kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யார் தேவன்? யார் இயேசு கிறிஸ்து?


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யார் தேவன்? யார் இயேசு கிறிஸ்து?


"பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறாது, அவர் முலமாயு நாமும் உண்டாயிருக்கிறோம். ஆகிலும் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை" (1 கொரி. 8:6,7) என்கிறார் அப். பவுல்.

என்ன அறிவு இல்லை, என்றால், அந்த ஒரே தேவன் யார் என்றும், அந்த ஒரே கர்த்தர் இயேசு கிறிஸ்து யார் என்றும் தெரியாமல் அப்போஸ்தலன் காலத்தில் மாத்திரம் இல்லை இன்று வரை இப்படி மக்கள் இருந்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைக‌ளில், "ஒன்றான‌ மெய்த்தேவனாகிய‌ உம்மையும் நீர் அனுப்பின‌வ‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவையும் அறிவ‌தே நித்திய‌ ஜீவ‌ன்" யோவான் 17:3.

தேவன் யார்?

இவ‌ர் ஒருவ‌ர் தான் எல்லாவ‌ற்றுக்கும் முன்பாக‌ அதாவ‌து, ச‌ங்கீத‌க்கார‌ன் எழுதிய‌து போல், "ப‌ர்வ‌த‌ங்க‌ள் தோன்றும்முன்னும், நீர் பூமியையும் உல‌க‌த்தையும்  உருவாக்கும்முன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவ‌னாயிருக்கிறீர்" (ச‌ங்.
90:2). "உம‌து சிங்காச‌ன‌ம் பூர்வ‌முத‌ல் உறுதியான‌து; நீர் அநாதியாயிருக்கிறீர்" இந்த‌ அநாதி என்று இருப்ப‌வ‌ர் தான் ந‌ம‌க்கும் இயேசுகிறிஸ்துவிற்கும் பிதாவாக‌
இருக்கிற‌ ஒன்றான‌ மெய் தேவ‌ன். இவ‌ருக்கு ஒரு விசேஷ‌ த‌ன்மை இருக்கிற‌து. அதாவ‌து, இவர் ஒருவ‌ரே சாவாமை உள்ள‌வ‌ர் என்றும், ம‌னுஷ‌ரில் ஒருவ‌ரும் க‌ண்டிதாவ‌ர் என்றும் காண‌க்கூட‌த‌வ‌ருமாயிருக்கிற‌வ‌ர் என்றும் வேத‌ம் இவ‌ரையே இப்ப‌டி சொல்லியிருக்கிற‌து, (1 தீமோ. 6:16). மேலும் அநாதி என்றால் ஆங்கில‌த்தில்
Everlasting to everlasting அதாவ‌து தொட‌க்குமும் முடிவும் இல்லாத‌வ‌ராவார்.

இந்த‌ தேவ‌ன் தான் ந‌ம‌க்கு பிதாவாக‌ இருக்கிற‌வ‌ர், நாம் இவ‌ருக்கு பிள்ளைக‌ளாக‌வும் இருக்கிற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறோம். ப‌வுல் எழுதிய‌ப்ப‌டி, "நாம் பிள்ளைக‌ளானால் சுத‌ந்த‌ர‌ருமாமே; தேவனுடைய‌ சுத‌ந்த‌ர‌ரும், கிறிஸ்துவுக்கு உட‌ன்
சுத‌ந்த‌ருமாமே" (ரோம் 8:17). எப்ப‌டி தேவ‌னாகிய‌ பிதா கிறிஸ்துவிற்கு பிதாவாக‌ இருக்கிறாரோ, அப்ப‌டியே எத்துனை பேர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு அவ‌ரின் பாத‌ சுவ‌டுக‌ளைப் ப‌ற்றிக்கொண்டு ந‌ட‌க்கிறார்க‌ளோ, அவ‌ர்க‌ளுக்கு எல்லாம் அவ‌ரே
பிதாவாக‌ இருக்கிறார்.

இந்த‌ பிதாவாகிய‌ தேவ‌னின் நாம‌ என்ன‌ தெரியுமா? அவ‌ர் தான் யெகோவா தேவ‌ன். யெகோவா என்றால், தானாக‌ தோண்றின‌வ‌ர் (Self-existent) . தேவ‌ன் மிக‌வும் அதிக‌மான‌ அன்புக்கொண்ட‌வ‌ர் என்ப‌தை நாம் வ‌ச‌ன‌ங்க‌ளில் மூல‌மாக‌ தெரிந்துக்கொள்ள‌லாம்.

"பாவ‌த்தின் ச‌ம்ப‌ல‌ம் ம‌ர‌ண‌ம் (தேவ‌ நீதி). தேவ‌னுடைய (பிதா) கிருபைவ‌ர‌மோ ந‌ம்முடைய‌ க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினால் உண்டான‌ நித்திய‌ஜீவன் (தேவனின் அன்பின் விளைவு)" (ரோம் 6:23)
"தேவ‌ன் (பிதா) த‌ம்முடைய‌ ஒரேபேறான‌ குமார‌னை விசுவாசிக்கிற‌வ‌ன் எவ‌னோ அவ‌ன் கெட்டுப்போகாம‌ல் நித்திய‌ஜீவ‌னை (சாவாமை) அடையும்ப‌டிக்கு, அவ‌ரைத் (இயேசுக்கிறிஸ்துவை) த‌ந்த‌ருளி, இவ்வுள‌வாய் உல‌க‌த்தில் அன்பு கூர்ந்தார்." (யோவான் 3:13).
தேவ‌ன் சாவாமை உள்ள‌வ‌ர் என்ப‌தால், அவ‌ரே இந்த‌ உல‌க‌த்திற்கு வ‌ராம‌ல், த‌ன் முத‌ல் ப‌டைப்பான அவரின் ஒரே பேறான குமாரணான இயேசு கிறிஸ்துவை இந்த‌ பூமிக்கு அவ‌ரின் சித்த‌ம் நிறைவேற்றும்ப‌டி அனுப்பி வைத்தார். அந்த‌ சித்த‌த்தின் ப‌டி, எல்லா ம‌னித‌ர்க‌ளும் பாவ‌த்தின் ச‌ம்ப‌ள‌மான‌ ம‌ர‌ண‌த்திலிருந்து விடுவிக்க‌ப்ப‌ட‌, இயேசு கிறிஸ்து த‌ன்னையே மீட்கும்பொருளாக‌ செலுத்த‌ வேண்டிய‌தாகும். (1 தீமோ 2:3‍-6). இதை நிறைவேற்ற‌வே இயேசு கிறிஸ்து இந்த‌ பூமிக்கு வ‌ந்தார். அநேக‌ர் இன்று புரிந்திருக்கும்ப‌டி, தேவ‌னே இயேசு கிறிஸ்துவாக‌ வ‌ராம‌ல், தேவன் த‌ன் குமார‌னை அனுப்பி இந்த‌ மீட்ப்பின் திட்ட‌த்தை நிறைவேற்ற‌ செய்தார். வேதத்தில் தேவன் என்று பல இடங்களில் இருக்கிறது, அது எல்லாமே நம் பிதாவாகிய தேவனை குறிக்காது. பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் மூல பாஷையில் அவரைக்  குறித்து எழுதும் போது அவரை எபிரேயு மொழியில் யெகோவா என்றும், புதிய ஏற்பாட்டில் அவரை பற்றி எழுதும் போது கிரேக்க மொழியில் "ஹோ தியோஸ்" என்று எழுதப்பட்டிருக்கிறது.

பழைய ஏற்பாட்டில் ஆபிரஹாமையும், புதிய ஏற்பாட்டில் சாத்தனையும் கூட தான் தேவன் என்று தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் இவைகளுக்கு அர்த்தம் வேறு.
"வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும்......." (1 கொரி 8:5-7).  ஆக‌, தேவ‌ன் யாராலும் ப‌டைக்க‌ப்ப‌டாம‌ல் தானாக‌வே இருந்த‌வ‌ராக‌வும், அவ‌ர்
சாவாமையுள்ள‌வ‌ரும், ம‌னித‌ன் பார்க்க‌முடியாத‌ ப‌டியும் இருப்ப‌வ‌ர்

யார் கிறிஸ்து?

"அவ‌ர் (இயேசு கிறிஸ்து) அத‌ரிச‌ன‌மான (invisible) தேவ‌னுடைய‌ த‌ற்சுரூப‌மும், ச‌ர்வ‌ சிருஷ்டிக்கும் முந்தின‌ பேறுமான‌வ‌ர்" " தேவ‌னுடைய‌ சிருஷ்டிக்கு  ஆதியுமாயிருக்கிற‌வ‌ர்" (கொலோ. 1:14; வெளி. 3:14). அதாவ‌து, இயேசு கிறிஸ்து தேவ‌னின் நேர‌டியான‌ ப‌டைப்பு ஆவார், "நான் ஆதியும் அந்த‌மும் ஆன‌வ‌ன்" என்கிறார் இயேசு கிறிஸ்து. தேவ‌னின் இந்த‌ நேர‌டியான‌ ஒரே ப‌டைப்பான‌வ‌ர் தான் இயேசு என்கிற‌ நாம‌த்துட‌ன் பூமிக்கு மாம்சத்தில் வ‌ந்தார், கிறிஸ்து என்ப‌து இவ‌ர் அபிஷேக‌ம்ப்ப‌ண்ண‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்ப‌தால் உள்ள‌ பெய‌ர். இவ‌ர் இந்த‌ பூமிக்கு வ‌ரும் முன்னே பிதாவின‌டித்தில் இருந்தார். யோவான் சொல்லுகிற‌ வார்த்தை இவ‌ரே. ஞானி எழுதிய‌ நீதிமொழிக‌ல் 8ம் அதிகார‌த்தில் ஞான‌ம் என்கிற‌ அர்த்த‌த்தில் இருந்த‌வ‌ரும் இயேசு கிறிஸ்துவே. எப்ப‌டி தேவ‌ன் சாவாமை உள்ள‌வ‌ரோ, அப்ப‌டியே இயேசு இப்பொழுது சாவாமை பெற்றுக்கொண்ட‌வ‌ர். அவ‌ர் இந்த‌ பூமிக்கு வ‌ந்து ம‌ரித்தார். "நான் ம‌ரித்தேன் ஆனால் ச‌தாக்கால‌ம் உயிரோடு இருக்கிறேன்" என்றார் இயேசு கிறிஸ்து.
இனி அவ‌ர் சாவாமை கொடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ராக‌ இருக்கிறார். மேலும் பிதா என்றால் கொடுப்ப‌வ‌ர், குமார‌ன் என்றால் பெற்றுக்கொள்ப‌வ‌ர் (யோவான் 5:26,27; பிலி 2:9-12).
யோவான் புத்த‌க‌ம் முழுவ‌தும் இயேசு கிறிஸ்து குமார‌ண் என்று தெளிவாக‌ கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஆக‌ இயேசு கிறிஸ்து ப‌டைக்க‌ப்ப‌ட்டு, பின்பு தேவ‌னின் ஏற்ற‌ வேலையில் இந்த‌ பூமிக்கு இயேசு கிறிஸ்துவாக‌ அனுப்ப‌ப்ப‌ட்டு, தேவ‌னின் சித்த‌த்தை நிறைவேற்றி ம‌ரித்து,மூன்றாம் நாளில் பிதாவினால் உயிர்ப்பிக்க‌ப்ப‌ட்டார். இப்பொழுது இவ‌ர் தேவ‌னின் வ‌ல்ல‌மையுள்ள‌ வ‌ல‌து பாரிச‌த்திலிருந்து ந‌ம‌க்காக‌ (ச‌பைக்காக‌) ப‌ரிந்து பேசுகிற‌ பிர‌தான‌ ஆசாரிய‌னாக‌ இருக்கிறார் என்கிற‌து வேத‌ம்.

ஆக‌ ஒருவ‌ர் உய‌ர்த்துகிறார், ம‌ற்றோருவ‌ர் உய‌ர்த்த‌ப்ப‌டுகிறார், ஒருவ‌ர்  சாவாமையுள்ள‌வ‌ர், ஒருவ‌ர் ம‌ரித்து உயிர்த்தெழுந்தார், ஒருவ‌ர் கொடுக்கிற‌வ‌ர்  ஒருவ‌ர் பெற்றுக்கொள்ளுகிற‌வ‌ர்.
இவ‌ர்கள் இரு வேறு ந‌ப‌ர்க‌ள் என்று வேத‌ம் தெளிவாக‌ இருக்கிற‌து, அப்போஸ்த‌ல‌ர்க‌ளின் போத‌க‌மும் எழுத்தும் தெளிவாக‌வே இருக்கிற‌து, ஆனால் இன்று போதிப்ப‌வ‌ர்க‌ள் தான் இவ‌ரே அவ‌ர் என்றும் அவ‌ரே இவ‌ர் என்றும் இவ‌ரும் அவ‌ரும் ஒன்றே என்றும் போதித்தும் பிர‌ச‌ங்கித்தும் வ‌ருகிறார்க‌ள். இப்ப‌டி  எழுதியிருப்ப‌தினால் நான் இயேசு கிறிஸ்துவின் தேய்வீக‌த்தை ம‌றுக்க‌வில்லை, ஆனால் அதே வேலையில் அவ‌ர் பிதாவைவிட‌ ஒரு ப‌டி கீழே இருக்கிறார் என்று வேத‌ம் சொல்லுகிற‌து வாசித்து பாருங்க‌ள் 1 கொரி. 15:24-28.

அப்போஸ்த‌ல‌ர்க‌ள் என்ன‌ சொன்னார்க‌ள்,

"ந‌ம‌து பிதாவாகிய‌ தேவ‌னாலும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக‌" 1 கொரி. 1:3.
"ந‌ம்முடைய‌ பிதாவாகிய‌ தேவ‌னாலும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக" 2 கொரி. 1:2.
"பிதாவாகிய‌ தேவ‌னாலும் நம்முடைய க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக" கலா 1:3.
"ந‌ம்முடைய‌ பிதாவாகிய‌ தேவ‌னாலும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக" எபே 1:2.
"ந‌ம்முடைய‌ பிதாவாகிய‌ தேவ‌னாலும் க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்துவினாலும் உங்க‌ளுக்குக் கிருபையும் ச‌மாதான‌மும் உண்டாவ‌தாக" பிலி 1:2.

இவ‌ர்க‌ளின் வாழ்த்துத‌ல் இப்ப‌டி தான் இரு வேறு நாம‌ங்க‌ளில் இருந்த‌து. ஆக‌  கிறிஸ்த‌வ‌ர்க‌ளே, தேவ‌ன் யார் இயேசு கிறிஸ்து யார் என்று இந்த‌ விவாத‌ ப‌குதியில்
ப‌ங்குக்கொண்டு உங்க‌ள் க‌ருத்துக்க‌ளை வேத‌ ஆதார‌த்துட‌ன் ப‌கிர்ந்துக்கொள்ளுங்க‌ளேன்.



-- Edited by bereans at 00:15, 2009-03-11

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

அனேக உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் நல்ல கட்டுரை.!

இந்நாள்வரை, அநேகர் பிதாதான் இயேசுவாகமாரி பூமிக்கு வந்தார் என்று தவறாக கருதுகின்றனர். பிதா வேறு இயேசு வேறு என்பது வேதம் போதிக்கும் உண்மை.

உயிர் தெழுந்த இயேசு கூட பிதாவின் வலது பாரிசத்திலேயே போய் அமர்ந்தார் ஸ்தேவான் கூட கல்லேரிப்படும்போது இயேசுவானவர் தேவனின் வலதுபாரிசத்தில் நிற்ப்பதைதான் பார்த்தார்.

"என் பிதா என்னிலும் பெரியவர்"  "அனுப்பப்பட்டவர் அனுப்பினவரைவிட மேலானவர் அல்ல" போன்ற பல வசனங்களில் இயேசு தன் பிதாவை மகிபைபடுத்தி தான் அவரைவிட பெரியவர் அல்ல என்று போதித்திருக்கும் போது, பிதாவும் கிறிஸ்த்துவும் ஒருவர் என்ற போதனை எப்படி வந்தது என்றே புரியவில்லை!?

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:34:24 PM

__________________
"Praying for your Success"


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோ. சில்சாம்

எனது எல்லா கருத்துக்களிலும் இங்குள்ளவர்களோடு நான் உடன்பட்டவன் அல்ல!. இங்கு எந்த கருத்துக்களை வேண்டுமானாலும் பதியலாம் தெளிவு பெறலாம் என்றே பதிகிறேன்.      

என்னை பொறுத்தவரை, தேவன் என்பவர் மிகப்பெரிய வல்லமைகளை கொண்ட  ஆவியின் தொகுப்பு. அதனால்தான் அவர் எலோகீம் எனபடுகிறார். அவர்  எழு ஆவிகளை கொண்டவர் என்பதை வெளிப்படுத்தின விசேஷம் சொல்கிறது.  

இந்த தேவன், யோவான் 1ம் அதிகாரத்தின்படி ஆதியிலிருந்தே தன்னோடு இருக்கும் தன் வார்த்தை என்னும் வல்லமையை மாமிசமாக்கினார்.
அவரே இயேசு!  

"தேவன் ஆவியாயிருக்கிறார்" மற்றும் "கர்த்தரே ஆவியானவர்" என்ற வசனம்படியும் பிதாவாகிய தேவனுக்கு உருவமில்லை, தேவனின் காணக்கூடிய தட்சொரூபம் இயேசுதான். அதனால்தான் இயேசு என்னை காண்கிறவன் பிதாவை காண்கிறான் என்றார். 

இயேசு தேவனிலிருந்து தேவனால் உருவாக்கப்பட்டவர் அவரால் அனுப்பபட்டவர்  ஆனால் அவர் மரித்து மகிமையடைந்த பிறகு மீண்டும் தேவனோடு இணைந்துவிடாமல் அவரின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்றே வேதம் போதிக்கிறது!  

இயேசுதான் ஒரே தேவன் என்றால் அவரே  தனது வாயால் "ஒன்றான மெய் தெய்வமாகிய உம்மையும் நீர் அனுப்பிய என்னையும்"  என்று பிரிக்கவேண்டிய தேவையில்லை "பிதாவே இவர்களுக்கு மன்னியும்" என்றும் "என் பிதா என்னிலும் பெரியவர்" என்றும் சொல்லவேண்டிய தேவையில்லை.

வசனங்கள்படி எது தவறான உபதேசம் என்று நீங்களே சற்று யோசியுங்கள்.

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ச‌கோத‌ர‌ர் சில்சாம் அவ‌ர்க‌ளே,

    முதலாவது "தூர்த‌ர்ஷ‌ன்" பாணி என்ப‌தை என்னால் புரிந்துக்கொள்ள‌வில்லை, உங்க‌ளுக்கு தான் இதில் அதிக‌ அனுப‌வ‌ம் போல். ச‌ரி, அடிப்ப‌டையில் நாம் த‌மிழ‌ர்க‌ள் தான், அத‌ற்காக‌ வேத‌த்தை ஆறாய‌ த‌மிழ் வேதாக‌ம‌ம் மாத்திர‌ம் என‌க்கு போதும் என்றால் அது ஒத்துக்கொள்ள‌ என‌க்கு ச‌ற்று க‌டின‌மாக‌ இருக்கிற‌து, ஒரு வேளை நீங்க‌ள் எப்ப‌டி என்று என‌க்கு தெரியாது.

    ப‌வுல்சொல்லிக்கொடுத்த‌து வ‌ரை, பிதாவாகிய‌ தேவ‌னும், க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்து வேறு என்று தான் தவிர ஒன்று என்று ஒரு போதும் சொல்லி த‌ர‌வில்லை, அத‌ற்கு த‌குந்த‌ ஒரு வேத‌ ஆதார‌த்தை கூட‌ உங்க‌ளாலோ அல்ல‌து இந்த‌ கிறிஸ்த‌வ‌ ம‌ண்ட‌ல‌த்தால் காண்பிக்க‌ இய‌லாது, ஆக‌வே க‌ட்டு க‌தைக‌ளையும், பாட்டிக‌தைக‌ளையும் துனைக்கு வைத்து வ‌ள‌ர்த்த‌ கிறிஸ்த‌வ‌ வ‌ழியில் வ‌ந்த‌து தான் இந்த‌ திருத்துவ‌ம் என்கிற‌ கொள்கை, வேத‌த்திற்கு முற்றிலும் மாறுபாடான‌ க‌ருத்தாகும். இயேசு கிறிஸ்து சொல்லித்த‌ராத‌தை, அப்போஸ்தல‌ர்க‌ள் சொல்லி த‌ராத‌ ஒன்றை இன்று ச‌பை பிர‌ச‌ங்க‌ம் செய்கிற‌து என்றால் என்ன‌ துனிச்ச‌ல்.

   ப‌வுல் போன‌‌வுட‌ன் (ம‌ரித்த‌வுட‌ன்) அவ‌ர் சொல்லிக்கொடுத்த‌தை பின் ப‌ற்றி வ‌ந்த‌ ச‌பைக்குள் சாத்தான் விதை விதைத்தான். இப்ப‌டி மாறுபாடான‌ உப‌தேச‌ங்க‌ளை கொண்டு வ‌ந்த‌ ஓநாய்க‌ள் ச‌பைக்குள் வ‌ந்து இன்று வ‌ரை அப்ப‌டி இருக்கிற‌து. இதை தான் இயேசு முன்ன‌மே உவ‌மையாக‌ சொன்ன‌து, "ம‌னுஷ‌ர் நித்திரைபண்ணுகையில் (அப்போஸ்த‌ல‌ர்கள் மரித்தவுடன்) அவனுடைய ச‌த்துரு (சாத்தான்) வந்து கொதுமைக்குள் (கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலர்களின் நேர்த்தியான போதனைகள்) களைகளை (மனித போதனைகள்) விதைத்துவிட்டுப் போனான்." ம‌த். 13:25. ச‌பையை உவ‌மையாக‌ சொன்ன‌ இதே அதிகார‌த்தின் 31ம் வ‌ச‌. வாசித்து பாருங்க‌ள். இயேசு சொன்ன‌ இந்த‌ உவ‌மை தான் அப் ப‌வுல் தீர்க்க‌மாக‌ இப்ப‌டி ம‌னித‌ர்க‌ள் கொண்டு வ‌ந்த‌ போத‌னைக‌ளை ஓநாய்க‌ள் என்று சொன்னார்.

Chillsam wrote this "இந்த‌ ஓநாய்க‌ளோ த‌ங்க‌ள் க‌ள்ள‌த்த‌ன‌த்துக்கு ஆனான‌ப்ப‌ட்ட‌ ப‌வுலையே துணைக்கு அழைப்ப‌து இன்னும் கொடூர‌ம்..! ப‌வுல் இன்றைக்கு உயிரோடு இருந்தால் மீண்டும் கொலைகார‌னாக‌ மாறியிருப்பார்;"

 நிச்ச‌ய‌மாக‌ ஓநாய்க‌ள் ப‌வுலை துணைக்கு அழைக்க‌ முடியாது, ஏனென்றால் ஓநாய்க‌ள் வேத‌த்தின் இல்லாத‌ ம‌னித‌ போத‌னைக‌ளை பின்ப‌ற்றும் கூட்ட‌ம் தான். ப‌வுல் சொல்லிய‌து ஓநாய்க‌ளுக்கு புரிய‌வில்லை, அதினால் தான் வேத‌த்தை புற‌ம்பே வைத்து விட்டு ம‌னித‌ர்க‌ளின் க‌ட்டு க‌தைக‌ளை சபைக்குள் புகுத்து, இன்று பெரிய‌ ம‌ர‌மாகி விழுது விட்டு ஆகாய‌த்து ப‌ற‌வைக‌ள் (பிசாசு கூட்ட‌ம்) அதில் கூடு க‌ட்டி இருக்கும் அள‌விற்கு இந்த‌ ஓநாய்க‌ள் கொண்டு வ‌ந்து விட்டார்க‌ள். யார் ஓநாய்க‌ள் என்றால், வேத‌த்தை புற‌ட்டும், வேத‌த்தை சாட்சியாக‌, வ‌ச‌ண‌த்தை சாட்சியாக‌ உப‌யோக‌ ப‌டுத்த‌ ம‌றுப்ப‌வ‌ர்க‌ளே அந்த‌ கூட்ட‌ம்.

Chillsam wrote this "ச‌த்திய‌ம் எது என்ப‌தை பிறகு பார்ப்போம், ஒரு ம‌னுஷ‌ன் சொன்ன ஒரு கருத்தை அவ‌ன் க‌ருத்துக்கு மாறாக‌ அவ‌ன் இதைத் தான் சொன்னான் என்ப‌து எத்த‌னை துணிக‌ர‌ம்..? நான் அந்த‌ அர்த்த‌த்தில் சொல்ல‌வில்லை என‌ ம‌றுக்க‌ அவ‌ன் இப்போது உயிரோடு இல்லையே..! ப‌வுலின் நிருப‌ங்க‌ளை ம‌ட்டும் வைத்துக் கொண்டு எது ச‌த்திய‌ம் அல்ல‌து அவ‌ர் சொன்ன‌து என்ன‌ என்ப‌தை விவாதிக்க‌த் தயாரா?"

 த‌ன் அப்போஸ்த‌ல‌ர்க‌ள் இயேசு கிறிஸ்து மாம்ச‌த்திலிருந்த‌ போது உப‌தேச‌ம் செய்த‌த‌தை புரிந்துக்கொள்ள‌ முடிய‌வில்லை என்று தான் ப‌ரிசுத்த‌ ஆவி என்கிற தேவ‌ வ‌ல்ல‌மை தேவைப்ப‌ட்ட‌து. ச‌த்திய‌த்தை பின்னால் வைத்து பார்த்த‌தினால் தான் ச‌பைக்குள் பிசாசு நுழைந்த‌து. எ.கா. தேவ‌ன் சொன்ன‌து, "நீங்க‌ள் சாக‌வே சாவீர்க‌ள்". சாத்தான் சொன்ன‌து, "நீங்க‌ள் சாக‌வே சாவ‌தில்லை என்று". இன்று சபைகள் இந்த‌ இரண்டாம் போத‌னையை தான் தைரிய‌மாக‌ தேவ‌னின் வார்த்தைக‌ள் என்று போதித்து வ‌ருகிற‌து. என்ன‌ செய்வ‌து? மேலும் வேத‌த்தில் எழுதிய‌ எந்த‌ ஒரு தீர்க்க‌த‌ரிச‌ன‌மும், வார்த்தைக‌ளும் ம‌னித‌ன் யோசித்து த‌ன் சுய‌த்தால் எழுதிய‌து இல்லை என்று வேத‌த்தில் இருப்ப‌தை நீங்க‌ள் அறிவீர்க‌ள் என்று நினைக்கிறேன். ப‌வுல் எழுதி ம‌றைந்து விட்டாலும், ந‌ம‌க்கு ப‌வுல் சொன்ன‌தினால் அந்த‌ வார்த்தை முக்கிய‌ம் இல்லை, மாறாக‌ அவ‌ன் சொன்ன‌து தேவ‌னின் வார்த்தைக‌ள், அந்த‌ வார்த்தைக‌ள் தான் பிர‌தான‌ம். அது ச‌ரி, நீங்க‌ள் சொல்லிய‌ எந்த‌ ஒரு க‌தைக்கும் வேத‌ வ‌ச‌ன‌த்தை ஆதார‌மாக‌ கொடுக்க‌வில்லையே, ஏன்? ம‌னித‌ போத‌னைக‌ள் இருந்தால் அதார்கு வேத‌ம் ஆதாரமாக‌ இல்லை.

என் ஒரே கேள்விக்கு நீங்க‌ள் ப‌தில் சொல்லுங்க‌ள்,
"இயேசு கிறிஸ்துவை ம‌ரித்தோரிலிருந்து எழுப்பிய‌வ‌ர் யார்"? வேத‌ம் சொல்லுவ‌து, தேவ‌ன் (பிதா) என்று. ஆனால் ம‌னித‌ போத‌னை சொல்லுவ‌து, அவ‌ரே அவ‌ரை எழுப்பிக்கொண்டார் என்று. ஏனென்றால், தேவ‌ன் தான் இயேசு என்று முடிவில் இருப்ப‌வ‌ர்க‌ள் இப்ப‌டி தான் விள‌க்க‌ம் த‌ர‌ முடியும். வேத‌த்தைக்கூட‌ ந‌ம்பாம‌ல், தேவ‌ன் தான் இயேசு, இயேசு தான் தேவ‌ன் என்று பித‌ட்டுப‌வ‌ர்க‌ளிட‌ம் வேறு என்ன‌ எதிர்ப்பார்க்க‌ முடியும்?

Chillsam wrote this "பிதாவாகிய‌ தேவ‌னை விட‌ ச‌ற்றுத் தாழ்வான‌வ‌ராக உங்களால் சொல்ல‌ப்ப‌ட்ட இயேசுவான‌வ‌ர் "க‌ர்த்த‌ராகிய‌" என‌ அழுத்த‌மாக‌ச் சொல்ல‌ப்ப‌டுவ‌தென்ன‌?"
 அதாவ‌து நீங்க‌ள் 1 கொரி. 15:28 அப‌த்த‌ம் என்று கூற‌ வ‌ருகிறீர்க‌ளோ? ஒரு எழுத்தின் அழுத்தத்தை வைத்து தான் இயேசு கிறிஸ்துவின் தேய்வீகத்தை மதிப்பிடுகிறீர்களோ?

இதுவே ப‌ழைய‌ ஏற்பாட்டில் தேவ‌னாகிய‌ க‌ர்த்த‌ர் என‌ இங்கும் "க‌ர்த்த‌ர்" என்ப‌து த‌டித்த‌ எழுத்துக்க‌ளில் அச்சிட‌ப்ப‌ட்டிருப்ப‌து ஏன்?

 யூத‌ர்க‌ள் தேவ‌னின் நாம‌மான‌ யேகோவா என்ப‌தை உச்ச‌ரிப்ப‌தில் ப‌ய‌ந்த‌ப‌டியால் அதையே ந‌ம் த‌மிழ் வேத‌த்திலும் யேகோவா என்ப‌தை த‌விர்த்து விட்டு "க‌ர்த்த‌ர்" என்று "அழுத்த‌மாக‌" போட்டிருக்கிறார்க‌ள் ப‌ழைய‌ ஏற்பாட்டில். ச‌ரி ம‌ளையால‌ம் தெரிந்தால் அவ‌ர்க‌ள் வேதாக‌ம‌த்தை எடுத்து பாருங்க‌ள், அவை எல்லாம் யேகோவா என்றே இருக்கும்.

Chillsam wrote this "இது ப‌ல்வேறு மார்க்க‌ உப‌தேச‌ங்களை க‌வ‌னிக்கும் அல்ல‌து பின்ப‌ற்றும் விசுவாசிக‌ளின் த‌ள‌மாக‌த் தோன்ற‌வில்லை; ஒரே வித‌மான‌ உப‌தேச‌மாக‌த் தெரிகிற‌து; "
   இந்த‌ த‌ள‌த்தில் அனைத்து டினாமினேஷ‌ன்க‌ளை சார்ந்த‌வ‌ர்களும் சுத‌ந்திர‌மாக‌ தாங்க‌ள் பார‌ம்ப‌ரிய‌மாக‌வோ, த‌ங்க‌ளின் மெய்ப்ப‌ர்க‌ள் மூல‌மாக‌வோ, த‌ங்க‌ளின் ச‌பை மூல‌மாக‌வோ க‌ற்று கொண்ட‌தை ப‌திய‌ அனும‌தி உண்டு. ஒரு சில தளத்தில் உள்ள‌ மாதிரி அதிகார‌ துஷ்பிர‌யோக‌ம்  இந்த‌ த‌ள‌த்தில் இல்லை.

Chillsam wrote this "தாங்கள் சொல்வதே சரி" முடிவு செய்துவிட்டவர்கள் புதிதாக எதையும் கற்றுக் கொள்ளவாய்ப்பில்லை; ஆனாலும் சில‌ருக்காவ‌து ப‌ய‌ன்ப‌டும் என்ற‌ நம்பிக்கையில் எழுதுகிறேன்;"

  புதிதாக‌ (வேத‌த்திற்கு புற‌ம்பாக‌) க‌ற்றுத‌ருவ‌து, க‌ற்றுக்கொள்வ‌து தானே இன்று வாடிக்கையாக‌ இருக்கிற‌து. நீங்க‌ள் சொன்ன‌ எல்லா க‌ருத்துக்க‌ளும் "அநேக‌ர்" ஏற்றுக்கொண்ட‌தாகும். இப்ப‌டி அநேக‌ர்க‌ளை குறித்து வேத‌ம் என்ன‌ சொல்லியிருக்கிற‌து என்று ம‌த். 24ம் அதிகார‌த்தை வாசித்து பாருங்க‌ளேன். வேத‌ம் சில‌ரை குறித்து என்ன‌ சொல்லுகிற‌து என்றும் வேத‌த்தில் தேடி பாருங்க‌ளேன்.

பிதாவாகிய‌ தேவ‌ன்.
The Heavenly Father was not created, but has existed forever. He is perfect in all attributes of character - perfect in His justice, so that the just sentence of His righteous law cannot be infracted, even by Himself; perfect in wisdom in that His plan regarding man's creation and salvation was so complete no failure could arise - nor the necessity for change of the divine plan. "For I am the LORD, I change not &" (Malachi 3:6) "Known unto God are all His works, from the beginning of the world."-Acts 15:18
Perfect in love, for there could be no greater love possible; perfect in power so that all His good purposes could be executed and result in the originally designed results. "So shall my word be that goeth forth out of my mouth: it shall not return unto me void, but it shall accomplish that which I please, and it shall prosper in the thing whereto I sent it."-Isaiah 55:11

க‌ர்த்த‌ராகிய‌ இயேசு கிறிஸ்து,
Jesus existed as a spirit being before he was made flesh. At that time he was known as a god, or mighty one. He was the direct creation of God, the "Only Begotten." As Jehovah's representative, and in His name and through His power, Jesus created all things -angels, principalities and powers, as well as the earthly creation. Jesus voluntarily gave up his position and nature to be made flesh and become our Redeemer. Because of Jesus' faithfulness, his Father rewarded him with the divine nature. It is this great One whom we delight to honor and to worship and to serve as one with the Heavenly Father, in word and in purpose and in spirit..

மீண்டும் ஒரு முறை 1 கொரி 8:6,7 நிதான‌மாக‌ தியானித்து பாருங்க‌ளேன். இந்த அறிவு "அநேகருக்கு" இல்லை என்கிறார் பவுல். அப்படி என்றால், இன்றும் "அநேகர்" தான் குழப்பத்தில் இருக்கிறார்கள். தூங்கபவரை எழுப்பி விடலாம், ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாதே.  



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரர் சில்சாம் அவர்களே,

"இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் ஜெபத்தை ஏறெடுக்கிறோம், ஜீவன் உள்ள நல்ல பிதாவே"

   இன்று பெரும்பாலும் எல்லா கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள் உட்பட) இப்படி ஜெபித்து முடிப்பதை நாம் கேட்க முடிகிறது. அப்படி என்றால், இந்த வார்த்தைகளின் படி கிறிஸ்தவ மண்டலம் என்ன சொல்ல வருகிறாது என்றால், இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே அவரையே பிதா என்று சொல்லி இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறோம் என்பதா? என்ன குழப்பத்தின் உச்சமாக உங்களுக்கு தோன்றவில்லையா இல்லை இதுவும் ஒரு பாரம்பரியமான வார்த்தைகள் என்று அர்த்தத்தை பார்க்காமல் விட்டு விடீர்களோ. ஒருவர் (பிதாவாகிய தேவன்) நன்மைகளை தருகிறார், ஒருத்தர் (இயேசு கிறிஸ்துவின்) மூலமாக தருகிறார்.

 மேலும் நித்திய பிதா பற்றி கேட்டிருந்தீர்கள். இது இயேசு கிறிஸ்துவையே குறிக்கும். 1000 வருட அரசாட்சியின் போது, பிதாவினிடத்திலிருந்து ஜீவனை கொடுக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதால், இவர் மூலமாக நித்திய ஜீவனை இந்த பூமியில் பெற்றுக்கொள்பவர்களுக்கே இவர் நித்திய பிதா (கவனிக்கவும், பிதாவாகிய தேவன் இல்லை), ஏனென்றால் இவரை (இயேசு கிறிஸ்துவை) வேதம் வல்லமை தேவன் என்று பிதாவாகிய தேவனை சர்வவல்லமை உள்ள தேவன் என்றும் சொல்லியிருக்கிறாது. நீங்கள் தமிழிலில் புலமை வாய்ந்தவராக இருப்பதினால் வல்லமைக்கும் சர்வவல்லமைக்கும், அநாதி தேவன் மற்றும் ஆதியாக இருந்தேன் என்பதற்கும், சாவாமைக்கும் மரித்தேனுக்கும் வித்தியாசம் தெரிந்தவராக இரப்பீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன். வேதத்தின் வெளிச்சத்தில் மாத்திரமே வியாக்கியானம் செய்யுங்கள், பாரம்பரியங்கள், கட்டு கதைகள், வேதத்திற்கு புறம்பாக சாது சுந்தர் சிங்கையோ, டீ.ஜி.எஸையோ, இல்லை வேறு ஊழியர்களின் தப்பட்டங்கள் நமக்கு தேவையில்லை.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 04:34:00 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோதரர் சில்சாம் அவர்களே,

வாதம் என்று ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள். யார் ஜெய்ப்பது, யார் தோர்ப்பது என்று இல்லை விஷயம், மாறாக சத்தியம் என்ன என்பது தான் விஷயமே. அந்த சத்தியம் நமக்கு தெரிந்து அந்த சத்தியத்தினால் நாம் விடுதலை ஆக வேண்டும் (யோவான் 8:32). அப். 17:2ஐ தமிழ் வேதாகமத்தில் வாசித்தோமென்றால் ஏதோ பவுல் வேதத்தை குறித்து பேசி வந்தார் போல் மாத்திரம் தான் இருக்கும். ஆனால் ஆங்கிள வேதத்தை பாருங்கள்,

Acts 17:2
and three sabbath days reasoned with them out of the scriptures,
KJV

Acts 17:2
and for three sabbath days reasoned with them from the Scriptures,
ASV

Acts 17:2
and for three weeks he argued with them from the scriptures,
RSV

So brother, let us reason out or argue in a postive way to show that Jesus is Christ and NOT the HEAVENLY FATHER. Heavenly Father is Jehovah and Jesus Christ is HIS only begotten Son. A son is always begotten and a Father is always giver (Life). Please come again with all your arguments but from Bible alone. Christ always got from the Father and that is what the scriptures teach us all the way. Don't go for the wolves teaching introduced from the 2nd century about Trinity or Triune God which is a creation out of mytholigical stories.Thanks.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard