kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மத். 27:51-53


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
மத். 27:51-53


மத். 27:51-53ல் உள்ள வசனங்கள், இயேசு கிறிஸ்துவின் மரணத்தை ஒட்டிய சம்பவங்கள் என்று நாம் அறிந்திருக்கிறோம், ஆனால் அந்த வசனங்களை புறிந்துக்கொல்ளுவதில் தான் தவறுகிறோம். முதலாவது தேவாலய திரைச்சீலை இரண்டாக கிழிவதும், பிறகு பூமி அதிர்ச்சியும், அதை தொடர்ந்து கன்மலைகள் (பாறைகள்) பிளந்ததையும், பின்பு கல்லறைகள் திறக்கப்பட்டு, மரித்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்கள் எழுந்திருப்பதையும் நாம் வாசிக்கிறோம். இவை எல்லாம் உன்னதமான தேவனின் குமாரனான இயேசு கிறிஸ்து மரித்த போது சாட்சியாக சம்பவித்தத காரியங்கள். 

    இவைகளின் ஆவிக்குரிய அர்த்தங்களை பார்த்தோமென்றால், பூமி அதிர்ச்சி, விரைவில் யூதேயாவில் ரோம அரசால் ஏற்பட போகும் பேறலிவை குறிக்கும். வெளி. 8:5ல் உள்ள பூமி அதிர்ச்சியுடன் ஒப்பீட்டு பாருங்கள்.  தேவாலயத்தில் உள்ள திரைச்சீலை இயேசுவின் மாம்சத்திற்கு ஒப்பீடாகும், அந்த மாம்சம் கொடுக்கப்பட்டதினால் நமக்கு ஒரு புதிய வழியை ஏற்பட்டது (எபி. 10:20). கல்லறைகள் திறக்கப்பட்டு, சரீரங்கள் வெளிவந்தது அனைவரின் உயிர்த்தெழுதலிற்கு அடையாலம் (யோவான் 5:28).

     53ம் வசனம், நம்மை சற்றே குழப்பமடைய செய்கிறது, அதாவது வெளியே வ‌ந்த‌ ச‌ரீர‌ங்க‌ள் உயிர் அடைந்து யேருச‌லேமில் கான‌ப்ப‌ட்ட‌து என்று வாசிக்கிறோம். இது த‌ப்பித‌மான‌ ஒரு மொழிப்பெய‌ர்ப்பின் மொழிப்பெய‌ர்ப்பாகும். முறையான‌ வார்த்தைக்கு ‍வார்த்தை மொழிப்பெய‌ர்க்க‌ப்ப‌ட்ட‌ Kingdom Interlinear மொழிப்பெய‌ர்ப்பிலிருந்து,

"And the tombs were opened and many bodies of the having fallen asleep holy (ones) were raised up, and having gone forth out of the tombs after the being raised up of him (Jesus), they entered into the holy city and they were made apparent to many".

     இத‌ன் அர்த்த‌ம்,

"இயேசு கிறிஸ்து ம‌ரித்த‌ போது ஏற்ப‌ட்ட‌ பூமி அதிர்ச்சியினால், க‌ல்ல‌றைக‌ளில் இருந்து ம‌ரித்தோரின் ச‌ரீர‌ங்க‌ள் க‌ல்ல‌றையை விட்டு வெளி வ‌ந்து விட்ட‌து (பூமி அதிர்சியினால் வீசி ஏறிய‌ப்ப‌ட்ட‌து), இந்த‌ ச‌ரீர்ங்க‌ள் யெருச‌லேமிற்கு அருகாமையில் இருந்த‌ க‌ல்ல‌ற‌க‌ளில் அட‌க்க‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌ புனித‌ர்க‌ளின் ஆகும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுத‌லின் போது, அதாவ‌து அன்று ஞாயிறு காலையாக‌ ‌ இருந்த‌ப்ப‌டியால் ஓய்வு நாளை முடித்து திரும்பி யெருச‌லேமுக்கு திரும்பும் வ‌ழியிலே யூத‌ர்க‌ள் இப்ப‌டியாக‌ ச‌ரீர‌ங்க‌ள் வெளிவ‌ந்து கிட‌ந்த‌தை பார்த்து, ந‌க‌ர‌த்திற்குள் போய் அவ‌ர்க‌ள் க‌ண்ட‌தை சொன்னார்கள்.

க‌வ‌னிக்க‌ வேண்டிய‌து,
1.  யார் யெருச‌லேமுக்குள் வ‌ந்தார்க‌ள்? ஓய்வு நாள் முடித்து வ‌ழ‌க்க‌மான‌ வியாபார‌த்திற்கு யெருச‌லேம் ந‌க‌ருக்குள் வ‌ந்த‌ யூத‌ர்க‌ளே அவ‌ர்கள் (மரித்து வீசப்பட்ட சரீரங்கள் அல்ல‌!)

2.  இந்த‌ ச‌ரீர‌ங்க‌ள் வெளியே வ‌ந்த‌து (உயிருடன் அல்ல, சடலங்களாகவே தான்) ஞாயிற்று கிழ‌மையில் அல்ல‌, வெளிக்கிழ‌மையில். மேலும் பூமி அதிர்ச்சியினால் அந்த‌ ச‌ரீர‌ங்க‌ள் வெளியேறிய‌து த‌விற‌ உயிர்பெற்று அல்ல‌

3.  இயேசு கிறிஸ்துவே உயிர்த்தெழுத‌லின் முத‌ல் ப‌ல‌னானார் என்கிற‌து வேத‌ம் (1 கொரி 15:20).

ஆக வேதத்தின் வெளிச்சத்திலே நாம் வசனங்களை ஆறாய்ந்து பார்ப்போம், மனிதனின் ஞானத்தில் அல்ல‌.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

என் மனதில் நெடுநாட்கள் இருந்த ஒரு கேள்விக்கு சகோ.பெரியன்ஸ் ஓரளவு விளக்கம் தந்துள்ளார்.

இயேசு மரித்தபோது சில சரீரங்கள் உயிர்த்தெழுந்து பலருக்கு காணப்பட்டதாக மொட்டையாக ஒரு தகவலை மத்தேயு 27:52,53 வசனங்கள் தருகின்றனவே, அப்படி அவர்கள் உயிர்த்தெழுந்திருந்தால் ஜனங்கள் மத்தியில் எவ்வளவு குழப்பங்கள் உண்டாயிருக்கும், உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களிடம் ஜனங்கள் கேள்விகேட்டு துளைத்திருப்பார்களே, அது பற்றிய தகவல் இல்லையே, உயிர்த்தெழுந்த அவர்கள் மீண்டும் மரித்தார்களா, ஆம் எனில் எப்போது மரித்தார்கள், இது பற்றியெல்லாம் தகவல் இல்லையே என பல கேள்விகள் என் மனதில் எழுந்தன. என் கேள்விக்ளுக்கு சகோ.பெரியன்ஸ் மூலம் ஓரளவு விடை கிடைத்துள்ளது.

ஆயினும், யூதர்கள்தான் எருசலேம் சென்றனர் என்பதற்கான விளக்கத்தை இன்னும் தெளிவான தகவலுடன் கொடுத்தால் நன்றாயிருக்கும்.

சகோ.பெரியன்ஸ் அவர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கிறேன்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

 

"And the tombs were opened and many bodies of the having fallen asleep holy (ones) were raised up, and having gone forth out of the tombs after the being raised up of him (Jesus), they entered into the holy city and they were made apparent to many".

     இத‌ன் அர்த்த‌ம்,

"இயேசு கிறிஸ்து ம‌ரித்த‌ போது ஏற்ப‌ட்ட‌ பூமி அதிர்ச்சியினால், க‌ல்ல‌றைக‌ளில் இருந்து ம‌ரித்தோரின் ச‌ரீர‌ங்க‌ள் க‌ல்ல‌றையை விட்டு வெளி வ‌ந்து விட்ட‌து (பூமி அதிர்சியினால் வீசி ஏறிய‌ப்ப‌ட்ட‌து), இந்த‌ ச‌ரீர்ங்க‌ள் யெருச‌லேமிற்கு அருகாமையில் இருந்த‌ க‌ல்ல‌ற‌க‌ளில் அட‌க்க‌ம் ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌ புனித‌ர்க‌ளின் ஆகும், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுத‌லின் போது, அதாவ‌து அன்று ஞாயிறு காலையாக‌ ‌ இருந்த‌ப்ப‌டியால் ஓய்வு நாளை முடித்து திரும்பி யெருச‌லேமுக்கு திரும்பும் வ‌ழியிலே யூத‌ர்க‌ள் இப்ப‌டியாக‌ ச‌ரீர‌ங்க‌ள் வெளிவ‌ந்து கிட‌ந்த‌தை பார்த்து, ந‌க‌ர‌த்திற்குள் போய் அவ‌ர்க‌ள் க‌ண்ட‌தை சொன்னார்கள்.

 


நான் சுட்டிகாட்ட விரும்பும் எந்தெந்த வசனம் தங்களின் கருத்துகளுக்கு முரபாடாக இருக்கிறதோ அந்த வசனங்கள் எல்லாம் தப்பிதமான மொழிபெயர்ப்பு அல்லது ஆவிக்குரிய அருத்தம் என்று ஏதாவது சொல்லி மாற்றிவிடுகிறீர்கள்.

51. அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது,

தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்துக்கும் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையே உள்ள திரைசீலை இரண்டாக கிழிந்து பிரதான ஆசாரியன் மட்டுமல்ல எல்லோருமே தேவனிடம் நேரடியாக பேசமுடியும் என்ற நிலை ஏற்ப்பட்டது

பூமியும் அதிர்ந்தது கன்மலைகளும் பிளந்தது.

மிகப்பெரிய பூமி அதிர்ச்சி உண்டாகி மலைகள் எல்லாம் பிளந்தன

52. கல்லறைகளும் திறந்தது, நித்திரை அடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
53. அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள்

பழைய ஏற்ப்பட்டு பரிசுத்தவான்கள் எல்லோரும் பாவத்துக்காக இயேசு மரிக்கும் வரை யாரும் பரலோகம் செல்ல முடியாமல்  பூமியில் எதோ ஒரு இடத்தில் நித்திரை நிலையில் இருந்தார்கள். (சாமுவேலின் சரித்திரத்தை பார்க்க) இயேசு மரித்து உயிர்த்தும் அவர்கள் கல்லறையிலிருந்து எழுது பலருக்கு காணப்பட்டார்கள்.      

மிக தெளிவான ஒரு வசனத்தை எப்படியெல்லாம் மாற்ற முடியும் என்பதை தங்கள் பதிவு மூலம் அறிய முடிகிறது!

பரிசுத்தவான்களின் சடலம் மட்டும் ஏன் வெளியே வந்து விழுந்தது? மற்றவர்கள் சடலம் என்னானது?
எத்தனை காலத்துக்கு முன்னோ அடக்கம் பண்னபட்டவர்கள் சடலமாக அப்படியே இருந்தார்களா?  
 
raised up, என்னும் எழுந்து  வருதலுல்  தூக்கி வீசப்பட்டது என்கிறீர்கள்
தேவதூதனும் தேவகுமாரனும் ஓன்று என்கிறீர்கள்
CREATION (சிருஷ்டித்ல்) என்னும் புதியதாக உருவாக்குவதையும் FORMATION என்னும் படைத்தலும் ஓன்று என்கிறீர்கள்  
பாதாளம் என்றால் குழி என்கிறீர்கள் "பாதாளத்தினுள் இருந்து அவனோடு பேசுவார்கள்" என்றோ அல்லது பாதாளத்தில் நிந்தையை சுமந்துகொண்டு இருக்கிறார்கள் என்றோ" சொல்லும் வசனத்துக்கு
என்ன அருத்தம் புரியவில்லை.
எரிநரகம் என்றால் எருசலேமின் குப்பை மேடு என்கிறீர்கள்  

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் எல்லோருமே இந்த தவறான மொழி பெயர்ப்புகளை வைத்து வேஸ்டாக வாழ்ந்துவிட்டனர்.   புது அகராதி ஒற்றை தயார் பண்ணுங்கள் பலருக்கு பயனுள்ளதாக இருக்கும்

 

 



-- Edited by RAAJ on Thursday 5th of November 2009 02:35:04 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ராஜ் அவர்களின் கோபம் நியாயமானதாக தான் இருக்கும், ஏனென்றால், பெரும் ஊழியக்காரர்கள்!! எல்லாம் ஒரு வேளை இந்த வசனத்திற்கு அவர்களின் தரிசனங்கள் மூலமாக பதில் தந்திருக்கலாம், ஆனால் இந்த தளத்தில் நாங்கள் எங்கள் சொந்த கற்பனையை உபயோகிப்பது கிடையாது. பல மொழிப்பெயர்ப்புகளை ஆராய்ந்து பார்த்து தான் எழுதுகிறோம். ஒரே ஒரு மொழிப்பெயர்ப்பை வைத்து கொண்டு இது தான் வேதம், இந்த வேதத்தில் வார்த்தைகளை கூட்டவோ, குறைக்கவோ கூடாது என்று நாங்கள் நிச்சயமாக சொல்லுவது இல்லை, ஏனென்றால் ஏற்கனவே, இந்த பரிசுத்த வேதாகமத்தில் சேர்க்க வேண்டியவைகள் எல்லாம் சேர்த்தாகி விட்டது. சேர்த்துக்கொண்ட ஒரு புத்தகத்தை வைத்து அதில் உள்ள பாதி தமிழ் மீதி சமஸ்குரித வார்த்தைகளை வைத்து, பரிசுத்த ஆவி என்கிற பெயரில் எல்லாம் தெரிந்து தான் போதிக்கிறோம் என்று சொல்லுகிற கூட்டத்தில் நாங்கள் இல்லை.

வேதத்தை வாசித்து இன்றும் ஆராய்ந்துக்கொண்டு தான் இருக்கிறோம். இன்னும் புலப்படாத பல விஷயங்கள் வேதத்தில் இருக்கிறது. தேவன் அவருக்கு ஏற்ற காலத்தில் தான் அனைத்தையும் வெளிப்படுத்துவார். அது வரையில் கணவுகள், காட்சிகள் மூலமாக நாங்கள் அதை பார்க்க பிரயாசிப்பதில்லை, தேவன் அப்படி காண்பிக்கவும் மாட்டார். (ஏசா. 64:4)

ஏன் பரிசுத்தவான்களின் கல்லறைகள் என்பதற்கு என் விளக்கப் பகுதியில் இருக்கிறது. மற்றவர்களின் கல்லறைகள் இப்படி பட்டினத்திற்குள் இருக்காது, மேலும் மற்ற ஆனாதை பினங்கள் எல்லம் "கெஹென்னா"விற்குள் (இது தான் நம் ஊழியர்களின் எரி நரகம்) போட்டு எரித்து விடுவார்கள்.

இந்த பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுதுவிட்டார்கள் என்று எடுத்துக்கொண்டால், பிற்பாடு பவுல் எழுதியதும் பேதுரு எழுதியதும் தவறாக இருக்குமே என்றெல்லாம் யோசிக்கவில்லையா? (2தீமோ2:18; அப்.2:34).

"மிக தெளிவான ஒரு வசனத்தை எப்படியெல்லாம் மாற்ற முடியும் என்பதை தங்கள் பதிவு மூலம் அறிய முடிகிறது!"

ச‌கோ ராஜ் அவ‌ர்க‌ளே, த‌ங்க‌ளின் தெளிவான‌ விள‌க்க‌த்தை ப‌தியும் ப‌டி கேட்டுக்கொள்கிறேன். ஆனால் அன்று ந‌ட‌ந்த‌து உயிர்த்தெழுத‌ல் என்று எழுதுவ‌த‌ற்கு முன்பு மேலே உள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளையும் வாசித்து விடுங்க‌ள்.

நான் ஆங்கிள‌த்தில் கொடுத்த‌ அந்த‌ வ‌ச‌ன‌ம், அப்ப‌டியே கிரேக்க‌ மொழியில் உள்ள‌தை ஆங்கிள‌ மொழியில் வார்த்தைக்கு வார்த்தை அப்படியே மொழிப்பெயர்க்கப்பட்ட ஒரு மொழிபெய‌ர்ப்பு.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard