kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேத‌ச் சுருக்க‌ம்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
வேத‌ச் சுருக்க‌ம்


தேவன் வானங்களையும் பூமியையும் சிருஷ்ட்டித்தார், அதில் அவரின் அனந்த ஞானம் வெளிப்படுகிறது. அவரின் அன்பின் மிகுதியால் தேவ சாயல் (தேவன் பிரபஞ்சத்தை படைத்து ஆளுகிறது போல் மனிதன் தேவனால் சிருஷ்ட்டிக்கப்பட்ட பூமியை ஆளுகை செய்வது)மற்றும் ரூபத்தில் (ஞானம், வல்லமை, நீதி, அன்பு) மனிதனை படைத்து அவன் என்றென்றும் இந்த பூமியில் ஆளுகை செய்து ஆசீர்வாதமாக வாழும்படி சித்தம் கொண்டார். மனிதன் தன் அறிவினால் தேவ கட்டளையை மீறீ பாவம் செய்தான். தேவன் அவனுக்கு மரணத்தை தண்டனையாக கொடுத்தார். இதில் தேவனின் நீதி வெளிப்படுகிறது. மனிதனுக்கு கிடைத்த அந்த மரணத் தண்டனையிலிருந்து மீட்டெடுக்கும் படியாக தேவன் தன் ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவை இந்த பூமிக்கு அனுப்பினார். இதில் தேவ அன்பு வெளிப்படுகிறது. அவரின் குமாரனான இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்துதலினால் மீட்கப்படுகிறோம் என்ப‌தை விசுவசித்து இயேசு கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமாக வேண்டி, அவரை போல் பாடுகளின் மத்தியில் இருப்போருக்கு தேவன், இயேசு கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளியாக ஆகும் கிருபை செய்துள்ளார். அவரை ஏற்காத அனைவரும் இந்த பூமியில் மரித்து உயிர்த்து எழுவார்கள், அப்பொழுது இந்த உன்னதமான சத்தியத்தை அறிந்துக்கொள்வார்கள். இதை தான் 1 தீமோ 2:3,4,5 சொல்லுகிறது. இதை ஏற்ற காலங்களில் தேவன் விளங்கசெய்துவருகிறார் என்கிறாது வசனம். கிறிஸ்துவின் சரீரமாகிய சபை இப்பொழுது இந்த சத்தியத்தை ஏற்றுகொள்ளுகிறது, மீதமானவர்கள், இந்த  சத்தியத்தை தேவனின் இராஜ்ஜியத்தில் கற்றுக்கொள்ளுவார்கள் என்கிறது வேதம். இது தான் வேதத்தின் சுருக்கம்.

     ஆதாம் பாவம் செய்தவுடன் தேவன் இயேசு கிறிஸ்துவை அனுப்பிவைத்திருக்கலாம். ஆனால் ஆதாமின் சந்ததி இந்த பாவத்தின் விளைவுகளை அறிய வேண்டியது தேவ சித்தமாக இருக்கிறது. ஆகவே அவர் இந்த பாடுகளையும் தீமைகளையும் இந்த ஆதாமின் சந்ததியார் அறியும்படி அனுமதித்தார். அதற்கு பிறகு காலம் நிறைவேறின போது தேவ குமாரன் கன்னியின் வயிற்றிலிருந்து பிறாந்தார் என்கிறது வேதம். அவர் இரத்தம் சிந்துதலுக்குப்பிறகு சபை அழைக்கப்படுகிறது. அந்த அழைக்கப்பட்ட சபையிலிருந்து தேர்வு நடந்து தெரிந்துகொள்ளப்பட்ட சிலர் அவரின் குமாரனின் சாயலாகும்படி தேவன் முன்குறித்து வைத்திருக்கிறார். இலட்சக் கணக்கானோர் எகிப்த்திலிருந்து மோசேயின் தலைமையில் கிளம்பியிருந்தாலும் அந்த கானானிற்கு சென்று அடைந்தவர்கள் இருவர் மாத்திரமே. அந்த இருவர் தான் பரலோகம் செல்லும் இரு கூட்டத்தாருக்கு நிழலாக இருக்கிறார்கள். ஒரு கூட்டம் கிறிஸ்துவின் சபையாக அவரோடு ஆளுகை செய்யும் படியாகவும், மற்றும் ஒரு திரள் கூட்டம் தேவனை சேவிக்கும் படியாகவும் செல்ல இருக்கிறது. மீதியான அனைவரும் இந்த பூமியில் வந்து நீதியை கற்றுக்கொண்டு, தேவன் மனிதனைப் படைத்ததின் நோக்கத்தை சபையின் உதவியுடன் நிறைவேற்றுவர்கள். இந்த பூமி என்றென்றும் நிலைத்து, இந்த மனிதர்களைத் தாங்கி இருக்கும்படியே உருவாக்கப்பட்டிருக்கிறது.

  

இன்னும் தொட‌ரும்........



