பிற்காலத்தில் வந்த வேத புரட்டர்களினால் சபைகளில் நுழைந்துவிட்ட வஞ்சகங்கள்.
பிற்காலத்தில் அநேகர் தங்களுடைய சுய வளர்ச்சி, மேன்மை. பதவி அந்தஸ்து, செல்வம் மற்றும் இன்னும் அநேக காரணங்களுக்காக வேதத்தை தங்கள் சுய இஷ்டம் போல் போதிக்க துணிந்தார்கள். வேத வசனங்களுகு தங்கள் சுய இஷ்டம் போல் விளக்கம் கொடுக்க தீவிரித்தார்கள். அநேகர் இம்மைக்குரிய ஆசிர்வாதங்களுக்காக மட்டும் வக்குத்தத்தங்களைப் (குறிப்பிட்ட வசனங்களை) பயன்படுத்தும்படி மக்களை தூண்டினர். ஆனால் தேவனுடைய உன்னத அழைப்பில் சபைக்கென்று நியமிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய, பூமிக்குரிய ஆசீர்வதங்களை அவர்கள் சரியய் பகுத்தறியத் தவறிவிட்டனர்.
எடுத்துக்காட்டு:
இஸ்ராயேல் மக்களுக்கு தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை வார்த்தையின்படியே நேரடியாக பிற்கால சபை மக்களும் உரிமை கோர ஆரம்பித்தனர். அதனால் இன்னும் இக்காலத்து சபைமக்கள் தடுமாறிக் கொண்டே உள்ளனர்.