soulsolution wrote: //ஒரு சுவாரஸ்யமான செய்தி அறிந்தேன். 'செஸ்' விளையாட்டில் யார் அதிகமான probable moove களை அதிகம் அறிந்திருக்கிறார்களோ அவர்களே கடைசியில் ஜெயிப்பார்களாம். விஸ்வநாதன் ஆனந்து அவர்களுக்கு அடுத்த 64 moove கள் பற்றி முன்னமே தெரியுமாம்.
ஆக ஒரு மூவ் எப்படி இருக்கப்போகிறது என்பதில்தான் வெற்றியோ தோல்வியோ நிர்ணயமாகிறது. அப்படியிருக்க ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கப்போகும் probable reactions எண்ணற்றவையாக நமக்குத்தோன்றினாலும் அவை அனைத்தையும் தேவன் அறிவார் என்பதை விளக்க அவசியமில்லை. தாவீது சவுல் கையில் சிக்கி மரித்திருந்தால் 'இயேசு'தோன்றியிருக்க முடியாது. ஆக எல்லாமே தேவனுடைய திட்டங்களின் Execution தான்.//
தேவனைப் பற்றி நல்லதொரு உதாரணத்தின் மூலம் புரிய வைத்ததற்கு நன்றி சகோ.ஆத்துமா அவர்களே!
ஆனால் ஒரு சந்தேகம். சாத்தான் உண்டானதும் தேவதிட்டத்தின் ஒரு execution தானோ?
உலகையும் அதிலுள்ள யாவற்றையும் படைக்கையில் தேவன் நல்லதென்று கண்டார். அவ்வாறெனில் சாத்தானை (அதாவது சாத்தானாக மாறின தேவதூதனை) படைக்கையிலும் அது நல்லதென்றுதான் கண்டிருப்பார் (ஒருவேளை கெட்டதென்று கண்டுதான் தேவன் சாத்தானைப் படைத்தார் என நீங்கள் கூறினால் அதற்கு நான் எதிர்வாதம் செய்யப்போவதில்லை). அப்படி நல்லதாக இருந்த தேவதூதனை சாத்தானாக மாற்றியதும் தேவ திட்டத்தின் execution தானோ? நல்ல மனிதனைக் கெடுக்க சாத்தான் இருந்தான், ஆனால் நல்ல தேவ தூதனைக் கெடுத்து சாத்தானாக்க யாரிருந்தார்?
பைபிளில் வரும் படைப்பபற்றிய பகுதி (ஆதி. 1) மனிதன் இந்த பூமியில் உயிர்வாழ தேவையானது மாத்திரம் தான் படைக்கப்பட்டதாக எழுதப் பட்டிருக்கிறது. மற்ற சிருஷ்டிப்பு அனைத்தும் (தேவதூதர்கள் உட்பட) எப்போ நடந்தது என்று வேதத்தில் இல்லை, ஆனால் எல்லாமே சிருஷ்டிக்கப்பட்டது என்பது மாத்திரம் நிச்சயம். தேவன் ஒருவரே அனாதியாக இருக்கிறார் மற்றவை எல்லாம் ஒரு ஆதி (with a begining like in Jn 1:1) கொண்டவை.
பிசாசு என்பவன் அல்லது சாத்தான் என்று சொல்லப்படுபவன் ஆதியிலிருந்தே கொலைப்பாதகானாகவும், பொய்யும், பொயிற்கு பிதாவாக இருக்கிறான் என்கிறது வேதம் (யோவான் 8:44). அப்படி என்றால், சாத்தான் தேவனின் திட்டத்தை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட ஒரு சிருஷ்டி என்பது என் கருத்து. ஆதியிலிருந்து (From the begining) அல்லது தொடக்கத்திலிருந்து அவன் கொலைப்பாதகனாக இருப்பது என்றால், அவன் படைக்கப்பட்ட நாள் முதல் என்றே அர்த்தம்.
இதற்கு உடனே இல்லை, இல்லை அவன் ஆராதனைக்காரனாக தான் இருந்தான், பிறகு தான் அவன் சாத்தானாக மாறினான் என்று கேட்கலாம். என் பதில், இப்படி தேவனின் சித்தம் நிறைவேற்ற படைக்கப்பட்ட ஒரு சிருஷ்டியை தேவன் எப்படி வேண்டுமென்றாலும் எந்த நிலையிலும் வைக்கலாமே. எடுத்துக்காட்டு, யூதாஸ் (அப்போஸ்தலானாக இருந்தான்), பார்வோன் (எகிப்த்தின் அரசனாக இருந்தான்), போன்றவர்கள்.
ஆக சாத்தான் அந்த தீமையான நிலையிலேயே படைக்கப்பட்டிருக்கலாம். இதற்கு ஆதாரமாக இன்னும் ஒரு வசனம் இருக்கிறது. "ஒளியை படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்" ஏசா. 45:7
bereans wrote: //பிசாசு என்பவன் அல்லது சாத்தான் என்று சொல்லப்படுபவன் ஆதியிலிருந்தே கொலைப்பாதகானாகவும், பொய்யும், பொயிற்கு பிதாவாக இருக்கிறான் என்கிறது வேதம் (யோவான் 8:44). அப்படி என்றால், சாத்தான் தேவனின் திட்டத்தை நிறைவேற்ற உருவாக்கப்பட்ட ஒரு சிருஷ்டி என்பது என் கருத்து. ஆதியிலிருந்து (From the begining) அல்லது தொடக்கத்திலிருந்து அவன் கொலைப்பாதகனாக இருப்பது என்றால், அவன் படைக்கப்பட்ட நாள் முதல் என்றே அர்த்தம்.