-- Edited by soulsolution on Monday 18th of July 2011 06:23:00 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//தேவன் வானங்களையும் பூமியையும் சிருஷ்ட்டித்தார், அதில் அவரின் அனந்த ஞானம் வெளிப்படுகிறது. அவரின் அன்பின் மிகுதியால் தேவ சாயல் (தேவன் பிரபஞ்சத்தை படைத்து ஆளுகிறது போல் மனிதன் தேவனால் சிருஷ்ட்டிக்கப்பட்ட பூமியை ஆளுகை செய்வது)மற்றும் ரூபத்தில் (ஞானம், வல்லமை, நீதி, அன்பு) மனிதனை படைத்து அவன் என்றென்றும் இந்த பூமியில் ஆளுகை செய்து ஆசீர்வாதமாக வாழும்படி சித்தம் கொண்டார். மனிதன் தன் அறிவினால் தேவ கட்டளையை மீறீ பாவம் செய்தான். தேவன் அவனுக்கு மரணத்தை தண்டனையாக கொடுத்தார். இதில் தேவனின் நீதி வெளிப்படுகிறது. மனிதனுக்கு கிடைத்த அந்த மரணத் தண்டனையிலிருந்து மீட்டெடுக்கும் படியாக தேவன் தன் ஒரே குமாரனான இயேசு கிறிஸ்துவை இந்த பூமிக்கு அனுப்பினார். இதில் தேவ அன்பு வெளிப்படுகிறது. அவரின் குமாரனான இயேசு கிறிஸ்துவின் இர்த்தம் சிந்துதலினால் மீட்கப்படுகிறோம் என்கிறதை விசுவாசித்து இயேசு கிறிஸ்துவின் சாயலாக மறுரூபமாக வேண்டி, அவரை போல் பாடுகளின் மத்தியில் இருப்போருக்கு தேவன், இயேசு கிறிஸ்துவின் உடன் சுதந்தரவாளியாக ஆகும் கிருபை செய்துள்ளார். அவரை ஏற்காத அனைவரும் இந்த பூமியில் மரித்து உயிர்த்து எழுவார்கள், அப்பொழுது இந்த உன்னதமான சத்தியத்தை அறிந்துக்கொள்வார்கள். இதை தான் 1 தீமோ 2:3,4,5 சொல்லுகிறது. இதை ஏற்ற காலங்களில் தேவன் விளங்கசெய்துவருகிறார் என்கிறாது வசனம். கிறிஸ்துவின் சரீரமாகிய சபை இப்பொழுது இந்த சத்தியத்தை ஏற்றுகொள்ளுகிறாது, மீதமானவர்கள், இந்த  சத்தியத்தை தேவனின் இராஜியத்தில் கற்றுக்கொள்ளுவார்கள் என்கிறது வேதம். இது தான் வேதத்தின் சுருக்கம்.

    ஆதாம் பாவம் செய்தவுடன் தேவன் இயேசு கிறிஸ்துவை அனுப்பிவைத்திருக்கலாம். ஆனால் ஆதாமின் சந்ததி இந்த பாவத்தின் விளைவுகளை அறிய வேண்டியது தேவ சித்தமாக இருக்கிறது. ஆகவே அவர் இந்த பாடுகளையும் தீமைகளையும் இந்த ஆதாமின் சந்ததியார் அறியும்படி அனுமதித்தார். அதற்கு பிறகு காலம் நிறைவேறின போது தேவ குமாரன் கன்னியின் வயிற்றிலிருந்து பிறந்தார் என்கிறது வேதம். அவர் இரத்தம் சிந்துதலுக்குப் பிறகு சபை அழைக்கப்படுகிறது. அந்த அழைக்கப்பட்ட சபையிலிருந்து தேர்வு நடந்து தெரிந்துக்கொள்ளப்பட்டு சிலர் அவரின் குமாரனின் சாயலாகும்படி தேவன் வைத்திருக்கிறார். எப்படி இலட்சக் கணக்கானோர் எகிப்திலிருந்து மோசேயின் தலைமையில் கிளம்பியிருந்தாலும் அந்த கானானிற்கு சென்று அடைந்தவர்கள் இருவர் மாத்திரமே. அந்த இருவர் தான் பரலோகம் செல்லும் இரு கூட்டத்தாருக்கு நிழலாக இருக்கிறார்கள். ஒரு கூட்டம் கிறிஸ்துவின் சபையாக அவரோடு ஆளுகை செய்யும் படியாகவும், மற்றும் ஒரு திரள் கூட்டம் தேவனை சேவிக்கும் படியாகவும் செல்ல இருக்கிறது. மீதியான அனைவரும் இந்த பூமியில் வந்து நீதியை கற்றுக்கொண்டு, தேவன் மனிதனை படைத்ததின் நோக்கத்தை சபையின் உதவியுடன் நிறைவேற்றுவார்கள். இந்த பூமி என்றென்றும் நிலைத்து, இந்த மனிதர்களை தாங்கி இருக்கும்படியே உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் தொட‌ரும்........//

ஏப்ரல் 2009-ல் சகோ.பெரியன்ஸ் இப்பதிவைப் பதித்து, “இன்னும் தொடரும்” எனச் சொல்லி முடித்துள்ளார். அவர் சொன்னபடியே இத்திரியில் பதிவைத் தரும்படி வேண்டுகிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard