kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் இயேசு கிறிஸ்துவை கண்டேன்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நான் இயேசு கிறிஸ்துவை கண்டேன்!!


காலை எழுந்து தொலைக்காட்சி பெட்டியின் முன்னால் உட்கார்ந்தால், நம் கிறிஸ்தவ சேனல்கல் அநேகமாக கான முடிகிறது. நல்லது தான். ஆனால் உண்மையை பிரசங்கம் செய்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

     எந்த நிகழ்சியை பார்த்தாலும் வரும் பிரசங்கிமார்கள் அன்றைக்கோ, அதன் முந்தின இரவிலோ அல்லது ஒரு மாதம் முன்போ, ஒரு வருடம் முன்போ, கண்டிப்பாக இயேசு கிறிஸ்துவை தங்களின் மாம்சக்கண்களால் கண்டவர்களாக சொல்லுகிறார்கள். இது சத்தியத்திற்கு புறம்பான ஒரு போதனையாக இருக்கிறது. 2 கொரி 5:16ன் படி, "இனி ஒரு போதும் இயேசு கிறிஸ்துவை மாம்சத்தில் அறியோம்" என்கிறார் பவுல் அப்போஸ்தலர். நாம் மறுரூபமாகும் போது (அதாவது மரித்து ஆவிக்குறிய ரூபத்தில் உயிர்த்தெழுந்தோமென்றால்) இயேசு கிறிஸ்துவை போல் ஆவோம், அப்போழுது அவரை முகமுகமாக காண்போம் என்கிறார் யோவான் (1யோவான் 3:2). இயேசு கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்த பிறகு இரண்டு பேர் மாத்திரமே வேதத்தில் அவரை கண்டார்கள்.

1. பவுல். ஆனால் பார்த்த மாத்திரத்திலே அவர் மூன்று நாட்கள் குறுடாகி போனார்.

2. யோவான். இவர் வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசு கிறிஸ்துவின் தரிசனத்தை கண்டவுடனே, செத்தவனை போல் விழுந்தார் என்று எழுதுகிறார்.

    இதற்கு மேல் வேறு ஒருவர் பரலோகம் சென்ற இயேசு கிறிஸ்துவை கண்டோம் என்று வேதம் சொல்லுவதில்லை. ஆனால் இன்றைய self made ministers (சொந்தமாக தங்களையே ஊழியர்கள் என்று ஏற்படுத்திக்கொண்டு) அவர்கள் வாய் போக்கில் கதைகள் சொல்லி வறுகிறார்கள். கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, இப்ப‌டி ப‌ட்ட‌ க‌ள்ள‌ போத‌க‌ர்க‌ளிட‌ம் எச்ச‌ரிக்கையாக‌ இருப்போம்.

இந்த‌ த‌லைப்பை குறித்து த‌ள‌ ந‌ன்ப‌ர்க‌ள் ப‌கிர்ந்துக் கொள்ள‌லாமே.



-- Edited by bereans on Wednesday 17th of June 2009 04:06:12 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

 இயேசு கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்த பிறகு இரண்டு பேர் மாத்திரமே வேதத்தில் அவரை கண்டார்கள்.

1. பவுல். ஆனால் பார்த்த மாத்திரத்திலே அவர் மூன்று நாட்கள் குறுடாகி போனார்.

2. யோவான். இவர் வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசு கிறிஸ்துவின் தரிசனத்தை கண்டவுடனே, செத்தவனை போல் விழுந்தார் என்று எழுதுகிறார்.

    இதற்கு மேல் வேறு ஒருவர் பரலோகம் சென்ற இயேசு கிறிஸ்துவை கண்டோம் என்று வேதம் சொல்லுவதில்லை. ஆனால் இன்றைய self made ministers (சொந்தமாக தங்களையே ஊழியர்கள் என்று ஏற்படுத்திக்கொண்டு) அவர்கள் வாய் போக்கில் கதைகள் சொல்லி வறுகிறார்கள். கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, இப்ப‌டி ப‌ட்ட‌ க‌ள்ள‌ போத‌க‌ர்க‌ளிட‌ம் எச்ச‌ரிக்கையாக‌ இருப்போம்.

 



இயேசு ஆவியாக் உயிர்தெளுந்தபிறகு மகதலேனா மரியாள் சீசர்கள் மற்றும்  அநேகருக்கு காட்சி தந்துள்ளாரே!  சீடர்களுடன் சேர்ந்து அப்பமும் மீனும் புசித்திருக்கிராரே!  இவர்கள் அவரை மாமிசத்தில் பார்த்தார்கள என்றால் ஆம் என்றே சொல்லவேண்டும்! ஏனெனில் தோமா அவரை தொட்டு பார்த்துள்ளார் மற்றும் இயேசுவே நீங்கள் பார்ப்பதுபோல் மாமிசமும் சதையும் ஆவிக்கு இருக்காதே என்றும் குறிப்பிட்டுள்ளார் அனால் அவர் பூட்டிய வீட்டுக்குள்ளும் பிரவேசித்துள்ளார்.எனவே இதில் இயேசு எந்தமாதிரி ஒரு உருவ நிலையில் இருந்தார் என்பதையும்  அவரை ஒரு விசுவாசியோ அல்லது தேவ உளியரோ பார்க்க முடியுமா முடியாதா என்பதையும்  யாராலும் தீர்மானிக்க முடியாது என்றே நான் கருதுகிறேன்!
 
அவர் பரலோகம் ஏறிச்சென்ற பிறகுதான் பவுல், யோவான் மற்றும் ஸ்தேவன் ஆகிய மூன்று பேருக்கு மட்டும் காட்சி தந்துள்ளார்.

