பரிசுத்த "ஆவியானவர்" என்று வேதம் வெளிப்படுத்தும் ஆவியானவர் பற்றிய செய்திகளை இந்த தொடுப்பில் விவாதிக்கலாம் என்று நான் கருதுகிறேன்.
ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார்; (அப் 8:29)
பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார். (அப்-10:19)
நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்(அப் 11:!2)
போன்ற வசனங்கள் ஆவியானவரை ஒரு மனிதனுக்கு ஒப்பிட்டு "சொன்னார்" " "கட்டளையிட்டார்" என்று ஒருமனிதனுக்கு ஆலோசனை கொடுத்து நடத்தும் தன்மையுடயவராக காண்பிக்கிறது.
மேலும் "பரிசுத்த ஆவி" என்னும் வல்லமை வேறு "ஆவியானவர்" வேறு என்பதை கீழ்க்கண்ட வசனம் தெளிவாக சொல்கிறது
இங்கு பரிசுத்த ஆவி என்னும் வல்லமையால் நிரப்பபடுகின்றனர் பிறகு "ஆவியானவர்" கொடுத்த வரத்தல் வேறு பாஷை பேசுகின்றனர் இதில் வல்லமை வேறு ஆவியானவர் வேறு என்று பிரிக்கப்படுகிறது.
இந்நிலையில் பரிசுத்த ஆவி என்பது வெறும் வல்லமை மட்டும்தான் என்ற கூற்று சரியானதா?
The word "spirit" in the Old Testament is a translation of the Hebrew word ruach", the root meaning of which is "wind." In the New Testament, also, the word "spirit" comes from a root meaning "wind"- the Greek word "pneuma." These two words are also translated "breath", "mind", "life", meaning an invisible power or influence. Unfortunately these words were incorrectly translated "Ghost" in the King James Bible. In the American Standard Version the term "Holy Ghost" does not appear. The holy Spirit is described in the Bible as "The Spirit of God," "The Spirit of Truth," "The Spirit of Love," "The Spirit of a Sound Mind," "The Spirit of Christ," "The Spirit of Holiness," etc.
The title "holy Spirit" describes the mind of God - His power or sanctifying influence. "The Spirit of the Lord is upon me, because he hath anointed me to preach the gospel to the poor."-Luke 4:18
How Does The Holy Spirit Operate?
The prophet Isaiah, in speaking prophetically of Jesus, describes the operation of God's holy Spirit. "And the spirit of the LORD shall rest upon him, the spirit of wisdom and understanding, the spirit of counsel and might, the spirit of knowledge and of the fear (reverence) of the LORD."-Isaiah 11:2
Our Lord Jesus received wisdom and power by an outpouring of the holy Spirit at his baptism (Matthew 3:16), and his faithful followers desire to have the mind or spirit of Christ. "Let this mind be in you, which was also in Christ Jesus&"- Philippians 2:5
"For who hath known the mind of the Lord, that he may instruct him? But we have the mind of Christ." -1 Corinthians 2:16
"Now if any man have not the Spirit of Christ, he is none of his."-Romans 8:9
Another use of the word spirit is in the sense of generative power, as in Genesis 1:2: "And the Spirit of God moved upon the face of the waters." The spirit or power of God, His energy, rendered the waters fruitful, prolific.
Similarly, the "Holy men of God (prophets) spake and wrote as they were moved by the holy Spirit." (2 Peter 1:21 - Diaglott translation) The holy Spirit of God influenced their minds, causing them to bring forth thoughts which God wished to have expressed.
Also, the skilled workmen who were selected by Moses to build the Tabernacle, were brought under the influence of the divine power to energize their natural faculties without affecting them in any moral sense. "And Moses said unto the children of Israel, See, the LORD hath called by name Bezaleel & And he hath filled him with the spirit of God, in wisdom, in understanding, and in knowledge, and in all manner of workmanship them hath he filled with wisdom of heart, to work all manner of work & "-Exodus 35:31-35
In Numbers 11:17-25 we are told that Jehovah endowed Moses and the elders with His spirit for judging Israel's affairs. In the same manner God's spirit was with the kings of Israel, so long as they were loyal to him. (1 Samuel 11:6) Notice that in the case of Saul (1 Samuel 16:13,14), because of unfaithfulness, this spirit of wisdom departed from him and was conferred upon David.
Holy Spirit Not Yet Given However, no manifestation of the spirit of God, prior to the first advent of Jesus, was the same as the manifestation and operation of God's spirit upon Jesus-from his baptism to his crucifixion, and upon the Church of Christ at Pentecost until now. "The Holy Spirit was not yet given (except to Jesus) because Jesus was not yet glorified."-John 7:39
Gifts Of The Spirit
1 Corinthians 12:4-11 lists some of the gifts of the spirit: "Now there are diversities of gifts, but the same Spirit." These gifts were given to the early Church by the holy Spirit, but there is a difference between God's power, His spirit, and these gifts. The Apostle Paul explained in 1 Corinthians 13:8 that a time would come when some of these gifts (prophecy and tongues) would cease. These gifts were necessary at the inauguration of the Church, but became unnecessary after the Church had been established.
Now, instead of having such gifts miraculously bestowed, the operation of God's spirit or power, is upon the minds of those who have consecrated their lives to serve the Lord. The Apostle Paul urges the Church to develop spiritual gifts - "But the fruit of the Spirit is love, joy, peace, longsuffering, gentleness, goodness, faith, meekness, temperance&"-Galatians 5:22,23
This same holy Spirit or influence of God will operate during the establishment of His Kingdom on earth to bring the world into harmony and unity with the principles of righteousness.
SUMMARY
The Spirit of God, or holy Spirit is the divine will, influence or power of God exercised in many ways, using various agencies to accomplish various results: In the creation of the world. To influence the servants of the past. In the development of the Church. To bring the world of mankind back into harmony with God according to His plan of salvation.
-- Edited by bereans on Sunday 22nd of March 2009 01:12:26 AM
'ஆவியானவர்' என்று பரிசுத்த ஆவியைத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது என் எண்ணம். ஏனென்றால் வேதம் முழுவதும் ஒன்றான மெய்த்தேவனையும் அவரது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையும் பற்றித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. குமாரனாகிய 'கிறிஸ்து' வருவதைக்குறித்து (முதல் மற்றும் இரண்டாம் வருகை) ஏராளமான தீர்க்கதரிசனங்கள் இருப்பது நாம் அறிந்ததே. அதே சமயம் 'திரித்துவத்தின்' இந்த மூன்றாம் நபரது 'வருகை'யைக் குறித்து எதுவுமே குறிப்பிடப்படவில்லை என்பது வேதனைக்குரியது.
ஆவியானவர் இயேசுகிறிஸ்துவை வனாந்திரத்துக்கு கொண்டுபோனார்(லூக்4:1) என்று வாசிக்கிறோம். ஆக இயேசுகிறிச்துவின் காலத்தில் அவர் 'இங்குதான்' இருந்திருக்கிறார். அப்படியிருக்க நான் போய் ஒரு தேற்றரவாளனை அனுப்புவேன் என்று கிறிஸ்துவானவர் ஏன் சொல்லவேண்டும். மேலும் அப்2:4 ல் சகோதரர் ராஜ் குறிப்பிட்ட இந்த வசனத்தை சற்று ஆராயலாம். இந்த வசனம் ஆங்கில கிங் ஜேம்ஸ் பதிப்பில் கீழ்கண்டபடி இருக்கிறது.(நாம் வாசிக்கும் தமிழ் "பரிசுத்த வேதாகமம்" முழுக்க முழுக்க இதிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டதுதான்!)
"And they were all filled with the Holy Spirit and began to speak with other tongues, as the Spirit gave them utterance"- Acts2:4
இதனை அப்படியே தமிழாக்கம் செய்தால் முதலில் வருகிற Holy Spirit "பரிசுத்த ஆவி" என்றால் மீண்டும் வரும் Spirit ம் வெறும் "ஆவி" தான், இதை தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் "ஆவியானவர்" என்று மாற்றியுள்ளனர். அப்படி ஆவியானவர் என்று மொழிபெயர்த்தால் முதலில் வரும் Holy Spirit ஐயும் "பரிசுத்த ஆவியானவர்" என்றுதானே இருக்கவேண்டும்? விடாப்பிடியாக ஒரே மொழிபெயர்ப்பை மாத்திரம் சார்ந்திருந்தால் ஏற்படும் குழப்பத்துக்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுதான். வேதத்தில் "மூவர்" என்ற பதம் எங்குமே இல்லை. "மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்" என்ற சர்ச்சைக்குரிய 1யோவான்5:7 வசனம் தமிழ் 'பரிசுத்த வேதாகம'த்திலும் Bracket ல் குறிப்பிடப்பட்டுள்ளதை கவனிக்க. KJV தவிர மற்ற அனேக வேதாகமங்களில் இந்த வசனமே இல்லை!
பிதாவாகிய தேவனுக்கு 'யேகோவா' என்ற நாமம், குமாரனாகிய கிறிஸ்துவுக்கு 'இயேசு' என்ற நாமம் உண்டு ஆனால் பாவம் இந்த மூன்றாம் தேவனுக்கு மட்டும் பெயரே கிடையாது! என்ன கொடுமை.
மேலும் "பாரதத்தாய்" என்று நமது தேசத்தையும், "தமிழ்த்தாய்" என்று நமது மொழியையும் அழைக்கிறோம், இவைகள் நபர்கள் அல்லவே? அதுபோலவே தேவ வல்லமையையும் ஒரு சில இடங்களில் "ஆவியானவர்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
பரிசுத்த ஆவியைத்தான் துக்கப்படுத்தக் கூடாது, "பரிசுத்த ஆவியானவரை" அல்ல என்பதை நினைவில் கொள்க.
மேலும் விவாதிக்கலாம்!
-- Edited by soulsolution on Saturday 3rd of October 2009 11:53:51 AM
பரிசுத்த ஆவி என்றொரு வல்லமை இருக்கிறது, அதே நேரத்தில் ஆவியானவர் என்றொரு நபரும் இருப்பதாக வேதம் சொல்கிறது.
எனது பதிவில் முதலில் குறிப்பிட்டுள்ள நான்கு வசனங்களில் ஆவியானவர் பிலிப்புடனும் பேதுருடனும் பேசி சில காரியங்களை செய்ய கட்டளையிட்டதாக கூறப்படுகிறது அதற்க்கு எந்த ஒரு சரியான விளக்கமும் இல்லை.
ஆவி என்பது வெறும் வல்லமையாக இருந்தால் அது பிறருக்கு பேசி கட்டளைஇடுமா? அல்லது நீ இப்படி செய் அப்படி செய் என்று போதிக்குமா?
நான் ஆவியானவரை மூன்றவதாக ஒரு தேவன் என்று நிரூபிக்க வரவில்லை ஆனால் தேவனிடமிருந்து வந்த ஆவியானவர் என்றொரு வழிநடத்தும் வல்லமை ஓன்று இருக்கிறது என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது என்று அறிவுறுத்த விரும்புகிறேன்.
அவர் பிறருடன் பேசுகிறார், நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்(அப் 11:!2)
ஜெபத்தில் நமக்கு உதவுகிறார், ரோமர் 8:26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ளவேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.
தேவையான நேரத்தில் வழி நடத்துகிறார், அப்போஸ்தலர் 11:12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார்
உண்மைகளை வெளிப்படுத்துகிறார்: அப்போஸ்தலர் 11:28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடியபஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்
அப்போஸ்தலர் 21:11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான்.
கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு எப்படி கடவுள் இல்லையோ அதுபோல் அவரை அறியாதவர்கள் அவரை இல்லை என்றுதான் சொல்வார்கள். ஆவியானவரை உணரத்தான் முடியும் பிறருக்கு காண்பிக்க முடியாது. நீங்கள் அறியவில்லை என்பதற்காக அப்படி யாரும் இல்லை என்று சொல்லமுடியாது .
ஆவியானவரை சாட்சியாக வைத்துக்கொண்டு ஏமாற்றுபவர்கள் பலர் இருக்கலாம் அதற்காக வேதம் தெளிவாக சொல்லும் "ஆவியானவர்" என்றொரு நபர் இல்லை என்று வாதிடுவது சரியல்ல.