இதற்கு உடனே இல்லை, இல்லை அவன் ஆராதனைக்காரனாக தான் இருந்தான், பிறகு தான் அவன் சாத்தானாக மாறினான் என்று கேட்கலாம். என் பதில், இப்படி தேவனின் சித்தம் நிறைவேற்ற படைக்கப்பட்ட ஒரு சிருஷ்டியை தேவன் எப்படி வேண்டுமென்றாலும் எந்த நிலையிலும் வைக்கலாமே. எடுத்துக்காட்டு, யூதாஸ் (அப்போஸ்தலானாக இருந்தான்), பார்வோன் (எகிப்த்தின் அரசனாக இருந்தான்), போன்றவர்கள்.//
மொத்தத்தில் சாத்தான் கொலைபாதகனாக இருப்பதற்கும் தேவன்தான் காரணம், கேட்டின் மகனான யூதாஸ் கெட்டுப்போனதற்கும் தேவன்தான் காரணம், பார்வோன் மனம் கடினப்பட்டதற்கும் தேவன்தான் காரணம் என்கிறீர்கள். நாமுங்கூட தேவனுக்குக் கீழ்ப்படியாதிருப்பதற்கு தேவன்தான் காரணம் என்கிறீர்கள். ஆனால் இறுதியில் எல்லாம் நன்மையாக முடியுமென்பதால், அத்தனை தீமைகளையும் ஏற்றுக்கொள்வோம், நாமோ அல்லது பிறரோ தீமை செய்தாலும் அதுபற்றி கவலைப்படவும் வேண்டாம் என்கிறீர்கள்.
"நான் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்" யாத். 7:3
"கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது" யாத். 7:13, மேலும்
யாத். 7:22; 8:15 இன்னும் பல வசனங்கள் பார்வோனின் இருதயம் கடினப்படுத்தியது குறித்து இருக்கிறது. இது எல்லாம் வாசித்ததே இல்லையா சகோதரரே! இப்படி கடினப்படுததி கடைசியாக பார்வோனை சிவந்த சமுத்திரத்தில் அழித்தார் தேவன்.
மேலும் 2 தெச 2:13லும் தேவனே கொடிய வஞ்சகத்தை அனுப்பவதாக எழுதியிருக்கிறது. அவரின் திட்டம் நிறைவேற அவர் எல்லாவற்றையும் செய்கிறார்.
"இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டு பண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன்" ஏசா 54:16
இப்படி எல்லாம் அனுமதிப்பது அவரின் திட்டம் நிறைவேறவும், மனிதர்கள் கற்றுக்கொள்ளவும் தான்.
அன்பு57 எழுதுகிறார்: "நாமுங்கூட தேவனுக்குக் கீழ்ப்படியாதிருப்பதற்கு தேவன்தான் காரணம் என்கிறீர்கள். ஆனால் இறுதியில் எல்லாம் நன்மையாக முடியுமென்பதால், அத்தனை தீமைகளையும் ஏற்றுக்கொள்வோம், நாமோ அல்லது பிறரோ தீமை செய்தாலும் அதுபற்றி கவலைப்படவும் வேண்டாம் என்கிறீர்கள்."
"என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வர மாட்டான்; கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன்" யோவான் 6:44.
ஆக பிதா யார் மேல் சித்தம் கொண்டிருக்கிறாரோ, அந்த மனிதன் நிச்சயமாக இயேசுவினிடத்தில் வருவான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அதற்காக பிதா யாரையெல்லாம் இழுத்துக்கொள்ளவில்லையோ, அவர்கள் எல்லாம் நரகத்திற்கு போவார்கள் என்று இல்லை, அவர்களை இயேசு கடைசி நாளில் (சுவிசேஷ யூகத்தின் முடிவும், ஆயிரம் வருஷ அரசாட்சியின் துவக்கமும்) எழுப்புவார். இப்ப சொல்லுங்க, பிதா ஒரு மனுஷனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அந்த மனிதன் எப்படி பொறுப்பாகிறான். ஆக ஒரு மனுஷன் கிறிஸ்துவிடம் வருவதோ, வராமல் இருப்பதோ, பிதாவின் சித்தம். இப்படி ஒரு கருத்தை வேதம் தான் சொல்லுகிறதே தவிர, என் சொந்த சரக்கு இல்லை. ஆம் எழுப்பிய பின் அந்த மனிதர்கள் எல்லாம் நீதியை கற்றும் கொள்ளும் படியான நியாயத்தீர்ப்பு நாட்கள் இருக்கும் (ஏசா. 9:11; 35ம் அதிகாரம்). தேவனின் சித்தம் எல்லோரும் நீதியை கற்றுக்கொள்ளும் படி இருக்கிறது என்றால் நீங்கள் ஏன் அதற்கு வருத்த படுகிறீர்கள். கிறிஸ்துவ அன்பிருந்தால், இதை குறித்து சந்தோஷம் தானே பட வேண்டும்.
பிறர் தீமை செய்வதை பார்த்து நீங்கள் கவலைப்பட்டு எத்துனை பேர் திருந்தி விட்டார்கள். நான் மீண்டும் சொல்லுகிறேன் நீங்கள் யோவான் 6:44ஐ தியானித்து பாருங்கள். அமேரிக்காவில் சுவிசேஷம் சொல்லாத இடமே இல்லை என்று நினைக்கிறேன், ஆனால் அங்கோ, இங்கலாந்திலோ, ஆஸ்த்ரேலியாவிலோ சிறை சாலையில் இருப்பவர்கள் எல்லாம், ஞாஸ்னானம் எடுத்துக்கொண்ட கிறிஸ்துவர்கள் தான் சகோதரரே.
பூமியையோ, நடக்கும் தீமைகளை குறித்து நீங்கள் ஜெபிக்கலாம், "உம் இராஜியம் வருவதாக, உம் சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல், பூலோகத்திலும் செய்யப்படுவதாக" என்று. ஆனால் தேவன் நியமித்த நேரத்தில், நிச்சயம் வேதத்தில் தந்துள்ள அந்த இராஜியம் வரும்.
அன்று "அழுகையும், பற்கடிப்பும்" யாருக்கு இருக்கும் தெரியுமா? இன்று சுவிசேஷம் என்றால் என்ன என்று புரிந்துக்கொள்ளாத கிறிஸ்தவர்களுக்கு தான்.
அன்பு சகோதரரே, பெயரில் அன்புள்ளவராக இருக்கிறீர்கள், அதே அன்பு அக்கிரமம் செய்பவர்கள், அநீதி செய்பவர்கள், தேவன் சொன்னப்படியே எழுந்து நீதியை கற்று கொள்வார்கள் என்று விசுவசிப்பதில் என்ன சிரமம். "அன்பு சகல பாவங்களையும் மூடும்" என்கிறது வேதம். அப்படி பாவம் எல்லாம் போனால் தான் ஒருவன் உயிர்த்தெழ முடியும். அந்த பாவத்தை போக்க தான் இயேசு கிறிஸ்து தன் இரத்தம் சிந்தினார். அதன் பலனாக தான் அனைவரும் உயிர்த்தெழுவார்கள். உயிர்த்தெழுந்தார்கள் என்றால் அவர்களிடம் பாவம் இல்லை. பாவம் இல்லை என்றால், நீதியை கற்றுக் கொள்வார்கள், ஏனென்றால், இன்று இந்த உலகத்தை தீமையை நோக்கி நடத்தி சென்று கொண்டிருக்கும் சாத்தான் 1000 வருடம் அளவு கட்டப்பட்டிருப்பான்.
மொத்தத்தில் சாத்தான் கொலைபாதகனாக இருப்பதற்கும் தேவன்தான் காரணம், கேட்டின் மகனான யூதாஸ் கெட்டுப்போனதற்கும் தேவன்தான் காரணம், பார்வோன் மனம் கடினப்பட்டதற்கும் தேவன்தான் காரணம் என்கிறீர்கள். நாமுங்கூட தேவனுக்குக் கீழ்ப்படியாதிருப்பதற்கு தேவன்தான் காரணம் என்கிறீர்கள். ஆனால் இறுதியில் எல்லாம் நன்மையாக முடியுமென்பதால், அத்தனை தீமைகளையும் ஏற்றுக்கொள்வோம், நாமோ அல்லது பிறரோ தீமை செய்தாலும் அதுபற்றி கவலைப்படவும் வேண்டாம் என்கிறீர்கள்.
bereans wrote: //அன்று "அழுகையும், பற்கடிப்பும்" யாருக்கு இருக்கும் தெரியுமா? இன்று சுவிசேஷம் என்றால் என்ன என்று புரிந்துக்கொள்ளாத கிறிஸ்தவர்களுக்கு தான்.//
மத்தேயு 13:41-43 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்.
மத்தேயு 13:49,50 தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
நான் சொல்லாத ஒன்றை நான் சொன்னதாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்களே! என்ன நியாயம்? நமக்கோ இதை குறித்து தெரிய தேவன் கிருபை பாராட்டினார். தெரியாதவர்களும் தப்பாக இல்லை ஏனென்றால், அவர்களுக்கு அந்த கிருபை கிடைக்கவில்லை என்பதே என் வாதம். அவர்கள் தெரிந்துக்கொள்ளும் படி ஒரு காலத்தை தேவன் வைத்திருக்கிறார். அப்பொழுது தெரிந்துக்கொள்வார்கள்.
உங்களுக்கு தெரியுது, நீங்கள் தவறாக நடப்பதில்லை. தெரியாதவனிடத்தில் போய், நீ ஏன் தவறுகிறாய் என்று கேட்பதில் என்ன லாபம்?
தீமை நடப்பதை நான் அனுமதிக்கவோ, அனுமதிக்காமல் இருப்பதற்கோ, எனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
நீங்கள் சுவிசேஷம் சொல்லுவதால் தான் இன்று ஜனங்கள் சத்தியத்திற்குள் வருகிறர்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் ஊரில், விடுங்கள், உங்கள் தெருவில் எத்துனை பேர் உங்கள் சுவிசேஷம் கேட்டு தீமையை விட்டு விளகியிருக்கிறர்கள்? உங்கல் ஊரில் டாஸ்மாக் கடைகளே இல்லாமல் போய் விட்டதா? உங்கள் ஊரில் சிறைச் சாலைகளே இல்லாமல் போய் விட்டதா? நீங்கள் சுவிசேஷம் சொல்லி எல்லா தீமையையும் மாற்றி போட்டு விட முடிந்ததா? உங்கள் சொந்தங்கள் எத்துனை பேர் நீங்கள் நடக்கும் வழியில் நடக்கிறார்கள்?
The Great Commission என்று சொல்லப்பட்ட ஒரு கட்டளை ஏதோ இன்று உள்ள ஊழியர்களுக்கு என்று தப்பாக புரிந்ததின் விழைவு தான் இது. இந்த கட்டளை அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்டது என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இன்று அப்போஸ்தலர்கள் என்று யார் இருக்கிறார்கள்? இன்று இருப்பவர்கள் எல்லாம் வெறும் சீஷர்களே. சீஷர்களுக்கு இந்த அதிகாரம் இல்லை. அப்பொஸ்தலர்கள் இருந்த வரைக்கும் அவர்கள் யார் மேல் கைகளை வைத்தார்களோ அவர்களுக்கும் அந்த அதிகாரம் கிடைத்தது. அவ்வளவே. இன்று இருப்பவர்கள் எல்லாம், கள்ள அப்போஸ்தலர்கள் மாத்திரமே! இவர்கள் தங்களின் வைற்று பிழைப்புக்கு நடத்தும் நாடகம் தான் இது எல்லாம்.
அன்று பேதுரு பிரசங்கித்த போது 3000 பேர் என்று 1000 கணக்கில் சபையில் சேர்ந்தார்கள் என்கிறது வேதம், ஏனென்றால் அவர்களுக்கு அந்த கட்டளை இருந்தது. இன்று அப்படி இல்லை. இன்று நடப்பது மனித முயற்சியே. அதற்கு மேல் பிதா ஒருவனை இழுத்துக்கொண்டால் மாத்திரமே அவன் இயேசு கிறிஸ்துவினிடத்திற்கு வர முடியும்.
இன்றைய பிரசங்கி மார்கள் யாரிடம் பிரசங்கிக்கிறார்கள். ஒன்று தங்களின் சபைகளில் அல்லது வேறு சபைகளில் அழைப்பு பெற்று கிறிஸ்தவர்களிடம் மாத்திரமே!!
சரி இது வேரிடத்தில் எழுதவேண்டியது, இங்கு பதிந்து விட்டேன்.
தேவன் இந்த தீமை எல்லாம் அனுமதிப்பது, சிலரை சபைக்கு அழைத்திருக்கிறபடி அவர்கள் இந்த பூமியில் இயேசு கிறிஸ்துவை போல் தங்களை பலியாக ஒப்புகொடுத்து வாழ தான் (இன்று அப்படி பட்ட ஒரு ஊழியரையும் பார்க்க முடியாதது வேதனையே), அதற்காக அந்த தீமையில் இருப்பவர்களை தேவன் அப்படியே விட்டு விடுவதில்லை. அவர்கள் எல்லோரும் மனம் மாற, நீதியை கற்றுக்கொள்ள ஒரு காலம் வைத்திருக்கிறார். இது வேத சத்தியமே!
அன்பு57 எழுதுகிறார்: "மொத்தத்தில் சாத்தான் கொலைபாதகனாக இருப்பதற்கும் தேவன்தான் காரணம், கேட்டின் மகனான யூதாஸ் கெட்டுப்போனதற்கும் தேவன்தான் காரணம், பார்வோன் மனம் கடினப்பட்டதற்கும் தேவன்தான் காரணம் என்கிறீர்கள். நாமுங்கூட தேவனுக்குக் கீழ்ப்படியாதிருப்பதற்கு தேவன்தான் காரணம் என்கிறீர்கள். ஆனால் இறுதியில் எல்லாம் நன்மையாக முடியுமென்பதால், அத்தனை தீமைகளையும் ஏற்றுக்கொள்வோம், நாமோ அல்லது பிறரோ தீமை செய்தாலும் அதுபற்றி கவலைப்படவும் வேண்டாம் என்கிறீர்கள்."
பார்வோன் மனம் கடினப்பட்டதற்கு தேவன் தான் காரணம் என்று இத்துனை வசனங்கள் கான்பித்தும் நீங்கள் அதை கண்டுக்கொள்ளவே இல்லை போல்.
"மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறிய வேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும்" (ரோம் 11:25) என்று பவுல் எழுதுகிறார். இந்த மனகடினத்தை என்ன பவுலா கொடுக்கிறார்? இல்லை பெரெயன்ஸின் சொந்த கற்பனையா? தேவன் தன் திட்டத்தை நிறைவேற்ற இப்படி செய்கிறார் என்றால் அந்த அனந்த ஞானத்தை புரிந்துக்கொள்ள நமக்கு பக்குவம் போதாது.
சரி, தீமையை யாரெல்லாம், வெறுக்கிறார்கள். மனதை தொட்டு சொல்லுங்கள், இன்று கிறிஸ்தவர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள் எல்லோரும் தீமையை வெறுத்தவர்களா? அல்லது தீமையை நினைத்து வருந்துகிறார்களா? இது எதுவும் கிடையாது. இன்று நடக்கும் கொலை, கொள்ளை, வேசித்தனம் இன்னும் உங்களுக்கு தெரிந்த எல்லா தீமைகளில் கிறிஸ்தவர்களும் பங்கு கொள்கிறார்கள். இல்லை என்று மாத்திரம் சொல்லாதீர்கள். இவர்கள் எல்லோரும் வேதத்தை வாசிக்கிறவர்கள் தான், பிறகு எப்படி? மேலும் நடக்கும் தீமைகளுக்காக நீங்கள் வருத்தப்பட்டு என்னத்தை சாதித்தீர்கள்?
இந்த வசனங்களில் இப்படி ஒருத்தருக்கு ஒரு மாதிரியும் இன்னொருவருக்கும் வேறு மாதிரியும் விசுவாசத்தை நியமிப்பது பவுலோ, பேதுருவோ அல்லது இப்போது எழுதும் பெரேயன்ஸோ கிடையாது, மாறாக சிலரை விசுவாசிக்கவும் பலரை அவிசுவாசமாக நடக்க செய்வது தேவனின் நியமனித்தின் படியே. அவரே இதை நியமிக்கிறார்.
சகோதரரே, அனுபவங்கள் அல்ல, வசனங்களே நம்மை நடத்தட்டும்.
//"நான் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்" யாத். 7:3
"கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது" யாத். 7:13, மேலும்
யாத். 7:22; 8:15 இன்னும் பல வசனங்கள் பார்வோனின் இருதயம் கடினப்படுத்தியது குறித்து இருக்கிறது. இது எல்லாம் வாசித்ததே இல்லையா சகோதரரே! இப்படி கடினப்படுததி கடைசியாக பார்வோனை சிவந்த சமுத்திரத்தில் அழித்தார் தேவன்.//
இவ்வசனங்களையெல்லாம் வாசித்ததே இல்லையா எனக் கேட்பதைவிட, இவ்வசனங்களுக்கு உங்கள் பதில் என்ன எனக் கேட்டால் நன்றாயிருக்கும் என எண்ணுகிறேன்.
அவ்வசனங்களை நான் படித்ததுண்டுதான். ஆனால் அவற்றைக் கொண்டு, தேவன் நேரடியாக பார்வோனின் மனதைக் கடினப்படுத்தியதாகக் கருதக்கூடாது என்பது எனது கருத்து. உதாரணமாக, பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தியதாக யாத். 8:15,32; 9:34 வசனங்கள் கூறுவதால் பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்தினானா அல்லது பார்வோன் தன் இருதயத்தைக் கடினப்படுத்த தேவன் அனுமதித்தாரா அல்லது தேவன் நேரடியாகக் கடினப்படுத்தினாரா எனும் கேள்விகள் எழுகின்றன.
என்றபோதிலும், தேவன் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தியதாக பல வசனங்கள் சொல்வதால், இவ்விஷயத்தில் நான் உங்களோடு விவாதிக்கப்போவதில்லை. அவ்வாறே, யூதாஸ் விஷயத்திலும் நான் விவாதிக்கப்போவதில்லை. ஆனால், சாத்தானைப் பொறுத்தவரை, அவன் காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருப் என்றும், சிருஷ்டிக்கப்பட்ட நாள் முதல் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது வரை அவன் வழிகளில் குறையற்றிருந்தான் என்றும் எசேக்கியேல் 28:14,15 கூறுவதால், தேவன் அவனைப் பொல்லாதவனாக சிருஷ்டிக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
ஆதிமுதல் அவன் கொலைபாதகனாக இருக்கிறான் என்பது, ஆதியில் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட நாள் முதல் என்ற பொருளில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து.
bereans wrote:
//அன்று "அழுகையும், பற்கடிப்பும்" யாருக்கு இருக்கும் தெரியுமா? இன்று சுவிசேஷம் என்றால் என்ன என்று புரிந்துக்கொள்ளாத கிறிஸ்தவர்களுக்கு தான்.//
எல்லோரும் நித்தியஜீவனை அடைவார்களெனில், இவர்களுக்கு மட்டும் ஏன் அழுகையும் பற்கடிப்பும்? எல்லோரும் நித்தியஜீவனை அடைவார்கள் என விசுவாசிப்பதுதான் தேவஅன்பு எனக் கூறுகிற நீங்கள், சிலருக்கு மட்டும் அழுகையும் பற்கடிப்பும் என எப்படிச் சொல்கிறீர்கள்?
பின்வரும் வசனங்களுக்கு நீங்கள் இன்னும் பதில்தரவில்லையே?
மத்தேயு 13:41-43 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள்.
மத்தேயு 13:49,50 தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
-- Edited by anbu57 on Sunday 25th of October 2009 04:30:55 AM
இந்த இடத்தில் நாம் பார்க்க வேண்டியது, ஒரு நிகழுவுக்கு யார் காரணம் என்பதை தான். நிகழ்வு நடந்தது (இருதயம் கடினப்பட்டது), அதை தேவன் சொன்னது போல் கடினப்பட்டது என்கிறது வசனம் 7:13. இதை வாசித்தும், இதற்கு காரணம் தேவன் இல்லை என்று சொல்லுவது ஆச்சரியமாக தான் இருக்கிறது. தேவன் ஆசீர்வதித்தார் என்றால், அது தேவன் தான் செய்கிறார் என்று கேள்வி கேட்ப்பீர்கள் போல்!
தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்ட்டித்தார் என்றால் அதற்கும் தேவன் நேரடியாக செய்தாரா என்ற கேள்வி தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். தேவன் தன் சித்தத்தை செயல்ப்படுத்த கருவிகளை பயன்ப்படுத்துகிறார், ஏனென்றால் அந்த கருவியாக தேவன் மாறுவதில்லை. தேவன் பார்வோனாக மாறவில்லை, மாறாக அவன் இருதயத்தை கடினப்படுத்தினார் என்று வசனம் தெளிவாக சொல்லுவதை, நாம் கடந்து வந்த கோட்பாடுகள் (Doctrines) அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது என்பது தான் உண்மை.
அன்பு57 எழுதுகிறார்: "ஆதிமுதல் அவன் கொலைபாதகனாக இருக்கிறான் என்பது, ஆதியில் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட நாள் முதல் என்ற பொருளில் கூறப்பட்டிருக்க வேண்டும் என்பது என் கருத்து."
1. சாத்தானின் ஆதி (சாத்தானின் படைப்பு) 2. உலகத்தின் ஆதி (உலகத்தின் படைப்பு)
உலகத்தின் படைப்பு முதல் என்றால் இது எந்த படைப்பு என்று தெளிவாக எழுதவில்லை. இந்த பூமியை தான் உலகம் என்று சொன்னால் அது தவராகிவிடும், ஏனென்றால், இந்த பூமி அவர்படைத்த உலகங்களின் ஒரு பகுதியே.
ஆதிமுதலாக அவன் கொலைபாதகனாக என்றால் அவன் படைக்கப்பட்டது முதலாக தான் இருக்க முடியுமே தவிர அதற்கும் உலகம் படைப்பிற்கும் எப்படி சம்பந்தப்படுத்துகிறீர்கள் என்பது விளங்கவில்லை. இன்னும் ஆராய்ந்து பாருங்கள் பார்வோன் மற்ரும் யூதாஸின் காரணங்களை ஏர்றுக்கொண்டது போல், இதையும் ஏற்றுக்கொள்வீர்கள்.
மத். 13:41,43 வரை. இந்த வசனங்கள் இயேசு கிறிஸ்து உவமைகளில் பேசி வரும் வார்த்தைகள். 13ம் அதிகாரம் முழுவதும் அவர் பெரும்பாளும் உவமைகளில் பேசி வருகிறார். இந்த வசனத்தை முடிக்கும் போது, காதுள்ளவன் கேட்க்க கடவன் என்று முடிக்கிறார். அப்படி என்றால் இது செவிடாக இர்ப்பவர்களுக்கு மாத்திரம் புரியக்கூடாது என்று சொல்லியிருக்கிறாரா. நமக்கு சாதகமாக தோன்றும் ஒரு வார்த்தையை பிடித்துக்கொண்டு விவாதிக்க கூடாது. இந்த வசனம் 31ல் துவங்கவில்லை, 31ல் துவங்கியிருப்பது, அதற்கு மேலே சொல்லப்பட்டிருக்கும் அருப்பு எப்படி நிகழும் என்பதின் விரிவாக்கமே. அந்த சம்பவம முழுவதுமாக படித்தீர்களானால் தெளிவாகிவிடும்.
முதலாவது அக்கினி சூளைக்குள் செல்பவர்கள், இதே பற்களுடனும், இதே கண்களுடன் தான் செல்வார்களா என்று தெளிவு படுத்துங்கள். ஆவியாகி தண்டனை பெறுவார்களா, மாம்சத்தில் தண்டனை பெறுவார்களா? ஆவி என்றால் பற்கள், கண்கள் போன்றவை இருக்குமா?
பற்கடிப்பும், அழுகையும், தோல்விக்கொண்டவர்களுக்கு உண்டாகும் ஒரு உணர்வு. இது ஒரு Phrase. இதை வைத்து அவர்கள் literal பல்லை கடிப்பார்கள் என்றும் literal ஆக கண்ணீர் விடுவார்கள் என்பது சற்றும் பொருத்தம் இல்லாதது. ஒரு வசனத்தை முழுவதும் ஆறாயனும், அங்கு பற்கடிப்பு என்றும் அக்கினி என்றும், கண்ணீர் என்றும் கொடுத்திருந்தால், அதை அப்படியேவா எடுத்துக்கொள்ள முடியும். எந்த அக்கினியில் தான் கண்ணீர் வடிப்பது தெரியும் என்று புரியவில்லை. அந்த அக்கினியில் கண்ணீர் காய்ந்து போகாதா? போன்ற கேள்விகள் வேண்டுமென்றால் எழுப்பலாமே தவிர வேற எந்த கேள்வியை கேட்பது.
bereans wrote: //ஆதிமுதலாக அவன் கொலைபாதகனாக என்றால் அவன் படைக்கப்பட்டது முதலாக தான் இருக்க முடியுமே தவிர அதற்கும் உலகம் படைப்பிற்கும் எப்படி சம்பந்தப்படுத்துகிறீர்கள் என்பது விளங்கவில்லை.//
சாத்தான் படைக்கப்பட்டது முதல் அவனிடம் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது வரை குறையற்றவனாக இருந்தான் என எசே. 28:14,15 கூறுவதைப் புறக்கணித்துள்ளீர்கள். காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருபை தேவன் எவ்வாறு கொலைபாதகனாகப் படைத்திருக்கமுடியும்?
ஆதியில் வார்த்தை இருந்தது என யோவான் 1:1 கூறுகிறது. யோவான் கூறுகிற இந்த ”ஆதி”க்குப் பிறகுதான் ஆதி. 1:1 கூறுகிற “ஆதி” வருகிறது. இந்த 2 “ஆதி”களுக்கும் இடையில்தான் சாத்தான் சிருஷ்டிக்கப்பட்டிருக்க வேண்டும் என நான் கருதுகிறேன். அதாவது சாத்தான் சிருஷ்டிக்கப்பட்டு சிலகாலம் கழித்துதான் ஆதி. 1:1 கூறுகிற “ஆதி” தொடங்கியிருக்கும் என நான் கருதுகிறேன். மனுஷன் சிருஷ்டிக்கப்பட்ட பிறகுதான், மனுஷனிடம் சாத்தான் பொய் சொன்னான், நடுமரக் கனியைச் சாப்பிட்டால் மனுஷன் சாவதில்லை என்று பொய்சொல்லி, மனிதனின் சாவுக்கு வழிவகுத்து மனுஷகொலைபாதகனாக ஆனான். மனுஷன் சிருஷ்டிக்கப்பட்ட பின்னர்தான் மனுஷனைக் கொலைசெய்யும் எண்ணம் சாத்தானிடம் வந்திருக்கும். எனவே மனுஷன் சிருஷ்டிக்கப்பட்ட அந்த “ஆதி”யிலிருந்துதான் சாத்தான் மனுஷகொலைபாதகனாகவும் பொய்யனாகவும் இருந்திருக்கவேண்டும். அதாவது சாத்தான் சிருஷ்டிக்கப்பட்டபோது, அவன் மனுஷகொலைபாதகனாகவும் பொய்யனாகவும் இருந்திருக்கமுடியாது.
bereans wrote: //இன்னும் ஆராய்ந்து பாருங்கள் பார்வோன் மற்ரும் யூதாஸின் காரணங்களை ஏர்றுக்கொண்டது போல், இதையும் ஏற்றுக்கொள்வீர்கள்.//
பார்வோன் மற்றும் யூதாஸின் காரியங்களில் நான் விவாதிக்கப்போவதில்லை என்றுதான் கூறினேனேயொழிய, அக்காரியங்களில் நீங்கள் சொல்வதை ஏற்பதாகக் கூறவில்லை.
அன்பு சொல்வதைப்பார்த்தால் தேவனுக்குத் தெரியாத, தேவனை அதிர்ச்சிக்குள்ளாக்குகிற சம்பவங்கள் உண்டு என்பதுபோல உள்ளது. சகலமும் அறிந்தவருக்கு சஸ்பென்ஸ் ஏதுமில்லை. நம் அற்ப அறிவைக்கொண்டு தேவனை அளப்பதே தேவச்தூஷணமாகும்.
ஓட்டப்பந்தயத்தில் ஜெயிக்க வேண்டுமென்றால் அதற்கொரு கோச் வேண்டும், உடலைவருத்தி பயிற்சி செய்தால்தான் பந்தயத்தில் பங்குபெற முடியும். நித்தியஜீவனின் அருமையை தெரிந்துகொள்ள தீமை நிறைந்த இந்த பயிற்சிக் களத்தில் 'சாத்தான்' என்ற கோச்சை தேவன் நியமித்துள்ளார்.
அவர் controlல் இல்லாமலோ அவருக்குத் தெரியாமலோ உலகத்தில் ஒன்றும் நடப்பதில்லை! அப்படி ஏதாவது ஒன்று இருக்குமாகில் அவர் தேவனே அல்ல. மீண்டும் "அவருக்கு வல்லமை உண்டு ஆனால் அதை அவர் செயல்படுத்துவதில்லை" என்ற பழைய பல்லவியை பாடவேண்டாம்.
இல்லை நீங்கள் ஊழியம் செய்து எத்தனை பேரை ஒரு பவுலாக, அல்லது பேதுருவாக மாற்றியுள்ளீர்கள் என்ற விவரங்களைத்தரவும். அப்படி இருப்பின் தயவு செய்து நீங்கள் ஒரு ஜெயிலராகப் போனீர்கள் என்றால் அனேகம் குற்றவாளிகள் 'நீதிமான்களாகி' வெளியில் வருவார்களே!
அன்பு57 எழுதுகிறார்: "சாத்தான் படைக்கப்பட்டது முதல் அவனிடம் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டது வரை குறையற்றவனாக இருந்தான் என எசே. 28:14,15 கூறுவதைப் புறக்கணித்துள்ளீர்கள். காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட கேருபை தேவன் எவ்வாறு கொலைபாதகனாகப் படைத்திருக்கமுடியும்?"
இதற்காக தான் யூதாஸை ஒப்பீட்டு பார்க்க முன்னமே ஒரு பதிவில் எழுதுயிருக்கிறேன். இயேசு கிறிஸ்துவை காட்டி கொடுக்கும்படி யூதாஸ் நியமிக்கப்பட்டவனாக இருந்திருந்தாலும், அவன் அப்போஸ்தலன் என்கிற நிலையில் தான் இருந்தான். அப்படியே தான் சாத்தன் இப்படி ஒரு காரியத்திற்காக படைக்கப்பட்டிருந்தாலும், அவனை அந்த காலம் வரைக்கும், "குறையற்றவனாகவே" அனுமதித்திருந்தார் தேவன் என்பது என் கருத்து.
அன்பு57 எழுதுகிறார்: "எல்லோரும் நித்தியஜீவனை அடைவார்களெனில், இவர்களுக்கு மட்டும் ஏன் அழுகையும் பற்கடிப்பும்? எல்லோரும் நித்தியஜீவனை அடைவார்கள் என விசுவாசிப்பதுதான் தேவஅன்பு எனக் கூறுகிற நீங்கள், சிலருக்கு மட்டும் அழுகையும் பற்கடிப்பும் என எப்படிச் சொல்கிறீர்கள்?"
இவர்கள் என்றுமே அழுதுக்கொண்டும், பற்கடிப்போடு இருப்பார்கள் என்று வேதம் கூறவில்லையே. நீதி கற்றுக்கொடுக்கப்படும் காலத்தில் இவர்கள் நிலை அப்படி இருக்கும் என்பது தான் என் கருத்து. (ஏனென்றால், எத்துனை பேரிடத்தில் இவர்கள் பரலோகத்திற்கும், நரகத்திற்கும் போய் வந்திருக்கிறேன் என்று சொல்லியிருப்பார், ஆனால் கடைசியில் அவர்களுக்கு முன்பு இந்த பூமியில் இருக்கும் போது இப்படி ஒரு உணர்வு வருவது நிச்சயமெ தானே). ஆனால் நீதியை கற்று கொண்ட பிறகு அவர்கள் அந்த நிலையில் இருப்பது இருக்காது.
மேலும் 1 தீமோ. 2:4,5ல் எல்லோரும் சத்தியத்தை அறிகிற அறிவை அடைய வேண்டும் என்கிறது வசனம். அது என்ன சத்தியம். அதாவது,
1. தேவன் ஒருவரே 2. தேவனுக்கும் மனுஷர்களுக்கும் மத்தியஸ்தர் ஒருவரே, அவர் இயேசு கிறிஸ்துவே.
இன்று உலகத்தாருக்கு இது தெரிய வாய்ப்பு இல்லை, அவர்களை விட்டு விடுங்கள், நம் கிறிஸ்தவர்களுக்கே இது தெரிவது இல்லை, ஆகவே தான் அவர்கள், இயேசுவும் அவரே, பிதாவும் அவரே என்கிறு சொல்லி வருகிறார்கள். இப்படியாக இவர்களும் இந்த சத்தியத்தை அறிய செய்வார் தேவன் என்பதை தான் வசனம் சொல்லுகிறது.
நம்முடைய பாவங்களை மட்டுமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாக இயேசுகிறிஸ்து இருப்பதாக 1 யோவான் 2:2 கூறுகிறது.
சர்வலோகத்தில் சாத்தானும் ஒரு அங்கம்தானே? ஆம் எனில், அவனுடைய பாவங்களையும் இயேசுவின் பலி நிவிர்த்தி செய்கிறதல்லவா? ஆம் எனில், அவன் ஏன் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்?
சர்வலோகம் என்றால் எலி, ஆடு, மாடு என்று அல்ல. இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தம் மனிதர்களுக்கு மாத்திரமே. அன்று வாழ்ந்த இரட்சதர்களுக்கு கூட அது பொருந்தாது, ஆகவே தான் அவர்கள் உயிர்த்தெழ மாட்டார்கள். அங்கே "சர்வ பிரபஞ்சத்தின்" என்று இருந்திருந்தால் ஒரு வேளை தாங்கள் சொல்லுவது ஏற்றுக்கொண்டிருப்பேன்.
மேலும் சாத்தன் என்பவன் தேவனின் ஒரு குறிப்பிட்ட சித்தத்தை நிறைவேற்ற படைக்கப்பட்டவன் என்று கூறும் போது, அவன் தேவனின் அனுமதியோடு தான் வந்து சோதிக்கிறான் என்று யோபுவில் நாம் வாசிக்கிறோம். ஆகவே சாத்தான் பொறுப்பு தான் ஆனால் அவனை அனுமதிப்பது தேவன் தான்.
சாத்தான் மாத்திரமே நியாயம்தீர்க்கப்படவனாக இருக்கிறான். (எசே. 28:18; யோவான் 16:11). இதை ஏசா.26:10உடன் ஒப்பீட்டு பாருங்கள்.
bereans wrote: //சர்வலோகம் என்றால் எலி, ஆடு, மாடு என்று அல்ல. இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தம் மனிதர்களுக்கு மாத்திரமே. அன்று வாழ்ந்த இரட்சதர்களுக்கு கூட அது பொருந்தாது, ஆகவே தான் அவர்கள் உயிர்த்தெழ மாட்டார்கள். அங்கே "சர்வ பிரபஞ்சத்தின்" என்று இருந்திருந்தால் ஒரு வேளை தாங்கள் சொல்லுவது ஏற்றுக்கொண்டிருப்பேன்.//
சர்வலோகம் என்பது இந்த முழு உலகத்தைத்தான் (whole of the world) குறிப்பிடுகிறது என்பதை ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் அறிந்துகொண்டேன். எனவே, சர்வலோகத்தில் சாத்தான் ஓர் அங்கமல்ல என்பதை ஒத்துக்கொள்கிறேன்.
bereans wrote: //மேலும் சாத்தான் என்பவன் தேவனின் ஒரு குறிப்பிட்ட சித்தத்தை நிறைவேற்ற படைக்கப்பட்டவன் என்று கூறும் போது, அவன் தேவனின் அனுமதியோடு தான் வந்து சோதிக்கிறான் என்று யோபுவில் நாம் வாசிக்கிறோம். ஆகவே சாத்தான் பொறுப்பு தான் ஆனால் அவனை அனுமதிப்பது தேவன் தான்.//
மீண்டும் மீண்டும் முரண்பாடாகவே எழுதுகிறீர்கள். தேவசித்தத்தை நிறைவேற்ற படைக்கப்பட்டவன்தான் சாத்தான் என்கிறீர்கள். அவ்வாறெனில் தேவசித்தத்தைத்தான் சாத்தான் செய்கிறான் என்றாகிறது. அவ்வாறெனில், சாத்தானின் செயல்களுக்கு தேவன் தான் பொறுப்பு என்றாகிறது. ஆனால், நீங்கள் யோபுவின் விஷயத்தைச் சொல்லி, சாத்தானின் செயலுக்கு சாத்தானே பொறுப்பு என்கிறீர்கள். ஏதாவது ஒரு கருத்தை மட்டும் சொல்லுங்கள்.
சாத்தானைப் பொறுத்தவரை தேவசித்தம் எது? கொஞ்சம் தெளிவாகச் சொல்லுங்களேன்.
சாத்தான் மனிதனைக் கெடுக்கவேண்டும் என்பதுதான் தேவசித்தம் எனில், அந்த தேவசித்தத்தை சாத்தான் சரியாக நிறைவேற்றத்தானே செய்துள்ளான்? தேவசித்தத்தை நிறைவேற்றிய சாத்தானுக்கு தண்டனையா? இது என்னய்யா நியாயம்?
ஒரு விஷயத்தை தேவன் அனுமதிப்பது வேறு, தேவனின் சித்தம் என்பது வேறு, தேவன் தமது சித்தத்தை நிறைவேற்றுவது வேறு, தேவனின் செயலாற்றல் என்பது வேறு. நீங்கள் அத்தனையையும் ஒன்றுக்கொன்று தொடர்புப்படுத்துவதால்தான் முரண்பாடுகளும் குழப்பங்களும் வருகின்றன.
அர்த்தங்கள் வேறுபட்டு புரிந்துக்கொண்டோமென்றால், கருத்துகள் ஒத்து போவதில்லை தான். பிரபஞ்சம் (Universe) வேறு உலகம் (World) வேறு. ஆவி ஜீவிகள் இந்த உலகத்தை (World) சார்ந்தவர்கள் கிடையாது. அப்படியே சாத்தானும். மனிதன் தான் சாபமும் அதன் விளைவான மரணத்தையும் பெற்றான், அந்த மரணத்திலிருந்து மனிதனுக்கு தான் இரட்சிப்பு தேவை பட்டது.
சாத்தான் மனிதனைக் கெடுக்கவேண்டும் என்பது தேவ சித்தமில்லை எனில் ஏன் அவனை அனுமதிக்க வேண்டும்?
ஒவ்வருவரின் reaction களைப் பார்த்து அந்தப்படி அவர்களை மரணத்திற்கோ, அல்லது நித்திய ஜீவனுக்கோ தீர்ப்பளிப்பதற்கா?
அல்ல, லஞ்சமே இல்லாத ஊரில் நான் லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்று கூறலாமே தவிர நிரூபிக்க முடியாது. பாவமே இல்லாத உலகில் ஒருவன் 'பாவத்துக்கு விலகி' வாழ முயற்சிக்கும் நோக்கத்தை நடந்து காட்ட முடியாது. தனது குமாரனுக்கு ஒத்தாசையாக இருக்கப்போகும் 'மணவாட்டி' சபையை புடமிட உபயோகிக்கும் ஒரு ஆய்வுக்கூடம்தான் சாத்தான். ஆய்வுக்கூடமில்லாமல் 'சோதனை' முடியாது. சோதனையே தேவையற்ற நிலையில் ஆய்வுக்கூடம் அநாவசியம். அதை அழிப்பதில் தவறேதுமில்லை.
நடக்கும் எல்லா செயல்களும் தேவ சித்தம்தான். இல்லாத பட்சம் தேவன் ஒவ்வொரு வினாடியும் டென்ஷனில்தான் இருப்பார். இனி என்னவாகுமோ என்று கவலைப்பட்டுக்கொண்டும், நடக்கும் சம்பவங்களுக்கேற்ப தனது எதிர்காலத் திட்டங்களை ஒவ்வொரு வினாடியும் மாற்ற வேண்டுமே.
சபை தொடங்கி இப்போதுவரை நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தல் புத்தகத்தில் வாசிக்கிறோமே. அதில் ஏன் ஒன்றும் பிசகவில்லை. எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேற வேண்டுமென்றால் அவை அப்படியே நடந்துதானே ஆகவேண்டும். இதை விசுவாசிக்காத பட்சம் நாம் வேதத்தையே நம்பத்தேவையில்லையே. "சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளை" எனற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? நிச்சயமாய் சம்பவிக்கும் என்றுதானே அர்த்தம்.
'பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும் 42மாதம் யுத்தம் பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது வெளி13:5. யாரால் கொடுக்கப்பட்டது?
நாம்தான் ஒரு மனிதனை நித்திய தண்டனையிலிருந்து 'காப்பாற்றுவது' ஏதோ நம் கையில் உள்ளதென்று மேட்டிமை எண்ணத்தில் இருக்கிறோம். உலகத்தோற்றத்துக்கு முன்பாக முன்குறிக்கப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம்தான் என்ன? தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் என்றால் யார்? எதற்காக? யாரால்?.... அவருடைய சித்தம் செய்யப்படுகிறது, செய்யப்படும். "உமது சித்தம் செய்யப்படுவதாக" என்பது ஒரு acknowledgement அன்றி அவ்ருக்கு நாம் இடும் கட்டளை அல்ல. அது மட்டுமே செய்யப்படும். ஆமென்!!