  

 



-- Edited by RAAJ on Tuesday 23rd of June 2009 03:56:45 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இயேசு கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்த பிறகு இரண்டு பேர் மாத்திரமே வேதத்தில் அவரை கண்டார்கள். என்று த‌வ‌றுத‌லாக‌ ப‌திந்துவிட்டேன். "உயிர்த்தெழுந்த பிற‌கு"க்கு ப‌திலாக‌ ப‌ர‌மேறிய‌ பிறகு என்று வாசியுங்க‌ள். இந்த‌ பிழைக்கு நான் வறுந்துகிறேன். இதினால் யாருக்காக‌வும் இட‌ற‌ல் உண்டாகியிருந்தால் ம‌ண்ணிப்பு கேட்கிறேன்.

மேலும் ஸ்தேவான் க‌ண்ட‌து ஒரு காட்சியே. இன்றைய‌ பிர‌ச‌ங்கிமார்க‌ள் இயேசுவை த‌ன் க‌ண்க‌ளால் க‌ண்ட‌தாக‌ அல்ல‌வா ரீல்(!!) விடுகிறார்க‌ள்!

அது போல் தோமா, ம‌க‌த‌லின் ம‌ரியாள், ம‌ற்ற‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள் யாவ‌ரும் அவ‌ரை பார்த்த‌து அவ‌ர் உயிர்த்தெழுந்து பரமேறும் முன் தான். ப‌வுல் அப்போஸ்த‌ல‌ராக‌ அனுப்ப‌ ப‌டும் ப‌டியாக‌ இயேசு அவ‌ருக்கு தோன்றினார். யோவான் மூல‌மாக‌ ஒரு பெரிய‌ வெளிப்பாடு ந‌ம‌க்கு கிடைக்கும் ப‌டியாக‌ அவ‌ர் யோவானுக்கு தோன்றினார். அவ்வ‌ள‌வே. வேத‌த்திற்கு புற‌ம்பாக யார் எதை வேண்டும் என்றாலும் சொல்லிவிட்டு போக‌ட்டும், கிறிஸ்த‌வ‌ர்க‌ள் தான் ஜாக்கிற‌தையாக‌ இருந்து ஏமாற‌ வேண்டாம் என்ப‌து என் வேண்டுகோள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
// இயேசு கிறிஸ்து ஆவியாக உயிர்த்தெழுந்த பிறகு இரண்டு பேர் மாத்திரமே வேதத்தில் அவரை கண்டார்கள்.

1. பவுல். ஆனால் பார்த்த மாத்திரத்திலே அவர் மூன்று நாட்கள் குறுடாகி போனார்.

2. யோவான். இவர் வெளிப்படுத்தின விசேஷத்தில் இயேசு கிறிஸ்துவின் தரிசனத்தை கண்டவுடனே, செத்தவனை போல் விழுந்தார் என்று எழுதுகிறார்.//

பவுலும்கூட, ஒரு ஒளியைக் கண்டதாகத்தான் வசனம் கூறுகிறதேயன்றி, இயேசுவின் உருவத்தைப் பார்த்ததாகச் சொல்லவில்லை. ஆனால் இயேசுவின் சத்தத்தைக் கேட்டதாக வசனம் கூறுகிறது.

யோவான் ஆவிக்குள்ளாகி சத்தத்தைக் கேட்கிறார், காட்சிகளைக் காண்கிறார். அக்காட்சிகளை மாம்சக் கண்களால்தான் கண்டார் எனத் திட்டமாகக் கூறமுடியாது.

ஒருவன் என் கற்பனைக் கைக்கொண்டால் நானும் பிதாவும் அவனிடத்தில் வந்து வாசம் பண்ணுவோம் என்று இயேசு கூறியுள்ளார் (யோவான் 14:23). ஆனால் இந்த வாசம் பண்ணுதல் நிச்சயமாக கண்ணுக்குத் தெரிகிற வாசம்பண்ணுதல் அல்ல.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நிச்சயமாக, இதை தான் நானும் சொல்லுகிறேன். ஆவியான இயேசு கிறிஸ்துவை இனி காணவேண்டும் என்றால் அவரை போல் அவர் இருக்கிற பிரகாரம் உயிர்த்தெழுந்தால் மாத்திரமே முடியும்.

இன்று மேடைக்கு மேடை வாய் கூசாமல் பொய் பிரசங்கிகளும், கள்ள அப்போஸ்தலர்களும் ஏதோ இயேசு கிறிஸ்து இன்னும் மாம்சத்தில் உலாவி வருவது போல், நான் அவர் முகத்தை கண்டேன், அவர் முள் முடியை கண்டேன், இரத்தம் கண்டேன், இயேசு கிறிஸ்து கண்ணீர் விடுவதை கண்டேன், என்று ஆளாலுக்கு விடும் ரீலுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.

இன்னும் சிலர், இதோ இயேசு கிறிஸ்து இப்பொழுது மேடையில் நடமாடுகிறார், இதோ கூட்டத்தின் மத்தியில் நிற்கிறார் என்கிற மாய ஜால வார்த்தைகளால் தங்களை மேன்மை படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
"அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவ‌னாகிலும் சொன்னால் ந‌ம்பாதீர்க‌ள்" (ம‌த். 24:23,26).

அவ‌ர் மீண்டும் வ‌ருவ‌து தான் இர‌ண்டாம் வ‌ருகை என்று வேத‌ம் தெளிவாக‌ போதிக்கிற‌து, ஆனால் இவ‌ர்க‌ளுக்கு மாத்திர‌ம் யார் தான் வ‌ந்து காட்சி த‌ருகிறார்க‌ளோ. ஒளியின் வேஷ‌ம் த‌ரித்த‌வ‌னின் செய‌ல் தான் இது, வேற் ஒன்றும் இல்லை. கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, இது போன்ற‌ க‌ள்ள‌ கூட்ட‌த்திலிருந்து எச்ச‌ரிக்கையாக‌ இருப்ப‌து ந‌ல‌ம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//அவ‌ர் மீண்டும் வ‌ருவ‌து தான் இர‌ண்டாம் வ‌ருகை என்று வேத‌ம் தெளிவாக‌ போதிக்கிற‌து, ஆனால் இவ‌ர்க‌ளுக்கு மாத்திர‌ம் யார் தான் வ‌ந்து காட்சி த‌ருகிறார்க‌ளோ. ஒளியின் வேஷ‌ம் த‌ரித்த‌வ‌னின் செய‌ல் தான் இது, வேற் ஒன்றும் இல்லை. கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, இது போன்ற‌ க‌ள்ள‌ கூட்ட‌த்திலிருந்து எச்ச‌ரிக்கையாக‌ இருப்ப‌து ந‌ல‌ம்.//

