எப்படி அப்போஸ்தலர்கள் 12 பேர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்தார்களோ, அது போல் வேதம் முழுவதுமாக வெளிவரும் வரை தீர்க்கதரிசிகள் தேவையாக இருந்தார்கள் (எபே 4:13), தேவனிடத்திலிருந்து வார்த்தைகளை பெற்று சபைக்கு போதிக்கும்படியாக. ஆனால் இன்றோ தீர்க்கதரிசனம் என்றால் குறி சொல்லுவது போலாகிவிட்டது. எல்லா தீர்க்கதரிசனங்களையும் தேவன் கொடுத்து விட்டார். வெளிப்படுத்தின விசேஷம் என்கிற ஒரு புத்தகம் வேதத்தில் இருப்பதை பல கிறிஸ்தவர்கள் மறந்து இன்றும் தங்களிடத்தில் தேவன் பேசிகிறார் என்று கூறி வருவதை வருத்தமாக இருக்கிறது. எல்லாவற்றையும் தேவன் கொடுத்த பிறகு இன்று மக்களிடத்தில் சொல்ல என்ன இருக்கிறது என்று புரியவில்லை. வெளிப்படுத்தின விசேஷம் படித்து புரிந்துக்கொண்டால், அதில் உள்ள தீர்க்கதரிசன வசனங்கள் இந்த கடைசி காலத்திற்கு போதுமானதாக இருக்கிறது. இன்று தங்களையே தீர்க்கதரிசிகள் என்று கூறி தீர்க்கதரிசனம் (குறி) சொல்லுபவர்கள் வேதத்தின்படி கள்ள தீர்க்கதரிச்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிச்கள் ஆவார்கள் (மத். 24:5,11,24).
வேதம் தெரியவில்லை என்றால் கூட பரவயில்லை, ஆனால் கடைசி கால கள்ள தீர்க்கதரிசிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்கும்படியாக நம் எஜ்மானனும் கர்த்தருமான இயேசு கிறிஸ்துவே நமக்கு சொல்லியிருக்கிறார் (மத். 24:5,11,24). இது கடைசி காலமாக இருப்பதால் நாம் எச்சரிக்கையாக இருக்கும்படியாக நம் கர்த்தர் நமக்கு போதித்து இருக்கிறார். அப்படியே செய்வோம்.
இந்தியாவின் ஒரு பிரபலமான தீர்க்கதரிசி என்று தன்னையே சொல்லிக்கொள்பவர் இலங்கையில் பூர்ண சமாதானம் ஏற்படும் என்று 2008ம் ஆண்டிலேயே தேவன் அவரிடத்தில் பேசியதாக சொன்னார், அந்த கள்ள தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் நிறைவேறியதா என்று சிந்தியுங்கள்.
ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் வேதத்தின் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டு இருந்தாலும், அன்றாட வாழ்க்கை மற்றும் நாட்டின் சூழ்நிலை குறித்தும் வரும் காலங்களில் மாமிசத்துக்குரிய உலகில் என்ன நடக்கும் என்பது பற்றி தேவன் தெரியப்படுத்த வாய்ப்பிருக்கிறது என்றே நான் கருதுகிறேன்.
கள்ளதீர்க்க தரிசிகளுக்கு எச்சரிகயாயிருக்கவேண்டும் என்று கருத்து ஏற்ப்புடயதே ஆனால் வேத வாக்குபடி ஒருவன் சமாதனம் வரும் என்று ஒரு தீர்க்கதரிசி சொல்லியிருக்க அவர் சொல்லியபடி சமாதனம் வரவில்லை என்றால் அதாவது, கர்த்தர் நாமத்தில் சொல்லும் வார்த்தை நிறைவேறாமல் போனால் அவன்தான் கள்ள தீர்க்கதரிசி என்று எரேமியா கூறுகிறது.
எனவே எல்லாமே கள்ள தீர்க்கதரிசனம் என்பதை ஏற்க்க முடியாது!
தேவன் தன் உளியகாரர்களாகிய தீர்க்கதரிசிகளுக்கு சொல்லாமல் எதையுமே செய்வதில்லை என்று வேதம் போதிக்கிறதே! அதில் தேவனின் எல்லா செயல்களும்க அடங்கும் என்றே நான் கருதுகிறேன்
"இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். ஆகையால்; அதோ, வனாந்தரத்தில் இருக்கிறர் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்" மத். 24:25,26.
இந்த வசனத்தை நாம் தியானித்தோமென்றால், நாம் இன்று இருப்பது இறுதிக்காலம் என்று தெரிந்துக்கொள்ளலாம். நம் கர்த்தர் சொன்னப்படியே, இன்று அநேக ஊழியர்கள், தங்களின் ஊழியங்களிலும், கோபுரங்களிலும், வாசல்களிலும் இருந்து தான் இயேசு கிறிஸ்து செயல் படுவதாக சொல்லி வருகிறார்கள். இவர்களை நம்பாதிர்கள் என்று நம் கர்த்தர் நமக்கு சொல்லியிருக்கிறார். மேலும் இப்படி சொல்லுவதினால் தான் இயேசு கிறிஸ்து தங்களிடம் பேசுகிறார், இத்துனை மணியிலிருந்து இத்துனை மணி வரை பேசுகிறார் என்றும் துணிச்சலாக சொல்ல முடிகிறது. இப்படி பெசுபவர்களை நம்பாதீர்கள், அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருங்கள் என்று கிறிஸ்து தன் சீஷர்களுக்கு போதித்தார், கடைசி காலத்தில் இப்படி தான் இருக்கும் என்று தீர்க்கதரிசனமாக சொன்னார். இப்படி இருக்க, நாம் வேதத்தை நம்புவதா, அல்லது என்னிடம் இயேசு பேசினார் என்று சொல்லுபவர்களை நம்புவதா. சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே.
அன்று அப். பவுலுக்கு மகிமை அடைந்த இயேசு தரிசனமான போது, அவரின் மகிமையின் பிரகாசத்தில் பவுல் கீழே விழுந்து மூன்று நாட்களாக குறுடானார் என்கிறது வேதம். இயேசுவின் மடியில் சாய்ந்து இருந்த அன்பு அப்போஸ்தலன் யோவான் பிற்பாடு வெளிப்படுத்தின விசேஷம் எழுதும் போது, மகிமை அடைந்த இயேசுவின் தரிசனத்தை கண்டவுடன், செத்தவனை போல் கீழே விழுந்தேன் என்கிறார். ஆக அப்போஸ்தலர்களான இவர்களுக்கு இப்படி ஏற்பட்டது என்று வேதம் சொல்லியிருக்க, இன்றைய கள்ள அப்போஸ்தலர்கள், கள்ள தீர்க்கதரிசிகள், தாங்கள் இயேசுவை முகமுகமாய் கண்டதாகவும், பேசினதாகவும், தன் காரின் இருக்கையில் இயேசுவை அமர வைத்ததாகவும், அவர்களின் பூட்டிய அறைக்குள் பார்த்து பேசியதாகவும் சொல்லுகிறார்கள். ஆனால் பவுலுக்கோ, யோவானுக்கோ நேர்ந்தது போல் இவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. இவர்கள் இயேசு கிறிஸ்து நேரடியாக அனுப்பிய அப்போஸ்தலர்களை காட்டிலும் பெரியவர்களோ!!
மேலும் இயேசு கிறிஸ்து சொன்னது போல் அநேகரான இவர்கள் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள் (மத். 24:24) என்கிற காரியத்தையும் நான் இன்று பார்க்க முடிகிறது. இவைகளை வைத்து பார்க்கும் போது நாம் கடைசி காலங்களில் இருக்கிறோம் என்பது இன்னும் தெளிவாக நிருபனமாகிறது. மேலும் இந்த கள்ள கிறிஸ்துக்கள் கூறுவது போல், இந்த வசனம் புறமதஸ்தாரை சார்ந்த ஒரு வசனமாக இருக்க முடியாது, ஏனென்றால், புற மதஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை அறிவதில்லையே.

