மத். 13:31ல் நம் எஜமானன் இயேசு கிறிஸ்து நமக்கு ஒரு தீர்க்கதரிசன உவமையை சொல்லியிருக்கிறார். இது எப்படி நிறைவேறி வருகிறது என்பதை இந்த உவமையின் விளக்கத்திலிருந்து புரிந்துக்கொள்ளலாம். அதாவது, பரலோக ராஜ்யம் ஒரு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறதாம், அதாவது அந்த அளவு சிறிய ஒரு கூட்டம் தான் பரலோக ராஜ்யத்திற்கான கூட்டம் (நம் பிரசங்கிமார்கள் சொல்லுவது போல், கிறிஸ்தவர்களான அனைவரும் அல்ல), அல்லது பரலோக ராஜ்யத்தில் அவ்வுளவு சிறிய அளவே பூமியிலிருந்து (சபை) செல்லும். ஆக அந்த ராஜியத்திற்கான வித்து ஒரு கடுகை விதையை போல், பூமியில் விதைக்கப்பட்டது, அதாவது, மனிதர்களிடத்தில் பரலோகம் செல்வதற்கான சத்தியம் அறிவிக்கப்பட்டது. கடுகு செடியை அனைவரும் பார்த்திருப்போம். அந்த செடி ஒரு சின்ன (Shrub வகை) செடி தான் என்பதையும் அறிவோம். பிறகு எப்படி செடி மிகவும் பெரிதாக வளர்ந்தது. அது என்ன ஆகாயத்து பறவைகளின் அடைக்களம்? அது தான் இயேசு கிறிஸ்து நமக்கு தீர்க்கதரிசனமாக சொல்லி சென்ற இந்த பூமியில் உள்ள சபையில் நிலை. ஒரு சிறியக்கூட்டம் தான் அந்த பரலோகத்திற்கு தகுதியாகும் சபையாக இந்த பூமியில் இருக்கிறார்கள். ஆனால் இன்று சபையோ, ஒரு பெரிய மரமாக (என்னிக்கை நிறைந்ததாக, உலகத்தில் சுமார் மூண்றில் ஒரு பங்கு இன்று கிறிஸ்தவர்கள் என்பது நாம் அறிந்ததே) இருக்கிறது. பல விதமான பிசாசின் (ஆகாயத்து பறவைகள்) உபதேசங்கள், மனிதர்களின் துருபதேசங்கள் ஆகியவை இன்று சபைக்குள் நுழைந்து, ஒரு சிறிய கடுகு செடி போல் இருக்க வேண்டிய சபை இன்று ஒரு பெரிய மரமாக நிற்கிறது என்று மீட்பர் சொன்ன இந்த உவமையின் விளக்கம். அந்த சிறிய கூட்டத்தில் நுழைய பிரயாசிப்போமே.