கள்ளக் கூட்டத்திற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கிறீர்கள், நல்லதுதான். ஆனால் வேறு சில topics-ல் நீங்கள் எழுதியதை கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

bereans wrote in various topics:
//இயேசு கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌த்தின் ப‌ல‌னாக‌ எல்லோரும் பூர‌ண‌மாக்க‌ப்ப‌டுவார்க‌ள் என்ப‌து வேத‌ம் என‌க்கு த‌ரும் ந‌ம்பிக்கை.//
//"சுவிசேஷ‌ம் சொல்லுவ‌து ப‌வுல் மேல் விழுந்த‌ க‌ட‌மையாக‌ இருந்த‌து" அவ‌ன் அத‌ற்காக‌ அழைக்க‌ப்ப‌ட்டிருந்தான். உங்க‌ளுக்கோ என‌க்கோ, சாட்சியாக‌ வாழ‌வே அழைப்பு. அதை ஒழுங்காக‌ செய்ய‌ முய‌ற்சிப்போம்.//
//எந்த‌ ஒரு தீமை செய்ய‌ சொல்ல‌வோ, அதை ஆத‌ரிப்ப‌தோ, நான் சொல்ல‌வில்லை. இது எல்லாம் ந‌ட‌ந்தே ஆக‌ வேண்டும்.//
//தேவ‌ன் இந்த‌ தீமை எல்லாம் அனும‌திப்ப‌து, சில‌ரை ச‌பைக்கு அழைத்திருக்கிற‌ப‌டி அவ‌ர்க‌ள் இந்த‌ பூமியில் இயேசு கிறிஸ்துவை போல் த‌ங்க‌ளை ப‌லியாக‌ ஒப்புகொடுத்து வாழ‌ தான் (இன்று அப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு ஊழிய‌ரையும் பார்க்க‌ முடியாத‌து வேத‌னையே), அத‌ற்காக‌ அந்த‌ தீமையில் இருப்ப‌வ‌ர்க‌ளை தேவ‌ன் அப்ப‌டியே விட்டு விடுவ‌தில்லை. அவ‌ர்க‌ள் எல்லோரும் ம‌ன‌ம் மாற‌, நீதியை க‌ற்றுக்கொள்ள‌ ஒரு கால‌ம் வைத்திருக்கிறார். இது வேத‌ ச‌த்திய‌மே!//
//உங்களுக்கு தெரியுது, நீங்கள் தவறாக நடப்பதில்லை. தெரியாதவனிடத்தில் போய், நீ ஏன் தவறுகிறாய் என்று கேட்பதில் என்ன லாபம்?

தீமை நடப்பதை நான் அனுமதிக்கவோ, அனுமதிக்காமல் இருப்பதற்கோ, எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

நீங்கள் சுவிசேஷம் சொல்லுவதால் தான் இன்று ஜனங்கள் சத்தியத்திற்குள் வருகிறர்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் ஊரில், விடுங்கள், உங்கள் தெருவில் எத்துனை பேர் உங்கள் சுவிசேஷம் கேட்டு தீமையை விட்டு விளகியிருக்கிறர்கள்? உங்கல் ஊரில் டாஸ்மாக் கடைகளே இல்லாமல் போய் விட்டதா? உங்கள் ஊரில் சிறைச் சாலைகளே இல்லாமல் போய் விட்டதா? நீங்கள் சுவிசேஷம் சொல்லி எல்லா தீமையையும் மாற்றி போட்டு விட முடிந்ததா? உங்கள் சொந்தங்கள் எத்துனை பேர் நீங்கள் நடக்கும் வழியில் நடக்கிறார்கள்?//

சாட்சியாக வாழ மட்டுமே நாம் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறும் சகோ.பெரியன்ஸ், கள்ளக் கூட்டத்தில் இருப்போரை மட்டும் ஏன் இத்தனை கரிசனையோடு எச்சரிக்கிறார்?

தீமை செய்கிற அனைவரும் நீதியைக் கற்றுக் கொள்ள தேவன் வைத்துள்ள காலத்தில், கள்ளக் கூட்டத்தில் இருப்போரும் நீதியைக் கற்றுக் கொள்ளட்டுமே! அவர்கள் மட்டும் இப்போதே மாற வேண்டுமென ஏன் பெரியன்ஸ் விரும்புகிறார்?

தேவன் தானே தீமையை அனுமதித்துள்ளார்? அவ்வாறெனில், கள்ளக்கூட்டத்தாரையும் அவர்கள்பின் செல்வோரையும் தேவன் தானே அனுமதித்துள்ளார்? அவர்கள் மீது மட்டும், குறிப்பாக கள்ளக் கூட்டத்தார்மீது மட்டும் பெரியன்ஸ்க்கு ஏன் இத்தனை வெறுப்பு?

தீமை நடப்பதை அனுமதிக்கவோ, அனுமதிக்காமல் இருப்பதற்கோ அதிகாரம் இல்லாத பெரியன்ஸ், கள்ளக்கூட்டத்தார் பின்செல்வோரை மட்டும் ஏன் சாடுகிறார்?

தெரியாதவனிடத்தில் போய், நீ ஏன் தவறுகிறாய் என்று கேட்பதில் என்ன லாபம் எனக் கேட்கும் பெரியன்ஸ், கள்ளக்கூட்டத்தாரையும் அவர்கள் பின்செல்வோரையும் எச்சரிப்பதில் மட்டும் என்ன லாபம் என நினைக்கிறார்?