RAAJ WROTE //நான் ஆவியானவரை மூன்றவதாக ஒரு தேவன் என்று நிரூபிக்க வரவில்லை ஆனால் தேவனிடமிருந்து வந்த ஆவியானவர் என்றொரு வழிநடத்தும் வல்லமை ஓன்று இருக்கிறது என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது என்று அறிவுறுத்த விரும்புகிறேன். //
'வழி நடத்தும் வல்லமை ஒன்று இருக்கிறது' என்றுதான் நாங்களும் சொல்கிறோம். 'அதை'த்தான் நீங்கள் ஒரு உருவமில்லாத, பெயரில்லாத, வடிவமில்லாத 'நபர்' என்கிறீர்கள்.
உங்களிடம் என்றைக்காவது பேசியிருக்கிறாரா? வேத்ததில் இவ்வளவு கேள்விகள் வைத்திருக்கிறீர்கள். ஏதாவது ஒரு சந்தேகத்தையாவது உங்களிடம் 'பேசி' பதிலளித்திருக்கிறாரா? இல்லாவிட்டால் அப்படி ஒரு useless 'நபர்' இருந்துதான் என்ன பிரயோஜனம்?
RAAJ WROTE //நான் ஆவியானவரை மூன்றவதாக ஒரு தேவன் என்று நிரூபிக்க வரவில்லை ஆனால் தேவனிடமிருந்து வந்த ஆவியானவர் என்றொரு வழிநடத்தும் வல்லமை ஓன்று இருக்கிறது என்பதை வேதம் தெளிவாக சொல்கிறது என்று அறிவுறுத்த விரும்புகிறேன். //
'வழி நடத்தும் வல்லமை ஒன்று இருக்கிறது' என்றுதான் நாங்களும் சொல்கிறோம். 'அதை'த்தான் நீங்கள் ஒரு உருவமில்லாத, பெயரில்லாத, வடிவமில்லாத 'நபர்' என்கிறீர்கள்.
உங்களிடம் என்றைக்காவது பேசியிருக்கிறாரா? வேத்ததில் இவ்வளவு கேள்விகள் வைத்திருக்கிறீர்கள். ஏதாவது ஒரு சந்தேகத்தையாவது உங்களிடம் 'பேசி' பதிலளித்திருக்கிறாரா? இல்லாவிட்டால் அப்படி ஒரு useless 'நபர்' இருந்துதான் என்ன பிரயோஜனம்?
ஹலோ பிரதர் ஆவியானவரை "USELESS" என்றெல்லாம் பேசாதீர்கள். பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசுபவன் என்றென்றும் மன்னிக்கப்படமாட்டான் என்று இயேசு சொல்லியிருக்கிறார்.
கணினியை பற்றியோ அதன் செயபாட்டை பற்றியோ அறியாதவருக்கு அது ஒரு பயனற்றதுதான் அதை அறிந்தவருக்குதான் தெரியும் அதன் மதிப்பு என்னவென்பது! என் வாழ்க்கையில் ஆவியானவரை நான் உணர்ந்து அவரின் வார்த்தைகள் வழி நடத்துதல் எல்லாவற்றையும் அனுபவிப்பதால்தான் இதை எழுதுகிறேன்.
ஒரு நபரால்தான் கட்டளையிடவோ அல்லது பேசவோ ஆலோசனை சொல்லவோ வழிநடத்தவோ எதிர் காரியங்களை அறிவிக்கவோ துக்கப்படவோ முடியும். வரும் வல்லமயாவ் இதெல்லாம் செய்யமுடியாது, எனவேதான் அவர் ஒரு நபர் என்று முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
நான் வேதத்தின் அடிப்படையில் கேட்டுள்ள கேள்விக்கு மட்டும் சரியான விளக்கம் தாருங்கள்.
ஹலோ ப்ரதர், நீங்கதான் என் கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அவர் (ஆவியானவ்ர்) உங்களோடு 'பேசி' இருக்கிறாரா? இதுதான் கேள்வி. இதற்கு பதில் 'ஆம்' அல்லது 'இல்லை' மட்டுமே. (சும்மா சென்டிமென்டாக எழுதி டென்ஷன் ஆக வேண்டாம். 'பரிசுத்த ஆவிக்கு' விரோதமாக நான் ஒன்றும் சொல்லவில்லையே.)
