சகோதரர்களே, இன்றைய கிறிஸ்தவம் போதிக்கும் விஷயங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட கற்பனைக் கதை(?) சுவாரசியமாக இருக்குமென்று நம்புகிறேன்.
கி.பி. 30000000000000 ல் ஆதாம்
என் பெயர் ஆதாம். பூமியின் முதல் மனிதன். தேவன் என்னை மண்ணினால் உருவாக்கி தன் ஆவியாகிய ஜீவசுவாசத்தை ஊதி என்னை உயிரடையச் செய்தார். அவர் சாயலாக சிந்திக்கும் திறனுடன் என்னை உருவாக்கினார். என்னை உருவாக்கும் முன்பே அவர் நான் உயிர்வாழத் தேவையான எல்லாவற்றையும் ஏற்கனவே படைத்திருந்தார். எனக்கு இந்த பூமி, ஆகாயம், நட்சத்திர மண்டலங்கள், சூரியன், சந்திரன், நதிகள், ,மலைகள், விலங்குகள், கடல்வாழ்பிராணிகள் அனைத்தும் ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் அளித்தன. எல்லாவற்றுக்கும் நானே பெயர் வைத்தேன். தேவனின் அன்பையும் ஐக்கியத்தையும் நினைத்து பிரமித்தேன்ஒரு நாள் அவர் என்னை உறங்க வைத்து என் விலா எலும்பை எடுத்து அதன்மூலம் ஒரு 'பெண்ணை' உருவாக்கினார். அவளையும் அவர் எனக்காகவே உருவாக்கித்தந்தார். அதுமுதல் நாங்கள் இருவரும் ஒன்றாகவே இருந்தோம். இத்தனையும் செய்த தேவனுக்கு நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்று எண்ணிய வேளையில் அவரது கட்டளை நினைவுக்கு வந்தது. அதாவது "தோட்டத்தின் மத்தியில் இருக்கிற நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை மாத்திரம் நீ புசிக்கவேண்டாம், அதை புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்" என்ற தேவ கட்டளைதான் அது. ஆக நாங்கள் அதைப் புசிக்காதவரை அவ்ருக்கு கீழ்படிந்து நடந்து அவருக்கு எங்கள் அன்பை தெரிவிப்பதாக அர்த்தம். இவ்வாறு நானும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தில் மகிழ்ச்சியாக இருந்து கொண்டிருந்தோம். இவ்வண்ணமாக அவர் எங்களை நாங்கள் பலுகி பெருகி பூமியை நிரப்பவும், சகலத்தையும் ஆண்டுகொள்ளவும் ஆசீர்வதித்தார். இந்த இடத்தில் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். மனுக்குலம் பூமியில் நித்திய நித்தியமாய் இருந்து வாழ்வதற்குத்தான் எனக்கு இந்த பூமியில் வாழ்வதற்கேற்ப உடலமைப்பை தந்திருந்தார். நான் உன்னை பரலோகத்திற்கு கூட்டிச்செல்வேன் என்றெல்லாம் ஒரு முறைகூட அவர் என்னிடம் வாக்களிக்கவில்லை. மகிழ்ச்சியாய் ஏதேனில் வலம்வந்து தேவன் எங்களோடு சஞ்சரித்து ச்ந்தோஷமாக இருந்த வேளையில்தான் 'அது' நேர்ந்தது...
ஆம், சர்ப்பம் என்ற ஒரு ஜந்து ஏவாள் தனிமையில் இருக்கும்போது அவளை வஞ்சித்து "விலக்கப்பட்ட அந்த மரத்தின் கனியை சாப்பிட்டால் நீங்கள் சாகவே சாவதில்லை. நீங்கள் தேவனைப்போல ஆகிவிடுவீர்கள்" என்று பொய் சொன்னது. இந்த ஏவாளும் வஞ்சிக்கப்பட்டு அந்தப்பழத்தை உண்டு எனக்கும் கொடுக்க நானும் அதை சாப்பிட்டேன். அதன்பின் நாங்கள் எங்கள் மகிமையை இழந்து நிர்வாணிகளாயிருப்பதை உணர்ந்து தேவசமூகத்தை விட்டு ஓடி ஒளியவேண்டியதாயிற்று. அன்பே உருவானதேவன் எங்கள் நிமித்தம் விசனமடைந்து அவரது சாபத்துக்குள்ளானோம். சர்ப்பத்தையும், ஏவாளையும், என்னையும் அவர் சபித்து ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியேற்றப்பட்டோம். எங்கள் வாழ்வு சாபத்தினிமித்தம் கடினமானது. ஏவாள் வேதனையோடு பிள்ளை பெற்றாள். காயீன் மற்றும் ஆபேல் என்ற இரு குமாரர்கள் பிற்ந்தனர். அவர்கள் வளர்ந்தபோது தேவனுக்கு பலி செலுத்தும் விஷயத்தில் பொறாமைகொண்ட காயீன் தன் சகோதரனான ஆபேலைக் கொலைசெய்தான். மனுக்குலத்தின் முதல் மரணமே கொலைசெய்ததனால் சம்பவித்தது. அதுவரை சாவு என்றால் என்னவென்று அறியாத நாங்கள் அனேக நாட்கள் ஆபேலின் சரீரத்தை வைத்திருந்தோம், அவன் எழவேயில்லை. ஐயோ! இதுதான் மரணமா? இதைத்தான் தேவன் 'சாகவே சாவாய்', 'மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய்' என்று சொல்லியிருந்தாரா? என்றெண்ணி மிகவும் துக்கித்து அழுதோம். மகன் ஆபேல் மறுபடி எழவே மாட்டானா என்ற அதிர்ச்சி நாங்கள் செய்த முதல் பாவத்தின் கொடுமையான விளைவை உணர்த்தியது. ஐயோ! இனி என் சந்ததி முழுவதற்குமே மரணம் சம்பவித்து மண்ணுக்குத் திரும்பிவிடுமே என்ற உண்மையையும் அப்போதுதான் உணர்ந்தேன். அதன்பின் எங்களுக்கு 'சேத்' பிறந்தான், அனேக பெண்பிள்ளைகளும் பிறந்து பூமியில் மனித இனம் பெருகவாரம்பித்தது, கூடவே பாவமும் பெருகியது. அதன்பின் நானும் என்னுடைய 930 வயது சென்று மரித்தேன். கதை இதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் தேவன் எவ்வளவு கொடூரகுணமுள்ளவர் என்று நான் 'மரித்த' பின்புதான் அறிந்துகொண்டேன். அந்தக் கொடுமையை தொடர்ந்து படியுங்கள்.
