kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருத்துவம் ஒரு இரகசியம்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
திருத்துவம் ஒரு இரகசியம்!!


அன்புள்ள தள நண்பர்களே, சத்தியத்தை நேசிப்பவர்களே,

     "வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் முலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை" என்கிறார் பவுல் 1 கொரி. 8:5-7ல்.

   உண்மை அதான் நண்பர்களே, இந்த அறிவு பவுல் காலத்தில் மாத்திரம் இல்லை, இப்பொழுது இந்த அறிவு இல்லாமை மிகவும் பெருகி போய் இருக்கிறது என்பதை நாம் இன்றைய சபைகள் இயேசு கிறிஸ்து தான் யேகோவா தேவன் என்று பிரசங்கிப்பவர்களினால் அறிந்துக்கொள்ளலாம்.

   மேலே உள்ள இந்த வசனத்தை அடிப்படையாக கிறிஸ்துத்தை அறியாத ஒரு மனிதன் வாசித்தால், இந்த வசனம் இரு வேறு நபர்களை குறிக்கும் வசனம் என்று தெளிவாக சொல்ல இயலும். இந்த அறிவு so called கிறிஸ்தவர்களுக்கு தான் இல்லை அதினால் தான் இன்று பெரும்பாலுமான (அனைத்து) சபைகளும் இயேசு தான் பிதா என்றும் பிதா தான் இயேசு என்றும் பிதற்றி (Sorry) வருகிறார்கள்.

     இந்த திருத்தவாதிகள் தான் எங்கு இருந்து இப்படி ஒரு அபத்தத்தை பிரசங்கிக்கிறார்கள் என்றே புரியவில்லை. கேட்டால் திருத்துவம் என்பது ஒரு இரகசியம் என்கிறார்கள். முதலாவது திருத்துவம், அல்லது திரியேகத்துவம் என்பதே வேதத்தில் இல்லாத வார்த்தைகள், அப்புறம் எப்படி இது இரகசியம் என்பது தான் இரகசியமாக இருக்கிறது.

    சிந்திப்போம், சத்தியத்தில் வளர்வோம். மெய் தேவனை அறிந்துக்கொள்வோம். இந்த விவாதத்தை விருப்பம் உள்ளவர்கள் தொடரலாமே.   



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர் ஒரு நல்ல கருத்தை முன்வைத்துள்ளார்கள்.

நானும் இது சம்பந்தமாக பல விசுவாசிகளிடம் மற்றும் பாஸ்டர்களிடம் விசாரித்து பார்த்துவிட்டேன். அனேகர் பிதாவாகிய தேவன் வேறு கர்த்தராகிய இயேசு கிறிஸ்த்து வேறு என்பதை ஒப்புக்கொள்கின்றனர்.

சில புரியாத கிறிஸ்த்தவர்கள் "என்னை காண்கிறவன்  பிதாவை காண்கிறான்"  என்ற இயேசுவின் வார்த்தையை மட்டும் பிடித்துக்கொண்டு இயேசுதான் பிதா என்று விதாண்டவாதம் பண்ணுகின்றனர்.

இயேசுதான் தேவன் என்றால் "தேவனை ஒருவரும் ஒருகாலும் கண்டதில்லை"  என்ற வார்த்தை எப்படி உண்மையாக முடியும்?
    
காணகூடாத பிதாவாகிய தேவனின் தர்சொரூபம்தான் இயேசு என்று நான்  கருதுகிறேன். அதாவது பிதாவாகிய தேவனை இயேசு வெளிப்படுத்தினார்!   

   
மற்றபடி திரித்துவம் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது என்று எனக்கும் தெரியவில்லை. வேதத்தில் இல்லாத வார்த்தைகள் பற்றி விவாதிப்பது வீண் என்றே கருதுகிறேன்! 

