"மனிதர் பார்ப்பது போல் நான் பார்ப்பதில்லை; மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்." 1 சாமுவேல், 16:7
நமது உள்ளத்தின் விருப்பங்களைப் பொறுத்தே தேவன் நம்மை நிதானிக்கிறார் என்பதைக் கவனிக்காமல் விட்டுவிட்டாலோ, நாம் நம்மைக்குறித்தும், தேவன் நம்மை எவ்வாறு மதிப்பிடுகிறார் என்று மாம்சீகத்தில் யோசித்தாலோ அந்த விகிதப்படியே நாம் இருளுக்குள்ளும், குழப்பத்திற்குள்ளும், ஏமாற்றத்திற்குள்ளும் கடந்து செல்பவர்களாகக் காணப்படுவோம்.
ஆனால் அதற்கு மாறாக ஒரு காரியத்தை நாம் நினைவில் கொள்வோமாக. அதாவது நமது மன விருப்பங்களும், ஆவியின் யோசனைகளும் அவைகளின் நீதியின் நிமித்தமாக உயிருள்ளதென எண்ணப்படும், ஏனென்றால் அது தேவ சிந்தனையோடு பொருந்தியிருப்பதினாலேயே.
ஆகையினால் நாம் ஒருபோதும் இந்த விருப்பங்களைக் குறித்தோ அல்லது நமது வாழ்க்கையை அது நடத்திசெல்லும் நோக்கங்களைக் குறித்தோ அசதியாய் இருக்கக்கூடாது. நாம் நினைவில் கொள்ளவேண்டியது என்னவெனில் இதில் நாம் தளர்ச்சியுற்றால் அதே விகிதாச்சாரப்படி ஆவிக்குரிய வாழ்விலும் தளர்ச்சியுறுவோம்.
நேர்மையானவைகளையே நாம் செயல்படுத்த முடியும் பொழுது, பரிபூரணமும், நேர்மையுமான விருப்பங்களே தேவனால் இயேசு கிறிஸ்துவுக்குள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதே நாம் கண்டறிந்த உண்மை.