என் சரீரம் செயலிழந்து மண்ணுக்குத்திரும்பியதே ஒழிய 'நான்' ஆதாம், ஒரு ஆத்துமாவாக "உயிரோடுதான்" இருந்தேன். ஆம்! சாத்தான் சொன்னதுதான் சரி, நான் சாகவில்லை!! அப்போதுதான் தெரிந்தது தேவன் சொன்னது அப்பட்டமான பொய்! அதன்பின் இன்னொரு மஹா பயங்கரம் நடந்தது. நான் (என் ஆத்துமா) உடலைவிட்டு வெளியே வந்ததும் உடனடியாக 'பாதாளம்' என்று சொல்லப்படும் அக்கினி ஓயாமல் எரிந்து கொண்டிருக்கும் ஒரிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டேன். அன்றுமுதல் அங்கு எரியும் நெருப்பில் வேதனைப்பட ஆரம்பித்தேன். இதென்ன கொடுமை? எனக்கு சரீரமே இல்லை ஆனாலும் உண்ர்வு இருக்கிறது, யோசிக்க முடிகிறது, பார்க்கிறேன், பேசுகிறேன். இந்த அக்கினியில் போடப்பட்டும் நான் சாகவே இல்லை. ஆக சாத்தான் சொன்னதுதான் உண்மை. தேவன் என்னை ஏமாற்றிவிட்டாரா? "இதைப் புசிக்கும் நாளிலே சாகவே சாவாய்", மண்ணாயிருக்கிறாய் மண்ணுக்கே திரும்புவாய்" என்று சொன்னாரே தவிர "நீ சரீரத்துக்குள் குடியிருக்கும் ஒரு ஆத்துமாவாக இருக்கிறாய், பாவம் செய்த உன் ஆத்துமா சாகாது, நீ சரீரத்தைவிட்டு பிரியும்போது பாதாளம் என்னும் ஓர்டத்தில் நித்திய நித்தியத்துக்கும் வேதனைப்படுவாய்" என்று முன்பே விளக்கமாக சொல்லியிருந்தால் நான் "ஆண்டவரே, இந்தப் பழவிவகாரமே எனக்கு வேண்டாம், இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் நான் அதை புசிக்க நேரிட்டு நித்திய வாதைக்குள்ளாவேன். ஆகையால் என்னை முன்புபோல் நான் இல்லாமலே போகும்படிக்கு என்னை அழித்துவிடும். எனக்கு ஏதேனும் வேண்டாம், ஏவாளும் வேண்டாம், பாதாளமும் வேண்டாம்" என்று சொல்லியிருப்பேனே! இப்படியாக வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும்போது என் கண்களை ஏறெடுத்துப்பார்த்தபோது தொலைவில் மகன் ஆபேலைக் கண்டேன். அவ்னும் என்னை அடையாளம் கண்டு கொண்டான். அவன் சவுக்கியமாக இளைப்பாறிக்கொண்டிருந்தான் மேலும் பின்பு ஆபிரகாம் என்பவர் வந்தபின்பு அவர் மடியில் போய் அவனும் படுத்துக்கொண்டான். அடடா நான் கூட ஒரு ஆட்டை தேவனுக்கு பலியாக செலுத்தியிருந்தால் தப்பியிருப்பேனோ, ஆபிரகாம் மடியில் உள்ள கூட்டத்தில் நானும் போய் விடப்பட்டிருப்பேனே, தெரியாமல் போனதே என்று எண்ணினேன். பின்னர் ஏவாளும் பாதாளத்தில்தான் இருக்கிறாள் என தெரியவந்தாது (பெண்கள் ஐக்கியமோ என்னவோ?). இப்படியாக கிட்டதட்ட 6000 வருடங்கள் வேதனையில் இருந்த்தேன். ஓஹோ, வருடக்கணக்கெல்லாம் எப்படித்தெரியும் என்கிறீர்களா? அது யார் புதிதாக வருகிறார்களோ அவர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்வேன். கி.பி.33வரை மரித்த ஏராளம்பேர், அதாவது ஒரு சில பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள்தவிர, எல்லா யூதர்களும் மற்றும் தேவனை அறியாத கோடிக்கணக்கான புறஜாதி(?)யாரும் பாதாளத்தை நிரப்பிக் கொண்டிருந்தார்கள். அதேபோல அனேக பிச்சைக்கார நோயாளிகள் 'ஆபிரகாம் மடியில்' இளைப்பாரவும், ஆரோக்கியமான ஐசுவரியவான்கள் பாதாளத்தில் வேதனைப்படவும் வந்துகொண்டே இருந்தார்கள். ஒரு ஐசுவரியவான் ஆபிரகாமுடன் பேசியதாகக்கூட பாதாளவட்டாரத்தில் பேசிக்கொண்டார்கள். அதுவும் அந்த முட்டாள் ஐசுவரியவான் ஒரே ஒரு சொட்டு தண்ணீர் மட்டும் கேட்டு அவன் நாவை குளிரப்பண்ணும் என்றானாம். அடப்பாவி! கேட்டது கேட்டாய் ஒரு நாலு பீப்பாயாகக் கேட்டிருந்தால் கொஞ்சம்பேராவது குடிக்கலாமே. ஒரு துளி நீர் பாதாளம் வரும்முன்னே ஆவியாகிவிடுமே, இவன் இங்கு வந்தது சரிதான் என நினைத்தேன். மேலும் என்மூலம் வந்த எல்லா சந்ததியும் ஒரே ஜாதிதானே, இதில் புறஜாதி எங்கிருந்து வந்தது என இன்றுவரை எனக்குப் புரியவில்லை. இப்படியாக வருடங்கள் செல்லச் செல்ல கூட்டம் பாதாளத்தில் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. கிட்டத்தட்ட நூற்றுக்கு 99பேர் இங்குதான் வந்தனர். ஒருவர் மட்டும்தான் ஆபிரகாம் மடி. இத்தனைக்கும் முதல் ஆதாமாகிய நான் செய்த் பாவத்தைப் போக்க இரண்டாம் ஆதாமாக தேவகுமாரன் இயேசுகிறிஸ்து வந்து கிரயம் செலுத்தியும் இதே விகிதாச்சாரம்தான்.
ஆனால் திடீரென்று ஒரு நாள் எங்களுக்கு ஒரு விடுதலை கிடைத்தது! ஆம் சரீர உயிர்த்தெழுதல்தான் அது. அப்பாடா பாதாளத்தில் இத்தனை வருடங்கள் வேதனைப்பட்டதற்கு ஒரு முடிவு வந்தது என்றறு நினைத்தேன். அதுவரை ஆத்துமாக்களாக வேதனைப்பட்டுக் கொண்டிருந்த அனைவரும் மீண்டுமாக சரீரத்தில் எழுப்பப்பட்டோம். எழுந்தபின் சில நிமிடங்கள் ஒன்றுமேபுரியவில்லை. ஆனால் ஒரு பெரிய நிம்மதி, பாதாள வேதனை இப்போது இல்லை. சரி என்ன நடக்கிறது என்று மெதுவாக சுற்றும் முற்றும் பார்த்தேன். அட! இந்த பூமி முழுவதுமே ஏதேனுக்கு ஒப்பாக மாறியிருந்த்தது. இதுவரை சரீரத்தில் மரித்த அனைவருமே எழுப்பப்பட்டிருந்தார்கள். எல்லார் முகங்களிலும் பாதாள வேதனையிலிருந்து கிடைத்த விடுதலையின் நிம்மதி தெரிந்தாலும் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயமும் கூடவே இருந்தது. எங்கு பார்த்தாலும் ஜனக்கூட்டம், எல்லாரும் என்னுடைய பிள்ளைகள்! மெதுவாக பக்கத்தில் நின்றவரிடம் பேச்சுக் கொடுத்தேன் "ஐயா, நான் ஆதாம், நீங்கள்?" என்றேன். அத்ற்கு அவர் "ஸ்..ஸ்..ஸ் சத்தம் போடாதீர்கள், இன்று நியாயத்தீர்ப்பு நாள்" என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரே ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு 6000+ வருடங்கள் வேதனையான தண்டனை அனுபவித்தயிற்றே? இனியென்ன நியாயத்தீர்ப்பு என குழம்பினேன். ஏனென்றால் பாதாளத்தில் நான்தான் சீனியர் எல்லாரையும்விட அதிகம் வாதிக்கப்பட்டவன். சரி என்னதான் நடக்குமென்று பார்க்கலாம் என வேறொருவரிடம் "ஐயா நீங்களாவது கொஞ்சம் புரியும்படி சொல்லுங்களேன் என்றேன். அதற்கு அவர் தன்னை ஒரு கிறிஸ்தவப் போதகர் என அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார் "ஐயா நான் கி.பி.2009ல் மரித்த ஒரு கிற்ஸ்தவ போதகர், பெரிய ஊழியக்காரனாகத்தான் வாழ்ந்தேன் ஆனால் ஊழியத்தின் கடைசி காலத்தில் பின்வாங்கி உலகப்பிரகாரமான சொத்து சேர்க்க ஆரம்பித்து மரித்து, பாதாளத்தில் வேதனைப்பட்டுவிட்டு தற்போது கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் முடிந்து சரீரத்தில் எழுப்பப்பட்டுள்ளேன். தற்போது 1000 வருட கிறிஸ்துவின் ஆட்சிக்குப்பிறகு வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்காக எல்லா மரித்தவர்களும் நம்மைப்போல எழுப்பப்பட்டுள்ளனர்" என்றார். எனக்கோ இன்னும் குழப்பம் அதிகமானது. ஏன் தேவன் கடைசியில் பிறந்த ஒரு சாராரை மட்டும் தனது பூலோக ஆட்சிக்கு உட்படுத்த வேண்டும்? அதற்கு முன்னால் பிறந்தவர்கள் மட்டும் சாத்தான் ஆளுகை செய்த உலகத்தில் தீமை அனுபவித்து துன்பப்பட்டு மரிக்க வேண்டும். யாரிடம் கேட்பதென்று குழம்பினேன். கொஞ்சம் தொலைவில் வினேதமான மீசையுடன் ஒருவர் கோபமாக நின்றுகொண்டு இருந்தார். மீண்டும் அந்த 2009 போதகரிடம் "அதோ அவரைத் தெரியுமா?" என்றேன். அவரும் பார்த்துவிட்டு "அவரைப் பற்றி படித்திருக்கிறேன், அவர் பெயர் ஹிட்லர் சுமார் 60லட்சம் யூதர்களை கொன்று குவித்திருக்கிறார். அவர்கள் அனைவரும் உயிர்த்தெழுந்ததால் கோபமாக இருக்கிறார் போலும்" என்றார். "அடப்பாவி, அவர் எவ்வளவு காலம் பாதாளத்தில் வேதனைப்பட்டார்" என்று கேட்டேன். போதகரும் கொஞம் யோசித்துவிட்டு "கிட்ட தட்ட 1100 வருடங்கள் இருக்கும்" என்றார். எனக்கோ பயங்கர கோபம் வந்தது, என்ன அநியாயம் இது, ஒரு பழம் சாப்பிட்டதற்கு 6000 வருட தண்டனை, 60 லட்சம்பேரைக் கொன்று குவித்தவனுக்கு வெறும் 1100 வருடங்கள்தானா? எப்படியோ கடவுளுக்கே வெளிச்சம், இப்போதைக்கு வேதனை இல்லை அதுவே பெரிய காரியம் என்றெண்ணினேன். ஜனங்கள் வரிசை வரிசையாக நின்றுகொண்டிருந்தார்கள். எல்லாரும் மரித்து உயிர்த்தெழுந்திருந்தாலும் தாங்கள் நேசிக்கிறவர்களிடம்கூட ஏதும் பேசவில்லை. அனேகமாக அனைவருமே பாதாளத்திலிருந்து வந்ததால் மிகவும் பயந்திருந்தார்கள்.