-- Edited by anbu57 on Thursday 5th of November 2009 02:04:03 AM

-- Edited by anbu57 on Thursday 5th of November 2009 03:27:27 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

anbu57 wrote:

 தேவன் தானே தீமையை அனுமதித்துள்ளார்? அவ்வாறெனில், கள்ளக்கூட்டத்தாரையும் அவர்கள்பின் செல்வோரையும் தேவன் தானே அனுமதித்துள்ளார்? அவர்கள் மீது மட்டும், குறிப்பாக கள்ளக் கூட்டத்தார்மீது மட்டும் பெரியன்ஸ்க்கு ஏன் இத்தனை வெறுப்பு?

தீமை நடப்பதை அனுமதிக்கவோ, அனுமதிக்காமல் இருப்பதற்கோ அதிகாரம் இல்லாத பெரியன்ஸ், கள்ளக்கூட்டத்தார் பின்செல்வோரை மட்டும் ஏன் சாடுகிறார்?

 



சாதுசுந்தர் சிங்கிள் இருந்து ஆண்டவருக்க்காகவும் சுவிஷேசத்திர்க்காகவும் தன ஜீவனை கொடுத்த எல்லோருமே கள்ள ஊளியர்கள.   சகோதரர் பெரேயன்ஸ் இரட்சிக்கபட்டதே அந்த கள்ள கூட்டத்தில் யாரோ ஒருவர் சொல்லித்தார். அவர்களும் எவனை பிதா இழுத்துகொள்வாரோ அவன் பிதாவிடம்  வருவான் நமக்கேன் வம்பு என்று விட்டிருந்தால், இவர்கூட இன்று வரை இயேசுவை அறிந்திருக்க மாட்டார்.

எனவே அவர்கள் மேல் மிகுந்த கரிசனை உண்டாகி அவர்கள் எப்படியாவது திருத்திவிட வேண்டும் என்றது முனைகிறார் என்று கருதுகிறேன்.

ஒரு சின்ன கதை. 

ஒருவன் கடலில் தூண்டில் போட்டு மிகுந்த சிரத்தையுடன் மீன்களை பிடித்து தன பக்கம் உள்ள ஒரு தொட்டியில் போட்டு வைக்கிறான் ஆனால் இன்னொருவன் தனது தூண்டிலை அந்த தொட்டிக்குள் போட்டு மீன்பிடித்து திரும்ப கடலினுள் விடுகிறான். அந்த கதைதான் இங்கு நடக்கிறது என்று நான் கருதுகிறேன்.

இதற்க்கேலாம் காரணம் மீட்பின் முத்திரயாகிய பரிசுத்த ஆவியை பெறாததுதான் என்றே நான் கருதுகிறேன்.  

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தேவன் இதை செய் என்று என்னிடத்தில் நேரடியாக வந்து சொன்னதில்லை. ஆனால் வேதத்தை தியானித்ததால் கிடைத்த எனக்கு புரிந்த காரியங்களை சொல்லுகிறேன். பலர் சொல்லுவது போல், தேவன் என்னை இந்த ஊழியத்திற்கு அழைத்தார் என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு தேவன் வேதத்தின் மூலமாக வெளிப்படுத்திய காரியங்களை பகிர்ந்துக்கொள்ளுகிறேன். இப்படி எச்சரிப்பும் வேதத்தில் இருந்து தான். இயேசு கிறிஸ்துவும் அவர் தெரிந்து கொண்ட அப்போஸ்தலர்களும் சொன்ன வார்த்தைகளை தான் சொல்லுகிறேன்.

பரிசுத்த ஆவியை பெற்றவர்கள் என்று சொல்லும் கூட்டத்தாரை நன்கு அரிவேன். அவர்களை பரிசுத்த ஆவியின் வியாபாரிகளாக தான் நான் பார்க்கிறேன். தேவனின் நாமத்தை சொல்லி உழைக்க மறுக்கும் ஒரு கூட்டம், வீடு வீடாக புகுந்து தங்களை மேன்மை படுத்தும் கூட்டம் தான் அந்த கூட்டம். தேவனுக்கு தசமபாகம், கானிக்கைகள் கொடுங்கள் என்கிற பெயரில் ஏழை எளியவர்களிடம் பிடுங்கி தானும் தன் குடும்பத்தையும் பிழைக்க வைக்கும் ஒரு கூட்டம், இந்த கூட்டத்தாரிடம் பரிசுத்த ஆவி இருக்கிறது என்று சொல்லுவது வேடிக்கையாக தான் இருக்கிறது. தங்களை மேன்மை படுத்தி பார்க்கும் கூட்டம் எப்படி பட்ட ஆவியை பெற்ற கூட்டம் என்று சோதித்து பார்க்க தான் வேத புத்தகம் இருக்கிறது. அதை எல்லாம் விட்டு விட்டு கனவுகளையும் காட்சிகளையும் நம்பி அதை ஹாலிவுட் படங்களை காட்டிலும் பிரமாண்டமாக கான்பித்து பணம் சுருட்டும் கூட்டம் தான் இந்த கூட்டம். பணத்திற்காக மேடையில் அடிசுக்கிட்ட இப்படி பட்ட ஊழியக்காரர்களையும் எனக்கு தெரியும்.

இப்படி பட்டவர்களை தான் நீங்கள் பரிசுத்த ஆவியின் முத்திரை பெற்றவர்கள் என்று சொல்லுகிறீர்களா சகோ ராஜ் அவர்களே. நல்லவேளை நீங்கள் சொல்லும் அப்படி ஒரு ஆவியினால் நான் முத்திரை பெறவில்லை. மாறாக வேதத்தில் சொல்லப்பட்ட சத்தியத்தின் ஆவியின் முத்திரை பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அது தான் இயேசு கிறிஸ்து சொன்னதை கான்பித்து தரும், சொந்த அனுபவங்களை, கனவுகள், காட்சிகள், தரிசனங்களை போதிக்காது.

தேவன் இப்படி பட்ட ஒரு கூட்டத்திலிருந்து என்னை பிரித்து எடுத்ததற்கு நான் தேவனுக்கு நன்றி சொல்லுகிறேன்.
நீங்கள் எத்துனை மீன்களை பிடித்து தொட்டியில் போட்டு விட்டீர்கள் சகோதரரே?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சத்திய ஆவியை பெறாமல் வஞ்சிக்கும் ஆவியை பெற்று சுயலாபத்துக்காக உழியம் செய்யும் பல உழியர்களை கருத்தில் கொண்டு அதன் அடிப்படையில்  எல்லோரையும் அனுமானிக்க வேண்டாம் சகோதரரே.

கிறிஸ்த்துவுக்காக ஜீவனையே கொடுத்த  பல தேவ மனிதர்கள் இருக்கிறார்கள்! இன்றும் இருக்கிறார்கள் அவர்கள் வழக்கை வரலாறை வாங்கி படித்து பாருங்கள். ஆவியானவரின் உண்மை கிரியைகளை அறியமுடியும்!

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

 நீங்கள் குறிப்பிடும் ஊழியர்கள் செய்யும் பிரசங்கமும், நான் எழுதும் ஊழியர்களின் பிரசங்கமும் ஒன்றாக தான் இருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள். ஒரே ஆவியை பெற்றவர்கள் பிரசங்கத்தில் ஒரே மாதிரி, ஆனால் சாட்சியில் வேறு மாதிரி இருக்கிறார்களா?

நீங்கள் ஏன் வேதத்தை விட்டு விட்டு அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வாசிக்க சொல்லுகிறீர்கள்? அதை எழுதியவர்கள் யார்? அதை ஏன் நான் உண்மை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்? பவுல் ஒரு அப்போஸ்தலன் என்று வேதத்தில் உள்ளதையே உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத போது, மனித் ஆவியில் நிறைந்தவர்கள் ஏதோ வரலாற்றை எழுதியிருக்கிறார்கள், அதை பரிசுத்த ஆவியின் கிரியை என்று நீங்கள் சொல்லுவது தான் வியப்பாக இருக்கிறது.

அவர்கள் கிறிஸ்துவிற்காக தான் ஜீவனை கொடுத்தார்கள் என்பதை அந்த புத்தகங்கள் மூலமாக அறிந்துக்கொண்டீர்கள் ஆனால் அது எல்லாம் உண்மை என்று எப்படி சொல்ல முடியும்? பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டவர்கள் தான் வேதத்தை (பரிசுத்த வேதாகமத்தையோ, மற்ற மொழிப்பெயர்ப்புகளையோ அல்ல) எழுதினார்கள் என்பதையே கேள்விகுறியாக நீங்கள் பார்க்கும் போது, மனித ஆவியில் வியாபாரத்திற்காக எழுதப்பட்ட புத்தகங்கள் எப்படி உண்மையாக முடியும்.

வேதத்தில் வாசித்தாலே போதும், அதில் உள்ளவைக‌ளை பின் பற்றினால் போதும்.

இன்று ஆவி பெற்ற‌தை ஒரு ம‌னித‌னின் க‌னியினால் தான் அறிந்துக்கொள்ள‌ முடியுமே த‌விர‌, ஓய்ந்து போன‌ வ‌ர‌ங்க‌ளால் அல்ல‌ என்ப‌தையும் இங்கே சொல்ல‌ விரும்புகிறேன்.

நான் சொன்ன‌ வித‌மான‌ ஊழிய‌ர்க‌ள் தான் இன்று பெரும் அள‌வில் பெருகி வேற் கிறிஸ்துவை போதித்து வ‌ருகிறார்க‌ள். வேறு ஒரு சுவிசேஷ‌த்தை போதித்து வ‌ருகிறார்க‌ள், இவ‌ர்க‌ளை தான் அநேக‌ க‌ள்ள‌த்தீர்க‌த‌ரிசிக‌ள் என் (இயேசுவின்) நாம‌த்தில் எழும்புவார்க‌ள் என்றும், பெருத்த‌ அடையாள‌ங்க‌ள் அற்புத‌ங்க‌ள் (நீங்க‌ள் வாசித்த‌ புத்த‌க‌ங்க‌ளில் உள்ள‌ ஆவியின் கிரியைக‌ள்) செய்வார்க‌ள் என்றும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவே ம‌த். 24ம் அதிகார‌த்திலும், பிற்பாடு அவ‌ரின் அப்போஸ்த‌ல‌ர்க‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ளில் சொல்லியிருக்கிறார்க‌ளே. இதை எல்லாம் விட்டு விட்டு, வ‌ர‌லாற்று புத்த‌க‌ங்க‌ளில் ஆவியின் கிரியை தேடுவ‌து எப்ப‌டி ச‌ரி என்று சொல்லுகிறீர்க‌ள்?

முத‌லாவ‌து ஒரு ம‌னித‌னை "தேவ‌ ம‌னித‌ன்" என்று உய‌ர்த்தும் அள‌விற்கு எந்த‌ ஒரு ம‌னித‌னும் த‌குதி பெற‌வில்லை. தேவ‌ ம‌னித‌ன் என்றால் யார்? விள‌க்க‌ம் தாருங்க‌ள்!!

இன்று ச‌பைக‌ளில் ஆவியின் கிரியை என்று சொல்லிக்கொண்டு ந‌ட‌க்கும் கூத்துக‌ள் அனைத்தும் புற‌ ம‌த‌ஸ்த‌ர் ம‌ற்றும் மார்க்க‌ங்க‌ளில் ந‌ட‌க்கும் ஒரு விஷ‌ய‌மே? அப்ப‌டி என்றால் இவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ஒரே ஆவியை பெற்ற‌ கூட்ட‌மாக‌ தான் இருக்க‌ முடியுமே த‌விர‌ வேத‌ம் சொல்லும் ப‌ரிசுத்த‌ ஆவியோ, ச‌த்திய‌ ஆவியோ பெற்ற‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌ முடியாது.

ச‌த்திய‌த்தை போதிப்ப‌து வேறு, ஆவியின் (எந்த ஆவி என்று தான் தெரியவில்லை!!) கிரியைக‌ளை ந‌ட‌ப்பித்து காண்பிப்ப‌து வேறு என்றும் இங்கே சொல்லுகிறேன்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"உமது வசனமே சத்தியம், சத்தியத்தையும் அறிவீர்கள் சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" என்றுதான் ஆண்டவர் போதித்துள்ளார்.
சாது சுந்தர் சிங் வரலாறோ, சகோ.தினகரன் வரலாறோ அல்ல.




அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்பது தீர்க்க தரிசன வார்த்தை. ஆனாலும் 'சிலர்' அந்த 'மகா பாபிலோன்' வேசி என்ற போலி சபையிலிருந்து வெளியேறுவார்கள். சத்தியத்தை அறியும் வாஞ்சையுள்ளவர்கள் இந்த தளத்தால் பயனடைகிறார்கள், கள்ளப்போதகர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறோமேயன்றி யாரையும் திருத்தி 'நரகத்திலிருந்து அவர்களை இரட்சித்து 'ஆளுகைக்கு' அவர்களை தகுதியாக்குவது எங்கள் நோக்கமல்ல.




"அக்கிரமம் செய்கிறவன் இன்னும் அக்கிரமம் செய்யட்டும்"





பேசாமல் பெரேயன்ஸுடன் வாதிடும் நேரத்தை ரோட்டில் போய் 4 பேருக்கு சுவிசேஷம் சொல்லி அவர்களை 'பரலோகத்துக்கு' தயார்படுத்தலாமே?


இதுவரை நீங்கள் "இரட்சிப்புக்குள்" நடத்திய ஆயிரக்கணக்கான பேரில் ஒரு சிலருக்காவது இந்தத் தளத்தை அறிமுகப்படுத்துங்களேன். எந்த அளவு நீங்கள் அவர்களை 'நடத்தி'யிருக்கிறீர்கள் என்ற லட்சணம் தெரியும்.


-- Edited by soulsolution on Friday 6th of November 2009 05:37:41 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:


bereans wrote:
//தேவன் இதை செய் என்று என்னிடத்தில் நேரடியாக வந்து சொன்னதில்லை. ஆனால் வேதத்தை தியானித்ததால் கிடைத்த எனக்கு புரிந்த காரியங்களை சொல்லுகிறேன். பலர் சொல்லுவது போல், தேவன் என்னை இந்த ஊழியத்திற்கு அழைத்தார் என்று நான் சொல்ல மாட்டேன். எனக்கு தேவன் வேதத்தின் மூலமாக வெளிப்படுத்திய காரியங்களை பகிர்ந்துக்கொள்ளுகிறேன். இப்படி எச்சரிப்பும் வேதத்தில் இருந்து தான். இயேசு கிறிஸ்துவும் அவர் தெரிந்து கொண்ட அப்போஸ்தலர்களும் சொன்ன வார்த்தைகளை தான் சொல்லுகிறேன்.//

நிறைய விஷயங்களில் முரண்படுகிறீர்கள் சகோதரரே!

சாட்சியாக வாழ்வது மட்டுமே நம் அழைப்பு என்கிறீர்கள், யாருக்கும் போதிக்க வேண்டாம் என்கிறீர்கள்; அதேவேளையில் நீங்கள் மட்டும் இயேசுவும் அப்போஸ்தலர்களும் சொன்ன வார்த்தைகளை சொல்லலாம், சொல்லி எச்சரிக்கலாம் என்கிறீர்கள். இயேசுவும் அப்போஸ்தலர்களும் சொன்ன வார்த்தைகளில் போதனைகளும் உள்ளதுதானே? அவற்றை நாங்கள் போதிக்கக்கூடாதா?

ஒருவன் போதித்தால் தேவனுடைய வார்த்தைகளின்படி போதிக்கக்கடவன் என வேதாகமம் கூறுகிறதே? நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோக ராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான் என இயேசுவும் கூறியுள்ளாரே? (உடனே இயேசுவின் போதனைகள் எல்லாவற்றையும் கைக்கொண்டுதான் போதிக்கிறீர்களா எனக் கேட்கவேண்டாம்; போதிக்கும்படி வேதாகமம் சொல்கிறதா இல்லையா என்பதுதான் நம் விவாதம்).

கள்ளக் கூட்டத்தாரின் பின்செல்வோரை நீங்கள் எச்சரிப்பதுபோல, பாவஞ்செய்வோரை நங்கள் எச்சரிக்கக்கூடாதா என்பதுதான் என் கேள்வி? கள்ளக்கூட்டத்தாரின் பின்செல்வோரை நீங்கள் எச்சரிக்கக் கூடாதென்பதோ, வேத வார்த்தைகளைச் சொல்லக்கூடாதென்பதோ என் கருத்து அல்ல.

சாட்சியாக வாழ மட்டுமே நம் அழைப்பு என்று நீங்கள் சொல்லிவிட்டு, உங்கள் கூற்றை நீங்களே மீறலாமா என்பதுதான் என் கேள்வி.

”நீங்கள் போதிப்பதால் யார் திருந்தினார்கள்; டாஸ்மாக் கடை இல்லாமல் போய்விட்டதா etc. etc.” எனக் கேட்கிறீர்கள். உங்கள் எச்சரிப்புக்கு மட்டும் எல்லோரும் உடனே நடுநடுங்கி, கள்ளக் கூட்டத்தார் பின்செல்வதை விட்டுவிடுகிறார்களா என்ன?

மற்றவர்கள் எப்படியோ எனக்குத் தெரியாது; ஆனால் என்னைப் பொறுத்தவரை, எனது போதனையால் யாரையும் திருத்துவது எனது நோக்கமல்ல, யாரையும் திருத்திவிட முடியும் என்ற நம்பிக்கையும் எனக்குக் கிடையாது. வேதவசனம் சொல்வதைப் போதிப்பது என் வேலை என நம்புகிறேன், அதன்படி போதிக்கிறேன்; மற்றபடி அதை அவர்கள் ஏற்று நடப்பதும் நடவாதிருப்பதும் என் கையிலில்லை. யாரும் என் சொல்லைக் கேட்காததால், போதிப்பதை நான் விடவேண்டுமென்பதும் கிடையாது.

