" மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கல்ல, தொண்டு ஆற்றுவதற்கும், பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்." மத்தேயு, 20:28
நம்முடைய சமர்ப்பணம்/அர்ப்பணிப்பு தேவனுக்கென்றிருந்தால், புதிய சிருஷ்டிகளாக்கப்பட்ட நம்முடைய ஒவ்வொரு தியாகங்களும், நமது நியாயமான உரிமைகளும், விருப்பங்களும், கணவர் மீதோ அல்லது குழந்தைகள் மீதோ, தாய் தந்தை மீதோ, அயலகத்தார், சினேகிதர் மீதோ, கிறிஸ்துவுக்குள் சகோதரர்கள் மீதோ இருக்கும் பட்சத்தில் அவை யாவும் தேவனுக்கென்றே செய்ததாகக் கணக்கிடப்படும்.
ஆனால் மாறாக இவை யாவும் வேறு நோக்கத்தோடு செய்யும் பட்சத்தில், நியாயமற்ற செய்கைகள், அர்ப்பணிப்பின்றி தனிப்பட்ட நபரை மனதில் கொண்டு செய்யும் காரியங்கள் தேவனுக்கேற்ற பலியாகாது ஆசாரியனும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டான்.