அப்போது, "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்டவர்கள் இந்தப்பக்கம் வாருங்கள்" என்ற பெரிய சத்தம் கேட்டது. "இதென்ன அவரைப்பற்ரி அனேகம் பேர் கேள்விப்படவே இல்லையே, எப்படி விசுவாசித்திருப்பார்கள்? அவர் பிறப்பதற்கு முன்பே வாழ்ந்தவர்கள் கதி?", அதேபோல எவ்வளவோ அன்புள்ளம் கொண்டு தாங்கள் உயிரோடிருந்த நாட்களில் தங்கள் அன்பு மற்றும் தியாகச் செயல்களினால் மற்றவர்களின் துயர் தீர்த்த அனேகருக்கும் இதே விளக்கம்தான் "அதெல்லாம் கிடையாது நீ செய்த நன்மைகள் ஆயிரம் இருந்தாலும் நீ இயேசுகிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளவில்லையே" என சொல்லிக்கொண்டிருக்கும்போதே கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. அவரை ஏற்றுக்கொண்டவர்கள் கூட்டம் மிக சொற்பமாக இருந்தது, 1%கூட இல்லை! அதிலும் ஒருவர் சலித்துக்கொண்டார் "சே ஆபிரகாம் மடியில் இளப்பாறிக்கொண்டிருந்த என்னை மறுபடியும் சரீரததில் இந்த பூமிக்கு எதற்கு கொண்டுவந்தார்களோ?" என்று.இப்படியாக பெரிய புத்தகங்கள் திறக்கப்பட்டு ஜீவ புத்தகத்தில் பேரெழுதப்படாதவர்களை நோக்கி சிங்காசனத்திலிருந்த இயேசுகிறிஸ்து "பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் வைக்கப்பட்டுள்ள அக்கினிக்கடலிலே போங்கள்" என்று உரத்த குரலில் சொன்னார். அந்த சத்தம் எல்லாரையும் நடுங்க வைத்தது. அந்த நொடியே எல்லாரும் மறுபடியும் படப்போகும் வேதனையை நினைத்து மகாதுக்கத்தோடு அழுது புலம்பினார்கள். "அதெல்லாம் கிடையாது இவர்கள் எல்லாம் உலகத்தோற்றத்துக்கு முன்பாகவே பரலோகத்துக்கென்று முன்குறிக்கப்பட்டவர்கள், என்னால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், மற்றவர்களெல்லாம் நரகத்துக்குதான். யோவான் 3:17ல் "உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்திற்கு அனுப்பாமல் உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்" என்ற புதிய ஏற்பாட்டு வசனங்களெல்லாம் பொய் என்றார்கள். எனக்கும் மபெரும் துக்கம். என் சந்த்ததியில் பெரும்பாலோர் பாதாளத்திலிருந்து கொண்டுவரப்பட்டு இப்போது 'நரகத்துக்கு'த் தள்ளப்படுவதை நினைத்து நான் அடைந்த துக்கத்துக்கு அளவே இல்லை. முதலில் பாதாளத்தில் சரீரம் இல்லாமல் வேதனை அனுபவித்த என் ஜனங்கள் இப்போது சரீரத்தோடு அக்கினியும், கந்தகமும் எரிகிற கடலிலே வேதனைப்படுகிறார்கள், நானும்தான்.
அந்த நியாயத்தீர்ப்பு முடிந்து தற்போது 30000000000000 வருடங்கள் முடிந்தும் வேதனை குறையவில்லை. இது முதலிலேயே தெரிந்திருந்தால் நான் வாழ்க்கையில் எந்தப்பழத்தையுமே சாப்பிடாதிருந்திருப்பேனே என்று நொந்துகொண்டேன். இடையிடையே இந்த இயேசுகிறிஸ்துவைப் பற்றி பக்கத்தில் வெந்துகொண்டிருக்கும் பாஸ்டரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். அவர்தான் மேசியா என்ற கிறிஸ்துவாம். தேவகுமாரனாம், இரண்டாம் ஆதாம் என்றுகூட அழைக்கப்படுகிறாராம். அவர் பாவத்தில் விழுந்த உலகத்தை, பாவிகளை இரட்சிக்க அனுப்ப்ப்பட்டு, பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்து மரண்த்தை ஜெயித்தாராம். என்ன ஜெயித்து என்ன பயன் 99.9% ஜனங்கள் நரகத்தில் நித்திய வாதையில் இருக்கிறார்களே? இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் புதிய பூமி காலியாக இருந்தது! 1000வருட கிறிஸ்துவின் ஆட்சியில் ஏதேனுக்கொப்பாக மாற்றப்பட்ட பூமி வெந்து உருகிப்போயிற்று. புதிய பூமி வந்து காலியாக உள்ளது. அதாவது விசுவாசிகள், பரிசுத்தவான்கள் யாவரும் பரகலோகம் சென்றுவிட்டனர். மீதி பாவிகளாகிய நாங்கள் எல்லோரும் நரகத்தில் முடிவில்லா வதையில் இருக்கிறோம், ஆகவே புதிய பூமி காலியாக உள்ளது. இதுதான் தான் உண்டாக்கின மனிதனைக் குறித்த தேவனுடைய திட்டம் போலும்
இப்படிக்கு,
முடிவில்லா வாதையில்'
ஆதாம்
[பின் குறிப்பு: என் சாவைப்பற்றி சொன்ன தேவன் பரலோகம், பாதாளம், நரகம் மற்றும் ஆத்துமா பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாதது எனக்கு இன்னும் வருத்தமே.]
-- Edited by soulsolution on Thursday 3rd of September 2009 06:03:04 AM
-- Edited by soulsolution on Monday 14th of September 2009 06:25:59 PM
-- Edited by soulsolution on Monday 14th of September 2009 06:58:15 PM
-- Edited by soulsolution on Monday 14th of September 2009 07:02:10 PM
என்ன சகோதரரே(கர்ர்ர்), புது கதை சொல்லுகிறீர்கள் என்று பல பெரும் ஊழியர்கள் (!!) சொல்லுவது காதுகளில் கேட்கிறது. நீங்கள் எழுதியது இன்றைய போதகர்களின் வருமானத்திற்கு (!!) வேட்டு வைத்து விடும் போல இருக்கிறது. இப்படியா மரணத்தையும், தேவன் மனிதனை படைத்த நோக்கத்தையும் தெளிவு படுத்துவது. கிறிஸ்தவர்கள் கட்டு கதைகளை கேட்டு வளர்கிறார்கள், நீங்கள் பாட்டுக்கு ஏதோ உண்மை எல்லாம் சொல்லி வருகிறீர்களே. இருந்தாலும் உங்களுக்கு தைரியம் அதிகம் தான். வாழ்த்துக்கள். தொடர்ந்து பதியுங்கள்.
ஒரு நல்ல தகப்பன் இருந்தாராம். அவருக்கு அனேக குழந்தைகள் இருந்தனவாம். அந்த குழந்தைகளுக்கெல்லாம் "எய்ட்ஸ் நோய்" என்றால் மிக கொடியது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாராம். அப்படி அறிந்துகொண்டால்தான் அவர்கள் தவறான வழியில் போக மாட்டர்கள் என்றென்றும் பரிசுத்தமாக வாழ்வார்கள் என்று அவர் கருதினாராம்.
அதற்காக திட்டமிட்டு ஒரு எய்ட்ஸ் நோயாளியின் இரத்தத்தை கொண்டு வந்து எல்லா பிள்ளைகளுக்கும் தானே இன்ஜக்சன் போட்டு அந்த கொடிய நோய் கிருமியை எல்லோரு உடம்பின் உள்ளேயும் செலுத்தி எல்லோரையும் எய்ட்ஸ் நோயாளியாக மாற்றிவிட்டாராம்.
அத்தோடு இன்னொரு மனிதரையும் அழைத்து தானே கெடுத்துவிட்ட அந்த நோயாளிகளுக்காக அவரது பரிசுத்த இரத்தத்தை சிந்த வைத்தாராம் (இது என் என்றே தெரியவில்லை) அனாலும் ஒரு பயனும் இல்லை!
இன்று பார்த்தால் வீட்டில் உள்ள எல்லோரும் பயங்கர நோயால் அவதிப்பட்டு உடல் உருகி சாவு வரும் நிலையில் வேதனையில் வாடிக்கொண்டு இருக்கிறார்களாம்.
ஆகினும் ஒருவரை ஒருவர் பார்த்து "நமது தகப்பன் விரைவில் வருவார் நமது நோயை குணமாக்கி நமக்கு நித்தியமான நல்ல வாழ்வை தருவார்" என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனராம்.
"முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்த பின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்ற முதல் இருந்த விதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்" 2 பேது 3:3,4.
சகோ ராஜ் அவர்களே, அவர் வருவார் என்கிற வாக்குதத்தினிலே உங்களுக்கு விசுவாசம் இல்லையா?
மேலும் கதையின்படி நம் பிதாவாகிய தேவனை சாத்தானாக மாற்றி விட்டீர்களே! பிதா நல்லவராம் ஆனால் தம் குழந்தைகளுக்கு அவரே எய்ட்ஸ் நோயை தருகிறாராம். "தேவன் ஒருவனையும் சோதிப்பதில்லை" (யாக். 1:13) என்கிறது வேதம் மிகவும் தெளிவாக. மன்னிக்கனும், நீங்கள் இன்னும் தேவனை புரிந்துக்கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன். உங்கள் கதையில் சாத்தன் என்கிற மிக பெரிய கதாப்பாத்திரம் மிஸ்ஸிங். அதற்கு பதிலாக பிதாவுக்கே அந்த பாத்திரத்தை கொடுத்து விட்டீர்களே. என்ன கதை இது?
நாங்கள் சொல்லுவது என்ன என்பதையே உங்களுக்கு புரியவில்லை என்று உங்கள் கதை சொல்லுது.
ஒரு நல்ல தகப்பன் இருந்தாராம். அவருக்கு அனேக குழந்தைகள் இருந்தனவாம். அந்த குழந்தைகளுக்கெல்லாம் "எய்ட்ஸ் நோய்" என்றால் மிக கொடியது என்பதை அவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தாராம். அப்படி அறிந்துகொண்டால்தான் அவர்கள் தவறான வழியில் போக மாட்டர்கள் என்றென்றும் பரிசுத்தமாக வாழ்வார்கள் என்று அவர் கருதினாராம்.
அதற்காக திட்டமிட்டு ஒரு எய்ட்ஸ் நோயாளியின் இரத்தத்தை கொண்டு வந்து எல்லா பிள்ளைகளுக்கும் தானே இன்ஜக்சன் போட்டு அந்த கொடிய நோய் கிருமியை எல்லோரு உடம்பின் உள்ளேயும் செலுத்தி எல்லோரையும் எய்ட்ஸ் நோயாளியாக மாற்றிவிட்டாராம்.
அத்தோடு இன்னொரு மனிதரையும் அழைத்து தானே கெடுத்துவிட்ட அந்த நோயாளிகளுக்காக அவரது பரிசுத்த இரத்தத்தை சிந்த வைத்தாராம் (இது என் என்றே தெரியவில்லை) அனாலும் ஒரு பயனும் இல்லை!
இன்று பார்த்தால் வீட்டில் உள்ள எல்லோரும் பயங்கர நோயால் அவதிப்பட்டு உடல் உருகி சாவு வரும் நிலையில் வேதனையில் வாடிக்கொண்டு இருக்கிறார்களாம்.
ஆகினும் ஒருவரை ஒருவர் பார்த்து "நமது தகப்பன் விரைவில் வருவார் நமது நோயை குணமாக்கி நமக்கு நித்தியமான நல்ல வாழ்வை தருவார்" என்று நம்பிக்கொண்டு இருக்கின்றனராம்.
ஆனால் அவரோ இன்றுவரை வந்தபாடில்லை!
இந்நிலையில் ஒரு அறிவாளி இருந்தராம் தனக்கு எய்ட்ஸ் இல்லை என்ற எண்ணத்தில் அவர் இருந்தாராம், மற்ற எய்ட்ஸ்காரர்களை நான் குணமாக்குவேன் என்று சொல்லிக்கொண்டு தனது எல்லா வேலைகளும் போக மீதியான் நேரத்தில் மட்டும் எய்ட்ஸ்காரர்கள் என்று இவர் நினத்துக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு சிலருக்கு குணமாகுங்கள் என்று 'அறிவுரை' மாத்திரம் வழங்குவாராம். அவரே எய்ட்ஸ்லிருந்து பூரணகுணமாகவில்லை என்பதுதான் விஷயமே.
