" அவரே நமக்கு வாக்குறுதி அளித்துள்ளார், அவ்வாக்குறுதி நிலைவாழ்வு பற்றியதாகும்." 1 யோவான், 2:25
தேவனின் கிருபை பொருந்திய வாக்குத்தத்தங்களைப் பெற்றுக்கொள்ள நாம் செய்ய வேண்டிய காரியம் ஒன்றுண்டு என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
இவ்வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்ப்போமேயானால் அவர் நமக்கு நிச்சயமாகத் தருவது நமக்கு தேவையான ஆகாரமும், தண்ணீருமே, ஆனாலும் இதைப் பெற்றுக்கொள்ள நாம் எத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை அவர் குறிப்பாக உணர்த்துகிறார்.
மேலும் அவர் நமக்கு அவருடைய இராஜ்யத்தில் ஒரு பங்கைத் தருவேன் என வாக்களித்திருக்கிறார், ஆனால் நாம் நம் அழைப்பையும், தெரிந்து கொள்ளுதலையும் உறுதியாக்கிக்கொள்ள வேண்டும்.
நமக்கு அருளியுள்ள எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்ற தேவன் உண்மையும், நீதியும் உள்ளவராக இருக்கிறார் ஆனால் நாம் நம் பங்காக அந்த விசுவாசத்தை நமது கிரியைகளிலே காண்பித்து எல்லா நீதியிலும் அவருக்கு ஒத்துழைப்போமா?