தங்களை துக்கப்படுத்தவோ, காயப்படுத்துவதோ என் நோக்கம் இல்லை. நிச்சயமாக நான் உங்கள் எழுத்தை வைத்து "குழந்தைத்தனம்" என்று சொல்ல மாட்டேன். என் ஒரே கருத்து என்ன வென்றால், வேதத்தில் வெளிப்படுத்தின விசேஷம் சபைக்கும் உலகத்திற்கும் தேவையான அனைத்து தீர்க்கதரிசனங்களும் கொடுத்தாகி விட்டது. இதற்காகவே இயேசு கிறிஸ்து தெளிவாக சொல்லியது என்னவென்றால், "இந்த புஸ்தகத்திலுள்ள (வெளிப்படுத்தின விசேஷம்) தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது; ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன் மேல் கூட்டுவார்; ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவப்புஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்த புஸ்தகத்தில் எழுதப்படவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்து போடுவார்" வெளி. 22:18,19. இப்படி ஒரு எச்சரிப்பை கொடுத்த இயேசு கிறிஸ்து நிச்சயமாக புதிய தீர்க்கதரிசனங்களை கொடுக்க மாட்டார் என்று வேதத்தின் சத்தியத்தை உணர்கிற ஒவ்வொரு மனிதனும் சொல்லக்கூடும். அவரே இதோடு கூட புதிய தீர்க்கதரிசங்களை கொடுத்து அவர் சொல்லியதற்கு விரோதமாக போக மாட்டார். அவர் சொன்னது மாத்திரமே நிற்கும்.
நமக்கு தோன்றும் என்னங்களை பொதுவாக கிறிஸ்தவ மண்டலம் இயேசு கிறிஸ்து தன்னுடன் பேசியதாக சொல்லுவது உண்டு. நீங்களும் அந்த மாயை (Sorry) விட்டு வெளியேறும் படி உங்கள் மேல் அக்கறை உள்ள ஒரு கிறிஸ்தவ நண்பனாக கூறுகிறேன். மற்றப்படி யாரையும் கட்டுப்படுத்தவோ, பதிவுகளை நீக்குவதோ (சிலர் செய்வது போல், அது உங்களுக்கும் தெரியும்) நிச்சயமாக நான் செய்வதில்லை. இது வரை இந்த கிறிஸ்தவ மண்டலம் 325 கி.பி. முதல் (கத்தோலிக்க சபை தொடங்கியது) இன்று வரை (பிற சபைகள் உட்பட) பல வினோதமான கோட்பாடுகளை நாம் தெரிந்திருக்கிறோம். எப்படி எல்லாம் வேதம் புறட்டப்பட்டது என்றும் அறிவோம். இந்த தளம் நடத்துவது அனைவரின் கருத்துகளும் சுதந்திரமாக பதிய தான். இந்த கருத்துகளை படித்து ஒருவர் தன் விசுவாசத்தை விட்டு விடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஒருவனை பிதா சேர்க்காவிட்டால், அவன் கிறிஸ்துவிடம் சேர முடியாது என்பது வேத சத்தியம், அதை மாத்திரமே நான் விசுவாசிக்கிறேன். மற்றவர்கள் சொல்லுவது போல், நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன் என்றும் சொல்ல மாட்டேன், அதற்காக நான் அழைக்கப்படவும் இல்லை. உங்கள் விசுவாசத்தில் நீங்கள் பதியுங்கள், வாசிப்பவர்கள் அதை வேத ஆதாரத்துடன் பகுத்து அறிந்துக்கொள்வார்கள். தொடர்ந்து பதியுங்கள். நன்றி

ஆனாலும் தேவ வசனங்களை போய் இந்த உலகத்தில் பயன்ப்படும் அழிந்துபோகும் கரன்சிக்கு ஒப்பிட்டது தான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறாது.
"பூமியில் அக்கினியை போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி அரிய வேண்டுமென்று விரும்புகிறேன்" (லூக். 12:49) என்றார் நம் கர்த்தர். உங்கள் வியாக்கியானத்தின்படி அப்போ போட்ட அக்கினியில் இந்த பூமி இநேரம் வெந்து உருகி போயிருக்க வேண்டுமே! அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டுள்ளது என்றவுடன் சராசரி கிறிஸ்தவன் இந்த பூமி அழிந்து போகும் என்று தானே நினைக்கிறார்கள். என்றென்றும் இதில் மனிதன் குடியிருக்க வேண்டும் என்று தேவன் மனிதனுக்காக இந்த பூமியை என்றென்றும் நிலைத்திருக்கும்படி உருவேறுப்படுத்தினார் (ஏசா. 45:18; பிரசங்கி 1:4) என்று வேதம் சொன்னாலும், இந்த கிறிஸ்தவ மண்டலம் அந்த வாக்குதத்தத்தை எடுத்துக்கொள்ள மறுக்கிறதே, அது ஏனோ கிறிஸ்துவ அன்பு அவர்களிடத்தில் மிகவும் அதிகம் போல், அதினால் தான் தேவன் சொல்லாத ஒரு அழிவை இவர்கள் போதித்து வருகிறார்கள்.
இதே போல் முன்பு நோவவின் காலத்தில் ஜலப்பிரளயம் வந்து உலகத்தை அழித்தது என்கிறது வேதம், அப்பொழுது என்ன பூமியா அழிந்து போனது. இல்லையே.
சகோதரர் சில்சாம், பூமி என்பது மனிதன் என்றென்றைக்கும் இருப்பதற்க்காக படைக்கப்படாது என்று வேதம் கூறுகிறது ஆனால் இப்பொழுது இருக்கும் நிலையிலே அப்படியே இருக்கும் என்று சொல்ல முடியாது!
எப்படி நோவாவின் காலத்துக்கு பிறகு பெரிய மாற்றங்கள் வந்ததோ அதுபோல் ஆண்டவரின் வருகைக்கு பிறகு அனேக மாற்றங்கள் வரலாம் வேதம் சொல்வதுபோல் சிங்கம் வைக்கோல் திங்கலாம், தேவன் நம்முடனே வாசம் செய்யலாம் நாம் இந்த மாமிசத்தில் இல்லாமல் வேறுவித சரீரத்தில் இருக்கலாம் ஆனால் பூமி நெருப்பால் அழிக்கப்பட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும் என்பதை மட்டுமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
அப்படியென்றால் "என்றென்றைக்கும் இருக்கும்" என்ற வேத வார்த்தை பொய்யாகிவிடுமே!
Chillsam writes: "இது போன்றதொரு கருத்தினை நாத்திகன்கூட சொல்வதில்லை; பூமியின் தன்மை, தட்பவெப்பநிலை உட்பட எல்லாமே ஜலப்பிரளயத்துக்குப் பிறகு மாறியதாக தற்போதைய ஆராய்ச்சிகள் சொல்லும்போது எதுவுமே மாறாமல் வெறும் தண்ணீர் வடிந்ததுமே வாழத் துவங்கிவிட்டது போல சொல்லாமா..?எனவே உங்கள் கருத்து பூகோளரீதியிலும் -அறிவியல்ரீதியிலும் ஒப்புக்கொள்ளமுடியாதது;"
நிச்சயமாக நாத்திகன் சொல்லுவதில்லை ஆனால் வேதனை, கிறிஸ்தவன் தான் சொல்லுகிறான். நானும் இதை தான் கேட்டிருக்கிறேன் சகோதரரே, பூமியா அழிந்து போனது என்று. இதற்கு பதில் கொடுக்காமல் வேறு எதோ நாத்தீகன், ஆராய்ச்சியாளர்கள் என்று சொல்லி திசை மாறி எழுதியிருக்கிறீர்கள். நிச்சயமாக பூமியின் தன்மைகள் மாறியது, பூமியின் அஸ்திபாரங்கள் அப்படியே தான் இருந்தது, இன்று கிறிஸ்தவ மண்டலம் சொல்லி வருவது போல் பூமி அழிந்து போகவில்லை. ஆராய்ச்சியாளர்கள் சொன்னது மாத்திரம் இல்லை, நம் வேதத்தில் இருக்கிறபடி, தேவன் மனிதனுடன் தொடர்பு கொண்ட விதம் மாறியது.