தகப்பன் இவர்களை குணமாக்க தனது உன்னத குமாரன்(Doctor) ஒருவரையும் அவரைப் போலவே இருக்கும் ஒரு சிறிய கூட்டத்தையும் ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த 'அறிவாளி' இருந்ததால் வெறும் நோயாளிகளை மாத்திரம் பார்த்து புலம்பினாராம்.
Treatment ஆரம்பிக்க கொடுக்கும் Anesthesia ஒவ்வொரு நோயாளிக்கும் கொடுக்கப்படுவதைப் பார்த்து 'அய்யோ எல்லாரும் சாகிறார்களே' என அங்கலாய்த்துக் கொண்டாராம். தன்னுடைய கடைசி நோயாளிக்கு மயக்கமருந்து கொடுத்துவிட்டு பின்புதான் எல்லாருக்கும் சிகிச்சையளிப்பு என்கிற தகப்பன், மூத்த குமாரன் ஆகியோரின் திட்டம் புரியாததால் இந்த அறிவாளியே தனக்குத் தெரிந்த நாட்டு வைத்தியத்தை தொடங்கிவிட்டாராம்.......
சகோ ராஜ் அவர்களே, அவர் வருவார் என்கிற வாக்குதத்தினிலே உங்களுக்கு விசுவாசம் இல்லையா?
மேலும் கதையின்படி நம் பிதாவாகிய தேவனை சாத்தானாக மாற்றி விட்டீர்களே! பிதா நல்லவராம் ஆனால் தம் குழந்தைகளுக்கு அவரே எய்ட்ஸ் நோயை தருகிறாராம். "தேவன் ஒருவனையும் சோதிப்பதில்லை" (யாக். 1:13) என்கிறது வேதம் மிகவும் தெளிவாக. மன்னிக்கனும், நீங்கள் இன்னும் தேவனை புரிந்துக்கொள்ளவில்லை என்றே நான் நினைக்கிறேன். உங்கள் கதையில் சாத்தன் என்கிற மிக பெரிய கதாப்பாத்திரம் மிஸ்ஸிங். அதற்கு பதிலாக பிதாவுக்கே அந்த பாத்திரத்தை கொடுத்து விட்டீர்களே. என்ன கதை இது?
சாத்தான் இந்த கதையில் மிஸ்ஆகவில்லை சகோதரரே.
சாத்தான் பாத்திரம்தான் எய்ட்ஸ் நோய்கிருமி.
தங்கள் கருத்துப்படி தேவன்தான் வேண்டுமென்றே சாத்தனை படைத்துவைத்து பாவம்என்றால் என்னவென்று எல்லோருக்கும் காண்பித்து கொண்டிருக்கிறார் என்று சொல்கிறீர்கள். .
அதன் அடிப்படையில்தான், தந்தையே எய்ட்ஸ் கிருமிகளை கொண்டுவது உடலில் செலுத்தி, உலகில் நடக்கும் கொடூரங்களை வேடிக்கை பார்ப்பதாக எழுதியிருக்கிறேன்.
"பிதாவும் அவரே பிசாசும் அவரே" என்று வேண்டுமானால் தங்கள் கதைக்கு தலைப்பு வைக்கலாம்
நமக்காக பரிதபிக்கும் மிகுந்த இரக்கமுள்ள தேவனை தாங்கள் வர்ணிக்கும் விதத்தை வேறெப்படி சொல்ல?
உலகில் நடைக்குள் எந்த ஒரு செயலும் அவர் அனுமதியில்லாமல் நடப்பதில்லை ஆனால் எல்லா செயலுக்கும் அவர் பொறுப்பல்ல. சில நேரங்களில் தேவனின் நீதியானது அவரை செயலிழக்க செய்துவிடுகிறது.
"எல்லாம் அறிந்திராவிட்டால் அவர் தேவனல்ல" என்று சொல்கிறீர்கள் அதே
நேரத்தில் அவர் நீதியில் ஒரு சிறு குறைவு ஏற்ப்பட்டலும் அவர் தேவனாக இருக்க முடியாது.
சாத்தனை வேண்டுமென்றே தானே படைத்து இன்று உலகில் நடக்கும் அனைத்து கொடூரங்களுக்கும் கர்த்தரையே காரண கர்த்தாவாக்குவது எவ்விதத்திலும்
ஏற்க்கமுடியாது.
தேவன் உலகை படைத்து எல்லாம் நல்லதாகவே கண்டார்"
சாத்தான் படைக்கபட்ட நாளில் இருந்து அவனிடம் அநியாயம் கண்டுபிடிக்கபடுமளவும் குறைவற்றிருந்தான்
சரிதான், அப்படியென்றால் நடக்கும் எல்லா கொடூரங்களும் தேவசித்தமில்லை. சாத்தானின் சித்தம். தேவன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறார். மிகவும் பரிதாபத்துக்குரிய தேவன். எல்லாரையும் பாவக்குழிக்குள் தள்ளி நரகத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறான் சாத்தான். மெஜாரிடி ஜனம் நரகத்துக்குத்தான் என்று தெரிகிறது.
சரிதான், அப்படியென்றால் நடக்கும் எல்லா கொடூரங்களும் தேவசித்தமில்லை. சாத்தானின் சித்தம். தேவன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்கிறார். மிகவும் பரிதாபத்துக்குரிய தேவன். எல்லாரையும் பாவக்குழிக்குள் தள்ளி நரகத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறான் சாத்தான். மெஜாரிடி ஜனம் நரகத்துக்குத்தான் என்று தெரிகிறது.
ஆம் நிச்சயமாக நடப்பது எல்லாமே தேவனுடைய சித்தம் இல்லை!
பிதாவின் சித்தம் இல்லாததை மனிதன் செய்கிற காரணத்தால்தான் இயேசு "உன் சுயசித்தத்தை விட்டு, பிதாவின் சித்தத்தை செய் அப்பொழுதுதான் நீ பரலோகத்தில் பிரவேசிக்க" முடியும் என்று கூறுகிறார்.
"உலகம் போல்லாங்கினுள் கிடக்கிறது" என்றும் "உலகத்தின் அதிபதி சாத்தன் என்றும்" வேதம் சொல்கிறது.