இயேசு சொன்னதையே கேட்கவில்லை, அதற்காக அவர் போதியாமல் இருந்தாரா?
எசே. 3:7-ஐப் படித்துப் பாருங்கள். எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்கள் எனக் கூறிய தேவன், எசேக்கியேலிடம் என்ன சொன்னார்? அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் என் வார்த்தைகளைச் சொல்லு எனக் கூறவில்லையா?

மனிதர்கள் அனைவரும் நித்தியஜீவனைப் பெற தேவன் திட்டம் வைத்துள்ளதாகவும், அத்திட்டத்தை நீங்கள் கண்டுபிடித்துவிட்டதாகவும் நினைத்துக் கொண்டு, அத்திட்டத்தை மட்டும் ஜனங்களிடம் சொன்னால் போதும்; அத்தோடு, தற்கால ஊழியர்கள் பின்னால் ஜனங்கள் சென்றுவிடாதபடி எச்சரிக்கவும் வேண்டும் என்பது மட்டுந்தான் உங்கள் எண்ணமும் பேச்சாகவும் உள்ளது.

வேதாகமம் நேரடியாகச் சொல்கிற போதனைகளைச் சொல்லவேண்டாம், ஆங்காங்கே கிடக்கிற வசனங்களை உங்கள் மனம்போல் ஒருங்கிணைத்து நீங்கள் கண்டுகொண்ட தேவதிட்டத்தை மட்டும் சொன்னால் போதும் என்பதே உங்கள் எண்ணமாயுள்ளது.

ஒன்றைக் கேட்கிறேன் சகோதரரே!
”தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்” என அடிக்கடி சொல்கிறீர்களே, நீங்கள் தெரிந்து கொள்ளப்பட்டவரா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஒருவேளை நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர் என வைத்துக் கொள்வோம், உங்களிடம் பிதா நேரடியாகப் பேசியா தமக்கு நேராக உங்களை இழுத்தார்? யாராவது மனிதர்கள் மூலமாகத்தானே நீங்கள் பிதாவிடம் வந்திருப்பீர்கள்? ஒருவேளை நீங்கள் பிறப்பிலேயே கிறிஸ்தவராக இருந்தாலும், உங்கள் பெற்றோர் அல்லது பெற்றோரின் பெற்றோர் யாராவது மனிதர்கள் மூலமாகத்தானே கிறிஸ்துவை அறிந்திருப்பார்கள்?

உங்களுக்காக நான் சொல்கிற இக்காரியம், பிதாவால் இழுக்கப்படுகிற ஒவ்வொருவருக்கும் பொருந்துமல்லவா? எனவே, “தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்” என நீங்கள் சொல்கிற சிலரை பிதா இழுக்கவேண்டுமெனில், அதில் அவரது ஊழியர்களின் பங்கும் உள்ளது என்பதை நீங்கள் அறியவேண்டும். ஊழியர்கள் எப்படியும் இருக்கலாம், அது பிரச்சனையில்லை. வஞ்சகத்தாலோ பொறாமையாலோ கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார் என பவுல் சொன்னாரல்லவா? அல்லது எனக்கு மட்டுந்தான் அழைப்பு, எனக்கு மட்டுந்தான் கடமை என அவர் சொன்னாரா?

நேபுகாத்நேச்சார் எனும் அரசன் 60 முழ உயரமுள்ள சிலையைச் செய்து அதை எல்லோரும் பணிந்துகொள்ள வேண்டும் எனக் கட்டளையிட்டு, பணிந்துகொள்ளாத தேவதாசர்களை அக்கினிச் சூளையில் போடச் சொன்னதை அறிவீர்கள் அல்லவா? ஆனால் அந்த நேபுகாத்நேச்சாரையும் தேவன் தமது ஊழியக்காரன் என்று சொல்லவில்லையா?

எனவே மனிதர்கள் மூலமாகத்தான், மனிதனைச் சார்ந்துதான் தமது திட்டங்களை தேவன் செயல்படுத்துகிறார் என்பதை அறியுங்கள். இது தேவனுக்கு இழுக்கல்ல. ஒரு தகப்பன் தன் மகன் மூலமாக ஒரு காரியத்தைச் செய்தால் அது தகப்பனுக்கு இழுக்காகுமா? அல்லது மகன் இல்லாவிட்டால் தகப்பனால் அதைச் செய்ய இயலாது என அர்த்தமாகுமா?

தேவனால் படைக்கப்பட்டவர்கள்தானே நாம்? (உங்கள் கூற்றுப்படி) சாத்தானே தேவதிட்டத்தைச் செயல்படுத்தும் ஒரு கருவியாக இருக்கும்போது, நாம் தேவதிட்டத்தைச் செயல்படுத்தும் கருவியாக இருக்கக்கூடாதா? கண்டிப்பாக பதில் தாருங்கள்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யாரையும் திருத்துவது என் நோக்கம் இல்லை, ஏனென்றால், பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் இயேசு கிறிஸ்துவிடம் வரமுடியாது என்று நன்றாக அறிந்திருக்கிறேன்.

ஒரு போதும் "நான் தெரிந்துக்கொள்ளப்பட்டவன்" என்று நான் சொல்லாததை நீங்கள் ஒரு கற்பனையாகவே சொல்லியிருக்கிறீர்கள்.

மேலும் இங்கு விவாதிக்கப்படுவது, இயேசுவை நேரடியாக கண்டோம் என்று சொல்லுபவர்களை குறித்து மாத்திரமே என்று நான் நினைக்கிறேன். பெரெயன்ஸை குறை கூற வேண்டும், அல்லது அவர்களின் விசுவாசத்தை குறை கூற வேறு தலைப்பை அல்லது புதிய தொகுப்பை கூட ஆரம்பிக்கலாமே.

