kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: Isaac a type for Christ!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
Isaac a type for Christ!


ம‌னித‌ன் பாவ‌த்தில் விழுந்து மரண தண்டனைக்குட்ப்படுவான் என்று அன‌ந்த‌ ஞான‌ம் நிறைந்த‌ தேவ‌ன் அறிந்திருந்த‌தினால், ம‌னித‌னின் மீட்பின் திட்ட‌ம் இந்த‌ உல‌க‌ தோற்ற‌த்திற்கு முன்பாக‌வே அவ‌ர் உருவாக்கி வைத்திருக்கிறார். ஜ‌ல‌ப்பிர‌ல‌ய‌த்தின் கால‌ம் வ‌ரை சுமார் 1656 வ‌ருட‌ங்க‌ள், இந்த‌ பூமியை ஆண்டு பாவ நிலையில் உள்ள மனிதனை நீதியின் பாதையில் கொண்டு வரும்படி தேவ‌ன், தூத‌ர்க‌ளை அனும‌தித்திருந்தார். மாறாக, இந்த தூத‌ர்க‌ள் பாவ‌த்தில் விழுந்தார்கள் (ஆதி. 6:2). அதன்படி பாவம் இந்த உலகத்தை நிறம்பி தேவன் மனஸ்தாபம் படும் அளவிற்கு வந்தது (ஆதி. 6:5,6). ஆனால் நோவா மாத்திரம் "தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்" (ஆதி. 6:8,9) என்கிறபடியால், தேவனின் பார்வையில் அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் கிருபை கிடைத்தது.

   இப்ப‌டியாக‌, தேவ‌ தூத‌ர்க‌ள் பாவ‌த்தின் தொட‌ர்பிலே விட‌ப்ப‌ட்ட‌ன‌ர், எதினாலென்றால், அவர்களில் யார் எல்லாம் விரும்பினார்களோ அவர்கள் தேவ திட்டத்தை மீறும் ச‌ந்த‌ர்ப்ப‌ம் பெற்றார்கள். இப்படி மீறியவர்களையே, வேதம் புதிய ஏற்பாட்டில் "தங்கள் ஆதி மேன்மையை காத்துக்கொள்ளாதவர்கள்" (யூதா: 6) என்று சொல்லுகிறது. மேலும் இவர்களை குறித்தே, "பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே (டார்ட்டருவிலே) தள்ளி‌ நியாய‌த்தீர்ப்புக்கு வைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளாக‌" (2 பேது 2:4) என்று எழுதியுள்ள‌தே.

    தேவனின் ஏற்ற‌ கால‌ம் வ‌ந்த‌ போது, அவ‌ர் ஆபிர‌காமை த‌ம‌க்கு மாதிரியாக‌ அழைத்து, இயேசு கிறிஸ்துவிற்கு நிழ‌லான‌ ஈசாக் என்கிற‌ ம‌க‌னை கொடுத்து, தெரிந்துக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ச‌பைக்கு நிழ‌லாக‌ ரெபேக்காளை கொடுத்தார். ரெபேக்காள் த‌ன் தோழிக‌ளுட‌ன் வ‌ந்த‌து போல், ச‌பையும் ஒரு "திர‌ள் கூட்ட‌த்துட‌ன்" ம‌ன‌வாள‌னாகிய‌ இயேசு கிறிஸ்துவிட‌ம் வ‌ரும். ஆபிர‌காம் த‌ன் ம‌க‌னான‌ ஈசாக்கை ப‌லி பீட‌த்தில் கொண்டு வ‌ந்த பிற‌கு தேவ‌னால் எப்ப‌டி அந்த‌ ம‌க‌ன் பிழைத்தானோ இது நிழ‌ல், ஆனால் நிஜ‌த்திலோ, இயேசு கிறிஸ்து ப‌லியாகி அந்த‌ மாதிரியின் ப‌டியே, ம‌ரித்தோரிலிருந்து தேவ‌ன் அவ‌ரை எழுப்பினார். ஆபிர‌காம் த‌ன்னிட‌மிருந்த‌ எல்லா வ‌ற்றையும் ஈசாக்கிற்கு கொடுத்தாரோ, அப்ப‌டியே, நிஜ‌மான‌ இயேசு கிறிஸ்துவின் மூல‌ம் இந்த‌ உல‌க‌ம் ஆசிர்வ‌திக்க‌ப்ப‌டுவ‌து நிச்ச‌ய‌ம். ரெபெக்காள் ஈசாக்குட‌ன் சேர்ந்த‌ பிற‌கு அவ‌னின் சுகங்களுக்கும் ஆசீர்வாதங்களுக்கும் உட‌ன் சுந்த‌ந்த‌ர‌வாளியாக‌ ஆன‌து போல், ச‌பையும் இயேசு கிறிஸ்துவிற்கு உட‌ன் சுத‌ந்த‌ர‌வாளியாக‌ இருக்கும். இந்த‌ உல‌க‌த்திற்கு இயேசுகிறிஸ்து மற்றும் சபையினால் வ‌ர‌போகும் ஆசீர்வாத‌ங்க‌ளை குறித்தான‌ நிழ‌லே அவைக‌ள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

அருமையான ஒப்பீடுகள் சகோதரரே!

ஆனால் மனிதன் பாவத்தில் விழுவான் என்பதை தேவன் முன்னதாகவே அறிந்திருந்தார் எனும் கூற்றுக்கு வேதவசன ஆதாரம் இல்லை என நான் கருதுகிறேன்.

அனந்த ஞானம் நிறைந்த தேவனால், தீர்க்கதரிசன ஞானமுள்ள தேவனால், பின்னால் நடக்கப் போகிற அனைத்து காரியங்களையும் முன்னதாகவே அறிய முடியும் என்பது நூற்றுக்கு நூறு மெய்தான். குறிப்பாக ஆதாம் பாவம் செய்வானா என்பதையும் தேவனால் முன்னதாகவே அறிய முடியும்தான். ஆனால் தமது தீர்க்கதரிசன ஞானத்தால் எல்லா விஷயங்களையும் முன்னதாகவே அறிய தேவன் முற்படுவதில்லை.

உதாரணமாக, மனிதனை உண்டாக்கியதற்காக தேவன் மனஸ்தாபப்படும் ஒரு நாள் வரும் என்பதை தேவன் முன்னதாகவே அறிந்திருந்தாரானால், ஆதி. 6:6-ம் வசனம் கூறுகிற கூற்று ஒரு பொருத்தமான கூற்றாக இருக்காது. எனவே அக்கூற்றின்படி பார்த்தால், மனிதனின் பாவநிலை தேவன் மனஸ்தாபப்படுமளவு மிகமோசமாகச் செல்லும் என்பதை அவர் முன்னதாகவே அறியவில்லை (அதாவது அறியமுற்படவில்லை) என்றிருந்தால்தான் அக்கூற்று பொருத்தமானதாக இருக்கும்.

இவ்வாறே, சவுல் ராஜா தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போவார் என்பதை தேவன் முன்னதாகவே அறிந்திருந்தால், 1 சாமுவேல் 13:13-ல் சவுலிடம் சாமுவேல் கூறுகிற கூற்றும் பொருத்தமற்றதாகத்தான் இருக்கும், 1 சாமுவேல் 15:11-ல் சவுலை ராஜாவாக்கியதற்காக தேவன் மனஸ்தாபப்படுவதும் பொருத்தமற்றதாகத்தான் இருக்கும்.

இப்படி நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

மனிதன் செய்யப்போகிற அனைத்து செயல்களையும் முன்னதாகவே அறிந்துகொள்ள தேவனுக்கு வல்லமையும் ஞானமும் உண்டு என்பது மெய்யேயாயினும், அவர் அந்த வல்லமையையும் ஞானத்தையும் எப்போதும் பயன்படுத்துவதில்லை என்பதே உண்மை.

சில சந்தர்ப்பங்களில், சிலரது காரியங்களில் மட்டுமே தேவன் அந்த வல்லமையையும் ஞானத்தையும் பயன்படுத்தி, பின்னால் நடக்கப்போகிறவற்றை அறிந்து, அவற்றை தீர்க்கதரிசனமாக தமது தாசர்கள் மூலம் அறிவித்துள்ளார்.

ஆதாமின் விஷயத்தைப் பொறுத்தவரை, ஆதாம் கீழ்ப்படியாமற் போவாரா என்பதை அறிய தேவன் தமது தீர்க்கதரிசன வல்லமையைப் பயன்படுத்தியிருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.

மனிதன் விழுந்து போனால் அவனை எவ்வாறு மீட்பது என்பதற்கான திட்டத்தை தேவன் முன்னதாகவே உருவாக்கியிருக்கக்கூடும்தான். ஆனால் அதைப் பயன்படுத்த சந்தர்ப்பம் வருமா வராதா என்பதை முன்னதாகவே அறிந்து கொள்ள தேவன் தமது தீர்க்கதரிசன வல்லமையைப் பயன்படுத்தியிருக்கமாட்டார் என்றே நான் கருதுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நன்றி சகோதரரே,

    அப்படி என்றால் தேவனுக்கு ஆதாம் எங்கு மறைந்திருந்தான் என்று கூட தெரியாமல் தான் அவர் ஆதாமே, நீ எங்கே இருக்கிறார்ய் (ஆதி. 3:9) என்று கேட்பதாக அர்த்தமாகுமா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

நல்லதொரு கேள்வியை எழுப்பியுள்ளீர்கள் சகோதரரே.

தங்கள் கேள்விக்கான பதிலைப் பார்ப்பதற்குமுன், எனது பின்வரும் கேள்விகளுக்குப் பதில்தர வேண்டுகிறேன்.

மனிதர்கள் இவ்வளவாய் பாவம் செய்வார்கள் என்பதை முன்னதாகவே அறிந்திருந்த தேவன், ஒன்று மனிதனைப் படைக்காமல் இருந்திருக்க வேண்டும், அல்லது மனிதன் பாவம் செய்கையில் அவனைப் படைத்ததற்காக மனஸ்தாபப்படாமலாவது இருக்கவேண்டும். மனிதன் பாவம் செய்வான் என்பதை அறிந்தே அவனைப் படைத்துவிட்டு, பின்னொரு காலத்தில் அதற்காக ஏன் மனஸ்தாபப்படவேண்டும்?

ஒரு நாளில் சவுல் தனக்குக் கீழ்ப்படியாமற்போவான் என்பதை முன்னதாகவே அறிந்த தேவன், அவனை ராஜாவாக்காமலேயே இருந்திருக்கலாமே? அல்லது அவனை ராஜாவாக்கியதற்காக மனஸ்தாபப்படாமலாவது இருந்திருக்கலாமே? (1 சாமுவேல் 15:11)

ஒருவன் தவறு செய்வான் என்பதை அறிந்தே அவனை உருவாக்கிவிட்டு, அவன் தவறு செய்தபின் அவனை உருவாக்கியதற்காக ஏன் மனஸ்தாபப்படவேண்டும்?

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நல்லது சகோதரரே,

     இதோ எசா. 46:10:, "அந்தத்திலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்ய படாதவைகளைப் பூர்வகாலமுதற் கொண்டும் அறிவிக்கிறேன்" என்கிறார் நம் தேவன்.

Isaiah 46:10
Declaring the end and the result from the beginning, and from ancient times the things that are not yet done, saying, My counsel shall stand, and I will do all My pleasure and purpose,

 அதாவது, படைத்தபின்பு தான் இப்படி நடக்கும் அதுவும் எதிர்ப்பார்க்காதது நடக்கும் என்று தேவனி குறித்து நாம் சொன்னோமென்றால், அவர் சர்வவல்லமை உள்ளவர் என்று இருக்க முடியாது. சர்வவல்லமையுள்ளவர் என்றாலே unconditional தான்.

  சரி அவருக்கு தான் மனிதர்கள் பாவம் செய்வார்கள் என்று தெரியுமே, பிறகு ஏன் மனிதர்களை படைக்க வேண்டும் என்கிற கேள்வி நியாயமானது தான், ஆனால் அதையுமே நாம் தேவனின் ஞான‌த்திலிருந்து தான் பார்க்க‌ வேண்டும். "வ‌ரும் முன்னே காப்போம்" என்ப‌து ம‌னித‌ கோட்பாடுக‌ள். தேவ‌னுக்கு அப்ப‌டி இல்லை. அவ‌ர் ம‌னித‌னை அவ‌னின் சுய‌ சித்த‌த்தில் (ஒரு ரோபோவை போல் இல்லாம‌ல்) பாவ‌ம் செய்ய‌ அனும‌தித்தார். ஏன்? ஏனென்றால், இருட்டு இருந்தால் தான் வெளிச்ச‌த்தின் ம‌கிமையை புரிந்துக்கொள்ள‌ முடியும். பாவ‌த்தில் விழுந்த‌ ம‌னித‌ன் பாவ‌த்தின் விலைவான‌ சாப‌ங்க‌ளையும் அத்ன் முடிவான‌ ம‌ர‌ண‌த்தை தெரிந்துக்கொள்ள‌ வேண்டும் என்ப‌து தான் அந்த‌ தேவ‌ ஞான‌ம். ம‌னித‌ன் ப‌டைக்க‌ப்ப‌டுவ‌த‌ற்கு முன்ன‌மே "உல‌க‌த்தோற‌முத‌ல் அடிக்க‌ப்ப‌ட்ட‌ ஆட்டுகுட்டியான‌வ‌ர்" (வெளி. 13:8) என்று ஏன் தேவ‌ன் பாவ‌த்திற்கு ப‌ரிகாரியாக‌ இயேசு கிறிஸ்துவை நிய‌மிக்க‌ வேண்டும். இது தான் தேவ‌ ஞான‌ம்.

   ம‌னித‌ன் தேவ‌னின் சாய‌ல் ம‌ற்றும் ரூப‌த்தில் ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌தினால் அவ‌ன் ஆசீர்வாத‌மாக‌ இந்த‌ பூமியை நிற‌ப்பி என்றென்றும் வாழ‌ வேண்டிய‌து தான் தேவ‌ன் அவ‌னுக்கு த‌ந்த‌ வாக்குத்த‌த்த‌ம். (ஆதி.1:28). ம‌னித‌ன் த‌ன் சுய‌ சிந்தையில் பாவ‌ம் செய்த‌தினால் தேவ‌ன் சொன்ன‌ வார்த்தை இல்லாம‌ல் போகி விடுமா. தேவ‌னின் அனும‌தி இல்லாம‌லா சாத்தான் ம‌னித‌னை சோதித்திருப்பான்? தேவ‌னுக்கு தெரியாம‌ல் தான் ம‌னித‌ன் பாவ‌ம் செய்ய‌ வேண்டும் என்றால் அந்த‌ தேவ‌ன் எப்ப‌டி எல்லாம் அறிந்த‌வ‌ராக‌ இருக்க‌ முடியும். "என்னால் செய்ய‌ கூடாத‌ காரிய‌ம் ஒன்று உண்டா" என்ப‌து பொய்யா? ம‌னித‌ன் பாவ‌த்தில் விழுந்து அதற்கு ப‌ரிகார‌மாக‌ தேவ‌ன் இயேசு கிறிஸ்துவை உல‌க‌ இர‌ட்ச‌க‌ராக‌ (ப‌ல‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள், இயேசுவை கிரிஸ்த‌வ‌ர்க‌ளின் இர‌ட்ச்ச‌க‌ர் மாத்திர‌ம் என்று த‌வ‌றாக‌ புரிந்திருக்கிறார்க‌ள்) அனுப்பி, "ஆதாமிற்குள் எல்லோரும் ம‌ரிப்ப‌தை போல், கிறிஸ்துவிற்குள் எல்லோரும் (ALL) உயிர்த்தெழுவார்க‌ள்." (1 கொரி. 15:22), என்ப‌து தேவ‌னுக்கு தெரிந்தே ந‌ட‌க்க‌விருக்கும் ஒரு காரிய‌ம்.

 அவ‌ர் ஏன் ம‌ன‌ஸ்தாப‌ப்ப‌ட்டார் என்றால், ம‌னித‌ர்க‌ளில் க‌ல‌ப்ப‌ட‌மான‌ ச‌ந்த‌தி (இராட்ச‌த‌ர்க‌ள்)உருவாகி ம‌னித‌ ச‌ந்த‌தி சுத்த‌மாக‌ வேறு ச‌ந்த‌தியான‌தால் தான். இதற்கு ம‌னித‌ர்க‌ள் மாத்திர‌ம் கார‌ண‌ம் இல்லை, தேவ‌தூத‌ர்க‌ளுட‌ன் சேர்ந்த‌தினால் தான் அப்ப‌டி ஆயிற்று. அப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு சூழ‌லில் தான் தேவ‌ன் ம‌ன‌ஸ்தாப‌ ப‌டுகிறார். ஆனாலும், அவ‌ரின் ஞான‌ம் இராட்ச‌த‌ர்க‌ளை அழித்து போட்டு, நோவா மூல‌மாக‌ மீண்டும் சுத்த‌மான‌ ம‌னித‌ ச‌ந்த‌தி உருவாக வ‌கை செய்த‌து.

ச‌கோத‌ர‌ரே, முக்க்கிய‌மான‌ விஷ‌ய‌ம் என்ன‌வென்றால், தேவ‌ன் அனைத்தையும் அறிந்த‌வ‌ராக‌ இருக்கிறார். அவ‌ரின் சித்த‌ம் இல்லாம‌ல் ஒன்றும் ந‌ட‌க்காது. உல‌க‌த்தில் ந‌ட‌ப்ப‌து எல்லாம் (பாவ‌ம், ம‌ர‌ண‌ம், சாத்தானின் செய‌ல்பாடுக‌ள்) அவ‌ரின் அனும‌தியுட‌ன் தானே அன்றி, அவ‌ருக்கு தெரியாம‌ல் இல்லை. அப்ப‌டி அவ‌ருக்கு தெரியாம‌ல் ஒரு காரிய‌ம் ந‌ட‌க்கிற‌து என்றால், அவ‌ரை நாம் எப்ப‌டி தேவ‌ன் என்று சொல்ல‌ முடியும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

anbu57 quoted:
ஒருவன் தவறு செய்வான் என்பதை அறிந்தே அவனை உருவாக்கிவிட்டு, அவன் தவறு செய்தபின் அவனை உருவாக்கியதற்காக ஏன் மனஸ்தாபப்படவேண்டும்?

இக்கேள்விக்கு நீங்கள் இன்னமும் பதில் தரவில்லை சகோ.பெரியன்ஸ் அவர்களே!

bereans quoted:
அவ‌ர் ஏன் ம‌ன‌ஸ்தாப‌ப்ப‌ட்டார் என்றால், ம‌னித‌ர்க‌ளில் க‌ல‌ப்ப‌ட‌மான‌ ச‌ந்த‌தி (இராட்ச‌த‌ர்க‌ள்)உருவாகி ம‌னித‌ ச‌ந்த‌தி சுத்த‌மாக‌ வேறு ச‌ந்த‌தியான‌தால் தான். இதற்கு ம‌னித‌ர்க‌ள் மாத்திர‌ம் கார‌ண‌ம் இல்லை, தேவ‌தூத‌ர்க‌ளுட‌ன் சேர்ந்த‌தினால் தான் அப்ப‌டி ஆயிற்று. அப்ப‌டி ப‌ட்ட‌ ஒரு சூழ‌லில் தான் தேவ‌ன் ம‌ன‌ஸ்தாப‌ ப‌டுகிறார். ஆனாலும், அவ‌ரின் ஞான‌ம் இராட்ச‌த‌ர்க‌ளை அழித்து போட்டு, நோவா மூல‌மாக‌ மீண்டும் சுத்த‌மான‌ ம‌னித‌ ச‌ந்த‌தி உருவாக வ‌கை செய்த‌து.

இராட்சதர்கள் மூலம் கலப்பட சந்ததி உருவாகப்போவதும் தேவனுக்கு முன்னதாகவே தெரியுமல்லவா? தேவனுக்கு ஏற்கனவே தெரிந்த ஒரு விஷயம் நிகழ்கிறபோது அதற்காக அவர் ஏன் மனஸ்தாபப்படவேண்டும் என்பதுதான் என் கேள்வி.

இப்படி ஒரு விஷயம் நிகழப்போகிறது என்பது தெரிந்தவுடனேயே அதற்காக மனஸ்தாபப்படாமல், அவ்விஷயம் நிகழும்போது அதற்காக மனஸ்தாபப்படுவது ஏன்?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

இராட்சதர்கள் மூலம் கலப்பட சந்ததி உருவாகப் போவது தேவனுக்கு முன்னதாகவே தெரியாததால், அவ்விஷயம் நிகழ்ந்தபோது தேவன் மனஸ்தாபப்பட்டார் என்கிறீர்களா சகோ.பெரியன்ஸ் அவர்களே!

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"தேவன் மனஸ்தாபப்பட்டார்" என்ற பதத்தின் அர்த்தத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம். மூல பாஷை மற்றும் மற்ற மொழிபெயர்ப்புகளை அறிதல் நலம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர் அன்பு அவர்கள் சொல்வதுபோல் ஒருவர் திட்டம்போட்ட செயல் சரியாக நடந்துகொண்டு இருக்கும்போது அதற்காக யாரும் மனஸ்தாபபடவோ அல்லது விசனப்படவோ மாட்டர்கள். அனால் "கர்த்தர் மனஸ்தாபபட்டார்" என்று வசனம் இரண்டு முறை தெளிவாக சொல்கிறது இதன் மூலம் எதோ எதிர்பாராத ஓன்று அவர் திட்டத்துக்கு மாறான ஓன்று நடந்துவிட்டது எனப்தை யாரும் மறுக்க முடியாது.

ஆதியாகமம் 6:6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
I சாமுவேல் 15:11 நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்;

 
என்னை பொறுத்தவரை தேவன் தூதன் சாத்தானாக மாறுவது என்பது தேவனின் திட்டமல்ல. அவர் எதிர்பாராமல் நடந்தது என்றே கருதுகிறேன். 

தேவனின் வல்லமை பற்றி பல்வேறு வசனங்கள் குறிப்பிட்டாலும் எல்லாமே அவர் திட்டப்படிதான் நடக்கிறது என்பதற்கு வசன ஆதாரம் இல்லை.
  
கொதிக்கிற எண்ணெய்  சுடும் என்பதை குழந்தைக்கு உணர்த்த குழந்தையின் கைய்யை பிடித்து கொதிக்கும் எண்ணைக்குள் உள்வைத்து காட்டுபவன் ஒரு அறிவாளி அல்ல. அதுபோல் கடவுள் மனிதனுக்கு தீமையை புரியவைக்க அவனை பாவத்தில் விழவைத்து அதற்க்கு பலியாக ஒருவரை சித்திரவதைக்கு ஒப்புகொடுக்க வேண்டும் என்பதெல்லாம் ஒரு சரியான லாஜிக்கா?

அவர் சர்வ வல்லமை உடையவர் அவர் நினைத்தால்  பாவத்தின் கொடூரத்தை நம் மனதிலே பதித்து நம்மை பரிசுத்தவானாக வாழவைக்க முடியும்.  சிகரெட் புற்று நோயை வருவிக்கும் என்று தெரிந்தும் எத்தனைபேர் அதை புகைக்கின்றனர். அதுபோல் பாவம் மோசமானது என்று அறிந்தும் எத்தனைபேர் பாவத்தை விட்டு விலகாமல் வாழ்கின்றனர்.