Chillsam writes "மேலும் இந்த உலகம் அழிவுக்கு அக்கினி இரையாக வைக்கப்பட்டிருக்கிறது என்பதாலேயே அதை நம்பி முதற் நூற்றாண்டு அப்போஸ்தலர் முதலாக தங்கள் சொத்துசுகங்களை விட்டுவிட்டு தியாகமாக வாழ்ந்தனர்;"
சொத்துசுகங்களை இதற்காக தான் விட்டுவிட்டு வந்தார்கள் என்று அப்போஸ்தலர்களின் ஞானத்தை தப்பாக வியாக்கியானம் செய்யாதீர்கள். அவர்கள் இந்த பூமி அழிந்து போவதற்காக இப்படி செய்யவில்லை, மாறாக அந்த சாகாமையை பெற்றுக்கொள்ளவும், கிரீடத்தை பெற்றுக்கொள்ளவுமே எல்லாவற்றையும் குப்பை என்றார்கள், இன்றைய கிறிஸ்தவ மண்டலம் இதற்கு நேர் மாறாக பூமிக்குரிய ஆசீர்வாதங்களை, ஐசுவரியங்களை போதிக்கிறது. இது தான் கிறிஸ்தவமா? அப்போஸ்தலர்காளுக்கு தெரியும், இந்த மரணசரீரத்தை விட்டு விட்டு அவர்கள் நிச்சயமாக நித்தியத்திற்கும் இயேசு கிறிஸ்துவுடன் வாழ்வார்கள் என்று.
வேதத்தை போதிக்கவேண்டும் என்று ஆசைப்படுவது பெரிது அல்ல, ஆனால் தாங்கள் தமிழ் புலமையுள்ளவர்களாக இருக்கலாம், அதற்காக வெறும் தமிழ் வேதாகமத்தை வைத்துக்கொண்டு நான் வேதத்தை போதிப்பேன் என்று இறங்க வேண்டாம்.
Chillsam writes: "மேலும் வேதத்தில் என்றைக்கும் (பிரசங்கி.1:4) என்பதற்கும் என்றென்றைக்கும் என்பதற்கும் வித்தியாசமுண்டு;" இதன் ஆங்கிள மொழிப்பெயர்ப்பையும் பாருங்கள், "Eccl 1:4 but the earth abideth for ever" ASV "Eccl 1:4 But the earth remains forever".NAS "Eccl 1:4 but the earth remains forever."NIV "Eccl 1:4 But the earth abides forever."NKJV
Forever என்றால் என்றென்றைக்கும் என்று ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். தயவு செய்து வேதத்தை ஆறாய விருப்பம் உண்டென்றால், தமிழ் வேதாகமத்தை வைத்து மாத்திரம் விவாதம் செய்யாதீர்கள். பிற மொழிப்பெயர்ப்புகளையும் பாருங்கள். தமிழ் மொழிப்பெயர்ப்பு அன்று செய்யப்பட்டது போல் அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறாது. வேதப்புறட்டர்களுக்கு உண்டான காரியத்தை மிரட்டும் தொனியில் எழுதியதில் தங்களின் கிறிஸ்தவ அன்பிற்கு எடுத்துக்காட்டாக இல்லை. தயவு செய்து ஆரோக்கியமான என்னத்தில் விவாதம் இருக்கட்டுமே. ஏனென்றால் சாபம் கொடுக்க நமக்கு தகுதியில்லை என்று நான் நினைக்கிறேன். மேலும் வேதத்தை எழுதிய ஆசரியரான தேவனின் என்னத்தில் வேதத்தை வாசியுங்கள். மனிதர்கள் கொண்டு வந்த மாய கபட்டு தன்மைகளை வைத்து வேதத்தை வாசிக்காதீர்கள். எந்த சபையையும் சார்ந்து வேதத்தை வாசிக்காதீர்கள், எந்த மனிதர்களின் எடுத்துக்கட்டை வைத்து வேதத்தை வாசீக்காதீர்கள். பழைய ஏற்பாடு முழுவதும் மனிதனுக்கு பூமி வைக்கப்பட்டிருப்பதை நாம் வாசிக்க முடியும், அப்படி என்றால் தேவன் தன் வாக்குகளில் இருந்து மாறி பூமியை அழித்து விடுவாரா? மேலும், இயேசு கிறிஸ்து போட்ட அக்கினியை பற்றி நீங்கள் ஒன்றும் பதில் எழுதவில்லையே.
என் ஒரே வேண்டுகோள் சகோதரரே, வேதத்தை பல மொழிகளில் வாசியுங்கள், கூடும்மட்டும் தேவனின் திட்டத்தின் படி வேதத்தை வாசியுங்கள். Don't study Bible with a pre-concieved mind. By mind I mean, the Church which you go, the preacher you like most or through some books. Read Bible only through the mind of God, the Author of the Bible.
இன்று மேடைக்கு மேடை பிரசங்கிக்கும் பிரசங்கியார்கள், சத்தியத்திற்கு செவி கொடுக்காமல், கட்டுகதைகளுக்கு சாய்ந்து போய் இருக்கிறார்கள், இதை குறித்து பவுல் எச்சரித்து இருக்கிறார். இந்த புதிய கால பிரசங்கியார்களுக்கு கூட்டம், மைக், மேடை இருந்து விட்டால், தங்கள் சொந்த அனுபவங்களை பேசுவதிலே நேரம் எடுத்துக்கொள்வதை பார்க்கமுடியும், அப்படி இருக்கும் போது எப்படி இவர்கள் சத்தியத்தை போதிப்பார்கள். இவர்களுக்கு தெரிந்தது எல்லாம், ஒரு பரலோகம், ஒரு நரகம் அவ்வுளவே. இயேசு கிறிஸ்து சொல்ல சொன்ன "ராஜியத்தின் சுவிசேஷம்" என்றால் இவர்களுக்கு தெரியாது. "மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான். " அப். 28:31. முதல்ல ராஜியம் என்றால் என்னவென்று தெரிந்துக்கொள்ளுங்கள் பிறகு பூமி எப்படி இருக்க போகிறது என்பதை நீங்களே தெரிந்துக்கொள்வீர்கள். அன்பான தேவனை அழிவின் தேவனாக பிரசங்கிக்காதீர்கள். இதை காட்டிலும் ஒரு பெரிய தேவ தூஷனம் இல்லை. இரட்சிக்க வல்லவரை, அழிக்க வல்லவர் என்று சொல்லாதீர்கள். இன்றைய கிறிஸ்தவ மண்டலம் இதை தான் சுவிசேஷம் என்று பிரசங்கித்து வருகிறது. சுவிசேஷம் என்றால் என்ன வென்று பிரசங்கிக்கு தெரியாது, அது பெந்தகோஸ்தே நாளில் ஆவியை பெற்று கொண்ட பிறகு தான் அப்போஸ்தலர்களுக்கே தெரிந்தது. அந்த அப்போஸ்தலர்கள் பிரசங்கித்ததை கவனித்தாலே போதும். சுவிசேஷம் என்றால் என்னவென்று புரியும்.