ஒரு பிரபலமான 24 மணி நேர கிறிஸ்தவ டீ.வீ. நிகழ்ச்சியில் ஒரு ஊழியக்காரர் இப்படியாக சொல்லிக்கொண்டிருந்தார், "நாங்கள் இயேசு கிறிஸ்து வரும் போது (அதாவது அவர்களுக்கு முன்பாக தோன்றும் போது), அவரின் முகத்தோற்றத்தை வைத்து, அவரின் பேச்சை வைத்து நான் அவர் என்ன சொல்ல வருகிறார் அல்லது அவர் எந்த மூடில் இருக்கிறார் என்று தெரிந்துக்கொள்வேன், இந்த அனுபவத்திற்குள் நீங்கள் அனைவரும் வர வேண்டும்" என்றார்.
பாவம் இந்த ஊழியர்க்கு தெரியவில்லை போல, மகிமை அடைந்த இயேசு கிறிஸ்து இனி மாம்சத்தில் உள்ளது போல் ஒரு போதும் நாம் பார்க்க முடியாது என்று. அவர் இனி ஒரு போதும் நம்மை போல் (மாம்சமான சரீரமாக) அல்ல, நாம் தான் அவரை காண அவரை போல் மாற வேண்டும் (1 யோவான் 3:2) என்று. அப்படி என்றால் இவர்கள் யாரை தான் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை. பவுல் எழுதியப்படி, இனி கிறிஸ்துவை ஒரு போதும் மாம்சத்தில் அறியோம் (2 கொரி 5:16).
இயேசு கிறிஸ்து அடிக்கடி பூமிக்கு வந்து போகும் படி பரலோகத்திற்கு செல்ல வில்லை. அவர் சீஷர்களிடம் சொல்லும் போது, "நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" (யோவான் 14:3) என்றார். அதாவது அவரின் இரண்டாம் வருகையை குறித்து அவர் சொல்லியிருக்கிறார். இதற்கு மாறாக அவர் "நான் அடிக்கடி உங்களையும், உங்களை போல் இனி வரும் ஊழியர்களை காணும் படி மீண்டும் மீண்டும் வருவேன்" என்று சொல்லவில்லை. ஒரே முறை அவர் பவுலை அப்போஸ்தலனாக நியமிக்கும் படி பவுலுக்கு தரிசனமானார், அதிலும் பவுல் அந்த தரிசனித்தில் மூன்று நாட்கள் குருடாகி போனார்.
ஆனால் இன்றோ நம் ஊழியர்கள் சர்வசாதாரனமாக நான் இயேசுவை பார்த்தேன் என்று சொல்லுவதில் ஒரு பெருமை பாராட்டி வருகிறார்கள்.
"அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள்".
"ஆகையால்; அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ அறை வீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்" மத்25:23,26
இந்த அற்புதமான எச்சரிக்கை வசனங்கள் இருட்டடிக்கப்பட்டு இன்று "இயேசு சுகமளிக்கிறார், இயேசு விடுதலை தருகிறார், உங்கள் அருகில் நிற்கிறார், என்னுடைய அறைக்குள் வந்தார், என்னுடன் தினமும் பேசுகிறார், என்னை பரலோகம் நரகத்திற்கு கூட்டிச்சென்றார்" என்றெல்லாம் வாய் கூசாமல் பொய் பேசி ஜனங்களை மோசம் போக்கும் "அனேகர்" இருப்பதால் எச்சரிக்கையாக இருப்போம்.
-- Edited by soulsolution on Sunday 4th of October 2009 09:56:57 AM
-- Edited by soulsolution on Sunday 4th of October 2009 09:57:30 AM