ஆயிரம் வருஷ அரசாட்சியின்போது சாத்தான் கட்டபட்டவுடன் எல்லாமே சமாதானமாக மாறிவிடுகிறது அதனால் சாத்தான்தான் எல்லா தீமைக்கும் கரணம் என்று புரிய வருகிறது. அப்படி ஒருவன் உருவாகாமலே இருந்தால் தீமை என்றால் என்னவென்று யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லாமல் எல்லாமே நன்மையாகவே இருந்திருக்கும்,      

என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் 

என் கண்களிலிருந்து இரவும்பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்;

போன்ற வசனங்கள் கர்த்தர் மனஸ்தாபபட்டதுபோல் எதிர்பாராமல் நடக்கும்
சில  கொடூர காரியங்களுக்காக கண்ணீர் வடிக்கிறார் என்பதை தெளிவாக குறிப்பிடுகின்றன.
 
நீங்கள் வைத்திருக்கும் லாஜிக்கை நியாயப்படுத்த சரியான வசனங்களை எடுத்துக்கொண்டு எதிரான வசனங்கள் தெளிவாக இருந்தபோதிலும் அதை  ஏற்றபடி வளைக்கிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்.



-- Edited by RAAJ on Tuesday 6th of October 2009 08:07:09 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தங்களின் கருத்துகளுக்கு நன்றி. ஆனால் தேவனுக்கு அவர் அறியாமலே பல செயல்கள் இந்த பூமியில் நடந்து விடுகிறது என்பதற்கு அர்த்தம் தான் புரியவில்லை. அதாவது தேவனுக்கு தெரியாத விஷயங்களும் உண்டு என்பது தங்களின் வாதம் போல் இருக்கிறது. "தேவனால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை" என்று லூக்காவில் வாசித்தாலும், இல்லை இல்லை, தேவனால் நிகழ போகும் காரியங்கள் அறிய முடியாது என்பது தங்களின் வாதம் போல் இருக்கிறது. நல்லது.

மனஸ்தாபம் என்று தமிழில் மொழிபெயர்க்கப்படிருப்பது, ஆங்கிலத்தின் கிங் ஜேம்ஸ் பதிப்பின் மொழிபெயர்ப்பே தவிர, மூல பாஷையின்மொழிபெயர்ப்பு கிடையாது. மூல பாஷையில் அங்கே உபயோக படுத்த பட்ட பதம் அதன் அர்த்தம்,

H5162  nacham  naw-kham'

a primitive root;

properly, to sigh, i.e. breathe strongly; by implication, to be sorry, i.e. (in a favorable sense) to pity, console or (reflexively) rue; or (unfavorably) to avenge (oneself):--comfort (self), ease (one's self), repent(-er,-ing, self).

கவனிக்க வேண்டியது என்னவென்றால், நீங்கள் அர்த்தம் கொள்ளும் மனஸ்தாபம், இந்த எபிரேயு வார்த்தையின் கடைசி அர்த்தமாக இருக்கிறது repent. ஆனால் கிங் ஜேம்ஸும், பரிசுத்த வேதாகமும் தான் இந்த அர்த்தத்தை பிரதானமாக போட்டு கிறிஸ்தவர்களை குழப்பி, தேவனின் நோக்கத்தை கொச்சை படுத்தியிருக்கிறார்கள். ஏனென்றால்,இதை மொழிபெயர்த்தவர்களுக்கு தேவ பையம் இல்லை போல். ஆனால் இதை வாசிப்பவர்களாவது, தேவனின் தன்மைகளை புரிந்துக்கொண்டால் நன்றாக இருக்கும்.

அதாவ‌து, தேவ‌ன் ம‌னித‌ன் செய‌லை க‌ண்டு வ‌ருந்துகிறார். அவ‌ர் ம‌னித‌னோடு உற‌வாடுவ‌தில் மாற்ற‌ம் வ‌ருவ‌தே த‌விர‌ அவ‌ரின் நோக்க‌த்தில் இல்லை. இந்த மனஸ்தாபம் அல்லது கோபம் அவரின் படைப்பின் செயல் மேல் அல்லாமல், மனிதனின் துர் யோசனைகள் மற்றும் துர் கிரியைகளின் மேல் தான் இருக்கிறது. அடுத்த வசனத்தின் படி, அவர் பூமியில் உள்ள அனைத்தையும் அழித்து போடுவார் என்கிறார், அப்படியாக நடந்தது. ஏனென்றால், அது அவரின் நோக்கம் அல்ல. அவர் படைத்தது அனைத்தும் இந்த பூமியில் பலுகி பெறுகி நிறப்பும் படியே அவர் நோக்கமாக இருந்திருக்கிறது. அந்த நோக்கம் அவர் பட்ட மனஸ்தாபம் மாற்றிவிடவில்லை. அப்படி அழிக்க நினைத்த தேவன் ஏன் நோவாவையும் அவன் குய்டும்பத்தை மாத்திரம் காப்பாற்ற வேண்டும்.

நான் மீண்டும் சொல்லுவது ஒன்றே, இந்த மனஸ்தாப சமாச்சாரம் "பரிசுத்த வேதாகமத்திலும்" "ஆங்கில கிங் ஜேமஸ் வேதாகமத்திலும்" மட்டுமே இப்படி ஒரு அர்த்தத்ம் வரும்படியாக எழுதியிருக்கிறார்கள். தயவு செய்து பிற மொழிபெயர்ப்புகளையும் பாருங்கள். தேவன் மனஸ்தாப பட்டது மனிதனின் அந்த செயலின் மீது தான். மேலும், இது அனைத்தும் நடக்கும் என்பதால் தான் அவர் இயேசு கிறிஸ்துவை உலக தோற்றம் முதல் அடிக்கப்பட்ட ஆட்டு குட்டியாக வைத்திருப்பதாக வேதம் சொல்லுகிறது. 

 ஏசா 46:10ஐ மீண்டும் வாசித்து பாருங்கள். அவர் துவக்கம் முதல் இன்னும் வரவிருப்பதை ஆதியிலே அறிவிக்கிற‌வ‌ராக‌ இருக்கிறாராம்.

   தேவ‌ன் பூமியில் உள்ள‌ ஒரு ம‌னித‌ன் கிடையாது, trial and error முறையில் ப‌டைப்ப‌த‌ற்கு. அவ‌ர் தேவ‌ன், இதை இப்ப‌டி செய்தால் அத‌ன் முடிவு இப்ப‌டி தான் என்று அரிந்துவைத்திருக்கிற‌ ச‌ர்வ‌வ‌ல்ல‌வர். இப்ப‌டி ஒரு குணாதிசிய‌ம் அவ‌ரிட‌த்தில் இல்லை என்றால் அவ‌ர் எப்ப‌டி தேவ‌னாக‌ இருக்க‌ முடியும்.
இதை தான், "என் நினைவுக‌ள் உங்க‌ள் நினைவுக‌ள் அல்ல‌, உங்க‌ள் வ‌ழிக‌ள் என் வ‌ழிக‌ளும் அல்ல‌வென்று க‌ர்த்த‌ர் சொல்லுகிறார்; பூமியைப்பார்க்கிலும் வான‌ங்க‌ல் எப்ப‌டி உய‌ர்ந்திருக்கிற‌தோ, அப்ப‌டியே உங்க‌ள் வ‌ழிக‌ளைப்பார்க்கிலும் என் வ‌ழிக‌ளும் உங்க‌ள் நினைவுக‌ளை பார்க்கிலும் என் நினைவுக‌ளும் உய‌ர்ந்திருக்கிற‌து" ஏசா. 55:8,9.

தேவன் சார்வ‌வ‌ல்ல‌வ‌ர், ஆனாலும் அவ‌ர் நினைக்காத‌ காரிய‌ங்க‌ளும் அவ‌ர் திட்ட‌மிட‌த‌ செய‌ல்க‌ளும், அவ‌ர் அறியாம‌லே ந‌ட‌ந்து விடுகிற‌து என்று நினைப்ப‌தில் தான் என்ன‌ "லாஜிக்" என்று புரிய‌வில்லை.

உங்க‌ள் இருத‌ய‌த்தில் தேவ‌ன் எல்லா வ‌ற்றையும் அறிந்து இருக்கிறார் என்றால், வேத‌மும் அதையே தான் சொல்லுகிற‌து, ஆனால் அவ‌ர் நினைக்காம‌லும் சில‌ காரிய‌ங்க‌ள் ந‌டாந்து விடுகிற‌து என்று நினைத்தால், ம‌ன்னிக்க‌னும், வேத‌ம் அத‌ற்கு முற‌னாக‌ தான் இருக்கிற‌து. இது இப்பொழுது புரிய‌விட்டாலும், புரியும் ப‌டியாக‌ தேவ‌ன் ஒரு கால‌த்தை வைத்திருக்கிறார். "நான் அதிலே செய்த‌ எல்லாவ‌ற்றையும் முகாந்த‌ர‌மில்லாம‌ல் செய்ய‌வில்லையென்று அப்பொழுது அறிந்துகொள்வீர்க‌ள் என்ப‌தை க‌ர்த்த‌ராகிய‌ ஆண்ட‌வ‌ர் உரைக்கிறார் என்று சொன்னார்" எசே. 14:23.  

கடைசியாக,

 தேவ‌ன் க‌ண்ணீர் வ‌டிப்ப‌து, அல்ல‌து ம‌ன‌ஸ்தாப‌ ப‌டுவ‌து அவ‌ர் செய்த‌ செய‌ல் மீது அல்லாம‌ல், அங்கு ந‌ட‌க்கும் காரிய‌த்தின் மீது தான். அந்த‌ காரிய‌ம் அவ‌ர் அனும‌தி இல்லாம‌ல் ந‌டைபெறாது என்ப‌து வேத‌ம் என‌க்கு சொல்லி த‌ந்திருக்கிற‌து.



-- Edited by bereans on Tuesday 6th of October 2009 11:38:50 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே! நீங்கள் தொடங்கி வைத்த இப்பகுதியில், பலரது விவாதங்களுக்குப் பின், பின்வருமாறு அறிவித்துள்ளீர்கள்.

bereans wrote:
//தேவனுக்கு அவர் அறியாமலே பல செயல்கள் இந்த பூமியில் நடந்து விடுகிறது என்பதற்கு அர்த்தம் தான் புரியவில்லை.//

சகோதரரே, நீங்கள் புரிந்துகொள்ள ஏதுவாக, நான் ஏற்கனவே பதிவு செய்துள்ள சில விஷயங்களை மீண்டும் கூறுகிறேன்.

தேவன் சர்வவல்லவர், பின்னால் நிகழப் போகிற அனைத்து நிகழ்வுகளையும் முன்னதாகவே அறியக்கூடிய வல்லமையும் ஞானமும் உள்ளவர் என்பதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையே.

ஆனால் தமது வல்லமை/ஞானத்தைப் பயன்படுத்தி பின்னால் நிகழப்போகிற எல்லா நிகழ்வுகளையும் முன்னதாகவே அறிந்துகொள்வதில்லை என்பதே என் கருத்து.

இக்கருத்துக்கு ஆதாரமாகத்தான் தவறு செய்யப்போகிற ஒரு மனிதனை தெரிந்தே உருவாக்கிவிட்டு, அவன் தவறு செய்யும்போது மனஸ்தாபப்படுவது பொருத்தமற்றதாக இருப்பதைக் கூறியிருந்தேன்.

தற்போது மொழிபெயர்ப்பாளர்களின் தவறான மொழிபெயர்ப்பால் தேவன் மனஸ்தாபப்பட்டார் எனும் தவறான கருத்து வந்துவிட்டதாகக் கூறுகிறீர்கள். அவ்வறெனில் சரியான மொழிபெயர்ப்பு எது? அதை நேரடியாகக் கூறாமல், தேவன் மனிதனின் செயலைக் கண்டு வருந்துவதாகக் கூறுகிறீர்கள். வருந்துதல், மனஸ்தாபப்படுதல் எனும் 2 வார்த்தைகளும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைத்தானே தருகின்றன?