ஆம் என்றால் கீழ்கண்ட கேள்விகளுக்கு பதில் தரவும்.
1. எதைக் குறித்து பேசினார்?
2. அவர் குரல் கிட்டத்தட்ட எப்படி இருந்தது?
3. போகும்போது சொல்லிவிட்டுப் போனாரா?
4. மீண்டும் எப்போது வருவார்?
5. அவர் உங்களுக்குள்ளேயே வாசம் செய்வதால் எப்போதும் பேசி போரடிக்க மாட்டாரா?
6. அவரிடமே கேட்டு பதில் சொல்லுங்கள் ப்ளீஸ்.
-- Edited by soulsolution on Tuesday 20th of October 2009 09:47:10 AM
வேதத்தில் எழுதப்பட்டிருக்கும் பேதுருவுடனும் பவுலுடனும் ஆவியானவர் என்ன பேசினார் எப்படி உணர்த்தினார் என்பதை சற்று ஆராயுங்கள் அது போதும் எனது அனுபவம் உங்களுக்கு பயன்படாது.
தங்களுடன் வாதிடுவது வீண் என்று அறிந்துகொண்டேன். அதிகம் டென்சன் ஆகிறீர்கள் சென்ஸை பற்றி பேசுகிறீர்கள் ஆவியானவரை USELESS என்று சொல்கிறீர்கள் மேலும் ஏதாவது வார்த்தை வளராமல் இருக்க நாம் இத்துடன் நிறுத்திக்கொள்வது நல்லது என்று கருதுகிறேன்.
வேதத்தில் இல்லாத ஒரு 'நபர்' என்னிடம் பேசுகிறார் என்று யாராவது சொன்னால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு X Y Z மோ பேசும் 'ஆவியானவர்' ஏன் எல்லாரிடமும் 'பேசுவதில்லை'?
சத்தியமாக நான் ஒரு பவுலோ, பேதுருவோ கிடையாது. கூட இருந்து வழிநடத்தும் ஒருவர் இருந்தால் நாம் இவ்வளவு குழப்பத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
'உமது வசனமே சத்தியம்' ஆகையால் 'ஆவியானவர்' என்னிடம் அதைப் பேசினார், இதைப்பேசினார் என்று பிதற்றும் போலி பிரசங்கிமாரிடம் ஏமாறாமல் இருக்கவே அவ்வண்ணம் எழுதவேண்டியதாயிற்று. கேள்விகளுக்கு வசனத்தின்படி பதிலளிக்கவே இந்தத்தளம். தனிப்பட்டவர்களின் அனுபவங்களை நம்புவதால்தான்
இன்றைய 'so called' கிறிஸ்தவம் குழப்பத்தின் உச்சத்திலிருக்கிறது.
ஆம் அல்லது இல்லை என்று நீங்கள் இன்னமும் பதிலளீக்கவில்லை. அப்படி பேசினார் என்றால் நான் கேட்ட கேள்விகளுக்கு நியாயமான பதில் தர முயலுங்கள். ஏன் முழு விபரம் தந்து மற்றவர்களை தெளிவு படுத்தலாமே?
கிறிஸ்தவம் இன்று வேத வசனத்தில் அல்ல, ஊழியர்களின் அனுபவங்களிலும், தரிசனங்களிலும், பரலோக நரக போக்கு வரத்திலும், தங்களை தீர்க்கதரிசி என்று சொல்லி குறி சொல்லுவதிலும் தான் வளர்ந்துக்கொண்டிருக்கிறது போல். இதற்கு எனறு இவர்களுக்கு ஆவி(யானவர்) உண்டு போல்.
ஆனால் வேதத்தில் உள்ள ஆவி என்னவென்று இவர்களால் பகுத்து அறிய கூடாமல் இருக்கிறது. தேவனின் சிந்தை, கிறிஸ்துவின் சிந்தை உங்களிடத்தில் இருந்தால் நீங்கள் தேவனின் ஆவி அல்லது கிறிஸ்துவின் ஆவியில் இருக்கிறீர்கள் அல்லது அதே ஆவியில் நடக்குறீர்கள் என்று அர்த்தம். அந்த ஆவியில் தான் உங்களை வளரச் சொல்லி வேதம் சொல்லி தருகிறது.
பரிசுத்த ஆவி உங்களுக்குள் வாசம் செய்கிறது என்று வசனம் சொல்லுகிறது, ஆனால் வாரா வாரம் ஆலயம் சென்று வாரும் வாரும் என்று எந்த ஆவியை வரவேற்கிறார்கள்?
அன்று அப்போஸ்தலர்களுக்கு சில இயற்கைக்கு அப்பற்பட்ட நிகழுவுகள் நடக்க தான் செய்தது, அதையே இன்று இவர்கள் எதிர்ப்பார்ப்பதற்கு என்ன இவர்கள் அப்போஸ்தலர்களா? இல்லை, ஆனால் தங்களை அந்த ஸ்தானத்துக்கு உயர்த்தும் கள்ள அப்போஸ்தலர்கள். அன்று நிழல் பட்டும் கச்சையை தொட்டவுடன் மக்கள் சுகம் பெற்றார்கள், ஒரு முறை குத்தி கான்பித்ததும் மரித்து விழுந்தார்கள் (அனன்யா, சப்ப்ரியாள்), அப்படி ஒரு வல்லமை அப்போஸ்தலர்களுக்கு இருந்தது. ஆகவே ஃபிலிப்பை ஒரு இடத்தில் இருந்து இன்னோரு இடத்திற்கு தூக்கி கொண்டு செல்ல முடிந்தது, அப்போஸ்தலர்களுக்கு காரியங்களை உணர்த்த முடிந்தது. இது அவர்களுக்கு நடந்தது, ஆனால் அதே வேதத்தில், இடம் பெற்ற, பர்னபாஸோ, தீமோதேயு அல்லது வேறு நபர்கள் எங்களுக்கு இவை எல்லாம் நடந்தது என்று எந்த விதமான பொய்யையும் சொல்லவில்லை, ஏனென்றால் ஆவி என்றால் என்னவென்று அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள். ஆனால் முதல் நூற்றாண்டிற்கு பிறகு ஓநாய்கள் சபைக்குள் புகுந்து, தங்களுக்கு என்று கூட்டம் சேர்த்துக்கொண்டு வேதத்துக்கு புதிய அர்த்தங்களை தர ஆரம்பிதத்து.
அவர்கள் உண்மையை விசுவசியாமல் பொய்யை விசுவசித்ததினால், தேவனே அவர்களுக்குள் கொடிய வஞ்சகத்தை அனுப்பினார் என்கிறாது வேதம். (2 தெச 2.13). இன்று பெரும்பாளுமான சபைகளும் அந்த வஞ்சகத்திலிருந்து மீள முடியாமல் இருக்கிறது.
வேதத்தில் எங்கேல்லாம் அநேகர் என்று இருக்கிறது, அங்கு எல்லாம் பெரும்பாளும் கள்ளத்தனம் இருக்கிறது. அநேக கள்ளத்தீர்கத்ரிசிகள், அநேகர் வஞ்சிக்கப்படுவார்கள், கேட்டுக்கு போகிற பாதையில் அநேகர் நடப்பார்கள் போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு. அதுதான் 12 பேரை மாத்திரம் அப்போஸ்தலர்களாக நியமிக்கப்பட்டார்கள், இன்றையவர்கள் (அநேகர்) கள்ளதனமாக அந்த வரிசையில் தங்களை இனைத்துக்கொள்ள விரும்புகிறார்கள்.
ஆவி என்று தனியாகவோ, ஆவியானவர் என்று தனியாகவோ இல்லை, இரண்டுமே ஒன்று தான். அந்த ஆவி ஒரு மனிதனிடத்தில் இருக்கிறது என்றால் கலாத்தியர் 5ல் உள்ள ஆவிக்குறிய கனிகளை அவன் வளருவான். இது தான் ஆவியின் வெளிப்பாடே தவிர, என்னிடத்தில் வந்து பேசினார், இதை செய்ய சொன்னார், அதை கட்ட சொன்னார் என்று சொல்லுவதெல்லாம் வெறும் "கப்ஸா". இதுவே என் கருத்து.
5. பரிசுத்தஆவியின் ஐக்கியம் என்றால் என்ன? (2 கொரி. 13:14)
6. பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்துதல் என்றால் என்ன? பரிசுத்தஆவி எவ்வாறு துக்கப்படும்? (எபே. 4:30)
7. ஆவியானவர் பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்வது எப்படி? (ரோமர் 8:26)
1. பரிசுத்தாவியின் ஆறுதல். பரிசுத்த ஆவியானவர் நம் அருகில் வந்து அமர்ந்து 'குழந்தாய் அன்பு, பயப்படாதே, கவலைப்படாதே' என்று உங்கள் தலையைக் கோதி அன்போடு உங்களுடன் பேசுவது.
2.தடை பட்டது. "டேய் ராஸ்கல் நான் சொல்லிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு அடங்காம லூசு மாதிரு உன் போக்கிலேயே போற" என்று கடிந்து கொண்டிருப்பாரோ?
3.சுமாராக Ten Commandments படத்தில் முட்செடியில் தேவன் பேசுவதற்கு Dubbing கொடுத்தவர் குரல்போல் இருந்திருக்கலாம்.
4.வார்த்தைகளால் போதித்தது. ஆவியானவர்தான் அவர்கள் சொந்த பாஷையில் போதித்திருப்பார்.
5.ஐக்கியம். தற்போது எப்படி பெண்கள் ஐக்கியம் போன்ற ஐக்கியங்கள் உள்ளதோ அதே போல்தான்
6.துக்கப்படுத்துதல். அவர் அருகில் வந்து பேசும்போது 'போய்யா பரிசுத்தாவி கொரிசுத்தாவி' என்று திட்டினீர்கள் என்றால் மிகவும் துக்கமடைந்துவிடுவார். அழுவார் குமுறி, குமுறி.
//எல்லோருக்கும் வருகிற முதலாம் மரணம், அவர்களுக்கும் வரும் (சடிதியாகவோ, சாதாரணமாகவோ). ஆனால் இவர்கள் 1000 வருட அரசாட்சியின் பிரஜைகளாகி நிதானமாக நியாயத்தீர்ப்புக்குள்ளாகும் வாய்ப்பைப் பெறாமல், 1000 வருடத்திற்குப் பின் உயிர்பெற்று சடிதியாய் 2-ம் மரணத்திற்கு ஆளாவார்கள் என்பது எனது கருத்து. இதனால்தான் அவர்களின் அழிவை சடிதியான அழிவு எனப் பவுல் கூறுகிறார் எனக் கருதுகிறேன்.//
என்று 1000வருடத்திற்குப்பின்பு உயிர்த்தெழுந்து 'சடிதியாய்' 2ம் மரணத்திற்கு ஆளாவார்கள் என்று நீங்கள் 'ஹாஸ்யமாக' எழுதும்போது நான் மட்டும் கூடாதா என்ன?
-- Edited by soulsolution on Wednesday 28th of October 2009 10:57:31 AM
soulsolution wrote: //1000வருடத்திற்குப்பின்பு உயிர்த்தெழுந்து 'சடிதியாய்' 2ம் மரணத்திற்கு ஆளாவார்கள் என்று நீங்கள் 'ஹாஸ்யமாக' எழுதும்போது நான் மட்டும் கூடாதா என்ன?//
ஹாஸ்யமாக எழுதுவது எனது நோக்கமல்ல. இத்தளத்தின் பெயர் "Truth seekers", அதாவது உண்மையைத் தேடுவோர். அதன்படி உண்மையைத் தேடுவது மட்டுமே என் நோக்கம். உண்மை சிலருக்குக் கசக்கும் எனச் சொல்வார்கள், ஆனால் உண்மையைத் தேடி நான் எழுதின வார்த்தைகள் தங்களுக்கு ஹாஸ்யமாக இருந்திருக்கிறது.
soulsolution wrote: //1. பரிசுத்தாவியின் ஆறுதல். பரிசுத்த ஆவியானவர் நம் அருகில் வந்து அமர்ந்து 'குழந்தாய் அன்பு, பயப்படாதே, கவலைப்படாதே' என்று உங்கள் தலையைக் கோதி அன்போடு உங்களுடன் பேசுவது.
2.தடை பட்டது. "டேய் ராஸ்கல் நான் சொல்லிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு அடங்காம லூசு மாதிரு உன் போக்கிலேயே போற" என்று கடிந்து கொண்டிருப்பாரோ?
3.சுமாராக Ten Commandments படத்தில் முட்செடியில் தேவன் பேசுவதற்கு Dubbing கொடுத்தவர் குரல்போல் இருந்திருக்கலாம்.
4.வார்த்தைகளால் போதித்தது. ஆவியானவர்தான் அவர்கள் சொந்த பாஷையில் போதித்திருப்பார்.
5.ஐக்கியம். தற்போது எப்படி பெண்கள் ஐக்கியம் போன்ற ஐக்கியங்கள் உள்ளதோ அதே போல்தான்
6.துக்கப்படுத்துதல். அவர் அருகில் வந்து பேசும்போது 'போய்யா பரிசுத்தாவி கொரிசுத்தாவி' என்று திட்டினீர்கள் என்றால் மிகவும் துக்கமடைந்துவிடுவார். அழுவார் குமுறி, குமுறி.
6.பரிசுத்தாவியை துக்கப்படுத்துவது என்பது தேவனுக்கு எதிராக(அவரது ஆவிக்கு) நடப்பது. இங்கு துக்கப்படுதல் என்பது அவரது தன்மைக்கு எதிராக சிந்திப்பது
7.தேவனுடைய சிந்தையுடன் அவர் சித்தத்துக்கு இசைந்து ஜெபித்தல்
(மரித்துப்போயிருக்கும் ஒரு கூட்டத்தாரை கஷ்டப்பட்டு 'உயிரோடு' எழுப்பி சடுதியில், உடனடியாக மீண்டும் மரிக்கவைப்பது உண்மையில் காமெடிதான் சகோதரரே.)
ஆவி பேசும், துக்கப்படும் என்று நாம் நம்புவதால்தான் ஆவியானவரைக் கொண்டு அவர் அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்றெல்லாம் கதை கட்டி ஊழியக்காரர்கள் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
-- Edited by soulsolution on Friday 30th of October 2009 09:28:49 AM
"எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை" மத். 12:32 (லூக். 12:10).
இதை வைத்து பரிசுத்த ஆவி என்கிற தேவனுக்கு விரோதமாக செய்யப்படும் பாவம் அல்லது தூஷனம் மன்னிக்கப்படாது என்று பரிசுத்த ஆவியை தேவன் என்கிற மூன்றாவது நபராக உயர்த்திவிட்டார்கள், கிறிஸ்துவர்கள் என்று சொல்லுபவர்கள். அப்படியென்றால், இந்த வசனத்தின் படி பார்த்தோமென்றால், தேவனுக்கு (பிதா) விரோதமாக தூஷனம் செய்யலாமா?
தேவன் ஆவியாக இருக்கிறார், ஆகவே அந்த தேவனுக்கு விரோதமாக தான் தூஷனம் செய்யக்கூடாது என்று இயேசு கிறிஸ்து போதிக்கிறார். மேலும், அவர் மகிமையடையாததால், பரிசுத்த ஆவி ஊற்றப்படவில்லை என்று சொல்லுகிறார். இயேசு கிறிஸ்து பரலோகம் சென்ற பிறகு தான் பரிசுத்த ஆவி அப்போஸ்தலர்கள் மேல் ஊற்றப்பட்டது, அப்படி என்றால் மேலே உள்ள வசனத்தில் ஊற்றப்படாத ஒரு ஆவியை குறித்து இயேசு கிறிஸ்து சொல்லாமல், தன்னை அனுப்பிய பிதாவை குறித்து தான் சொல்லுகிறார்.
ஆனால் பரிசுத்த ஆவி என்கிற தேவன் என்று தேவத்துவத்தை மூன்றாக பிரித்து வியாபாரம் செய்பவர்கள் இதை புரிந்துக்கொள்ளவே மாட்டார்கள்.