப். 15:34 என்கிற ஒரு வசனம் மற்ற ஆங்கில மொழிப்பெயர்ப்பில் கிடையாது, பரிசுத்த வேதாகமத்தில் மாத்திரமே இதை பார்க்கலாம்.
1 யோவான் 5:7 (திருத்துவத்தை சொல்ல சேர்க்கப்பட்ட ஒரு வசனம்) 16ம் நூற்றாண்டிற்கு பிறகே வேதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
மாற். 16:8 இது தான் மாற்கு எழுதிய கடைசி வசனம். இதை யாரோ ஒருவர் மாற்கிற்கு முடிக்க தெரியவில்லை என்று முடிக்க போக 9 முதல் 20 வரை வசனங்கள் எழுதியிருக்கிறார். (சாவுக்கேதுவான யாதொன்றையும் குடித்தாலும் ஒன்றும் ஆகாது போன்ற வசனங்கள் வருகிறது.
இப்படி பரிசுத்த வேதாகமத்தை மாத்திரமே நம்பி பிரசங்கித்து வருகிறவர்கள் பிற மொழிப்பெயர்ப்புகளையும் பார்ப்பார்களா?
-- Edited by bereans on Wednesday 23rd of September 2009 08:05:39 AM