"ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்." (எபேசியர், 5: 8 -10)
சத்தியத்தின் மூலமாக தேவனுக்கு பரிசுத்தமுள்ளவர்களாக நாம் இருப்போமேயானால் நம் சுய சித்தத்திற்கு நாம் மரித்தவர்களாக இருந்து தேவ சித்தத்தை வார்த்தையிலும், செய்கையிலும், சிந்தனையிலும் முற்றிலுமாக நாம் அங்கீகரித்தவர்களுமாக ஜீவிப்போம்.
இதன் மூலமாக நாம் சகலத்தையும் மேற்கொண்டு தேவ சித்தத்தை நிறைவேற்றும் போது சத்தியத்தின் நிமித்தம் நாம் இரத்த சாட்சிகளாக மரிக்காதிருந்தாலும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசை பெறுவோம்.
"நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது," என்ற இந்த வார்த்தையை நாம் எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த சத்திய வார்த்தை ஒருவருக்கும் மறைபொருளாய் இருக்க வேண்டாம். இது நம் ஜீவனின் பாதையை போதித்து காட்டி தேவ சித்தம் நம் சித்தமாக இருக்கச் செய்கிறது. (எபேசியர்,2:10-13; ரோமர், 12:2)