 



-- Edited by RAAJ on Wednesday 6th of May 2009 08:25:08 AM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நன்றி சகோதரரே, தங்களின் கருத்துக்கு நன்றி. சரியானதையே பதிந்திருக்கிறீர்கள் (நீண்ட நாட்களுக்கு பிறகு பதிய வந்து இருக்கிறீர்கள், வாழ்த்தி வரவேற்க்கிறோம்). நான் ஒரே சபையை சேர்ந்த இரு வேதாகம ஆசிரியர்களை சந்தித்தேன். அதில் ஒரு ஆசிரியர் சொல்லுகிறார், "இயேசு கிறிஸ்துவை யேகோவா என்று விசுவாசிப்பவனே (அறிக்கைசெய்பவனே) கிறிஸ்துவன்". அதாவது இந்த வேத ஆசிரியரின் பார்வையில் இயேசு தான் யேகோவா (ஐயகோ, வேதம் இப்படி சொல்லுவதில்லை). மற்ற ஆசிரியரோ, இயேசு வேறு யேகோவா வேறு, ஆனால் இருவரும் ஒரே இயல்புடையவர்களாம். அதாவது ஒரே சபையை சேர்ந்த இரு வேத ஆசிரியர்களின் கருத்து தான் இது. சாரி, நான் யாரையும் காயம்படுத்த இப்படி எழுதவில்லை, ஆனால் இது தான் உண்மை.

    திருத்துவம் என்றால், மூன்று நபர்கள், ஒரே இயல்புடையவர்களாம், திரியேகத்துவம் என்றால், ஒரே தேவன், மூன்று பரிமானங்கள் உள்ளவர்களாம் (!!). இந்த திருத்தவ வாதிகளே தங்களின் கருத்துக்களில் ஒன்று பட முடியவில்லையே. ஏன் தெரியுமா, வேதத்திற்கு புறம்பான ஒரு விஷயம் சத்தியம் என்று நிருபிக்க முடியாததால் தான். ஆகவே தான் மற்றவர்களை குழப்ப, இந்த திருத்துவம் என்பது ஒரு இரகசியம் (?!) என்றும், இதை எளிதாக புரிந்துக்கொள்ள முடியாது என்றும் போக்கு சொல்லுவார்கள்.

    ஒருவர் தருகிறார், ஒருவர் பெற்றுக்கொள்கிறார் என்றால் எப்படி இருவரும் ஒரே இயல்புடையவர்களாக இருக்க முடியும். யேகோவா தேவன் மரிக்க முடியாது என்று வேதம் கூறுகிறது, ஆனால் இயேசு கிறிஸ்துவோ மரித்தார் என்று அவரே சொல்லுகிறார். எப்படி ஒன்றாக முடியும்? இந்த திருத்துவவாதிகள் மரிக்க முடியாத தேவன் தான் இயேசு என்று வந்து மரித்தார் என்று சொல்லி தேவத்துவத்தை அசிங்கம் படுத்தி, தேவதூஷனம் செய்கிறார்கள் என்பதை இவர்களுக்கு யார் தான் விளக்க முடியும். சாவாமை உள்ள தேவனை மரித்தார் என்று சொல்லுவது எவ்வுளவு அபத்தம் என்பதை இவர்கள் உணர்ந்துக்கொள்வதில்லை. இயேசு கிறிஸ்துவை பற்றி சொல்லும் போது, அவர் மரித்தோரிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டார், உயர்த்தப்பட்டார், சகல அதிகாரங்களும் கொடுக்கப்பட்டார் என்கிறது வேதம், அப்படி என்றால், இவைகளை எல்லாம் இயேசு கிறிஸ்து பெற்று கொண்டார் என்றால், யார் இதை எல்லாம் கொடுத்தது என்பதை இந்த திருத்துவவாதிகள் யோசிக்கவே மாட்டார்களா? இயேசு கிறிஸ்து தான் யேகோவா என்றால், எப்படி அவரே கொடுத்து அவரே பெற்றுக்கொள்ள முடியும்.

தொடரும்.....



-- Edited by bereans on Wednesday 6th of May 2009 03:07:33 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard