" நீங்கள் ஊனியல்புக்குஏற்ப வாழ்ந்தால் சாகத்தான் போகிறீர்கள்; ஆனால், தூய ஆவியின் துணையால், உடலின் தீச் செயல்களைச் சாகடித்தால், நீங்கள் வாழ்வீர்கள்." ரோமர், 8:13
நாம் தேவனோடு கொண்டிருக்கும் உறவில் நிலைத்திருக்க நிபந்தனை என்னவென்றால், இந்த நம் மாமிச சரீரத்தின் புலன்களை நிச்சயமாக கட்டுப்படுத்தி, முதலாம் உயிர்த்தெழுதலின் மகிமைக்கு பாத்திரராக இருக்க; மாம்சீகத்தைச் சார்ந்திருப்பதை அடக்கி, அந்த எண்ணங்களைச் சாகடித்து, சிலுவையில் அறைந்து, நம் ஆண்டவரைப் பின்பற்றும் சேவையில் இப்படிக் கொத்த எண்ணங்களில் ஈடுபடுத்துவோமாக.
இவ்வாறாக நாம் சரீரத்தின் கிரியைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதையும், இந்த பலவீனமான மாமிச கிரியைகளுக்கு எதிராக செயல்படுவதைக் குறித்துத்தான் ஆதி அப்போஸ்தலர்கள் நம்மிலிருக்கும் போர் செய்கிற இச்சை என்றும்; மாமிசம், ஆவிக்கு விரோதமாகவும்; ஆவி மமிசத்துக்கு விரோதமாகவும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக இருப்பதினால் போராடுகிறது என்றனர். இந்தப் போராட்டம் நம் வாழ்க்கையின் இறுதிவரை நீடிக்கும்.
நாம் மனம் பொருந்தி, இந்த மாமிச பலவீனத்துக்கு எதிராகத் தொடர்ந்து, நம்மால் இயன்ற வரை போராடினால், நம்மை மீட்டுக் கொண்டவரின் புண்ணியத்தினால் நாம் வெற்றி சிறந்தோம் என நம் ஆண்டவர் நம்மைச் சேர்த்துக் கொள்வார்."