" உம் பொருட்டு நாள்தோறும் கொல்லப்படுகின்றோம்; வெட்டுவதற்கென நிறுத்தப்படும் ஆடுகளெனக் கருதப்படுகின்றோம்." சங்கீதம், 44:22
நாம் எல்லோரும் நினைவில் கொள்ளவேண்டியது என்னவென்றால், நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே செலுத்த வேண்டிய பலி ஒன்றுள்ளது; அதனை நாள்தோறும், அவரைக்கொண்டும், அவருக்குள்ளும், நமக்குக் கிடைக்கும் வாய்ப்புக்களுக்குத் தக்கதாக சிறப்பான முறையில் செலுத்த வேண்டும். ஒரு வேளை அந்த பலிகள் சிறு சிறு தியாகங்களால் பிணைக்கப்பட்டதாக இருக்கலாம் அல்லது ஒரு பலியென்றே குறிப்பிட்டு சொல்ல முடியாதபடி அற்பமாக இருக்கலாம். ஆனால் இவைகள் எல்லாம் நாம் அவருடைய குடும்பத்தில் இணைக்கப்பட்ட பொழுது செய்த தியாகத்தோடு இணைந்து முற்றுப்பெறும்.
நாம் நமது சித்தத்தையும், நமது எல்லாவற்றையும் அவருக்கென்று ஒப்புக்கொடுத்த பின்பு, எந்தச் சிறு காரியத்திலும் பின்னடைந்து விடாமல், தேவனுக்குகந்த பலி என அறிந்திருந்தும் அதைச் செலுத்தத் தவறினால்; நாம் தக்க வைத்துக் கொண்ட காரியத்தினிமித்தம் குற்றப்ப்டுத்தப்படுவோம்.