இவ்வுலகில் ஐசுவரியவான் நன்மைகளை அனுபவித்தான் என்றும், அதற்கு நேர்மாறாக மறுமையில் அவன் தீமைகளை அனுபவித்தான் என்றும் லூக்கா 16:25-ல் பார்க்கிறோம். ஆனால் இதை வைத்து இவ்வுலகில் நன்மை அனுபவித்தால் மறுமையில் தீமைதான் கிடைக்குமென்றோ அல்லது இவ்வுலகில் நன்மையை அனுபவிப்பதுதான் மறுமையில் தீமை அனுபவிப்பதற்குக் காரணம் என்றோ கூறிவிடமுடியாது.
உண்மையில், ஆடம்பர வாழ்வு வாழ்ந்த ஐசுவரியவான் தன் கண்ணெதிரே ஒருவன் ஆகாரத்திற்காக போராடிக் கொண்டிருப்பதை அறிந்தபோதிலும், அதைக் கண்டுகொள்ளமல் சற்றும் இரக்கமின்றி இருந்ததுதான் மறுமையில் அவன் தண்டிக்கப்பட்டதற்கு காரணமாயிருக்க முடியும். இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என யாக்கோபு 2:13 கூறுகிறது.
லாசருவுக்கும், அவனைப் போன்ற எளியவர்களுக்கும் அவன் இரக்கஞ்செய்திருந்தால் அவன் ஓர் ஐசுவரியவானாக இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்காது; அத்தோடு இவ்வுலகில் நன்மைகளை மட்டுமே அவன் அனுபவித்திருக்கவும் முடியாது.
அவனிடம் இரக்கம் இல்லாததால்தான் அவன் ஐசுவரியவனாக இருக்க முடிந்தது, இவ்வுலக நன்மைகளை தாராளமாக அனுபவிக்கவும் முடிந்தது. எனவேதான் இயேசு பின்வருமாறு கூறுகிறார்.
லூக்கா 6:24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ! உங்கள் ஆறுதலை (நன்மைகளை) நீங்கள் அடைந்து தீர்ந்தது.
இன்றைய ஊழியர்கள் கைகளை வைத்து ஜெபித்து விட்டு பின்பு டெட்டால் சோப் போட்டு கைகளை கழுவி பொய் பிரசங்கம் செய்து தேவனை தூஷிக்கிறர்வர்களே, பரலோகத்திற்கு போகும் என்னம் வைத்திருக்கும் போது,
அந்த ஏழை லாசருவை ஒரு வேலை தன்னுடன் தன் மேஜையின் மேல் அமரவிடாமல் இருந்திருக்கலாம், ஆனால் அவரின் மேஜைக்கு கீழ் இடம் கொடுத்த ஐசுவரியவான் எவ்விதத்தில் நரகத்திற்கு தகுதியாகிறான் என்பதை விளக்குங்களேன்! இப்படி தன் மேஜைக்கு கீழ் விழுகும் பருக்கைகளை சாப்பிடும் படி இன்று நாம் கூட ஒரு ஏழை லாசருவை அனுமதிக்க மாட்டோம் என்றே நினைக்கிறேன். அப்படி அனுமதித்த ஐசுவரியாவான் எவ்வுளவோ மேல், ஆனாலும் நரகத்திற்கு போகிறானே! அது எப்படி? மற்றபடி அந்த ஐசுவரியவான் பாவ வாழ்க்கை வாழ்ந்தான் அல்லது பாவத்திலே தான் இருந்தான் என்பது அந்த உவமையில் இல்லையே! பிறகு ஏன்?
இல்லை, அந்த லாசரு தான் ஏதோ பரலோகம் செல்ல தகுதியாகும் படி, இயேசு கிறிஸ்து என்கிற இரட்சிக்கும் நாமத்தை ஏற்றுகொண்டு ஞானஸ்னானம் எடுத்து பரிசுத்தமாக ஜீவீத்தான் என்கிறதற்கு எந்த வரியும் அந்த பகுதியில் இல்லையே, பிறகு எப்படி அவன் பரலோகம் சென்றான்? எல்லாவற்றுக்கும் மேல் நியாயத்தீர்ப்பு நடக்கவில்லை, இயேசு கிறிஸ்து இன்னும் பாவத்திற்காக சிலுவை ஏறவில்லை ஆனால் அதற்குமுன்பே எப்படி தான் லாசரு பரலோகமும், ஐசுவரியவான் நரகமும் சென்றடைந்தார்கள் என்பது தான் புதிராக இருக்கிறது?
இங்கு சொல்லப்பட்ட ஐசுவரியான் ஒரு மனிதனாக, ஏழை லாசரு இன்னோரு மனிதனாகவும் எடுத்துக்கொண்டு, ஆபிரகாமின் மடி பரலோகம் என்றும், ஐசுவரியவான் சென்றது எரி நரகம் என்றும் இன்றைய கள்ள தீர்க்கதரிசிகள் போய் வரும் ஒரு இடம் என்று தப்பாக நினைத்து விடாதீர்கள். இந்த வசன பகுதி ஒரு உவமை, உவமையை உவமையின் தன்மையோடு வாசியுங்கள். புரியும்.
அடுத்த பதிவில் முழு உவமையையும் பதியிறேன். நன்றி
சகோ.பெரியன்ஸ் அவர்களே! இன்றைய ஊழியர்களைவிட (அல்லது நம்மைவிட) ஐசுவரியவான் சிறந்தவனா என்பது கேள்வியல்ல, அதன் அடிப்படையில் ஐசுவரியவானின் தண்டனை தீர்மானமாவதுமல்ல.
ஐசுவரியவான் இரக்கமாயிருந்தானா என்பதுதான் கேள்வி. மேஜைக்கடியில் இடம் கொடுப்பதாலோ அல்லது கீழே சிந்துகிற பருக்கைகளை சாப்பிட அனுமதிப்பதாலோ ஒருவன் இரக்கமுள்ளவனாகிவிட முடியாது.
உண்மையில் ஐசுவரியவானின் சாப்பாட்டு மேஜைக்குக் கீழே லாசரு இருந்ததாக வேதாகமம் கூறவில்லை. வீட்டின் வாசலருகே கிடந்தான் என்றுதான் வசனம் கூறுகிறது. மேலும் மேஜையிலிருந்து விழுந்த பருக்கைகளை அவன் சாப்பிட்டதாகவும் வேதாகமம் கூறவில்லை. அவற்றால் தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான் என்றுதான் வசனம் கூறுகிறது.
அதாவது வாசலருகே கிடந்த லாசருவுக்கு வீட்டினுள் உள்ள மேஜையும் அதிலிருந்து விழுகிற பருக்கைகளும் நன்றாகத் தெரிகிறது, ஆனால் அவற்றை எடுத்து சாப்பிடத்தான் வழியில்லை. இதுதான் லாசருவின் நிலையாக இருந்திருக்கவேண்டும்.
ஆனாலும் நீங்கள் சொன்னபடியே, மேஜையிலிருந்து விழுந்த பருக்கைகளை லாசரு சாப்பிடுவதற்கு ஐசுவரியவான் அனுமதித்ததாகவே வைத்திக்கொள்வோமே. அப்படியிருந்தால்கூட அச்செயல் தேவகற்பனைக்கு எதிரானதுதான்.
எசேக்கியேல் 18:7; ஏசாயா 58:7 மற்றும் மத்தேயு 25:35,42 வசனங்களைப் பாருங்கள். பசித்தவனுக்கு நம் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடாவிடில் நமக்கும் ஐசுவரியவானின் கதிதான் என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
பசித்தவனுக்கு நம் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிற, வஸ்திரமில்லாதவனுக்கு நம் வஸ்திரத்தைக் கொடுக்கிற, தாகமுள்ளவனின் தாகத்தைத் தீர்க்கிறதும் மற்றும் மத்தேயு 25:35,36-ல் கூறப்பட்டுள்ளதுமான இரக்கத்தின் கிரியைகள் நம்மிடம் இருந்தால், ஒருவேளை நாம் பிற பாவங்களைச் செய்தால்கூட, இரக்கஞ்செய்பவனுக்கு இரக்கமான நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என்ற வசனத்தின்படி நம் பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட்டு, ஆக்கினையிலிருந்து நாம் தப்பக்கூடும்.
சக மனிதனுக்கு இரக்கம் பாராட்டவேண்டியது மனிதனின் தலையாய கடமையாகும். எனவேதான் உன்னைப்போல் பிறனிடம் அன்புகூர் எனும் கற்பனையை பிரதான கற்பனைக்கு இணையாக இயேசு கூறினார்.
மனிதனின் தலையாய கடமையிலிருந்து அந்த ஐசுவரியவான் தவறிவிட்டான். அதனால்தான் அவனால் ஐசுவரியவானாக தொடர்ந்து இருக்க முடிந்தது.
லாசருவைப் பொறுத்தவரை மனிதனின் தலையாய கடமையைச் செய்வதற்கான சாத்தியக்கூறு அவனிடம் இருக்கவில்லை. எனவே அக்கடமையைச் செய்யாதவன் என அவன் கருதப்படுவதற்கான வாய்ப்பே இல்லை. எனவே அவனை இரக்கமில்லாதவன் எனக் கூறுவதைவிட, இரக்கமுள்ளவன் என்றுதான் கூறமுடியும். இரக்கமுள்ளவனுக்கு இரக்கமான நியாயதீர்ப்பு கிடைக்கும் எனும் வசனத்தின்படி அவனுக்கு தீர்ப்பு கிடைத்தது.
இது 'உவமை' அல்ல உண்மையென்றால் நிகழும் எல்லாவற்றுக்கும் லாஜிக்காக விளக்கம் தரவேண்டியது வாதிடுபவர்களின் கடமை. உவமை எனும் பட்சம் இதில் குறிப்பிடப்படும் அனைத்திற்குமே நேரடி அர்த்தம் கொள்ளக்கூடாது. ஐசுவரியவான், லாசரு உண்மையில் ஒரு நபர்களைக்குறிப்பதல்ல, துணிக்கை, நாய், பரு, பாதாளம், பிளப்பு, ஆபிரகாம், மோசே இவைகள் யாவுமே வேறொரு அர்த்தம் கொள்பவையாகும். நேரடியாக அர்த்தம் கொள்ளும் பட்சம் குழப்பமே மிஞ்சும். ஏனென்றால் மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள், அங்கு வித்தை, செய்கை, ஞானம் இல்லை.
மேலும் இன்னும் உயிர்த்தெழுதல் நடக்கவில்லை. 'தாவீது பரத்துக்கு எழுந்து போகவில்லை' ஆபிரகாம் எப்படிப் போனார். ஐசுவரியவான் 'நரகத்துக்கு' ஏதுவான பாவம் செய்யவில்லை. வசதியிருந்தால் நாமும் நல்ல உணவு, நல்ல உடைதான் உடுத்துவோம். (நவீனகால hifi பிரசங்கிமார்கள் போல). தரித்திரமும், சொறி நோயும் இருந்தால் பரலோகம் போகலாம் என்ற இன்னொரு போலி உபதேசம் ஆரம்பிக்க ஏதுவாகிவிடும்.