திருச்சபையாருக்கு இக்காலத்திலே கொடுக்கப்பட்ட அழைப்பானது இவர்கள் தங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து இதன் மூலம் உபத்திரவங்களை வருவித்து அந்த உபத்திரவங்களை நீதியின் நிமித்தம் பொறுமையுடன் சகித்து சகோதர அன்பை இரக்கத்துடன் துன்பப்படுத்தினவர்களிடமும் சகல மனிதரிடமும் காண்பிக்கவே.
இதனால் தங்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டப் பரிசைக் காணும் யாவரும் தேவனின் மகிமையான ஒளி இயேசு கிறிஸ்துவின் முகத்தில் பிரகாசித்ததைக் காணும் போது தாங்களும் அவர் மூலம் அழைக்கப்பட்டதை உணர்ந்து அந்த அழைப்பைக் காத்துக் கொள்ளவேண்டும்.
ஊழியத்தில் அதிக அக்கறை காட்டி எதிர்ப்புகளினிமித்தம் சோர்ந்து போகாமல் நம்மைக் குறித்துத் தீதான வார்த்தைகளைப்பேசினாலும், தீமைகளைச் செய்ய நினைத்தாலும் தைரியத்துடன் தளராமல் நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிறோம் என்று எண்ணி அவர் சம்பத்தைச் சேர்க்கும் காலத்தில் மணிகளாக விளங்க வேண்டும். ( யோவான், 12:35-38; ரோமர், 10:16-20)