தேவன் மனஸ்தாபப்பட்டது மனிதனின் செயலின் மீதுதான் என்கிறீர்கள். உங்கள் வாதப்படி மனிதனின் செயல் இப்படி இருக்கும் என்பதும் தேவன் முன்னதாக அறிந்த விஷயம்தானே? பின் அதற்காக அவர் ஏன் மனஸ்தாபப்படவேண்டும்?

சற்று யோசித்துப் பாருங்கள் சகோதரரே! ஆதாம் நடுமரத்தின் கனியைப் புசிப்பான் என்பதை முன்னதாகவே அறிந்த தேவன், அக்கனியைப் புசியாதே எனக் கட்டளையிடுவது பொருத்தமானதுதானா?

தேவன் தமக்குத்தாமே சில விஷயங்களை suspense-ல் வைத்துக் கொள்கிறார்.

நாம் செய்யப்போகிற எல்லா செயல்களும் தேவனுக்கு முன்னதாகவே தெரியும் என மனிதர்கள் நினைக்க ஆரம்பித்தால், தவறு செய்பவர்கள் அதற்காக வருந்தும் மனோபாவம் கொஞ்சகொஞ்சமாகப் போய்விடுமே! நாம் என்னதான் முயன்றாலும் இப்படித்தான் நடக்கும் என தேவன் அறிந்தபடிதானே நடக்கப்போகிறது எனும் எண்ணம் நமக்குள் வந்துவிட்டால் நம் சுயாதீன சிந்தனை பாதிக்கப்பட்டுவிடுமே.

ஒரு விஷயத்தை சற்று ஒப்பிட்டுப் பாருங்கள் சகோதரரே.

பேதுரு தம்மை மறுதலிக்கப் போவதையும் யூதாஸ் தம்மைக் காட்டிக் கொடுக்கப் போவதையும் முன்னதாகவே அறிந்த இயேசுவின் செயலையும் (தங்கள் கூற்றுப்படி) ஆதாம் பாவம் செய்யப்போவதை முன்னதாகவே அறிந்த தேவனின் செயலையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இயேசு பேதுருவிடமோ, யூதாஸிடமோ மறுதலிக்காதே/காட்டிக்கொடுக்காதே எனக் கூறவில்லை. நீ குணப்பட்டபின் உன் சகோதரரைக் ஸ்திரப்படுத்து எனப் பேதுருவிடமும் (லூக்கா 22:32), நீ செய்யப்போவதை சீக்கிரமாய் செய் என யூதாஸிடமும் (யோவான் 13:27) கூறினார். இயேசுவின் கூற்றுகள் பொருத்தமாயுள்ளன.

ஆனால் தேவனோ, ஆதாம் கீழ்ப்படியமாட்டான் என்பதை அறிந்திருந்தும், இதைச் சாப்பிடாதே எனக் கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்கள். இது பொருத்தமான செயல்தானா?
சிந்தித்து பதில் தாருங்கள்.







__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இதற்கு காரணம் தேவன் மனிதனை ஒரு ரோபோவாக படைக்காமால், தேவ சாயலில் படைத்தார், அதாவது, சிந்தித்து செயல்ப்படும் ஒரு ஆத்துமாவாக தான் அவனை படைத்தார். அவன் பாவம் செய்வதற்கு ஏதுவாக தான் அந்த மரத்தை அங்கு வைத்தார். மனிதன் அவன் சுய சித்தத்தில் பாவம் செய்து அந்த பாவத்தின் விலைவை புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவர் அந்த புசிக்ககூடாத கணியின் மரத்தை வைத்தார். அவர் மனிதனை ஒரு ரோபோவாக படைத்திருந்தால், அந்த மரம் அங்கே வைக்க தேவை இல்லை. மேலும் அவன் பாவத்தில் விழுவான் என்றும், அந்த பாவத்தில் இருந்து இந்த ஆதாமின் சந்ததியை மீட்டெடுக்கவே இயேசு கிறிஸ்துவை உலக தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைத்திருந்தார். இதை எல்லாம் பார்த்தால் என்ன சஸ்பென்ஸ் இருக்கிறது. தெளிவான ஒரு சித்திரத்தை நம் படித்து மற்றும் புரிந்த விதத்தினால் குழப்பி கொண்டோம், அவ்வுளவே.

இருளை பார்க்காமல் ஒருவனும் பகலின் மகிமையை உணர்ந்துக்கொல்ள முடியாது என்று ந‌ம‌க்கு தெரிந்த‌து கூட‌வா தேவ‌னுக்கு தெரியாது.


அன்பு57 writes:

"தேவன் சர்வவல்லவர், பின்னால் நிகழப் போகிற அனைத்து நிகழ்வுகளையும் முன்னதாகவே அறியக்கூடிய வல்லமையும் ஞானமும் உள்ளவர் என்பதெல்லாம் நூற்றுக்கு நூறு உண்மையே.

ஆனால் தமது வல்லமை/ஞானத்தைப் பயன்படுத்தி பின்னால் நிகழப்போகிற எல்லா நிகழ்வுகளையும் முன்னதாகவே அறிந்துகொள்வதில்லை என்பதே என் கருத்து."

உங்க‌ளுது இந்த‌ க‌ருத்து ஏசா 46:10க்கு முறனாக‌ இருக்கிற‌தே. த‌ன் வ‌ல்ல‌மையை ப‌ய‌ன்ப‌டுத்த‌ முடிய‌வில்லை என்ப‌து அவ‌ரால் அது முடிய‌வில்லை என்று தானே கான்பிக்கிற‌து. இதில் என்ன‌ நியாய‌ம் இருக்கிற‌து. மேலும் தங்களின் இந்த கருத்து சரி என்றால், தீர்க்கதரிசிகள் வாயிலாக தேவன் பேசியிருக்கவே மாட்டார்.

வ‌ருந்துத‌ல் ம‌ற்றும் ம‌ன‌ஸ்தாப‌ம் ஒன்று போல் தோற்ற‌ம் அளித்தாலும் இர‌ண்டுக்கும் வித்தியாச‌ம் இருக்கிற‌து. இந்த‌ வித்தியாச‌த்தை நாம் தேவ‌னின் character வைத்து ச‌ம்ப‌ந்த‌ப் ப‌டுத்தி பார்த்தாலே இது ச‌ரியான‌ அர்த்த‌ம் என்று எடுத்துக்கொள்ள‌ முடியும்.

நீங்க‌ள், தேவ‌னுக்கு வ‌ல்ல‌மை உண்டு, ஆனால் அவ‌ரால் அதை 100க்கு 100 உப‌யோக‌ப்ப‌டுத்த‌ முடிய‌வில்லை அல்ல‌து உப‌யோகிப்ப‌தில்லை என்ப‌தால், ம‌ன‌ஸ்தாப‌தம் என்ப‌து அவ‌ரின் செய‌லையே வ‌ருந்துவ‌தாக‌ அர்த்த‌ம் கொண்டிருக்கிறீர்க‌ள்.

ஆனால் நானோ, தேவ‌ன் ச‌ர்வ‌வ‌ல்ல‌மை உள்ள‌வ‌ர், அவ‌ரால் கூடாத‌ காரிய‌ம் ஒன்றும் இல்லை என்ப‌தை நினைவில் வைத்து, அவ‌ர் ம‌ன‌ஸ்தாப‌ம் அல்ல‌து வ‌ருத்த‌ம் கொண்ட‌து அவர் மனிதனை படைத்து விட்டாரே என்பதற்காக அல்லாமல், அவ‌ரின் ப‌டைப்பான‌ ம‌னித‌ன் அவ‌ரின் சாய‌லான‌ ம‌னித‌ன், அவ‌ரின் த‌ன்மையை இழ‌ந்து, அவ‌னின் செய‌லால‌ அவ‌ன் அழிந்து போகிறானே என்ப‌த‌ன் ஒரு உண‌ர்வு பூர்வ‌மான‌ வெளிப்பாடு தான் அந்த‌ வ‌ருத்த‌ம்.

இது ந‌ட‌ந்த‌து அவ‌ருக்கு தெரியாம‌ல் நடந்தது என்றால், அவர் எப்படி அனைத்தையும் அறிந்தவராக இருக்க முடியும்? மாறாக, அவரே இதை அனும‌திக்கிறார். அவ‌ர் வ‌ருத்த‌ப்ப‌டுவ‌து ஒரு பிதா த‌ன் பிள்ளை மேல் வெளிப்ப‌டுத்தும் ஒரு அன்பே த‌விர‌, அவ‌ர் ம‌னித‌னை ப‌டைத்துவிட்டாரே என்ப‌த‌ற்காக‌ அல்ல‌.

ஏனென்றால், மீண்டும் ஏசா. 46:10ஐ தியானித்து பாருங்க‌ள்.

ம‌னித‌ர்க‌ளுக்கே அவ‌ர் வ‌ரும் காரிய‌ங்க‌ளை குறித்து உண‌ர்த்தும் போது அவ‌ருக்கு தெரியாம‌ல் போகிற‌து என்ப‌து சற்று ஜீர‌னிக்க‌ முடியாம‌ல் இருக்கிற‌து.

அன்பு57 writes:

"சற்று யோசித்துப் பாருங்கள் சகோதரரே! ஆதாம் நடுமரத்தின் கனியைப் புசிப்பான் என்பதை முன்னதாகவே அறிந்த தேவன், அக்கனியைப் புசியாதே எனக் கட்டளையிடுவது பொருத்தமானதுதானா?"

 ம‌னித‌னை அவ‌ர் ரோபோவாக‌ ப‌டைத்திருந்தால் இக்காரிய‌ம் நிக‌ழ்ந்திருக்காது, ஆனால் அவ‌ர் ம‌னித‌னை மாம்ச‌மும் ச‌தையுமாய் அவ‌ரின் சிந்த‌னை திற‌னில் ப‌டைத்த‌தினால் அப்ப‌டி சொல்ல‌ வேண்டியதாகிற்று. ஒரு விஷ‌ய‌த்தை செய்யாதே, தொடாதே, பார்க்காதே என்றால் தான் அதை செய்ய‌வோ, தொட‌வோ, பார்க்க‌வோ தோன்றும். தேவ‌ன் அப்ப‌டி சொன்னது ஆதாமை சோதிக்கவே. மனித‌ன் என்றென்றும் வாழும்ப‌டியாக‌ வைக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு நிப‌ந்த‌னை ஒரு condition தான் அந்த‌ கேள்வி. இதினால் தேவ‌ன் ம‌னித‌ன் பாவ‌ம் செய்துவிடுவான் என்று அறியாத‌தினால் அல்ல‌. மீண்டும் சொல்லுகிறேன், "உல‌க‌ தோற்ற‌ முத‌ல் அடிக்க‌ ப‌ட்ட‌ ஆட்டுக்குட்டியாக‌ இயேசு கிறிஸ்துவை தேவ‌ன் வைத்திருந்தார்" என்கிற‌ ஒரு வார்த்தையே, ம‌னித‌ன் பாவ‌த்தில் விழுவான் அவ‌னுக்கு ஒரு மீட்ப‌ர் தேவை என்பதை தேவன் முன்னதகவே அறிந்திருந்ததிர் என்ப‌தையே குறிக்கிற‌து.

ம‌னித‌ன் பாவ‌ம் செய்வான் என்ப‌து அவ‌ருக்கு தெரியாம‌ல் இருந்திருந்தால், மேலே சொன்ன‌ப்ப‌டி ஒரு மீட்ப‌ரை அவ‌ர் பிற‌கு தான் தேடியிருக்க‌ வேண்டிய‌தாக‌ இருக்கும், உலக தோற்ற முதலே வைத்திருக்க சாத்தியம் இல்லையே. ஏனென்றால், மனிதன் தோன்றும் முண்ணமே உலகம் தோன்றிவிட்டது. மேலும் அப்ப‌டி ஒரு வ‌ச‌ன‌ம் இட‌ம் பெற்றிருக்காது.

யூதாஸ் காட்டிக்கொடுக்க‌ப்ப‌து ப‌ழைய‌ ஏற்பாடு தீர்க்க‌த‌ரிச‌ன‌ம். இயேசு கிறிஸ்து அதை அப்போது தான் முத‌ல் முறையாக‌ சொன்ன‌து இல்லை. அவ‌ர் எழுதியிருந்த‌தை மீண்டும் சொன்னார். இப்ப‌ சொல்லுங்க‌, இப்ப‌டி ப‌ழைய‌  ஏற்பாட்டில் எழுதியிருந்தும் அது ந‌ட‌க்காம‌ல் திருத்திக்கொண்டார்க‌ளா? அப்போஸ்த‌ல‌ர்க‌ள், அனைவ‌ருமே, ப‌ழைய‌ ஏற்பாட்டை வாசித்து தியானித்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்திருப்பார்க‌ளே (என்று நினைக்கிறேன்), அப்ப‌டி என்றால், இயேசு இப்ப‌டி காட்டி கொடுக்க‌ப்ப‌டுவார், அவ‌ர் இப்ப‌டியாக‌ பாடு ப‌டுவார், இப்ப‌டியாக‌ அவ‌ருக்கு காடி குடிக்க‌ கொடுக்க‌ப்ப‌டும், இப்ப‌டியாக‌ அவ‌ரின் ஆடையை சீட்டு போட்டு எடுக்க‌ப்ப‌டும் என்று எல்லாம் முன‌றிவித்த‌தே ந‌ட‌ந்த‌தே.

பேதுரு ம‌றுத‌லிக்க‌ போவ‌து கூட‌, இயேசு கிறிஸ்து அவ‌ன் ம‌றுத‌லிக்கும் முன்பே அவனிடமே சொல்லிவிட்டார். அது ந‌ட‌ந்தே ஆக‌ வேண்டும் என்ப‌தால் தானே பேதுரு ம‌றுத‌லித்தான். ஏன் அவ‌ன் ம‌றுத‌லிக்காம‌ல் போயிருக்க‌லாமே. ஆனால் அவ‌ன் ம‌றுத‌லிக்க‌ வேண்டும் என்று தேவ‌ சித்த‌ம், அது அவ‌னிட‌ம் சொன்ன‌ பிற‌கு தானே ந‌ட‌ந்த‌து.

இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுவ‌து கூட‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌மாக‌ எழுதிய‌தாக‌ தான் இருக்கிற‌து. அதை தான் அப்போஸ்த‌ல‌ர்க‌ள் பின்பு அறிவிக்கிறார்க‌ளே (அப். 2:31; லூக் 24:12 32).

 ச‌வுல், ப‌வுலான‌துக்கூட‌வா தேவ‌னுக்கு தெரியாது என்று நினைக்கிறீர்க‌ள். ப‌வுல் எழுதும் போது, அவ‌ர் தாயின் க‌ருவில் தோன்றும் முன்னே த‌ன்னை தெரிந்துக்கொண்ட‌தாக‌ எழுதுகிறார், ஆனால் தேவ‌ன் அவ‌னுக்கு என்று நிர்னையித்த‌ ஒரு கால‌ம் வ‌ரை அவ‌ன் ச‌வுலாக‌ தான் இருக்கிறான். இதுவும் தேவ‌ன் அனும‌திப்ப‌தே. அவரின் அனுமதி இல்லாமல் அல்லது அவருக்கு தெரியாமல் அவன் கொலை பாதக‌னாக‌ இருந்திருக்க‌ முடியாது, ஆனால் அப்ப‌டி இருப்ப‌தை அவ‌ரே அனும‌தித்தார். தேவ‌ன் அனைத்தையும் த‌ன் கால‌த்தில் நேர்த்தியாக‌ செய்கிற‌வ‌ராக‌ இருக்கிறார். நாம் தான் அவ‌ச‌ர‌ப்ப‌ட்டு அவ‌ரை புரிந்துக்கொள்ளாம‌ல் அவ‌ரையே குரைத்து பார்க்கும் அள‌விற்கு துனிந்து விடுகிறோம்.

"இந்த‌ப்ப‌டி, தேவ‌னுடைய‌ பைத்திய‌ம் என்ன‌ப்ப‌டுவ‌து ம‌னுஷ‌ருடைய‌ ஞான‌த்திலும் அதிக‌ ஞான‌மாயிருக்கிற‌து" 1 கொரி 1:25. ந‌ம‌க்கு வ‌ர‌விருக்கும் காரியங்க‌ள் தெரியாம‌லோ, புரியாம‌லோ இருக்க‌லாம், ஆனால் தேவ‌ன் எல்லாவ‌ற்றையும் அறிந்து, அனும‌தித்து, ஏற்ற‌ கால‌ங்க‌ளில் அவ‌ரின் திட்ட‌த்தை (சித்த‌த்தை) நிறைவேற்ற‌ வ‌ல்ல‌வ‌ராக‌ இருக்கிறார் என்ப‌து என் க‌ருத்து.

இந்நிலையிலிருந்து பார்த்தோமென்றால், ஆதாம் பாவ‌ம் செய்ய‌ப்போவ‌து, தேவ‌னுக்கு தெரிந்த‌து தான் என்ப‌து வேத‌த்தின் க‌ருத்து.

அன்பு57 writes:

"நாம் செய்யப்போகிற எல்லா செயல்களும் தேவனுக்கு முன்னதாகவே தெரியும் என மனிதர்கள் நினைக்க ஆரம்பித்தால், தவறு செய்பவர்கள் அதற்காக வருந்தும் மனோபாவம் கொஞ்சகொஞ்சமாகப் போய்விடுமே! நாம் என்னதான் முயன்றாலும் இப்படித்தான் நடக்கும் என தேவன் அறிந்தபடிதானே நடக்கப்போகிறது எனும் எண்ணம் நமக்குள் வந்துவிட்டால் நம் சுயாதீன சிந்தனை பாதிக்கப்பட்டுவிடுமே."

நீங்க‌ள் எழுதிய‌ ப‌டி ச‌வுலுக்கு ந‌ட‌க்க‌வில்லையே. அல்ல‌து இப்ப‌டி ப்ர‌ச‌ங்கிக்கும் ச‌பைக‌ளில் இன்று பாவ‌மே இல்லாம‌ல் அனைவ‌ரும் ப‌ரிசுத்த‌மாக‌ வாழ்கிறார்க‌ளா (ஊழிய‌ர்க‌ள் என்று தங்களையே சொல்லிக்கொள்ப‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌) தேவ‌ன் ந‌ம‌க்கு முன்பாக‌ ந‌ல்ல‌து தீய‌து இர‌ண்டையும் வைத்து ந‌ம்மை சோதிக்கிறார், அத‌ன் ரிஸ‌ல்ட் அவ‌ர் எப்ப‌டி நினைக்கிறாரோ அப்ப‌டி தான் ந‌ட‌க்கும். இல்லாவிட்டால், ச‌வுல் ப‌வுலாகி யிருக்க‌ முடியாது, அப்போஸ்த‌லனாயிருந்த‌ யூதாஸ் காட்டி கொடுத்திருக்க‌ முடியாது. தாவீது வேர் ஒருவ‌னுடைய‌ ம‌னைவியுட‌ன் த‌வ‌று செய்தும், தேவ‌ன் அவ‌னை தன் இருத‌ய‌த்திற்கு ஏற்ற‌வ‌ன் என்று certificate கொடுத்திருக்க‌ முடியாது. ஆகையால் தான், அழைப்பு என்றும், தெரிந்துக்கொள்ள‌ப்ப‌டுத‌ல் என்றும், பிரித்தெடுக்க‌ப்ப‌டுத‌ல் என்றும் காரிய‌ங்க‌ள் ந‌ட‌க்கிற‌து. இது தேவ‌னின் அநாதி திட்ட‌த்தில் இருப்ப‌தால் தான் ந‌ட‌க்கிற‌தே த‌விர‌, தானாக‌வே, அவ‌ரின் அனும‌தி இன்றி ந‌ட‌ப்ப‌தில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே! தேவன் மனஸ்தாபப்பட்டது பற்றி நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் இன்னமும் சரியான பதில் தரவில்லை. ஆனாலும் தங்களின் 2 கேள்விகளுக்கு நான் பதில்தர முன்வருகிறேன்.

bereans wrote:
//உங்க‌ளுது இந்த‌ க‌ருத்து ஏசா 46:10க்கு முரணாக‌ இருக்கிற‌தே.//

மீண்டும் மீண்டும் சொல்கிறேன், பின்னால் நடக்கப்போகிற எல்லாக் காரியங்களையும் தேவனால் அறிய இயலும் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால் அறிவதற்கு அவர் சித்தப்படுகிறவைகளை மட்டுமே அவர் அறிகிறாரேயன்றி மற்றவைகளை அவர் அறிய முற்படுவதில்லை என்பதுதான் என் கருத்து.

bereans wrote:
//உல‌க‌ தோற்ற‌ முத‌ல் அடிக்க‌ ப‌ட்ட‌ ஆட்டுக்குட்டியாக‌ இயேசு கிறிஸ்துவை தேவ‌ன் வைத்திருந்தார் என்கிற‌ ஒரு வார்த்தையே, ம‌னித‌ன் பாவ‌த்தில் விழுவான் அவ‌னுக்கு ஒரு மீட்ப‌ர் தேவை என்பதை தேவன் முன்னதகவே அறிந்திருந்ததிர் என்ப‌தையே குறிக்கிற‌து.

ம‌னித‌ன் பாவ‌ம் செய்வான் என்ப‌து அவ‌ருக்கு தெரியாம‌ல் இருந்திருந்தால், மேலே சொன்ன‌ப்ப‌டி ஒரு மீட்ப‌ரை அவ‌ர் பிற‌கு தான் தேடியிருக்க‌ வேண்டிய‌தாக‌ இருக்கும், உலக தோற்ற முதலே வைத்திருக்க சாத்தியம் இல்லையே.//

சோதனையில் மனிதன் வெல்லவும் கூடும், தோற்று பாவத்தில் விழவும் கூடும் என்பதே உண்மை. ஒருவேளை மனிதன் தோற்றுவிட்டால் அவனுக்கு ஒரு மீட்பு வேண்டுமே என்பதற்காகவே இயேசுவை தேவன் வைத்திருந்தார்.

ஆதாமை தேவன் சோதித்தார் என்கிறீர்கள். சோதனை என்றாலே அதில் வெற்றியும் உண்டு, தோல்வியும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததுதானே? ஆதாம் சோதனையில் வென்றிருந்தால் தேவன் மகிழ்வுற்றிருப்பார். ஆனால் ஆதாம் தோற்றதால் அவர் மூலம் அவரது சந்ததிக்குள்ளும் நுழைந்த பாவம், ஒரு காலகட்டத்தில் அபரிதமாக வளர்ந்து, மனிதனை உண்டாக்கியதற்காக தேவன் மனஸ்தாபப்படும் நிலைவரை ஆனது (ஆதி. 6:6).

தேவன் ஏன் மனஸ்தாபப்பட்டார் எனும் என் கேள்வியோடு பின்வரும் கேள்விகளையும் சேர்த்துக் கொள்கிறேன். இவற்றிற்கும் பதில் தாருங்கள்.

1.
யாத். 32:14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு பரிதாபங்கொண்டார்.

இஸ்ரவேலருக்குத் தீங்கு செய்யவேண்டும் என்பதுதான் தேவன் நினைத்த காரியம். ஆனால் அக்காரியம் நடக்கவில்லை. நடக்கப்போகாத ஒரு காரியத்தைச் செய்வதற்கு தேவன் எவ்வாறு நினைத்தார்? (கேள்விக்கு நேரடியான பதில் தரவும்)

2.
யோனா 3:4 யோனா (நினிவே) நகரத்தில் பிரவேசித்து, ....:இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப் போகும் என்று கூறினான்.