"உங்கள் எச்சரிப்புக்கு மட்டும் எல்லோரும் உடனே நடுநடுங்கி, கள்ளக் கூட்டத்தார் பின்செல்வதை விட்டுவிடுகிறார்களா என்ன?"

ஒருவேலை எச்ச‌ரிப்பை பார்த்து வேத‌ப்புத்த‌க‌த்தில் தேவ‌னின் வார்த்தையை தியானித்து ஒருவ‌ன் வில‌கி வ‌ந்தால் அது நிச்ச‌ய‌மாக‌ ந‌ல்ல‌து தான். ஆனால் ப‌ய‌ம் காட்டி ஒருவ‌னை ம‌ன‌ந்திரும்ப‌வைப்ப‌து உண்மையான‌ மன‌ந்திரும்புத‌ல் இல்லை என்றே நான் நினைக்கிறேன். உண்மையாக‌ விசுவாசித்து ம‌ன‌ந்திரும்புத‌ல் தான் அவ‌சிய‌ம்.

தேவ‌ன் யாரை இழுத்துக்கொள்கிறாரோ, அவ‌ன் நிச்ச‌ய‌மாக‌ இந்த‌ பாபிலோனிய‌ ச‌பைக‌ளின் ம‌த்தியில் இருந்து வெளியேறுவான் என்ப‌தில் எந்த‌ ச‌ந்தேக‌மும் கிடையாது (வெளி. 18:4).

போறாமையினால் அல்ல‌து வ‌ஞ்ச‌க‌த்தினால் கிறிஸ்து அறிவிக்க‌ப்ப‌டுவ‌து வேறு, அங்கு கிறிஸ்து ம‌கிமை ப‌டுகிறார், இங்கே இந்த கள்ள கிறிஸ்துக்கள் தங்களை மகிமை படுத்துகிறார்கள். நான் இங்கே எழுதுவ‌து, க‌ள்ள‌ கிறிஸ்துக்க‌ளை குறித்து, அவ‌ர்க‌ளுக்கும் கிறிஸ்துவிற்கும் ச‌ம்ப‌ந்த‌ம் கிடையாது. கிறிஸ்து என்று பெய‌ர் சொன்னால் கிறிஸ்த‌வ‌ன் கிடையாது. அந்தி கிறிஸ்துவிலும் தான் கிறிஸ்து என்கிற‌ பெய‌ர் இருக்கிற‌து.

ந‌ர‌க‌த்தை குறித்து ப‌ய‌ம் காட்டி கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ மாற்றுவ‌து என்ப‌து க‌த்தோலிக்க‌ ச‌பையில் ஆர‌ம்பித்த‌ ஒரு காரிய‌ம். க‌த்தோலிக்க‌ ச‌பையை விக்கிர‌க‌ ஆராத‌னை ச‌பை என்று ஒதுக்கி அவ‌ர்க‌ள் கொண்டுவ‌ந்த‌ ந‌ர‌க‌த்தை மாத்திர‌ம் பிடித்துக்கொண்டு ஆவிக்குறிய‌ ச‌பை என்று த‌ங்க‌ளை சொல்லிக்கொண்டு தேவ‌ அன்பை போதிக்காம‌ல் ப‌ய‌முறுத்த‌லையே போதிக்கிறார்க‌ள். இது த‌வ‌று என்று நாங்க‌ள் சொல்லி வ‌ருகிறோம். இதை கேட்டு நீங்க‌ள் எல்லாம் ம‌ன‌ந்திரும்புங்க‌ள் என்று நாங்க‌ள் சொல்ல‌வில்லை.

தேவ‌ சித்த‌த்தின் ப‌டி அவ‌ரின் வ‌ச‌ன‌த்தை கேட்டு ஒருவ‌ன் ம‌ன‌ந்திரும்புவ‌தே உண்மையான‌தாக‌ இருக்க‌ முடியுமே த‌விர‌, ப‌ய‌த்தின் கார‌ண‌மாக‌ ம‌ன‌ந்திரும்புத‌ல் என்ப‌து போலியாக‌ தான் இருக்க‌ முடியும் என்ப‌தும் என் க‌ருத்தே.

"வேறோரு சுவிசேஷ‌ம் இல்லையே, சில‌ர் உங்க‌ளை க‌ல‌க‌ப்ப‌டுத்தி, கிறிஸ்துவினுடைய‌ சுவிசேஷ‌த்தை புர‌ட்ட‌ ம‌ன‌தாயிருக்கிறார்க‌ளேய‌ல்லாம‌ல் வேற‌ல்ல‌" க‌லா. 1:7

இந்த‌ குழ‌ப்ப‌ங்க‌ள் அன்று ம‌ட்டும் இல்லை, இன்று வ‌ரை தொட‌ர்ந்து வ‌ருகிற‌து என்ப‌தை மாத்திர‌மே, நாங்க‌ள் சொல்லுகிறோம்,அதுவும் வ‌ச‌ன‌த்தை கொண்டு தான்.

"நிறைய விஷயங்களில் முரண்படுகிறீர்கள் சகோதரரே!"

எப்ப‌டி என்று சொல்வீர்க‌ளென்றால் ந‌ல‌மாக‌ இருக்கும்!!

ரோட்டிலே டேஞ்ச‌ர் போர்ட் இருக்க‌ தான் செய்கிற‌து, அதை பார்த்து எத்துனை பேர் எச்ச‌ரிக்கை அடைகிறார்க‌ள், ஆனாலும் ஒருவ‌னாவ‌து க‌ண்ணுள்ள‌வ‌ன் அதை பார்க்க‌ மாட்டானா என்று தான் அந்த‌ எச்ச‌ரிக்கை ப‌ல‌கை வைக்க‌ப்ப‌டுகிற‌து. அப்ப‌டி தான் எச்ச‌ரிக்கையை வைக்கிறோம், யாரையும் எங்க‌ளை பின் ப‌ற்ற‌ சொல்ல‌வில்லை. இதில் எந்த முரணும் கிடையாது என்று தான் நினைக்கிறேன்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard