எப்படி வயதாகி மரணம், விபத்தில் மரணம் அப்படியே தற்கொலை என்பது மரணம் நேரிடும் ஒரு காரணமாகும். தேவன் ஒரு மனிதனின் ஆயுள் நாட்களை தீர்மானித்து வைத்திருக்கிறார். அந்த ஆயுள் நாட்கள் முடிந்தால் மரணம் நிச்சயம் நேரிடும். சிலர் விபத்தில் தப்பிப்பது, தற்கொலையில் தப்பிப்பது என்பது அந்த மனிதனுக்கு தேவன் நியமித்த ஆயுள் நாட்கள் முடியவில்லை என்பதாகும். எந்த ஒரு மனிதனும் எத்துனை முயற்சி எடுத்தாலும் தேவனால் தீர்மானிக்கப்பட்ட ஆயுள் காலம் முடியும் முன்பு மரிப்பதில்லை, அதற்கு பின்பு வாழ்வதுமில்லை. தற்கொலை செய்து மரிப்பது என்பது தேவனால் தீர்மானிக்கப்பட்ட ஆயுட்காலம் முடியும் முன்பு நாம் மரித்து விட்டோம் என்றில்லை. அவரின் ஆயுட்காலம் முடிந்ததினால் தான் அவர் மரித்தார். மரணம் தான் முக்கியமே தவிர அதன் காரணம் இல்லை.