"விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும் அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர் என்றும் விசுவாசிக்க வேண்டும்" - எபிரெயர், 11:6
உன் விசுவாசத்தின்படி உனக்கு ஆகக்கடவது என்று நம் இரட்சகர் சொன்ன வார்த்தை கிறிஸ்தவ ஜீவியத்தில் தம் சீஷர்களிடையே அவர் உபயோகித்து வந்த ஓர் முறை.
விசுவாசத்தில் நாம் தளர்ந்து போனவர்களாகக் காணப்படும்போதும் ஆவிக்குரிய வழிகளில் விசுவாசக்குறைவு ஏற்படும்போதும் தற்கால சம்பவங்கள் நம் விசுவாசத்திற்கு எதிர்த்து நிற்கக்கூடியதாக இருந்தாலும் நாம் தேவனிடம் விசுவாசமுள்ளவர்களாயிராவிட்டால் பயனற்றதாயிருக்கும். தேவனிடம் பூரண விசுவாசமுள்ளவர்களாக நாம் அவர் ஜனமென்றும் அவர் நம்மை சகல கஷ்டங்களிலும், உபத்திரவங்களிலும் காப்பார் என்றும் அவர் வாக்குத்தத்தங்களில் விசுவாசமாக இருந்தால் உலகத்தை மேற்கொள்ளுவோம்.