எல்லோரும் தேவனின் சித்தம்தான் செய்கிறார்கள் என்றால் இயேசு இந்த வார்த்தைகளை சொல்ல வேண்டிய தேவையே இல்லை.
லூக்கா 12:47 தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்
பிதாவின் சித்தம் அறிந்தும் அதை செய்யாமல் இருந்து அனேக அடிகள் வாங்க வாய்ப்பிருக்கிறது என்று இந்த வசனம் கூறுகிறது
I யோவான் 2:16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்
பிதாவால் உண்டாகாத சில காரியங்களும் உலகில் இருக்கின்றன என்பது தெரிய வருகிறது.
எனவே உலகமும் அதன் இச்சையும் தேவனுடைய சித்தத்தின் படி செய்யவே இல்லை என்று பொருளாகிறது.
இன்றுவரை அநேகர் விசாலமான வழி வழியாக நடந்து சாத்தானின் இடத்தை நிரப்பிகொண்டுதான் இருக்கிறார்கள்! ஆனால் சாத்தான் ஜெயிக்கப்படும் பொது அவனது கட்டுபாட்டில் இருக்கும் ஜனங்கள் எல்லோரும் மீட்கப்பட்டு தேவ சித்தப்படி நியாயம் தீர்க்கப்படுவார்கள்.
1000 வருட அரசாட்சியில் சாத்தானைக் 'கட்டிப்போட' இருக்கும் தேவன் இப்போது அவனை கட்டவிழ்த்துவிட்டிருக்கும் காரணம் என்ன சகோதரரே?
ஓஹோ தேவனுக்கே தெரியாமல் ஏதேனுக்குள் வந்துவிட்டானோ, யோபுவை சோதிக்க தேவன் 'அனுமதித்தாரா'? அல்லது அதுவும் யோபுவின் சித்தப்படியோ, சாத்தானின் சித்தப்படியோ நடந்ததா? யோபு 'கஷ்டப்பட' யார் காரணம்?
ஆக உலகம் முழுவதும் இப்போதே 'இரட்சிக்கப்படுவது' தேவனுடைய சித்தம் இல்லை. ஆகவேதான் உலகம் இப்போது அவரை அறிந்து கொள்ளவில்லை. வெறும் தமிழ் 'பரிசுத்த வேதாகமம்' என்ற அனேகம் பிழைகலுள்ள புத்தகத்தை மாத்திரம் படித்து தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வது மிக மிகக் கடினம்.
ஆக உலகம் முழுவதும் இப்போதே 'இரட்சிக்கப்படுவது' தேவனுடைய சித்தம் இல்லை. ஆகவேதான் உலகம் இப்போது அவரை அறிந்து கொள்ளவில்லை. வெறும் தமிழ் 'பரிசுத்த வேதாகமம்' என்ற அனேகம் பிழைகலுள்ள புத்தகத்தை மாத்திரம் படித்து தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்வது மிக மிகக் கடினம்.
II பேதுரு 3:9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
இப்பொழுதே எல்லோரும் இரட்சிக்கபடவேண்டும் என்பது தேவனுடய சித்தம்தான் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அதை உடனே அவர் செய்ய முடிந்தால் எதற்காக அல்லது யாருக்காக நீடிய பொறுமை உள்ளவராக காத்திருக்கிறார் என்று வசனம் சொல்கிறது என்பதை அறிந்துகொள்ளலாமா?
என்னை பொறுத்தவரை தேவன் தான் சொன்ன எல்லா வாக்குதத்தங்களையும் நிச்சயம் நிறைவேற்றுவார் ஆனால் அவைகள் நிறைவேற சில காரியங்கள் நடைபெறவேண்டும். "பாவ மன்னிப்புக்கு இயேசு பலியாக வேண்டும்" "சுவிசேஷம் பரவ பவுல் பாடுபடவேண்டும்" என்பதுபோல் எல்லோரும் இரட்சிக்கப்பட எதோ ஓன்று நடைபெறவேண்டியுள்ளது. அதுவும் தேவனின் திட்டம்தான் என்றாலும் அது தானாக நடக்காது ஒரு இயேசுவோ ஒரு பவுலோ முன்வந்து அதை நடத்த வேண்டும்.
ஆதியாகமம் 6:3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சம்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
தேவன் நிச்சயம் மனிதனுடைய ஆவியோடு போராடி அல்லது தன திட்டத்தை பிறர் மீது திணித்து அதை நிறைவேற்றுவது இல்லை என்பதை தெளிவாக இந்த வசனம் சொல்கிறது
எனவே கர்த்தர் யாரையும் கட்டாயப்படுத்தி ஒரு காரியத்தை செய்யவைப்பது இல்லை. யார் அவருக்கு கீழ்படிந்து அவரது திட்டத்தை நிறைவேற்ற முன்வருகிறார்களோ அவர்கள் மூலம் நிச்சயம் அந்த காரியத்தை நிறைவேற்றுவார். அதற்காக தேவன் சொன்னால் காரியம் நிச்சயம் நிறைவேறும் என்று எண்ணம் கொண்டு நமக்கு நியமிக்கப்பட்ட கட்டளையை கைகொள்ளாமல், நான் ஒன்றுமே செய்யவேண்டியது இல்லை என்று தேவனின் வார்த்தைக்கு கீழ்படியாமல் இருப்பது அழிவையே கொண்டுவரும் .
ஆமோஸ் 9:10 தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்
சாமுவேல் மூலம் கர்த்தர் சொன்ன வார்த்தைக்கு கீழ்படியாத சவுல் தன மேன்மையை இழந்து அழிந்துபோனான்.
அவர் சொல்வது நிச்சயம் நிறைவேறும்! அவர் யாரை இழுத்துக்கொள்ள நினைக்கிறாரோ அவரை யார் மூலமாவாது இழுத்துகொள்வார்!
அனால் நமக்கு என்ன கட்ட்ளையிட்டுல்லாரோ அதை நாம் கைகொள்ள வேண்டியது நம்மேல் விழுந்த கடமை என்றே நான் கருதுகிறேன். .
வெளி 22:14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள்.
//எல்லோரும் இரட்சிக்கப்பட எதோ ஓன்று நடைபெறவேண்டியுள்ளது. அதுவும் தேவனின் திட்டம்தான் என்றாலும் அது தானாக நடக்காது ஒரு இயேசுவோ ஒரு பவுலோ முன்வந்து அதை நடத்த வேண்டும்.//
அந்த 'ஏதோ ஒன்று'தான் 1000வருட கிறிஸ்துவின் ஆட்சி! ஒரு இயேசுவோ ஒரு பவுலோ அல்ல, முழு கிறிஸ்து, தலை மற்றும் சரீரமாகிய 'சபை'யைக் கொண்டு அது முழுமையாக நிறைவேற்றப்படும் என்றுதான் வேதம் சொல்கிறது. இந்த யுகம் சபையை பூரணப்படுத்தவும், உலகத்தை பொல்லாங்கனுக்குள் விழவைக்கவும்தான்.
அந்த 'ஏதோ ஒன்று'தான் 1000வருட கிறிஸ்துவின் ஆட்சி! ஒரு இயேசுவோ ஒரு பவுலோ அல்ல, முழு கிறிஸ்து, தலை மற்றும் சரீரமாகிய 'சபை'யைக் கொண்டு அது முழுமையாக நிறைவேற்றப்படும் என்றுதான் வேதம் சொல்கிறது. இந்த யுகம் சபையை பூரணப்படுத்தவும், உலகத்தை பொல்லாங்கனுக்குள் விழவைக்கவும்தான்.
"தேவனே எல்லோரும் இரட்சிக்கபடவேண்டும் என்று நீடிய பொறுமையோடு காத்திருக்கிறார்" என்று வேதம் சொல்கிறது, ஆயிரம் வருட அரசாட்சியில் எல்லோரும் இரட்சிக்கபடுவர்கள் என்றால் யாருக்காக அல்லது எதற்காக தேவன் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும் என்பது புரியவில்லை.
I பேதுரு 3:20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்.
ஏற்க்கெனவே இதுபோல் ஒருமுறை தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்து மனம்திரும்பாதவர்களை (இரட்சித்து அல்ல) அழித்த மிக குறைந்த மனிதர்களை மட்டும் காத்த சம்பவம் நடந்து நமக்கு திருஷ்டாந்திரமாக வைக்கப்பட்டுள்ளது.
அதுபோலத்தான் மீண்டும் நிறைவேருமேயன்றி நீங்கள் நினைப்பதுபோல் அல்ல!
"எல்லோருக்காகவும் இயேசு மரணத்தை ருசிபார்த்தர்" என்பது சரியே. அனால் அவரை யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் இரட்சிப்பினை அடைவார்கள் என்றும் விசுவாசியாதவன் அக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான் என்றும் வசனம் சொல்கிறது
இன்று உலகில் பொது மருத்துவமனைகள் எல்லோருக்காகவும்தான் இருக்கிறது எல்லோரும் சுகம் பெறவேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் சித்தம் அதன் அடிப்பட்யில்தான் அந்த மருத்துவமனைகளை அமைத்துள்ளது. ஆகினும் யார் அதை பயன்படுத்தி அங்கு சென்று சிகிச்சை எடுக்கிறார்களோ அவர்கள்தான் சுகம்பெற முடியுமே தவிர வீட்டில் இருந்துகொண்டால் சுகம் தேடிவருவது இல்லை!
அதுபோல் தேவன் வழங்கியுள்ள இலவச ரட்சிப்பை அசட்டை பண்ணுவோர் அழிந்துபோவார்கள் என்றே வசனம் சொல்கிறது.
ராஜ் எழுதுகிறார்//"எல்லோருக்காகவும் இயேசு மரணத்தை ருசிபார்த்தர்" என்பது சரியே. அனால் அவரை யார் விசுவாசிக்கிறார்களோ அவர்கள் மட்டும்தான் இரட்சிப்பினை அடைவார்கள் என்றும் விசுவாசியாதவன் அக்கினைக்குள்ளாக தீர்க்கப்படுவான் என்றும் வசனம் சொல்கிறது ///
ஆக இயேசு கிறிஸ்துவுக்கு முன் வாழ்ந்தவர்கள், அதன் பின் வாழ்ந்த, வாழும் கோடாகோடி பேர் (அவர்பற்றி ஒருமுறை கூட் கேள்விப்படாதவர்கள்), மனநிலை சரியில்லாதவர்கள், குழந்தையிலேயே மரித்தவர்கள் யாவரும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவார்கள்.
அதாவது 99.99% பேர். என்ன ஒரு 'நற்ச்ய்தி'.
இன்னும் நன்கு ஆராய்ந்து இது போன்ற 'நற்செய்தி'களை ஏராளம் பதிக்கவும். வாழ்த்துக்கள்!!
-- Edited by soulsolution on Wednesday 11th of November 2009 10:17:28 AM
யார் தான் நம்புவதில்லை, கிறிஸ்தவர்கள் என்றால், கத்தோலிக்கர்கள் தொடங்கி இன்று தொடங்கும் "தரிசன" சபைகள் வரை எல்லாரும் சத்தியத்தை தான் "நம்புவதாக" சொல்லுகிறார்கள், ஆனால் சத்தியம் என்றால் "தேவனின் வார்த்தை" என்று தெரியாமல், சத்தியம் என்றால் நமக்கு வரும் தரிசனங்கள், முதல் நாள் இராத்திரி இயேசு கிறிஸ்து கொடுத்த காட்சி, பரிசுத்த ஆவியானவர் சொன்ன தீர்க்கதரிசனங்கள், இதை தானே சத்தியம் என்று போதிக்கும் ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. எல்லாரும் அழிந்து போவது தான் இவர்கள் "சத்தியம்" இவர்களின் "நற்செய்தி".
இயேசு கிறிஸ்து எல்லாருக்காகவும் இரத்தம் சிந்தியது எல்லாம் சரியே, நீ புத்தி சுவாதீனம் இல்லாமல் போனால் என்ன, நீ விசுவாசித்தால் தான் இரட்சிக்கப்பட முடியும் என்கிற இலவச போதனை தான் "நற்செய்தி".
ஒரு கூட்டம் தாவீதோடு பரலோகத்தில் நடனமாடி வருகிறார்கள், ஆனால் இன்னோரு பக்கம், இயேசு கிறிஸ்துவை தெரியவில்லை என்றால் அழிவு தான் என்றும் சொல்லுகிறார்கள், பாவம் என்ன குழப்பமோ தெரியவில்லை?