தேவனுடைய வார்த்தையைத்தானே யோனா தீர்க்கதரிசனமாகக் கூறினார்? (உங்கள் கூற்றுப்படி) பின்னால் நடக்கப்போவதை முன்னதாகவே அறிந்துதானே தேவன் யோனா மூலம் அதை அறிவித்தார்? ஆனால் தேவன் அறிவித்தபடி நடக்கவில்லையே? இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள்? ஒருவேளை யோனா தன்னிச்சையாக அவ்வாறு அறிவித்தார் எனக் கூறப்போகிறீர்களா? அப்படியும் நீங்கள் கூறமுடியாது. பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

யோனா 3:10 தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

3. தேவனின் இந்த மனஸ்தாபத்திற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறீர்கள்?

4.
ஆதியாகமம் 22:12 அப்பொழுது அவர்: .... நீ அவனை உன் புத்திரன் என்றும் உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

NIV ஆங்கில வேதாகமம் Now I know என தேவன் கூறியதாக தெளிவாகக் கூறுகிறது. எபிரெய மூலபாஷை வார்த்தையும் ‘இப்பொழுது’ எனும் அர்த்தத்தையே தருகிறது. அதாவது ஆபிரகாம் தேவனுக்குப் பயப்படுபவர் என்பது, அவர் சோதனையில் வெற்றிபெற்ற பின்புதான் தேவனுக்குத் தெரிந்தது. அதாவது அதற்கு முன்னதாக அவருக்குத் தெரியவில்லை என்றாகிறது. இதற்கு நீங்கள் என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்?


இப்படியெல்லாம் நான் கேட்பதால், தேவவல்லமையை நான் குறைத்துக் காட்டுவதாக நினைக்க வேண்டாம். பின்னால் நடக்கப் போகிறவைகளை முன்னாலேயே அறியக்கூடிய வல்லமை தேவனுக்கு உள்ளபோதிலும், மனிதனின் சுயாதீனத்திற்கு மதிப்பு கொடுத்து, சில விஷயங்களை மனிதனின் சுயதீனத்திற்கு முழுமையாக விட்டுக் கொடுத்திவிடுகிறார் என்றே நான் கருதுகிறேன்.

தள நண்பர்களே, Please visit:
http://gnanam57.tripod.com


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு57 writes:

"மீண்டும் மீண்டும் சொல்கிறேன், பின்னால் நடக்கப்போகிற எல்லாக் காரியங்களையும் தேவனால் அறிய இயலும் என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால் அறிவதற்கு அவர் சித்தப்படுகிறவைகளை மட்டுமே அவர் அறிகிறாரேயன்றி மற்றவைகளை அவர் அறிய முற்படுவதில்லை என்பதுதான் என் கருத்து."

அறிய‌ இயலும் என்ப‌தை காட்டிலும் அவ‌ர் தான் அத‌ற்கு கார‌ண‌ராக‌வும் இருக்கிறார் என்ப‌து தான் ம‌றுக்க‌ முடியாத‌ உண்மை. ஆகையால் அவ‌ர் சித்த‌ப்ப‌ட்டு தான்
அறிய‌வேண்டிய‌ சூழ்நிலையில் அவ‌ர் இல்லை, மாறாக‌ அவ‌ர் சித்த‌ம் கொள்வ‌தை அவ‌ர் அரிவிக்கிறார் என்ப‌து தான் ச‌ரியாகும். அதாவ‌து ஒரு க‌ட்டிட‌ம்க‌ட்டும் ஒரு பொறியாள‌ர் அந்த‌ க‌ட்டிட‌ம் முடியும் ம‌ட்டும் உள்ள‌ அனைத்து ஸ்டேஜையும் அறிந்திருந்தால் தான் அவ‌ர் ஒரு பொறியாள‌ராக‌ இருக்க‌ முடியும். தேவ‌ன் இப்ப‌டி பட்ட‌ பொறியாள‌ர்க‌ளுக்கு ஞான‌த்தை த‌ருகிற‌வ‌ராக‌யிருக்கிறார்.  மேலும் த‌ங்க‌ளின் க‌ருத்துக்கு வேத‌ வ‌ச‌ன‌ம் த‌ர‌ப‌ட‌ வில்லையே.


அன்பு57 writes:
"சோதனையில் மனிதன் வெல்லவும் கூடும், தோற்று பாவத்தில் விழவும் கூடும் என்பதே உண்மை. ஒருவேளை மனிதன் தோற்றுவிட்டால் அவனுக்கு ஒரு மீட்பு வேண்டுமே என்பதற்காகவே இயேசுவை தேவன் வைத்திருந்தார்."

ம‌னித‌னின் சுய‌சித்த‌ம் இதில் தான் முடியும் என்ப‌தையும் அவ‌ர் தெரிந்து வைத்திருந்த‌தினால் தான் இயேசு கிறிஸ்துவை நிய‌மித்து வைத்திருந்தாரே த‌விர‌,
தேவ‌னின் முறைக‌ளில் Trial and error methods கிடையாது, அதாவது, ஒரு வேளை மனிதன் பாவம் செய்யாமல் போனாலும் போகலாம், ஆனால் ஒரு வேளை பாவம் செய்து விட்டால் என்ன என்கிற குழப்பத்தில் அவர் இயேசு கிறிஸ்துவை நியமிக்கவில்லை. அவருக்கு உறுதியாக தெரியும், ஆதாம் சோதனையில் விழுந்து விடுவான் என்று.. அவ‌ர் நினைத்த‌து ஆகும், அவ‌ர் க‌ட்ட‌ளையிட்ட‌து ந‌ட‌க்கும். சாத்தானை அவ‌ர் சோத‌னைக்கார‌னாக‌ நிய‌மித்த‌தே ம‌னித‌னை சோதிக்க‌, அத‌ற்கு முன்பாக‌வே அவ‌ர் அடிக்க‌ப்ப‌ட்ட‌ ஆட்டுகுட்டியை நிய‌மித்து வைத்துவிட்டார். இதை எல்லாம் வாசித்த‌ பிற‌கு கூட‌வா, தேவ‌னுக்கு ம‌னித‌ன் பாவ‌ம் செய்ய‌மாட்ட‌ன் என்று இருந்திருக்கும். அப்ப‌டி என்றால் அவ‌ர் எல்லாவ‌ற்றையும் முன‌றிந்த‌ தேவ‌னாக‌ இருக்க‌வே முடியாது.

தேவ‌ன் ம‌ன்ஸ்தாப‌ம் (ம‌ன‌ஸ்தாப‌த்தை காட்டிலும் வ‌ருத்த‌ப்ப‌ட்ட‌து என்ப‌து தான் ச‌ரியான‌தாக‌ இருக்கும்) ப‌ட்ட‌து ம‌னித‌ன் அடைத‌ நிலையை பார்த்து தான். மீண்டும் சொல்லுகிறேன், ம‌னித‌ன் இந்த‌ நிலைக்கு வ‌ருவான் என்று தேவ‌னுக்கு தெரியும். இது எப்ப‌டி என்றால், எல்லா ம‌னித‌ர்க‌ளும் ம‌ரிப்பார்க‌ள் என்ப‌து தெரிந்த‌ இயேசு, லாச‌ரு ம‌ரித்த‌ போது க‌ண்ணீர் விட்டார் என்கிற‌து வேத‌ம். இந்த‌ உண‌ர்ச்சியை தான் தேவ‌ன் வெளிப்ப‌டுத்தினாரே த‌விர‌, அவ‌ர் ம‌னித‌னை ப‌டைத்த‌ செய‌லை பார்த்து அல்ல‌.

அன்பு57 கேட்ட‌து:
"1. யாத். 32:14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு பரிதாபங்கொண்டார்.

இஸ்ரவேலருக்குத் தீங்கு செய்யவேண்டும் என்பதுதான் தேவன் நினைத்த காரியம். ஆனால் அக்காரியம் நடக்கவில்லை. நடக்கப்போகாத ஒரு காரியத்தைச் செய்வதற்கு தேவன் எவ்வாறு நினைத்தார்? (கேள்விக்கு நேரடியான பதில் தரவும்)"

காரிய‌ம் தானாக‌வே ந‌ட‌க்காம‌ல் போக‌வில்லை ச‌கோத‌ர‌ரே, அதை தேவ‌ன் செய்ய‌வில்லை. அவ‌ர் ஏன் செய்ய‌வில்லை என்று நான் கேட்க‌ கூடுமோ. அவ‌ர் வ‌ழிக‌ள் ந‌ம் வ‌ழிக‌ள் அல்ல‌வே, அவ‌ர் ம‌னுஷ‌னை போல‌வா யோசிப்பார்? அல்ல‌து அவ‌ருக்கு ஆலோச‌னை சொல்லுப‌வ‌ன் தான் யார்? இங்கு உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌ வார்த்தையான‌ "ப‌ரிதாப‌ங்கொண்டார்" கூட‌ த‌ப்பான‌ அர்த்த‌ம் தான் த‌ருகிற‌து. ப‌ரிதாப‌ம் கொள்வ‌து என்றால், ஏதோ ந‌ட‌க்க் கூடாத‌து ந‌ட‌ந்து விட்டு அத‌ற்காக‌ ம‌ன‌ம் வ‌ருந்துவ‌து. ஆனால் இங்கு உப‌யோகிக்க‌ப‌ட்ட‌ சொல்லின் அர்த்த‌ம் என்ன‌ தெரியுமா, அப்ப‌டி செய்யாத‌ப‌டிக்கு "அவ‌ர் த‌ன் ம‌ன‌தை மாற்றி கொண்டார்" என்ப‌து தான் இந்த‌ வ‌ச‌ன‌த்தில் வ‌ரும் "ப‌ரிதாப‌ங்கொண்டார்" என்ப‌த‌ற்கு அர்த்த‌ம். அவ‌ர் செய்ய‌ நினைத்த‌து தான், ஆனால் அதை செய்யாம‌ல் அவ‌ர் ம‌ன‌தை மார்றிக்கொண்டார் என்றால் அதில் என்ன‌ த‌வ‌று இருக்கிற‌து? அவ‌ரே பாவ‌த்தையும் அனும‌திக்கிறார், அவ‌ரே ம‌ண்ணிக்க‌வும் செய்கிறார் என்றால் என்ன‌? இதை பார்த்து, நாம் பாவ‌ம் செய்வோம் என்று அவ‌ருக்கு தெரியாது, அதுநாலே அவ‌ர் ம‌ன்னிக்கிறார் என்றா அர்த்த‌ம் கொள்ள‌ முடியும்?

அன்பு57 கேட்ட‌து:
"2. யோனா 3:4 யோனா (நினிவே) நகரத்தில் பிரவேசித்து, ....:இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப் போகும் என்று கூறினான்.

தேவனுடைய வார்த்தையைத்தானே யோனா தீர்க்கதரிசனமாகக் கூறினார்? (உங்கள் கூற்றுப்படி) பின்னால் நடக்கப்போவதை முன்னதாகவே அறிந்துதானே தேவன் யோனா மூலம் அதை அறிவித்தார்? ஆனால் தேவன் அறிவித்தபடி நடக்கவில்லையே? இதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள்? ஒருவேளை யோனா தன்னிச்சையாக அவ்வாறு அறிவித்தார் எனக் கூறப்போகிறீர்களா? அப்படியும் நீங்கள் கூறமுடியாது. பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

யோனா 3:10 தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்."

யோனா 3:10 ஆங்கிள‌த்தில், "When God saw what they did and how they turned from their evil ways, he had compassion and did not bring upon them the destruction he had threatened"

அதாவ‌து, "அவ‌ர்க‌ள் செய்த‌தையும், அவ‌ர்க‌ள் தீமையை விட்டு விள‌கிய‌தை பார்த்த‌தும், அவ‌ர்க‌ள் மேல் ம‌ன‌துருக்க‌ம் கொண்டு, அவ‌ர்க‌ள் மேல் தான் கொண்டு வ‌ரும் அழிவை கொண்டு வ‌ர‌வில்லை" இப்ப‌டியாக‌ தான் இந்த‌ வ‌ச‌ன‌ம் இருந்திருக்க‌ வேண்டுமே த‌விர, தேவ‌ன் இதில் ம‌ன‌ஸ்தாப‌ம் ப‌ட‌ என்ன‌ கார‌ன‌ம்? மேலும், தேவ‌ன் ஏன் அப்ப‌டி செய்தார் என்ப‌து யோனா 4:10,11ல் தேவ‌ன் த‌ன் வாயினாலே சொல்லிய‌தை வாசிக்க‌லாம்.

அன்பு57 எழுதிய‌து:
"4. ஆதியாகமம் 22:12 அப்பொழுது அவர்: .... நீ அவனை உன் புத்திரன் என்றும் உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக் கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார்.

NIV ஆங்கில வேதாகமம் Now I know என தேவன் கூறியதாக தெளிவாகக் கூறுகிறது. எபிரெய மூலபாஷை வார்த்தையும் ‘இப்பொழுது’ எனும் அர்த்தத்தையே தருகிறது. அதாவது ஆபிரகாம் தேவனுக்குப் பயப்படுபவர் என்பது, அவர் சோதனையில் வெற்றிபெற்ற பின்புதான் தேவனுக்குத் தெரிந்தது. அதாவது அதற்கு முன்னதாக அவருக்குத் தெரியவில்லை என்றாகிறது. இதற்கு நீங்கள் என்ன விளக்கம் தரப் போகிறீர்கள்?"

நீங்க‌ள் வ‌ச‌ன‌த்தை ச‌ரியாக‌ எழுதியிருந்தாலும் அதை யார் உச்ச‌ரித்த‌து என்ப‌தை க‌வ‌னிக்க‌வில்லை போல். இந்த‌ வ‌ச‌ன‌த்தை தேவ‌னின் தூத‌னான‌வ‌ர் ஆபிர‌காமிட‌த்தில் சொல்லுகிறார், தேவ‌ன் அல்ல‌. இல்லாவிட்டால், அந்த‌ வ‌ச‌ன‌த்தில், இப்பொழுது நான் தெரிந்துக்கொண்டேன் நீ என‌க்கு ப‌ய‌ப்புடுகிறாய் என்று தான் இருந்திருக்க‌ வேண்டும். ஆக‌ தூத‌ன் அப்பொழுது தெரிந்துக் கோண்ட‌தில் என்ன‌ ஆச்ச‌ரிய‌ம். ஆபிர‌காம் கீழ்ப்ப‌டிவார் என்ப‌து தேவ‌னுக்கு நிச்ச‌ய‌மாக‌ தெரியும், அது நாலேயே அங்கு ப‌லிக்கென்று ஒரு ஆட்டுக்குட்டியை நிய‌மித்து வைத்திருப்ப‌தை நாம் வாசிக்க‌ முடிகிற‌து.

ஆக‌ ச‌கோத‌ர‌ரே, தேவ‌னே அனும‌தித்து விட்டு, ஐயோ அவ‌ருக்கு தெரியாம‌ல் ந‌ட‌க்கிற‌து என்ப‌தில் அர்த்த‌ம் இல்லை. சாத்தானை அவ‌ரே அனும‌தித்து விட்டு, என்ன‌ ந‌ட‌க்க‌ போகுது என்று பார்த்துக்கொண்டிருப்ப‌வ‌ர் தேவ‌னாக‌ எப்ப‌டி இருக்க‌ முடியும்.

(இதில் இன்னோரு விஷ‌ய‌ம் இருக்கிற‌து, நம் ஊழிய‌ர்க‌ள் என்ன‌மோ, சாத்தானை காட்டிலும் வ‌ல்ல‌மை பொருந்திய‌வ‌ர்க‌ள் என்று நினைக்கிரார்க‌ள், ஆனால் சாத்தானோ ஒரு ஆவிக்குறிய ஜீவி, அவ‌னுக்கு ப‌ல‌ வ‌ல்ல‌மை உண்டு என்ப‌தை ம‌ற‌ந்து போய், ச‌ரி இது இந்த‌ ப‌குதி விவாத‌ம் அல்ல‌.)



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

வேதாகமம் கூறுவது:
ஆதியாகமம் 6:6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார் (அல்லது வருத்தப்பட்டார்); அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.
The LORD was grieved that he had made man on the earth, and his heart was filled with pain.
- NIV
And the LORD was sorry that He had made man on the earth, and He was grieved in His heart.
- NKJV
And it repented Jehovah that he had made man on the earth, and it grieved him at his heart.
- ASV
மேற்கூறிய மொழிபெயர்ப்புகளின்படி பார்க்கையில்:
தேவன் மனிதனை உண்டாக்கியதற்காக வருத்தப்பட்டார், அல்லது துக்கப்பட்டார், அல்லது மனஸ்தாபப்பட்டார்; மனிதனின் செயல் அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது, அல்லது அவர் இருதயம் வேதனையால் நிறைந்தது, அல்லது அவர் இருதயத்தில் துக்கப்பட்டார் என்றாகிறது.
அல்லது
மனிதனின் செயல், பூமியில் மனிதனை தேவன் உண்டாக்கியதற்காக அவரை வருத்தப்படுத்தியது, அவர் இருதயத்தில் அவரை துக்கமடையச் செய்தது என்றாகிறது.

மொத்தத்தில் மனிதனை உண்டாக்கியதற்காக தேவன் வருத்தப்பட்டது தெளிவாகிறது. (உங்கள் கருத்துப்படி) மனிதன் இப்படிச் செய்வான், தேவகுமாரர்கள் மனிதரோடு உறவாடுவார்கள் என்பதெல்லாம் தெரிந்துதானே தேவன் மனிதனைப் படைத்தார்? பின்னர் ஏன் மனிதனின் செயலால் அல்லது தேவகுமாரரின் செயலால் அவர் வருந்த வேண்டும், இருதயத்தில் துக்கப்படவேண்டும்?

1 சாமுவேல் 15:10,11 கர்த்தர் சொன்னது: நான் சவுலை ராஜாவாக்கியது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது ....

சவுல் தவறு செய்வான் என்பது தேவனுக்கு முன்பே தெரியுமல்லவா? பின்னர் ஏன் அவனை ராஜாவாக்க வேண்டும், ராஜாவாக்கியதற்காக மனஸ்தாபப்படவேண்டும்?

இக்கேள்விகளுக்கு திருப்தியான பதில் வராதவரை நாம் விவாதம் செய்வதில் பயனில்லை.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

      பரிசுத்த வேதாகமத்தில், மனஸ்தாபம் என்கிற வார்த்தை சரியான சந்தர்ப்பத்ததில் உபயோகப்படுத்தாத வார்த்தையாக இருக்கிறது. மனஸ்தாபம் என்கிறது, தான் செய்ய கூடாத ஒரு விஷயத்தை செய்து விட்டதாலோ, அல்லது, பிழையாக செய்ததாலோ, அல்லது வேறு ஒன்று செய்ய போக வேறு ஒன்று நடந்து விட்டதாலோ, அல்லது பிறரிடம் தான் செய்த தவற்றை உனர்த்தும் உணர்வை குறிக்கும் வார்த்தையாகும். இதில் சொல்லப்பட்ட ஒன்றுமே தேவனால் செய்ய முடியாத காரியமாக இருக்கிறது. அதாவது அவரால் தவறு செய்ய முடியாது, அவர் வேற் ஒன்றை செய்ய நினைத்து வேற் ஒன்று நடப்பதும் சாத்தியம் இல்லை. இப்படி இருக்க இந்த இடங்களில் மனஸ்தாபம் என்கிற வார்த்தையே முதலாவது தப்பாக இருக்கிறது. ஏனென்றால், பரிசுத்த வேதாகமம் என்கிற மொழிபெயர்ப்பு, மூல பாஷையான எபிரேயு மற்றும் கிரேக்கத்தில் இருந்து மொழிப்பெயர்க்கப்படவில்லை, அது கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பின் த‌மிழ் மொழிபெய‌ர்ப்பாகும். எந்த‌ ஒரு மொழிப்பெய‌ர்ப்பும் 100 ச‌த‌வித‌ம் ச‌ரி என்று சொல்ல‌ முடியாது. ஆகவே தான் வேத‌த்தை ஆராய்ந்து பார்க்க‌ நாங்க‌ள் அதிக‌ப‌டியான‌ மொழிப்பெய‌ர்ப்புக‌ளை ப‌ய‌ன்ப‌டுத்துகிறோம்.

வேத‌த்தை வாசித்தால், ந‌ம‌க்கு தேவ‌னின் த‌ன்மை (character) புரியும். ஆக‌ எந்த‌ ஒரு மொழிபெய‌ர்பை வாசித்தாலும், தேவ‌னின் த‌ன்மை மாற‌க்கூடாது. இனி நாம் ப‌ல்வேறு மொழிபெய‌ர்ப்புக‌ளை வைத்து தேவ‌னின் த‌ன்மையோடு வ‌ச‌ன‌ங்க‌ளை வாசித்தோமென்றால் விஷய‌ங்க‌ள் விள‌ங்கும். நாம் பிடிவாத‌மாக‌ ந‌ம‌க்கு உண்டான‌ ஒரு மொழிபெய‌ப்பை வைத்துக்கொண்டு ஆராய்ந்தால் ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌வ‌ற‌ வாய்ப்பு இருக்கிற‌து.

எடுத்துக்காட்டாக‌,

1 திமோ3:16 "தேவ‌ன் மாம்ச‌த்தில் வெளிப்ப‌ட்டார்" (ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌ம்)
"கிறிஸ்து மாம்ச‌த்தில் வ‌ந்தார்" (ப‌ரிசுத்த‌ பைபிள் மொழிப்பெய‌ர்ப்பு)

இப்ப‌டி இரு த‌மிழ் மொழிப்பெய‌ர்ப்புக‌ளுக்கிடையில் வித்தியாச‌ம் இருக்கிற‌து, இதை எப்ப‌டி பார்ப்பீர்க‌ள்.

ச‌ரி விஷ‌ய‌த்திற்கு வ‌ருவோம்,

தேவ‌ன் ஏன் ம‌ன‌ஸ்தாப‌ம் ப‌ட‌ வேண்டும்.

