பைபிள் ஏன் மற்ற புத்தகங்களைப்போல இல்லமல் எளிதில் முழுவதும் புரிந்துகொள்ள முடியாத புத்தகமாகக் காணப்படுகிறது? இதை ஏன் கேட்க்கிறேன் என்றால், ஒரே வசனத்திற்கு விதவிதமான விளக்கங்கள் தருகிறார்களே இன்றைய பிரசங்கிமார்கள்.
Why the Bible is not so easily understood book unlike other books? I ask this because, the modern day preachers have different ideas or meaning for the same verse.
வேத வார்த்தைகளின் உண்மையான அர்த்தம் என்னவென்பது தேவனிடத்தில் மட்டுமே உள்ளது. ஆயிரம் பேர் ஆயிரம் சொன்னலும் ஆண்டவர் அதை விளக்கினால் தான் அதன் உண்மை அர்த்தம் புரியும்! அதற்குத்தான் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டிருக்கிறார்.
ஒரு வசனத்துக்கு அருத்தம் தெரிய வேண்டுமானால் "தேவ ஆவியானவேரே எனக்கு இது புரியவில்லை விளக்குங்கள்" என்று மிகுந்த வாஞ்சையோடு மன்றாடினாள் அவர் அதற்க்கு ஏற்ற தரிசனங்களையும் கொடுத்து விளக்குவார்
மனிதர்கள் விளக்கத்தை மற்றும் மூளை அறிவை நம்பி ஏமாறவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இதை தான் எல்லோரும் (ஊழியக்காரர்கள்) சொல்லுகிறார்களே, ஆனால் விளக்கும் போது வித விதமாக விளக்குகிறார்களே!! அப்படி என்றால் அவர்கள் பரிசுத்த ஆவியிடம் கேட்பதில்லையா, அல்லது தாங்கள் பரிசுத்த ஆவி பெற்றவர்கள் என்று அவர்கள் சொல்லுவது தான் பொய்யா? மேலும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், வேதம் தேவனின் வார்த்தை தான், ஆனால் அதை சிலர் மாத்திரமே இப்பொழுது புரிந்துக்கொள்ளும் கிருபையை தேவன் தருகிறார். ஏனென்றால், இதை எல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டாம் என்றே அவர் விருப்பம். இதற்காக வாசியுங்கள் மாற்கு 4:10 முதல் 12 வரை மற்றும் லூக் 8:9.