புதிய சிருஷ்டிகள் முத்தரிக்கப்படுவதென்பது பரிசுத்த ஆவியை அவர்கள் தங்களிலே பெற்றிருப்பதைக் குறிக்கும். இந்த பரிசுத்தாவியை வெளிப்படையாக மூன்று வழிகளில் காட்டலாம்:
1. தேவன் பேரில் அன்புள்ளவர்களாக இருந்து, அவர் நிமித்தமாக உபத்திரவங்களில் சந்தோஷப்படுதல்
2. சகோதரரிடம் அன்பு காட்டுதல் இந்த அன்பு சுத்தமுள்ளதாகவும், தன்னலமற்றதாகவும், பெருந்தன்மை பொருந்தினதாகவுமிருந்து நன்மை செய்யவும், அவர்கள் நல் வாழ்க்கையில் பிரியமுள்ளவர்களாகவும் காணப்படவும் வேண்டும்
3. அன்பு உலகத்தாரிடையேயும் இரக்கம் காட்டுகிறதாக இருந்து சமயம் வாய்க்கும் போது நன்மையான காரியங்களைச் செய்து சகலருடனும் சமாதானமாக இருக்க முயற்சிக்கச் செய்யும். ( ரோமர், 12:13 - 18 )