1. உண‌ர்வின் வெளிப்பாடு. ந‌ம‌க்கு இத‌ன் விளைவு இது தான் என்று தெரிந்தாலும், எந்த‌ ஒரு உண‌ர்வு இல்லாம‌ல் இருக்க‌ முடியாது. ம‌ர‌ண‌ம் ச‌ம்ப‌வித்தே ஆகும் என்று தெரிந்தாலும், எவ்வுள‌வு தான் மோச‌மான‌ ம‌னித‌னாக‌ இருந்தாலும், அந்த‌ இழ‌ப்பிற்கு வ‌ருந்துவ‌து உண‌ர்வின் வெளிப்பாடு. ம‌ற்ற‌ ஜீவ‌ ராசிக‌ளிட‌ம் இல்லாத‌து, ஏன் ம‌னித‌ர்க‌ளிட‌த்தில் மாத்திர‌ம் இது இருக்கிற‌து, ஏனென்றால், ம‌னித‌ன் மாத்திர‌மே தேவ‌னின் சாய‌லில் ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கிறான். ம‌னித‌ன் ஒரு உணர்வை வெளிப்ப‌டுத்துகிறான் என்றால், அது நிச்ச‌ய‌மாக‌வே தேவ‌னுக்கு உண்டு. அப்ப‌டி வெளிப்ப‌டுத்துய‌ உண‌ர்வு தான் அந்த‌ ம‌ண‌ஸ்தாப‌ம். முத‌லில் சொன்ன‌ மாதிரி, லாச‌ரு ம‌ரித்தான், அவ‌ன் மீண்டும் உயிரோடு எழும்புவான் என்று தெரிந்தும், இயேசு க‌ண்ணீர் விடுகிரார். (மீண்டும் சொல்லுகிறேன், ம‌ன‌ஸ்தாப‌ம் என்கிற‌ வார்த்தை ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌த்திலும் அதற்கு இனையான ஆங்கிள வார்த்தை கிங் ஜேம்ஸில் மாத்திர‌மே இருக்கிற‌து)

2.  உல‌க‌த்தில் இன்று பெறுகியிருக்கும் பாவ‌ங்க‌ள் அனைத்தும் வேத‌த்தில் எழுதிய‌ப‌டியே ந‌ட‌க்கிற‌தே. ரோம் 1; 1 தீமோ 4; 2 தீமோ 3 போன்ற‌ அதிகார‌ங்க‌ளை வாசித்தோமென்றால் அதில் இருக்கிற‌து. இப்ப‌டி எழுதிய‌தும், ந‌ட‌ப்ப‌தும் என்ன‌ தேவ‌னுக்கு தெரியாம‌லேயா ந‌ட‌க்கிற‌து? இல்லை தேவ‌ன் அனும‌திக்காம‌ல் தான் இது எல்லாம் ந‌ட‌ந்து விடுகிற‌தா?

வேத‌த்தை வாசிக்க‌ ந‌ம‌க்கு pre-conceived mind இருக்க‌ கூடாது. நாம் எந்த‌ ச‌பையை சேர்ந்த‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌லாம், எந்த‌ போத‌க‌ரை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ளாக‌ இருக்க‌லாம் ஆனால் வேத‌த்தை வாசிக்கும் போதோ, ஆராயும் போதோ, ச‌பையோ, போத‌க‌ரோ, அத‌ன் கோட்பாடுக‌ளோ, இல்லாம‌ல் தான் வேத‌த்தை ஆராய‌ முடியும். க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்கிற‌ ஒரு பெரிய‌ கூட்ட‌ம் இருக்கிற‌து, அவ‌ர்க‌ளும் இதே வேத‌த்தை தான் வைத்திருக்கிறார்க‌ள், அங்கேயும் வேத‌த்தை ஆராய‌ தான் செய்கிறார்க‌ள், பெந்தெகொஸ்தே ச‌பைக‌ளை போல் அவ‌ர்க‌ளும் ஜெப‌ கூட்ட‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ தான் செய்கிறார்க‌ள், ஆனாலும் தேவ‌னி புரியாத‌தினால், வேத‌த்தை வேத‌த்திலிருந்து வாசிக்காம‌ல் ச‌பை கோட்பாடுக‌ளிலிருந்து வாசிப்ப‌தால் இத்துனை பெரிய‌ ச‌பை இத்துனை கால‌மாக‌ த‌வ‌ற்றை செய்து வ‌ருகிற‌து (ஆனால் அவ‌ர்க‌ள் அதை ஒரு போதும் ஒத்து கொள்ள‌ மாட்டார்க‌ள் என்ப‌து வேற் விஷ‌ய‌ம், ஏனென்றால் நானும், அதே ச‌பையில் இருந்து தேவ‌ன் சித்த‌த்தினால் வேத‌த்தை தியானிக்கும் வாய்ப்பு கிடைத்த‌து).

ச‌ரி தேவ‌ன் இப்ப‌டியாக‌ பாவ‌ங்க‌ளையும், அத‌ன் விளைவான‌ ம‌ரண‌த்தையும் அனும‌தித்தாலும் எல்லாம் முந்தய சீருக்கு திரும்பும் காலம் மிக சமீபமாக இருக்கிறது என்பதை வேதமே சொல்லியிருக்கிறது.

ஒரு விஷ‌ய‌த்தில் convince ஆக‌ வேண்டுமென்றால், அதை புரிய‌ வேண்டும் என்கிற‌ நோக்க‌த்தில் பார்த்தால் தான் முடியும். புரிய‌ கூடாது என்றால், அது நிச்ச‌ய‌மாக‌ முடியாது. எடுத்துக்காட்டாக‌, செழிப்பின் சுவிசேஷ‌ம் என்கிற‌ ஒன்று இன்று பிர‌ப‌ல‌மாக‌ இருக்கிற‌து, அது வேத‌த்தின் ப‌டி த‌ப்பான‌ ஒரு சுவிசேஷ‌ம் என்று அறிகிறோம், ஆனாலும், அவ‌ர்க‌ள் அதை ந‌ம்புவ‌தால், அது அவ‌ர்க‌ளுக்கு ந‌ட‌க்கிற‌து.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே!
எனது வேண்டுகோளை ஏற்று எனது கேள்விக்கு பதில் சொல்ல முன்வந்தமைக்கு நன்றி.
ஆனாலும் உங்கள் பதில் எனக்கு திருப்தியானதாக இல்லை.

மொழிபெயர்ப்பில் தவறுள்ளது என நீங்கள் கூறியதால்தான் பல்வேறு மொழிபெயர்ப்புகளைக் குறிப்பிட்டுள்ளேன். இவற்றில் எந்த மொழிபெயர்ப்பையும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம், அல்லது உங்களுக்குத் திருப்தியான வேறெந்த மொழிபெயர்ப்பையும் எடுத்துக் கொள்ளலாம், அல்லது நீங்களே நேரடியாக மொழிபெயர்த்தும் கொள்ளலாம்.

ஆனால் எந்த மொழிபெயர்ப்பாக இருந்தாலும், ’மனிதனை உண்டாக்கியதற்காக’ மற்றும் ‘சவுலை ராஜாவாக்கியதற்காக’ எனும் வாசகங்கள் கண்டிப்பாக இடம்பெறும் என நம்புகிறேன்.

எனது கேள்வி இதுதான்:
மனிதனைப் படைக்கும்போதே அவன் இப்படித்தான் நடப்பான் என்பதை அறிந்திருந்த தேவன், தாம் அறிந்திருந்த அச்செயலை அவன் செய்யும்போது அவனை உண்டாக்கியதற்காக ஏன் வருந்த வேண்டும், or துக்கப்பட வேண்டும், or வேதனைப்பட வேண்டும் or etc. etc.?

அவ்வாறே, சவுலை ராஜாவாக்கும்போதே அவன் இப்படித்தான் நடப்பான் என்பதை அறிந்திருந்த தேவன், தாம் அறிந்திருந்த அச்செயலை சவுல் செய்தபோது அவனை ராஜாவாக்கியதற்காக ஏன் வருந்த வேண்டும், or துக்கப்பட வேண்டும், or வேதனைப்பட வேண்டும் or etc. etc.?

bereans wrote:
//லாச‌ரு ம‌ரித்தான், அவ‌ன் மீண்டும் உயிரோடு எழும்புவான் என்று தெரிந்தும், இயேசு க‌ண்ணீர் விடுகிரார்.//

எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொன்னபின்பு லாசரு-கண்ணீர் விஷயத்திற்கு வருவோமே!


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

ஒரு காரியத்தை குறித்து சரியாக புரியவேண்டும் என்பதற்க்க்காகதான் இந்த விவாதமே நடைபெறுகிறது. யாரையும் குற்றப்படுத்தவோ அல்லது எதையும் குறைகூறவோ அல்ல.  அப்படி குறை இருக்குமானால் அது பற்றி வேறொரு இடத்தில் விவாதிக்கலாம். ஏனெனில் யார் உண்மை யார் தவறு என்று யாருக்கும் தெரியாது. உண்மை என்னவென்று தேவன் ஒருவருக்கே தெரியும்.  

வேதத்தின் அடிப்படை புரிதலில் தவறு இருப்பதால்தான் இங்கு உபதேசங்கள் பிரிகின்றன. எனவே இந்த அடிப்படை கோட்பாட்டில் எது சரியானது என்பதை நாம் முதலில் அறியவேண்டும். என்னை பொறுத்தவரை நான் எந்த சபை உபதேசத்தையும் சார்ந்தவன் அல்ல ஆனால் உண்மை என்னவென்று அறிய விளைபவன். 

இங்கு வாதிடும் அன்பு பெரேயன்ஸ் ராஜ் ஆகிய நாம் மூவரும் வெவேறு அடிப்படி கோட்பாட்டை கொண்டுள்ளோம் அன்பு அவர்களின் வாதத்திற்கு எனது வாதம் ஏறக்குறைய 90௦%  ஒத்து போவதாலும் நான் பலவித மொழிபெயர்ப்புகளை படிக்கவில்லை என்பதாலும் இடையில் எங்கும் பதிலளிக்க விரும்பவில்லை.

எதிர்பாராத ஓன்று நடந்தால்தான் தேவன் மனஸ்தாபபட்டார் என்பது மறுக்க முடியாத உண்மை.

மேலும் தேவன் தான் போட்ட திட்டங்களை அடிக்கடி மாற்றக்கூடியவர் என்பதை  எசேக்கியா ராஜாவின் மரணம் குறித்து எசாயா தீர்க்கன் சொல்வதும் பிறகு மாற்றி அவனுக்கு 15 வருடம் வாழ்நாளை கூட்டி கொடுப்பதும் போன்ற நிகழ்வுகளிலிருந்தும், நினிவேயின் நிகழ்வுகளிலிருந்தும் அறியமுடிகிறது.

அப்படிஇருக்க ஒரு தனிப்பட்ட மனிதன் விஷயத்தில் தேவனின் திட்டம் நிலையானதஅல்ல? முன்கூட்டி நிர்ணயிக்கபட்டது அல்ல என்றே நான் கருதுகிறேன்.

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

RAAJ wrote:
//என்னை பொறுத்தவரை நான் எந்த சபை உபதேசத்தையும் சார்ந்தவன் அல்ல ஆனால் உண்மை என்னவென்று அறிய விளைபவன்.//

சகோ.ராஜ் அவர்கள் கூறுவது எனக்கும் பொருந்தும். ஆகிலும் நான் பிறந்தது முதல் இன்று வரை சி.எஸ்.ஐ. சபையில் இருக்கிறேன். சி.எஸ்.ஐ. சபை உட்பட பல சபைகளில் உபதேசக் குழப்பங்கள் உண்டு என்பதை நான் நன்கறிவேன்.

RAAJ wrote:
//தேவன் தான் போட்ட திட்டங்களை அடிக்கடி மாற்றக்கூடியவர் என்பதை எசேக்கியா ராஜாவின் மரணம் குறித்து எசாயா தீர்க்கன் சொல்வதும் பிறகு மாற்றி அவனுக்கு 15 வருடம் வாழ்நாளை கூட்டி கொடுப்பதும் போன்ற நிகழ்வுகளிலிருந்தும், நினிவேயின் நிகழ்வுகளிலிருந்தும் அறியமுடிகிறது.//

ஒரு சிறிய திருத்தம் சகோதரரே!
‘தேவன் தாம் போட்ட திட்டங்களை’ என்பதற்குப் பதிலாக ‘தேவன் தமது தீர்மானங்களை’ என்று வைத்துக் கொள்ளலாமா?(God's decisions instead of God' plans)

தக்க சமயத்தில் எசேக்கியா ராஜாவின் சம்பவத்தை சகோ.ராஜ் நினைவூட்டியுள்ளார்.

எசேக்கியா ராஜா உட்பட நாம் அனைவரும் ஜெபிக்கிற ஜெபங்களுக்கு தேவன் பதிலளிக்கிறார் என்றால், அது அவரது தீர்மானங்களை மாற்றுவதன் மூலம்தான் நிகழ முடியும்.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நீங்கள் ஜெபிப்பீர்கள் என்று கூட அவரின் ஆதீனத்தில் உண்டான திட்டம் என்பதையும் மறந்து விட வேண்டாம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard