kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: daily manna 16/05/09


Senior Member

Status: Offline
Posts: 107
Date:
daily manna 16/05/09


" பிற இனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய்.
ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்." ஏசாயா, 62:2,3

ஒருபோதும் மறந்துவிடக்கூடாது, நாம் ப‌ரிசுத்த ஜனம் என்பதை,  அதுமட்டுமல்ல பெயர்க்கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படும் ஒரு பெரிய கூட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள், ஏன் இந்த உலகத்துக்கடுத்த காரியங்களிலிருந்தும் கூடத்தான்; உயர்ந்த எண்ணங்களுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும், மேலான நோக்கங்களுடனும், அவருடைய கிருபையைப்பெற்று தேவ இரகசியத்தின் ஆழத்தைக் கிரகித்துக்கொள்ள நுண்ணறிவு படைத்தவர்களாகவும்; அந்த பழைய இருளான வாழ்க்கையிலிருந்து பிரகாசமான ஒளியினிடத்துக்கு அழிக்கப்பட்டிருக்கிறோம். இவ்வாறாக உலகத்திலிருந்தும், பெரும்பாலான இந்த உலகத்துக்கடுத்த காரியங்களிலே பங்கு கொள்ளும் பெயர்க் கிறிஸ்தவர்களிடமிருந்தும்; நாம் வேறுபட்டிருப்பதும், அவர்கள் நம்மோடு இசைவில்லாமல் இருப்பதும் ஆச்சரியமல்லவே! இவர்கள் நம்மை எதிர்ப்பவர்களாகவும், நம்மைப் புறக்கணித்தவர்களாகவும் இருப்பர்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard