பரலோகம் சுத்தி பார்த்துவிட்டு வரலாம் வாருங்கள் என்று டிக்கட் கொடுக்காத குறையாக இன்றைய பிரசங்கிமார்களின் மேடை பேச்சைக் கண்டு வியந்து போனேன். ஒரு பிரபலமான கிறிஸ்தவ தொலைக்காட்சியில் காலையில் இருவர் வந்து அமர்ந்து அவர்கள் பரலோகம் சென்று வந்ததை ஏதோ அமேரிக்காவிற்கு சென்று வருவதை போல் பேசுவார்கள். வேதத்தில் பவுல் தனக்கு கிடைத்த மூன்றாம் வானத்தின் தரிசனத்தை (இன்றைய பிரசங்கிமார்கள் அல்லது ஊழியர்கள் என்று தாங்களே தங்களை கூறிக்கொள்பவர்கள், இந்த மூண்றாம் வானம் என்பது தான் பரலோகம் என்று நினைத்து இருக்கிறார்கள் போல்) சுமார் 14 வருடங்கள் சென்ற பிறகு மிகவும் தாழ்மையுடன் சொல்லியிருப்பதை வாசிக்கலாம் ( 2 கொரி. 12ம் அதிகாரத்தில்). ஆனால் இந்த டீ.வீயில் தோன்றும் இரு ஊழியர்கள் (!!) ஏதோ பரலோகம் சென்று வருவது அல்வா சாப்பிடுவது போன்ற ஒரு காரியமாக பேசி வருவதை நாம் பார்க்க முடியும். பவுலுக்கு உண்டான ஒரு தரிசனத்தை இவர்கள் தாங்கள் பரலோகம் சென்று வருவதற்கு சாதகமாக பயன் படுத்துகிறார்கள். இப்படிபட்ட கள்ள தீர்க்கதரிசிகளிடம் கிறிஸ்தவம் எச்சரிக்கையாக இருக்கட்டும். இப்படி பரலோகம் போய் வருவதை குறித்து தள நண்பர்கள் பகிர்வை எதிர்ப்பார்க்கிறேன்.
பரலோகம் அல்லது மேல்லோகம் என்று ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது என்று எப்படி எடுத்துக்கொள்ள முடியும் சகோதரரே?
என் பிதாவிடத்தில் அனேக வாசஸ்தலங்கள் உள்ளது என்று இயேசு குறிப்பிட்டுள்ளாரே
எலியா சுழல்காற்றில் பரலோகத்து ஏறிப்போனான் என்று வேதம் கூறுகிறது அதே நேரத்தில் பரலோகத்திலிருந்து இறங்கியவரும் ...............மனுஷ குமரநேயன்றி பரலோகத்துக்கு ஏறியவன் ஒருவருமில்லை என்றும் வேதம் கூறுகிறது
எனவே பலவிதமான பரலோகம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன்.
பரலோகம் என்பது கட்டிடங்கள் அல்ல சகோதரரே, அது தேவனோடு இருக்கும் ஆவிக்குரிய ஒரு நிலை (status). அந்த ஆவிக்குரிய நிலையிலிருந்து தான் ஆதியிலிருந்து வார்த்தையாக இருந்த இயேசு கிறிஸ்து மாம்சமாக வந்தார். இந்த பரலோகம் சென்று வருபவர்கள் எங்கே போய் வருகிறார்கள் என்பது அவர்களுக்கு மாத்திரமே தெரிந்த ஒரு காரியம். பவுல் சொன்ன அந்த மூண்றாம் வானம் என்பது பரலோகமே அல்ல, அதை பரதீசு என்கிறார், பரதீசு என்றால் பார்சீக வார்த்தை அதற்கு அர்த்தம் தோட்டம் என்று மொழி தெரிந்தவர்கள் அனைவரும் சொல்லுவார்கள். பாரதீசிற்கும் பரலோகத்திற்கும் சம்பந்தமே இல்லை. பரதீசிலிருப்பவர்கள் பூமிக்குறிய மேனியுடனும், பரலோகத்திலிருப்பவர்கள் ஆவிக்குறிய மேனியுடனும் இருப்பார்கள். ஆக பவுல் பார்த்தது பரதீசை தான் பரலோகத்தை இல்லை என்பதை பரலோகம் சென்று வந்து பவுலை எடுத்துக்காட்டாக சொல்லுபவர்கள் அனைவரும் இதன் மூலம் தெரிந்து கொள்ளட்டும். பவுல் பார்த்தது அந்த பரதீசின் காட்சிகளை, அதை மனித வார்த்தைகளில் விவரிக்க முடியாத படி இருந்ததாக சொல்லுகிறார், ஏனென்றால், இப்பொழுது பூமியில் இருக்கும் நிலைக்கு மாற்றாக அந்த பரதீசின் நிலை இருக்கும், அதை மனிதர்களிடம் சொன்னாலும் அதை கற்பனை செய்து கொள்ள முடியாத ஒரு இடமாக தான் பரதீசி இருக்கிறது என்பதை தான் பவுல் சொல்லுகிறார். பரலோகம் சென்று வந்திருந்தால் அவர் அங்கு தேவனை அல்லவா தரிசித்து வந்து இருக்க வேண்டும்.
மேலும் வாசஸ்தலம் என்பது மனிதர்கள் புரிந்துக்கொள்ளும் படியாக உபயோகப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. இப்பொழுதும், ஒருவரின் வீட்டை வைத்து அவரின் அந்தஸ்தை சொல்ல் முடியும். அப்படியே, ஆவிக்குறிய ஜீவிகளிடமும் அந்த்க வித்தியாசம் உண்டு. முதலாவது, தேவன், அடுத்து உயிர்ப்பிக்கப்பட்ட இயேசு கிறிஸ்து, பிறகு பிரதான தூதர்கள், அடுத்து சேராபீன்கள், கேராபீன்கள், அதன் பிறகு கோடாகோடி தூதர்கள் கூட்டம். பணிவிடையின் ஆவீகள் ஆகும். இந்த வரிசையை புரிந்துக்கொள்ளவே அவர் வாசஸ்தலம் என்கிறார். இயேசு கிறிஸ்து பரலோகம் சென்று அவர் இருக்கும் அந்த நிலையை அவரின் சபை அடையும்ப்படி தேவனிடத்தில் இடத்தை ஆயத்தம் செய்து திரும்புவேன் என்கிறார். அதாவது அவரின் சபை தேவனிற்கு அடுத்த நிலையில் இருக்க அவர் ஏற்பாடு செய்திருக்கிறார். "நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிரியவனாக்கினீர், மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடி சூட்டினீர்" சங். 8:5, என்கிற தாவீதின் சங்கீதத்தை நினைவுப்படுத்துங்கள்.மனிதன் தேவதூதர்களிலும் சிரியவனாக இருந்தாலும், மகிமையில் அவர்களைப் காட்டிலும் மேலான ஒரு இடம் உண்டு என்கிறார். இந்த அந்தஸ்து தான் வாசஸ்தலம், மற்றப்படி அங்கு கட்டிடங்களோ, மாளிகைகளோ கிடையாது. (ஆவியாக மறுரூபமாக இருப்பதற்கு ஏன் கட்டிடங்கள்?!)