இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் என்று சொல்லும்போது ஒருவருடைய குணத்தையோ, வார்த்தையையோ, சிந்தனைகளையோ குறிக்காமல் சகலத்தையும் பூரணமாக செய்ய வேண்டும் என்னும் நோக்கம் அவனுக்குள் இருப்பதையே குறிப்பதாகும்.
நம் சிந்தனையும், வார்த்தையும், செய்கையும் பூரணப்பட்டதாக காணப்பட வேண்டும் என்பதே நம் வாஞ்சையாக காணப்படவேண்டும்.
பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல நீங்களும் இருங்கள் என்று இயேசு சொன்னது போல அந்த தெய்வீக நிலைக்கு ஒத்ததாக நம் சிந்தனை யாவும் இருக்க வேண்டும்.
தேவன் நமக்குக் கீழான நிலையை வைக்காமல் கிறிஸ்துவின் மூலம் கிருபையும், இரக்கமும், சமாதானமும் தந்திருக்கிறார்.
அவருடைய அடிச்சுவடுகளை நாம் பின்பற்றி நடப்போமேயானால் குறுகிய பாதையில் நடக்க சுத்த இருதயமுள்ளவர்களாக இருப்போம். ( 1 யோவான், 3:2-3; எபிரெயர், 12:14)