kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Most misunderstood book/ வேதம் குழப்பத்திற்குரிய புத்தகமா?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Most misunderstood book/ வேதம் குழப்பத்திற்குரிய புத்தகமா?


வேதம் ஏன் இன்னும் ஒரு குழப்பத்திற்குரிய புத்தகமாகவே காணப்படுகிறது.

இன்றைக்கு உலகத்திலேயே குறிப்பாக தேவ பிள்ளைகளால் மிகத் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ள ஒரு புத்தகம் (most misunderstood book) எது என்றால், அது வேதாகமம் தான். "வேதம் என்பது ஒரு வீணையானால் அதில் எந்த ஸ்வரத்தையும் (ராகத்தையும்) யார் வேண்டுமானாலும் அவரவர் விருப்பம் போல் மீட்டிக்கொள்ளலாம்" என்று ஒருவர் சொல்கிறார்.

ஆம், இன்றைக்கு அவரவர் தங்கள் இஷ்டம் போல் வேதவசனங்களுக்கு விளக்கம் கொடுக்கின்றார்கள். இன்றைக்குள்ள சபைகளின் விசுவாசம் எதின் மீது கட்டப்பட்டுள்ளது? சத்திய வசனத்தின் மீது தான் என்றால் சபைகளின் இத்தனை குழப்பங்களும் எங்கேயிருந்து வந்தன‌?

அதற்கான எல்லா முலகாரணங்களையும் (elements) நாம் தீர்க்கமாய் ஆராய வேண்டியுள்ளது. அவற்றில் சிலவற்றை மாத்திரம் இங்கே நாம் ஒவ்வொருநாளும் ஆராய்ந்து பார்க்கலாம்.

I Praise God for this 200th post. It is His grace that made us reach this point.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

I இராஜாக்கள் 2:11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான்.

யோவான்3:13. பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை.

இதில் எந்த வசனத்தை நம்புவது? இரண்டுமே ஒரே வேதாகமத்தில்தான் உள்ளது. ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டிருப்பதால் வேதத்தை ஆராயவேண்டியதில்லை என்பவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்கள்; வேதம் முன்னுக்குப்பின் முரணானது என்பதைக் காண்பிக்க மற்றவர்கள் இந்த வசனங்களைக் காண்பித்துக் கேட்டால் என்ன ஆகும்...?

 

I கொரிந்தியர் 12:7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது.

 

KJV- But the manifestation of the Spirit is given to every man to profit withal.


NIV -7Now to each one the manifestation of the Spirit is given for the common good. 


NLV-7A spiritual gift is given to each of us so we can help each other


தமிழில் 'அவனவனுடைய' பிரயோஜனத்துக்கென்று என்றும் ஆங்கிலத்தில் மற்றவர்களுடைய் பிரயோஜனத்துகென்று என்றும் உள்ளது. எது சரி?


அதேபோல 1 யோவான் 5:7. [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்த ஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்;

8. பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது.


<< 1 John 5 >>

King James Version 

7For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one. 

NIV- 7For there are three that testify: 8thea Spirit, the water and the blood; and the three are in agreement


 NLV- 1John 5:7So we have these three witnessesc— 8the Spirit, the water, and the blood—and all three agree..


ERV 7 And it is the Spirit that beareth witness, because the Spirit is the truth. 8 For there are three who bear witness, the Spirit, and the water, and the blood: and the three agree in one.


ASV -7And it is the Spirit that beareth witness, because the Spirit is the truth. 8For there are three who bear witness, the Spirit, and the water, and the blood: and the three agree in one. 


கிங் ஜேம்ஸ் மற்றும் அதை அப்படியே காப்பியடித்த தமிழ் மொழிதவிர "இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்" என்ற வசனமே வேறெந்த மொழிபெயர்ப்பிலும் இல்லை. தமிழிலும் அதை அடைப்புக்குறிக்குள்தான் கொடுத்திருக்கிறார்கள், என்ன நயமான அதுவும் திரித்துவம் சம்பந்தமான இடைச்செருகல். 

'இது எபிரெயு கிரேக்கு என்னும் மூல பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது' என்ற முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்கும்,

முதல் பக்கத்திலேயே பிரமாண்டமான பொய்யை அச்சிட்டிருக்கும் தமிழ் வேதாகமத்தின் பெயர்

"பரிசுத்த வேதாகமம்".???

இதற்குத்தான் ஒரேஒரு மொழிபெயர்ப்பை வேதவாக்காக எண்ணினால் இத்தகைய குழப்பங்கள் நேரிடும்...


இன்னும் வரும்....

 



-- Edited by soulsolution on Friday 10th of June 2011 03:09:05 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Newbie

Status: Offline
Posts: 1
Date:
RE: Most misunderstood book/ வேதம் குழப்பத்திற்குரிய புத்தகமா?


பிரியமுள்ள சகோதரருக்கு,

மூல மொழியான கிரேக்க பாஷையிலே இந்த வசனத்தை கீழே கொடுக்கிறேன்,

1John 5:7 : ὅτι τρεῖς εἰσιν οἱ μαρτυροῦντες ἐν τῷ οὐρανῷ, ὁ πατὴρ, ὁ λόγος, καὶ τὸ ἅγιον πνεῦμα καὶ οὗτοι οἱ τρεῖς ἕν εἰσιν

அதன் மொழிபெயர்ப்புகள்,

KJV
For there are three that bear record in heaven, the Father, the Word, and the Holy Ghost: and these three are one.

NKJV
For there are three that bear witness in heaven: the Father, the Word, and the Holy Spirit; and these three are one.


NLT
So we have these three witnesses*—
Footnote:
* A few very late manuscripts add in heaven—the Father, the Word, and the Holy Spirit, and these three are one. And we have three witnesses on earth.

NIV
For there are three that testify:
Footnote:
* Late manuscripts of the Vulgate testify in heaven: the Father, the Word and the Holy Spirit, and these three are one. And there are three that testify on earth: the (not found in any Greek manuscript before the sixteenth century)

ESV
For there are three that testify:

NASB
For there are three that testify:

RSV
And the Spirit is the witness, because the Spirit is the truth.


ASV
And it is the Spirit that beareth witness, because the Spirit is the truth.


YLT
because three are who are testifying [in the heaven, the Father, the Word, and the Holy Spirit, and these -- the three -- are one;


DBY
For they that bear witness are three:


WEB
For there are three that bear testimony in heaven, the Father, the Word, and the Holy Spirit, and these three are one.


HNV
For there are three who testify:

மேலே உள்ள 12 ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 6 ல் "these three are one" என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

மூல மொழியிலும் அப்படியே உள்ளது. உங்கள் மொழிபெயர்ப்புத் திறனில் நீங்கள் சோதித்துப்பார்க்கலாம்.

எதோ நாம் வைக்கிற வாதத்தை நிரூபிக்க வேண்டுமே என்பதில் நீங்கள் காட்டும் அவசரமும் ஆதாரப்பூர்வமற்ற கருத்துக்களையும் தான் அள்ளித்தெளிப்பதையும்தான் உங்கள் பதிவில் காண்கிறேன்.

கிரேக்க மொழியிலேயே இடைச்செருகல் தான் என்று சொல்லப்போகிறீர்களா? நீங்கள் அப்படி சொன்னாலும் ஆச்சரியமில்லை..... இந்த தளமே அரைகுறை வேதஅறிவோடு எழுதப்பட்ட பதிவுகளால் நிரம்பிவழிகிறது... எல்லாருமே ஒருவருக்கொருவர் விரல் நீட்டி கள்ள தீர்க்கதரிசிகள் என்று சொல்லப்படும்போது உண்மையான கள்ள தீர்க்கதரிசிகள் அடையாளம் காணப்படுவது கடினமாகிவிடுகிறது.... இந்த தந்திரத்தை நன்றாகவே கையாளுகிறீர்கள்..... புடமிடும் நாளொன்று வரும் அன்று தெரியும் எது தங்கம் எது வைக்கோல் என்று.....கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.



__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நண்பரே!!

தங்களை இந்த தளத்திற்கு வரவேற்பதில் மகிழ்கிறேன்!!

தங்களின் பதிவை கண்டேன். மகிழ்ச்சி. 1 யோவான் 5:7ல் தாங்கள் கொடுத்தப்படியே அடிகுறிப்பில் (Foot Note) உள்ளது போலவே இந்த வார்த்தைகள் சில கோட்பாடுகளை நிலை நிறுத்த சேர்க்கப்பட்ட வார்த்தைகளாகும்!! ஆகவே இதன் மொழிப்பெயர்ப்பை ஆராய்வதில் ஒரு நண்மையும் இருப்பதாக தெரியவில்லை!! எனினும் தாங்கள் தெரிந்து வைத்திருப்பதை பகிர்ந்துக்கொள்ளுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard