"அறுப்புக் காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி கோதுமையை ...... என் சேர்த்து வையுங்கள் என்பேன்" ( மத்தேயு, 13:30)
நேரம் குறைவாக உள்ளது. அறுப்போ மிகுதி, வேலயாட்களோ குறைவு. ந்ம்முடைய நேரத்தை நாம் தேவனுக்குத் தத்தம் செய்திருக்கிறோம். ஆதலால் இரவு வருமுன் பகலிலே நாம் வேலை செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். இருளிலே ஒருவனும் வேலை செய்யக்கூடாததாயிருக்கும்.
மரண பரியந்தம் நாம் நம்மை தேவனுக்கென்று தத்தம் செய்துள்ளதால் அறுப்பின் அதிபதி கோதுமை மணிகளை தம் களஞ்சியத்தில் சேர்க்கும்படி நம்மை அழைக்கிறார்.
காலம் குறுகியதாயிருக்கும் போது உலக காரியங்களுக்கும், உல்லாச வாழ்க்கைக்கும் நமக்கு நேரம் உண்டா?
இவைகளில் நாம் சிறிதும் விருப்பம் காட்டாமல் நம் பாதையை நோக்கி முன்னேறி தேவ ஊழியத்தில் அதிகமாகவே ஈடுபடவே பிரயாசப்பட வேண்டும்.
இதன் மூலமாக மட்டுமே உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே எஜமானின் சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று எஜமானால் அழைக்கப்பட பாத்திரராக இருப்போம். (மத்தேயு, 13: 38 43)