ஆம். வேதத்தின் மூலபாஷகள் எவை? பழய ஏற்பாடு எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றை பிற்காலங்களில் அநேகர் தங்களுடைய சொந்த மொழிகளில் மொழிபெர்க்க முயன்றனர். ஆனால் முற்காலத்தைய அவசர அரைகுறையான மொழிபெர்ப்புகளினாலும் அநேக தவறான உபதேசங்கள் சபையில் பிறந்து விட்டன.
இதில் ஆச்சரியப்படத்தக்க விஷயம் பொதுவாக நாம் பயன்படுத்தும் தமிழ் வேதாகமதான். அதில் முதல் பக்கத்திலேயே 'இது மூல பாஷையாகிய எபிரெயு, கிரேக்க மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது' என்று அச்சிடப்பட்டுள்ளது. இது எந்த அளவு உண்மையென்பது தெரியவில்லை. யார் எபிரெயமும் தமிழும் படித்தார்கள், யார் கிரேக்கமும் தமிழும் படித்தார்கள்? இதுபற்றி ஏதேனும் information கிடைத்தால் நன்றாக இருக்கும்.
-- Edited by soulsolution on Monday 28th of September 2009 05:21:30 PM